லைஃப்ஸ்டைல்

முளை கட்டிய தானிய உணவு

Published On 2019-02-17 04:37 GMT   |   Update On 2019-02-17 04:37 GMT
முளை கட்டிய தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் உன்னதமான உயிர் உணவு. எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.
இன்று இயற்கை உணவு மிகவும் புகழ்பெற்று வருகிறது. பலரும் பச்சை காய்கறிகளை அப்படியே சாப்பிட தொடங்கியுள்ளார்கள். இது நமது உடலில் உயிர்சக்தியை அதிகப்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். அப்படிப்பட்ட இயற்கை உணவில் முளை கட்டிய தானியங்களும் ஒன்று.

ஒரு நாளைக்கு மூன்று வேளை முடியாவிட்டாலும், ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை. பச்சைப்பயறு, கொண்டைக் கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கருப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவது தான், முளை தானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.

இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால், தானியம் முளைவிட்டு இருக்கும். இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான உன்னதமான உயிர் உணவு. இதன் பயனை உணர்ந்து கொண்டால் கட்டாயம் உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும். இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை கூடுதலாக கிடைப்பதுடன் வைட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் அதிக அளவு கிடைக்கிறது.

முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் எடை கூடும். முளைவிட்ட கொண்டைக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் நன்றாக சாப்பிடலாம். காரணம் தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். முளைவிட்ட கருப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும். முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும். மூட்டுவலி தீரும். எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.
Tags:    

Similar News