search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணையம்"

    • ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந்தேதி அகில உலகமே மீனவர் நாளாக கொண்டாடி வருகிறது
    • இந்த ஆண்டு மீனவர் நாள் விழா கொண்டாட்ட மானது வருகிற 21-ந்தேதி மாலை 4.30 மணியளவில் இணையம் புத்தன்துறை மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.

    நாகர்கோவில் : கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழுமத்தின் இயக்குனர் டன்ஸ்டன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந்தேதி அகில உலகமே மீனவர் நாளாக கொண்டாடி வருகிறது. அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து மீனவர் கூட்டமைப்புகளும், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சியும் இணைந்து மீனவ நாளை ஆண்டு தோறும் சிறப்பித்து வருகிறது.

    இந்த ஆண்டு மீனவர் நாள் விழா கொண்டாட்ட மானது வருகிற 21-ந்தேதி மாலை 4.30 மணியளவில் இணையம் புத்தன்துறை மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்குகிறார். கனிமொழி எம்.பி., மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், திருமாவளவன் எம்.பி., விஜய் வசந்த் எம்.பி., ஜவஹிருல்லா எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட கலெக்டர், குமரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், அரசு அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மீனவ தலைவர்கள் மற்றும் அனைத்து மீனவ மக்களும் கலந்துகொள்கின்றார்கள்.

    இந்த கூட்டத்தில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட வர்கள் கலந்து கொள்வார் கள். இந்த மாநாட்டில் மீனவர்களை பழங்குடி யினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மீனவர்களுக்கு தனி தொகுதி வரையறை செய்ய வேண்டும். மீன வர்களை வசிக்கும் பகுதியை தனி ஊராட்சி அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

    உலக மீனவர் நாளை முன்னிட்டு பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. சிறுவர்களுக்கு, இளைஞர்களுக்கு, பெரியவர்களுக்கு என தனித்தனி பிரிவாக பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டிகள், குறும்படப்போட்டி நடத்தப்பட்டது. வாணி யக்குடி புனித ஜேம்ஸ் உயர்நிலைப்பள்ளியில் வைத்து 7 நபர்கள் கொண்ட கால்பந்து போட்டியும் நடக்கிறது. 20-ந்தேதி கொட்டில்பாடு, புனித அல்லேசியார் திருமண மண்டபத்தில் வைத்து கடல் மீன் சமையல் போட்டியும், 21-ந்தேதி காலை 10.30 மணிக்கு தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் வைத்து நீச்சல், படகு போட்டிகளும் நடைபெறு கிறது.

    வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. மீனவர் நாளை முன்னிட்டு நாளை (18-ந்தேதி), 19-ந்தேதி அம்மாண்டிவிளை, புனித ஜான்ஸ் கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் வைத்து 2 நாள் 'திமில் சங்கம்' கருத்தரங்கு நடத்தப் பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×