ஆன்மிகம்

தொப்பூரில் சந்தனக்குட உரூஸ் விழா இன்று நடக்கிறது

Published On 2018-09-27 02:59 GMT   |   Update On 2018-09-27 02:59 GMT
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் ஹஜரத் சையத்ஷா வலியுல்லாவின் 59-வது ஆண்டு உரூஸ் என்ற சந்தனக்குட விழா இன்றும், நாளையும்தொப்பூர் ஹஜரத் சையத்ஷா வலியுல்லாவின் உறைவிடத்தில் நடைபெற உள்ளது.
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் ஹஜரத் சையத்ஷா வலியுல்லாவின் 59-வது ஆண்டு உரூஸ் என்ற சந்தனக்குட விழா இன்றும்(வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமை) தொப்பூர் ஹஜரத் சையத்ஷா வலியுல்லாவின் உறைவிடத்தில் நடைபெற உள்ளது. முதல்நாளான இன்று இரவு 10 மணியளவில் ஹஜரத் வீட்டில் இருந்து சந்தனக்குடம் ஊர்வலமாக புறப்பட்டு இரவு தர்காவுக்கு வந்து சேரும்.

நாளை காலை 5 மணியளவில் சந்தனம் பூசப்படும். இந்த இரண்டு நாட்களும் இஸ்லாமிய இசைக்கச்சேரி நடைபெறும். அதேநேரம் முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ மற்றும் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து ஹஜரத் சையத்ஷா வலியுல்லாவின் நல்லாசியும், துவாவையும் பெற்று கொண்டு தர்காவில் நடைபெறும் பாத்திஹாலில் கலந்து கொண்டு தப்ரூக்கையும் பெற்று செல்லுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த விழாவையொட்டி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 5 மணி வரை மன்சூர் ஜானி(மும்பை)-சாதிக்கா சஞ்சேரி (ஐதராபாத்) ஆகியோரின் போட்டி உருது கவ்வாலி கச்சேரியும், நாளைஇரவு 7 மணி முதல் 11 மணிக்குள் கலைமாமணி சென்னை எம்.ஏ.குத்தூஸ் குழுவினரின் தமிழ் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சியும், நாளை இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை சமீர் ஷேஹசாதே(கர்நாடகம்)-சல்மாதாஜ்(ஆந்திரா) குழுவினரின் உருது கவ்வாலி கச்சேரியும் நடைபெறும். தர்காவில் பாத்திஹாவிற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கிடைக்கும், தங்குவதற்கு இடவசதி உண்டு என்று தர்கா குடும்ப உரிமையாளர்கள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News