என் மலர்
நீங்கள் தேடியது "மத்திய கிழக்கு பதற்றம்"
- குண்டுவீச்சில் சுமார் 160 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.
- அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் இலக்காகி வருவது உலகெங்கிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பள்ளிகள், பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள் தொடர்ந்து இலக்கு வைக்கப்பட்டு வருகின்றன.
இன்று மதியம், ஈரானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பரண்ட் (Parand) நகரில் உள்ள இரண்டு பள்ளிகள் மீது அமெரிக்காவின் ஏவுகணைகள் விழுந்து வெடித்தன.
இந்த தாக்குதலில் பள்ளிக் கட்டடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமான புகைப்படங்களை ஈரானின் 'பார்ஸ்' செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பள்ளிகளுக்கு அருகிலுள்ள மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளிலும் பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த துல்லியமான எண்ணிக்கை இன்னும் வெளியாகவில்லை
முன்னதாக, கடந்த சனிக்கிழமை காலை 10 மணியளவில் ஈரானின் மினாப் நகரில் உள்ள ஒரு பெண்கள் தொடக்கப் பள்ளியின் மீது அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் சுமார் 160 சிறுமிகள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, இஸ்ரேலில் உள்ள ரேடார் மையங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் டிரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
மேலும், பாரசீக வளைகுடாவின் வடக்குப் பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் கப்பல் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று இலங்கை அருகே இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் அமெரிக்காவால் தாக்கப்பட்டு 87 பேர் கொல்லப்பட்ட நிலையில் அதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளது.
- ஆயிரக்கணக்கான மைல்கள் பயணித்து இலக்கை துல்லியமாக தாக்கியது.
- ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணு குண்டை விட 20 மடங்கு அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை சுமக்கும்.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டு சேர்ந்து கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் ஈரான் உச்ச தலைவர் காமேனி மற்றும் 700க்கும் அதிகமானோர் ஈரானில் கொல்லப்பட்டனர்.
ஈரான் பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.
போரானது ஒரு வாரத்தை எட்ட உள்ள நிலையில் அமெரிக்கா கண்டம் விட்டு கண்டம் பாயும் Minuteman III (Doomsday) ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளித் தளத்திலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின்போது ஆயிரக்கணக்கான மைல்கள் பயணித்து, பசிபிக் பெருங்கடலில் உள்ள மார்ஷல் தீவுகளுக்கு அருகே உள்ள இலக்கை துல்லியமாக தாக்கியது.
இந்த சோதனையின் போது ஏவுகணையில் அணு ஆயுதங்கள் எதுவும் பொருத்தப்படவில்லை. ஏவுகணையின் செயல்திறனை சோதிக்க மட்டுமே இந்த சோதனை நடத்தப்பட்டது.
இது பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட ஒரு வழக்கமான சோதனை என்றும், தற்போது ஈரானுடன் நடந்து வரும் மோதலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

டூம்ஸ்டே:
Minuteman III என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை இரண்டாம் உலகப் போரின்போது ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணு குண்டை விட 20 மடங்கு அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
இது மணிக்கு சுமார் 24,140 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. அதாவது, உலகின் எந்தப் பகுதியையும் 30 நிமிடங்களுக்குள் தாக்கும் வல்லமை கொண்டது.
ஒரே ஏவுகணை மூன்று வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் அணு ஆயுதத் தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்டது .
இது பேரழிவை ஏற்படுத்தும் என்பதால் 'உலகின் முடிவு' என்று பொருள்படும் 'டூம்ஸ்டே' என்று இந்த ஏவுகணை அழைக்கப்படுகிறது.
- அமெரிக்க தூதரகங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
- துருக்கி மீது பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியது.
ஈரான் மீது கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். மேலும் 700க்கும் அதகமானோர் கொல்லப்பட்டனர்.
பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் அமெரிக்க படைத்தளங்கள் சேதங்களை சந்தித்துள்ளன. மேலும் அந்நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீதும் ஈரான் நேற்று முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், NATO உறுப்பு நாடான துருக்கி மீது பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் ஈரானிய ஏவுகணை NATO படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது. மேலும், எந்தவொரு விரோத நடவடிக்கைக்கும் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று துருக்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
- ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மோதல் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளன
- கடந்த திங்கள் கிழமை கடும் சரிவுடன் தொடங்கிய பங்கு சந்தை இன்று கடும் சரிவை சந்தித்துள்ளது.
இன்று (புதன்கிழமை) மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.
இன்று சென்செக்ஸ் 1,122 புள்ளிகள் சரிந்து 79,116 என்ற நிலைக்கு வந்தது. இது கடந்த 6 மாதத்தில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சியாகும். நிஃப்டி சுமார் 385 புள்ளிகள் சரிந்து 480 என்ற நிலைக்குச் சென்றது. இதுவும் கடந்த 6 மாதத்தில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.
ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மோதல் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளன. இதனால் கடந்த திங்கள் கிழமை கடும் சரிவுடன் தொடங்கிய பங்கு சந்தை இன்று கடும் சரிவை சந்தித்துள்ளது.
எண்ணெய் கொண்டு வரும் முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 82 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளதால், இந்தியாவின் இறக்குமதி செலவு அதிகரித்து ரூபாய் மதிப்பு பலவீனமடைந்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 92.02 என்ற அளவை தாண்டியுள்ளது. இது இந்திய வரலாற்றிலேயே மிகக் குறைந்த மதிப்பாகும்.
ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மோதல் தொடர்வதால் அறம் நாட்களிலும் இந்திய பங்கு சந்தை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஸ்பெயின் அவர்களின் ராணுவத் தளங்களைப் பயன்படுத்த முடியாது என்று கூறிவிட்டது.
- யாரும் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது.
ஈரான் மீது கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். மேலும் 700க்கும் அதகமானோர் கொல்லப்பட்டனர்.
பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அமெரிக்க படைத்தளங்கள் சேதங்களை சந்தித்துள்ளன.
இதற்கிடையே ஈரான் மீது தாக்குதல் நடத்த உதவ மறுத்த ஸ்பெயின் உடன் வர்த்தகத்தை தூண்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா தனது போர் விமானங்களை ஸ்பெயினின் ரோட்டா மற்றும் மோரோன் ராணுவ தளங்களில் நிறுத்தி வைத்திருந்தது.
இந்தப் போர் விமானங்களை கொண்டு ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டது. இதற்கு தங்களின் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு ஸ்பெயின் அனுமதி மறுத்தது.
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு தங்கள் ராணுவத் தளவாடங்களைப் பயன்படுத்துவதற்கும் ஸ்பெயின் அரசு மறுத்துவிட்டது.
இதனால் அமெரிக்கா-ஸ்பெயின் இடையேயான வர்த்தகத்தை முற்றிலும் துண்டிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "ஈரானுக்கு எதிரான போரில் ராணுவ உதவிகளை செய்ய ஸ்பெயின் மறுத்துவிட்டது. ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டித்துக் கொள்கிறோம்.
இனி ஸ்பெயினுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. இப்போது ஸ்பெயின் அவர்களின் ராணுவத் தளங்களைப் பயன்படுத்த முடியாது என்று கூறிவிட்டது.
நாங்கள் விரும்பினால் அவற்றைப் பயன்படுத்துவோம். நாங்கள் அங்கு பறந்து செல்வோம். யாரும் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது" என்றார்.
- ஆரம்பத்திலேயே எங்களது மிகவும் பயனுள்ள ஆயுதங்களைப் பயன்படுத்துவது முட்டாள்தனமாக இருக்கும்.
- இந்த உண்மை அனைவருக்கும் தெரியும்.
ஈரான் மீது கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். மேலும் 700க்கும் அதகமானோர் கொல்லப்பட்டனர்.
பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் அமெரிக்க படைத்தளங்கள் சேதங்களை சந்தித்துள்ளன. மேலும் அந்நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீதும் ஈரான் நேற்று முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "நாங்கள் மிக நீண்ட போருக்குத் தயாராகிவிட்டோம், எனவே ஆரம்பத்திலேயே எங்களது மிகவும் பயனுள்ள ஆயுதங்களைப் பயன்படுத்துவது முட்டாள்தனமாக இருக்கும்.
எதிரியிடம் ஒரு குறிப்பிட்ட அளவு ஆயுதங்கள் மட்டுமே உள்ளன. இந்த உண்மை அனைவருக்கும் தெரியும்" என்றார்.
இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், "ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அமெரிக்க குடிமக்கள் ஓமன் மற்றும் சவுதி அரேபியாவுடனான நில எல்லைகள் வழியாக மத்திய கிழக்கு நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
நீங்கள் பாதுகாப்பாக வெளியேற முடியும் என்று நம்பினால் ஐக்கிய அரபு எமிரேட்சை விட்டு வெளியேறுவது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
சில விமானங்கள் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் இருந்து புறப்படுகின்றன.
ஓமன் மற்றும் சவுதி அரேபியாவுடனான நில எல்லைகளும் இந்த நேரத்தில் திறந்திருக்கும். புறப்பட முடியாதவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டு கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
- ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல முயலும் எந்த கப்பலும் தீயிட்டு கொளுத்தப்படும்.
- கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றி வந்தது.
ஈரான் மீது கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். மேலும் 700க்கும் அதகமானோர் கொல்லப்பட்டனர்.
பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோா்முஸ் ஜலசந்தி வழியாக, உலகின் 20 சதவீத எண்ணெய் தேவைக்கான ஏற்றுமதி நடைபெற்று வந்தது
தற்போது அந்த வழியை மூடியுள்ள ஈரான், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல முயலும் எந்த கப்பலும் தீயிட்டு கொளுத்தப்படும் என எச்சரித்துள்ளது.
இதனால் மத்திய கிழக்கில் இருந்து புறப்பட முடியாமல் எண்ணெய் கப்பல்கள் சிக்கியுள்ளன.
அதில் குறிப்பாக, இந்திய கொடி கட்டப்பட்ட 37 கப்பல்களுடன் அவற்றில் உள்ள 1,109 மாலுமிகள் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் சிக்கியுள்ளனா்.
இவற்றில் இந்திய துறைமுகங்களுக்கு கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றி வந்த கப்பல்களும் அடங்கும். பிற கப்பல்கள் வளைகுடா நாடுகளில் இருந்து பெட்ரோலியம் பொருள்களை ஏற்றிவரச் சென்றன.
இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல்கள் மற்றும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு கருதி டிஜிஎஸ் மூலம் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளது. மாலுமிகள் மற்றும் அவா்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- கடந்த ஓராண்டில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.
- கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 82.53 டாலர் வரை உயர்ந்துள்ளது.
இன்று (புதன்கிழமை) மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.
சென்செக்ஸ் சுமார் 1,710 புள்ளிகள் சரிந்து 78,529 என்ற நிலைக்கு வந்தது. இது கடந்த ஓராண்டில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சியாகும். நிஃப்டி சுமார் 477 புள்ளிகள் சரிந்து 24,389 என்ற நிலைக்குச் சென்றது.
பிஎஸ்இ பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ. 456.17 லட்சம் கோடியிலிருந்து ரூ. 446.47 லட்சம் கோடியாகக் குறைந்தது. அதாவது சுமார் ரூ. 9.7 லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர்.
ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மோதல் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளன.
எண்ணெய் கொண்டு வரும் முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 82.53 டாலர் வரை உயர்ந்துள்ளதால், இந்தியாவின் இறக்குமதி செலவு அதிகரித்து ரூபாய் மதிப்பு பலவீனமடைந்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 92.17 என்ற அளவை தாண்டியுள்ளது. இது இந்திய வரலாற்றிலேயே மிகக் குறைந்த மதிப்பாகும்.
- கப்பல்கள் ஒவ்வொன்றும் இயக்க ஒரு நாளைக்கு ரூ. 58 கோடி செலவாகும்.
- ஈரானின் விமானப்படை மற்றும் கடற்படை முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார்.
ஈரான் மீது கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். மேலும் 700க்கும் அதகமானோர் கொல்லப்பட்டனர்.
பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
போரின் முதல் நாளில் அமெரிக்கா சுமார் 779 மில்லியன் டாலர் (ரூ. 6,900 கோடி) செலவிட்டுள்ளது.
இந்தப் போர் தொடர்ந்தால், அமெரிக்காவிற்கு மொத்தம் 210 பில்லியன் டாலர்கள் (ரூ. 18.87 லட்சம் கோடி) செலவாகும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இது தவிர, இஸ்ரேலுக்கு வழங்கப்படும் நிதி உதவியையும் கருத்தில் கொண்டால், இந்த செலவு மேலும் அதிகரிக்கும்.
அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் பல, ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா தனது மிகவும் விலையுயர்ந்த ஆயுதங்களை இந்த போரில் பயன்படுத்துகிறது.
USS Gerald R. Ford உட்பட உலகின் மிகப்பெரிய இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கா இந்த போரில் பயன்படுத்துகிறது.
இந்தக் கப்பல்கள் ஒவ்வொன்றும் இயக்க ஒரு நாளைக்கு ரூ. 58 கோடி செலவாகும்.
மேலும், வீரர்களைக் குவிப்பதற்கும் அவர்களின் தேவைகளுக்கும் இதுவரை சுமார் ரூ. 5,500 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
மறுபுறம், இந்தப் போரில் பின்வாங்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
"ஈரானின் விமானப்படை மற்றும் கடற்படை முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டது. இப்போது அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர விரும்புகிறார்கள், ஆனால் காலம் கடந்துவிட்டது.
போர் எவ்வளவு காலம் நீடித்தாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்" என அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த சண்டை பல மாதங்களாக தொடர்ந்தால், அது அமெரிக்க பொருளாதாரத்தில் மட்டுமல்ல, உலகளவில் எண்ணெய் விலைகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
- இந்தியாவின் எண்ணெய் தேவையில் சுமார் 50% ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது.
- சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 80 டாலருக்கும் மேல் உயர்ந்துள்ளது.
ஈரான் மீது கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். மேலும் 700க்கும் அதகமானோர் கொல்லப்பட்டனர்.
பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உலகின் 20 சதவீத எண்ணெய் தேவைக்கான ஏற்றுமதி பாதையாக இருந்த ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.
இதனால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் எண்ணெய் தேவையில் சுமார் 50% இந்தப் பாதை வழியாகவே வருகிறது.
தற்போது இந்தியாவிடம் 50 நாட்களுக்கு தேவையான அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும் நிச்சயமற்ற சூழல் நிலவி வருகிறது.
பெட்ரோல், டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் இருப்பையும் சேர்த்தால், சுமார் 74 நாட்கள் வரை சமாளிக்க முடியும், குறுகிய காலத்தில் விநியோகத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நம்பிக்கை தெரிவித்தார்.
விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லாவிட்டாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 80 டாலருக்கும் மேல் உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் இறக்குமதி செலவை அதிகரித்து, நாட்டில் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும்.
இந்நிலையில் இந்த நெருக்கடியான நேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் வழங்க தயார் என ரஷியா அறிவித்துள்ளது.
தற்போது சுமார் 1 கோடி பேரல் ரஷிய கச்சா எண்ணெய் கப்பல்களில் தயார் நிலையில் உள்ளது. இதை இந்தியா உடனடியாகப் பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது.
கடந்த ஜனவரியில் அமெரிக்காவின் அழுத்தத்தாலும் அந்நாட்டுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் ரஷியாவிடமிருந்து இறக்குமதி 20% க்கும் கீழாகக் குறைக்கப்பட்டிருந்தது.
தற்போது நிலவும் சூழலில், இந்த முடிவை இந்தியா மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
- போரில் இந்த நாடுகளின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து பிரதமா் மோடி கவலை தெரிவித்தார்.
- அங்கு வசிக்கும் இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்தும் ஆலோசித்தாா்.
புதுடெல்லி:
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன. அதைத் தொடா்ந்து, ஈரானும் பதில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
குவைத், கத்தாா் உள்ளிட்ட வளைகுடா நடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் குறிவைத்தும், இஸ்ரேல் மீதும் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே, வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அந்த நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி கடந்த 3 நாளாக தொடா்ந்து பேசி வருகிறாா். பஹ்ரைன் மன்னா், சவுதி அரேபிய பட்டத்து இளவரசா் ஆகியோருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டாா்.
ஜோா்டான் மன்னா் இரண்டாம் அப்துல்லாவுடன் பேசிய பிரதமா் மோடி, அந்தப் பிராந்தியத்தில் நிலவும் சூழல் குறித்து கவலை தெரிவித்தாா். ஐக்கிய அரபு அமீரக அதிபா் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யான் மற்றும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோருடனும் பிரதமா் மோடி தொலைபேசி வழியில் பேசினாா்.
இந்நிலையில், ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக், குவைத் பட்டத்து இளவரசா் ஷேக் சபா அல்-காலித் அல்-ஹமத் மற்றும் கத்தாா் அமீா் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானி ஆகியோருடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் நேற்று பேசினாா்.
அப்போது, போரில் இந்த நாடுகளின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து பிரதமா் மோடி கவலை தெரிவித்ததோடு, அந்த நாடுகளில் வசிக்கும் இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதிப்படுத்துவது குறித்தும் ஆலோசித்தாா் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
- மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் பல நாடுகள் தங்கல் வான்வழிப் பாதைகளை மூடின.
- இதனால் வெளிநாட்டுப் பயணிகள் பல்வேறு நாடுகளின் விமானநிலையங்களில் சிக்கியுள்ளனர்.
புதுடெல்லி:
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கடந்த சனிக்கிழமை அன்று கொல்லப்பட்டார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் அரசு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்களைத் தொடர்ந்து தாக்கி வருகிறது.
இதையடுத்து, மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்குள்ள பல்வேறு நாடுகள் தங்களது வான்வழிப் பாதைகளை மூடியுள்ளன. இதனால் லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 80 சர்வதேச விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 36 விமானங்களும், வரவேண்டிய 44 விமானங்களும் ரத்தாகின.
மத்திய கிழக்கில் உள்ள எமிரேட்ஸ் உள்ளிட்ட சில விமான நிறுவனங்கள் தங்களது விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்கின. டெல்லியில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம் மீண்டும் திரும்பி வந்ததாகக் கூறப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் கடந்த 3 நாளில் இந்திய நிறுவனங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்களை ரத்துசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.






