ஆன்மிகம்

சின்னமலை புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா

Published On 2019-05-10 04:45 GMT   |   Update On 2019-05-10 04:45 GMT
சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் புனித ஆரோக்கிய மாதா திருத்தலத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 19-ந்தேதி வரை மிகவும் ஆடம்பரமாக இந்த விழா நடைபெற உள்ளது.
சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் புனித ஆரோக்கிய மாதா மற்றும் தோமையாரின் திருத்தலம் அமைந்துள்ளது. இது சென்னையில் உள்ள பழமையான ஆலயங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் 468-வது ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 19-ந் தேதி வரை மிகவும் ஆடம்பரமாக இந்த விழா நடைபெற உள்ளது.

திருவிழாவின் ஒவ்வொரு நாளும் பல அருட்தந்தையர்களால் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. 12-ந் தேதி சென்னை மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா தலைமையில் நற்கருணை பெருவிழாவும், 15-ந் தேதி தர்மபுரி ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் குடும்ப விழா திருப்பலியும், 18-ந் தேதி செங்கல்பட்டு ஆயர் நீதிநாதன் தலைமையில் ஆடம்பர தேர்த்திருவிழாவும் நடைபெற உள்ளது. 19-ந் தேதி மாலை 6 மணிக்கு சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி தலைமையில் கொடி இறக்கமும், திருப்பலியோடும் விழா நிறைவு பெற உள்ளது.
Tags:    

Similar News