என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flights Canceled"

    • மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் பல நாடுகள் தங்கல் வான்வழிப் பாதைகளை மூடின.
    • இதனால் வெளிநாட்டுப் பயணிகள் பல்வேறு நாடுகளின் விமானநிலையங்களில் சிக்கியுள்ளனர்.

    புதுடெல்லி:

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கடந்த சனிக்கிழமை அன்று கொல்லப்பட்டார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் அரசு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்களைத் தொடர்ந்து தாக்கி வருகிறது.

    இதையடுத்து, மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்குள்ள பல்வேறு நாடுகள் தங்களது வான்வழிப் பாதைகளை மூடியுள்ளன. இதனால் லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 80 சர்வதேச விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 36 விமானங்களும், வரவேண்டிய 44 விமானங்களும் ரத்தாகின.

    மத்திய கிழக்கில் உள்ள எமிரேட்ஸ் உள்ளிட்ட சில விமான நிறுவனங்கள் தங்களது விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்கின. டெல்லியில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம் மீண்டும் திரும்பி வந்ததாகக் கூறப்படுகிறது.

    மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் கடந்த 3 நாளில் இந்திய நிறுவனங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்களை ரத்துசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மோசமான வானிலை மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.
    அட்லாண்டா:

    அமெரிக்காவில் வார இறுதி நாட்களில் பலரும் வெளியூர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் விமான பயணம் மேற்கொள்வது வழக்கம்.

    இதற்காக அவர்கள் விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருப்பார்கள். வானிலை மோசமாக இருந்தால் விமானங்கள் ரத்து செய்யப்படும்.

    இதனை விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் அமெரிக்காவில் பல்வேறு விமான நிறுவனங்கள் இந்த வாரம் பல விமானங்களை ரத்து செய்தது.

    அதன்படி அமெரிக்காவில் நேற்று மட்டும் 1200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 1500 விமானங்களும், 27-ந் தேதி 2300 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.

    மோசமான வானிலை மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக விமான நிறுவன அதிகாரிகள் கூறும்போது, இதற்கு முன்பு இதுபோன்ற நிலை ஏற்பட்டதில்லை. இப்போதுதான் அதிக அளவில் விமானங்களை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது, என்றனர்.
    சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 4 விமானங்கள், வர இருந்த 4 விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னையில் கடந்த 4 நாட்களாக மிக பலத்த மழை பெய்து வருகிறது.   வங்கக்கடலின் தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி உள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.  

    வெள்ள நீரால் சென்னை ஏற்கனவே தத்தளித்து வரும் நிலையில், இன்று பெய்து வரும் கனமழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.  இந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக சென்னையில் 8 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மழை மற்றும் மேகமூட்டத்தால் பார்வை சரியாக தெரியாத காரணத்தால் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 4 விமானங்கள், வர இருந்த 4 விமானங்கள் என, அதாவது மதுரை, திருச்சி,மும்பை ஷார்ஜாவில் இருந்து வருகை தரும் மற்றும் புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    ×