சினிமா

ஜீனியஸ்

Published On 2018-10-23 05:35 GMT   |   Update On 2018-10-29 05:49 GMT
சுசீந்திரன் இயக்கத்தில் ரோஷன் - நடிப்பில் உருவாகி இருக்கும் `ஜீனியஸ்' படத்தின் முன்னோட்டம். #Genius #Roshan
சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ரோஷன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `ஜீனியஸ்'.

ரோஷன் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகும் இந்த படத்தில் ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன், யோகேஷ், மோனிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை - யுவன் ஷங்கர் ராஜா, பாடல்கள் - வைரமுத்து, படத்தொகுப்பு - தியாகு, ஒளிப்பதிவு - ஆர்.பி.குருதேவ், கலை இயக்குனர் - ஜி.சி.ஆனந்தன், சண்டைப்பயிற்சி - அன்பறிவ், நடனம் - ஷோபி, லலிதா ஷோபி, உடை - ஆர்.நிருபமா ரகுபதி, தயாரிப்பு - ரோஷன், இணை தயாரிப்பு - ராம், சீனு, பாலாஜி, சாமி, ஜகதீஷ், குணா, தயாரிப்பு நிறுவனம் - சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ், வசனம் - அமுதேஸ்வர், எழுத்து, இயக்கம் - சுசீந்திரன்.

பத்திரிகையாளர் சந்திப்பில் படம் பற்றி இயக்குனர் சுசீந்தரன் பேசியதாவது, 



நான் ஜீனியஸ் திரைப்படத்தின் கதையை முதலில் யோசித்த போது அது கதையாக இல்லை. கருவாக தான் இருந்தது. ஜுனியஸ் கதையாக உருவாகிய பிறகு ஜீனியஸ் கதையை விஜய், அல்லு அர்ஜுன், ஜெயம் ரவி உள்ளிட்ட பலரிடம் இந்த கதையை கூறியுள்ளேன். அனைவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர்களால் இதில் நடிக்க முடியவில்லை.

கடைசியாக இந்த கதை அறிமுக நாயகன் மற்றும் புதிய தயாரிப்பாளரான ரோஷனிடம் சென்று தற்போது ஜீனியஸ் படமாக வந்துள்ளது. இப்படம் மக்களுக்கு கருத்து சொல்லும் பொழுதுபோக்கு படமாக இருக்கும். இந்தியில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற பி.கே படத்தின் பாதிப்பில் தான் நான் இந்த படத்தை இயக்கியுள்ளேன். இந்த படம் பி.கே போல மெசேஜ் சொல்லும் பொழுதுபோக்கு படமாக இருக்கும். இப்படத்தின் கதை அனைத்து மொழி மக்களுக்கும் பிடிக்கும் வகையில் உள்ளதால் படத்தை இந்தி மற்றும் தெலுங்கில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம். ரோஷனை இப்படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும், ஹீரோவாகவும் அறிமுகம் செய்வதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி என்றார்.

படம் வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #Genius #Roshan

Tags:    

Similar News