ஆன்மிகம்

வதிஷ்டபுரம் ரெங்கநாதசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Published On 2019-05-18 03:40 GMT   |   Update On 2019-05-18 03:40 GMT
திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரத்தில் திருமகிழ்ந்தவல்லி சமேத ரெங்கநாதசாமி பெருமாள் கோவிலில் திருகல்யாண உற்சவம் நடந்தது.
திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரத்தில் திருமகிழ்ந்தவல்லி சமேத ரெங்கநாதசாமி பெருமாள் கோவில் உள்ளது. இங்கு வைகாசி விசாக பிரம்மோற்சவம் கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

விழாவில் நேற்று முன்தினம் மாலை திருகல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி கோவிலில் உள்ள திருகல்யாண மண்டபம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தாயாருக்கு பட்டு சேலை, கிரீடம், தங்க மூக்குத்தி, அணிவிக்கப்பட்டும், பெருமாளுக்கு வெண்பட்டாடை அணிவிக்கப்பட்டும் மணக்கோலம் கொண்டிருந்தனர். தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது.

அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அக்னி வலம் வருதல், தாயாருக்கு தோள் மாலை மாற்றுதல், ஊஞ்சல் வைபவம், பூப்பந்து ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் இன்று காலை தேரோட்டம் நடைபெற இருக்கிறது. 
Tags:    

Similar News