search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமண நிகழ்ச்சி"

    • மணப்பெண்களுக்கு குறிப்பிட்ட நோய் பாதிப்பு தொடர்பான மருத்துவ பரிசோதனை மட்டுமே நடத்தப்பட்டது.
    • கர்ப்ப பரிசோதனை நடத்துவதற்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என திண்டோரி மாவட்ட கலெக்டர் விகாஸ் மிஸ்ரா மறுத்துள்ளார்.

    போபால்:

    மத்திய பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் மாநில அரசு சார்பில் 219 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. கடாசரை நகரில் நேற்று முன்தினம் நடந்த இந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளுக்கு தலா ரூ.56 ஆயிரம் நிதியுதவியும் அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

    இது ஏழைகளை அவமதிக்கும் செயல் எனக்கூறியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஓம்கார் சிங், எந்த விதிமுறைகளின் கீழ் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது? என்பதை அரசு விளக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    ஆனால் கர்ப்ப பரிசோதனை நடத்துவதற்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என திண்டோரி மாவட்ட கலெக்டர் விகாஸ் மிஸ்ரா மறுத்துள்ளார். அந்த மணப்பெண்களுக்கு குறிப்பிட்ட நோய் பாதிப்பு தொடர்பான மருத்துவ பரிசோதனை மட்டுமே நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

    அப்போது சில பெண்கள் மாதவிலக்கு பிரச்சினை இருப்பதாக கூறியதால், மருத்துவக்குழுவினரே அந்த பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்தியதாகவும், இதில் 4 பெண்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததால், அவர்களை திருமணத்துக்கு அனுமதிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

    • திருமண நடன வீடியோக்கள் பார்க்க மிகவும் மகிழ்ச்சியான விஷயங்களில் ஒன்றாகும்.
    • நேபாளத்தில் தனது பேரனின் திருமணத்தில் தாத்தா நடனமாடுவதை இன்ஸ்டாகிராம் வீடியோ படம்பிடித்துள்ளது.

    நேபாளத்தில் தனது பேரனின் திருமணத்தில் 96 வயது தாத்தா உற்சாகமாக  நடனமாடும்  வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. திருமண நடன வீடியோக்கள் பார்க்க மிகவும் மகிழ்ச்சியான விஷயங்களில் ஒன்றாகும். அந்த வகையில் நேபாளத்தில் தனது பேரனின் திருமணத்தில் தாத்தா நடனமாடுவதைப் படம்பிடித்துள்ள வீடியோ மக்களின் இதயங்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    விருந்தாளிகள் இசைக்குழுவின் இசையில் முதியவர் நடனமாடுவதை 76,600 பார்வையாளர்கள் பார்த்து ரசித்து தங்களது லைக்குகளை தெரிவித்துள்ளனர்.

    • திருமண நிகழ்ச்சியில் கமல் குமாருக்கும் 12 வயது சிறுவனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
    • ஆத்திரம் அடைந்த சிறுவன் பழச்சாறு பாட்டிலை எடுத்து கமல்குமார் தலையில் அடித்தான்.

    உத்தரபிரதேச மாநிலம் பெரலி அருகே உள்ள ரத்னா நந்தப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அரி சங்கர். விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் கமல் குமார் (வயது 11) 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    சம்பவத்தன்று இவன் பக்கத்து கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்தான். பின்னர் சிறுவர்களுடன் சேர்ந்து நடனமாடினான். அப்போது அவனுக்கும் 12 வயது சிறுவனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் அவனை கமல் குமார் கீழே தள்ளினான். ஆத்திரம் அடைந்த சிறுவன் பழச்சாறு பாட்டிலை எடுத்து கமல்குமார் தலையில் அடித்தான். இதில் அவனது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே கமல் குமார் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டான். ஆனால் வழியிலேயே அவன் இறந்தான்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 12 வயது சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவன் சிறுவன் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.

    • திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 25 பேர் தனியார் பள்ளி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.
    • காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்காக சிகிச்சை அனுப்பி வைத்தார்.

     கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே ராயப்பனூர் கிராமத்தில் இருந்து கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 25 பேர் தனியார் பள்ளி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆலத்தூர் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் வந்த 4 பேர் காயமடைந்தனர்.  இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்காக சிகிச்சை அனுப்பி வைத்தார். திருமண நிகழ்ச்சிக்காக வந்த பஸ் சாலையோரம் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×