search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எக்ஸ் தளம்"

    • கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை திறமையாக நடத்தி முடித்தார்.
    • தமிழ்நாடு முதன்முறையாக ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் 'கேலோ' இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 19-ந் தேதி தொடங்கி 12 நாட்கள் நடைபெற்றது. நேற்றுடன் போட்டிகள் நிறைவடைந்தன.

    இதில் தமிழக வீரர்கள் எண்ணற்ற பதக்கங்களை பெற்றனர். இந்த விளையாட்டு போட்டியை திறமையாக நடத்தி முடித்த இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது 'எக்ஸ்' வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பல சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் மூலம் சமீபத்தில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் இந்தியாவின் விளையாட்டு தலைநகராகவும், உலகளவில் விளையாட்டு மையமாகவும் தமிழ்நாடு தனது நிலையை உறுதிப்படுத்தி உள்ளது.

    கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு 38 தங்கம், 21 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என 98 பதக்கங்களுடன் ரன்னர் ஆனது.

    எங்களது சாம்பியன்களின் ஒரு அற்புதமான செயல்திறன் கேலோ இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் வரலாறு படைத்துள்ளது. தமிழ்நாடு முதன்முறையாக ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

    இதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்உதயநிதி ஸ்டாலினுக்கும், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை குறைவின்றி நடத்தியதற்காக அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    வருங்கால நட்சத்திரங்களான நமது திறமையான விளையாட்டு வீரர்களுக்கு இந்த சாதனை வழி வகுக்கும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • எக்ஸ் தளம் முடங்கியதால் பயனாளர்கள் அவதியடைந்தனர்.
    • சிக்கல் வெளிவந்த சில நிமிடங்களில் #XDown டிரெண்டானது.

    உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியுமா எலான் மஸ்க், அதை 'எக்ஸ்' என்று பெயர் மாற்றினார்.

    எக்ஸ் தளத்தை உலக தலைவர்கள் முதல் ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், உலகம் முழுவதும் இன்று காலை முதல் எக்ஸ் சமூக வலைத்தளம் செயலிழந்தது. இதனால் பயனாளர்கள் அவதியடைந்து வந்தனர்.

    எக்ஸ் தளத்தின் உள்ளே பயனாளர்களுக்கு பக்கங்கள் காண்பித்தாலும், அதில் யாருடைய பதிவுகளும் காட்டப்படவில்லை. பின்தொடர்தல் (Follow), உங்களுக்காக (For you) உள்பட அனைத்து தாவல்களும் தகவல்கள் இல்லாமல் காலியாக இருந்தன. பயனர்கள் தங்களின் பதிவுகளை உருவாக்கலாம் பதிவிடலாம். ஆனால், அந்த பதிவுகள் யாரும் பார்க்க முடியாத நிலையில் இருந்தது. சிக்கல் வெளிவந்த சில நிமிடங்களில் #XDown டிரெண்டானது.

    இந்நிலையில், எக்ஸ் தளம் தற்போது செயல்பட தொடங்கியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலக பணக்காரரான எலான் மஸ்க், அதை 'எக்ஸ்' என்று பெயர் மாற்றினார்.
    • கடந்த ஆகஸ்ட் மாதம் ஐரோப்பிய ஒன்றியம், டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை ஏற்றுக்கொண்டது.

    உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதை 'எக்ஸ்' என்று பெயர் மாற்றினார். இந்த நிலையில் எக்ஸ் வலைதள சேவையை ஐரோப்பாவில் நிறுத்த எலான் மஸ்க் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் ஐரோப்பிய ஒன்றியம், டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை ஏற்றுக்கொண்டது. இதில் தீங்கிழைக்கும் உள்ளடக்கம் பரவுவதை தடுப்பது, சில பயனர் நடைமுறைகளை தடை செய்வது அல்லது கட்டுப்படுத்துவது, சில தரவுகளை பகிர்வது போன்ற விதிகள் உள்ளது.

    இந்த புதிய இணையதள ஒழுங்குமுறை சட்டம் காரணமாக ஐரோப்பிய பிராந்தியத்தில் எக்ஸ் செயலியின் இருப்பை அகற்றுவது அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பயனர்களை தடுப்பது குறித்து எலான் மஸ்க் ஆலோசனை நடத்தி உள்ளார்.

    • எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார்.
    • ஸ்ரீரங்கம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு இந்து அமைப்புகள் அவ்வப்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அந்த பெரியார் சிலையை இடித்து தள்ள வேண்டும் என ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார். இதனால் மீண்டும் பிரச்சனை எழுந்தது.

    அதைத்தொடர்ந்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, துணை போலீஸ் கமிஷனர் அன்பு உள்ளிட்டோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சிலைக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சர்ச்சைக்குரிய பதிவினை ராமநாதபுரம் திருவாடனை பகுதியைச் சேர்ந்த பரணி என்பவர் பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை ஸ்ரீரங்கம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் நிலையில் பெரியார் சிலையை தகர்க்கப் போவதாக மீண்டும் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் திருச்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×