என் மலர்
இந்தியா

இந்தியாவில் சமூக வலைதள போதையால் சீரழியும் சிறார்கள் - பொருளாதார சர்வேயில் எச்சரிக்கை
- 'Cyber Bullying' அதிகரிப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
- பதப்படுத்தப்பட்ட உணவுகளின் விளம்பரங்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஊடகங்களில் ஒளிபரப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
யூனியன் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சகம் 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை (Survey) வெளியிட்டுள்ளது.
கட்டுப்பாடற்ற டிஜிட்டல் பயன்பாடு சிறுவர்களின் மனநலம், கல்வித் திறன் மற்றும் சமூக நடத்தையைப் பாதிப்பதாக ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.
15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களிடையே சமூக வலைதள போதையால் மன அழுத்தம் மற்றும் 'Cyber Bullying' அதிகரிப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
சமூக வலைதளங்கள், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேமிங் ஆப்ஸ்கள் பயனர்களின் வயதைத் துல்லியமாகச் சரிபார்ப்பதை ஆன்லைன் நிறுவனங்கள் உறுதி செய்யதல், திரை நேரத்தைக் குறைக்கப் பள்ளிகளில் 'டிஜிட்டல் வெல்னஸ்' பாடத்திட்டத்தைக் கொண்டு வருதல், தினசரி உடல் உழைப்பைக் கட்டாயமாக்குதல் மற்றும் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் 'ஆஃப்லைன் யூத் ஹப்களை' உருவாக்குதல் போன்ற பரிந்துரைகளை ஆய்வறிக்கை வழங்கியுள்ளது.
சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் சிறுவர்களின் இணையப் பயன்பாட்டைக் குறைக்க எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்தியா பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சிறுவர்களின் ஆரோக்கியத்தைக் கெடுப்பதால் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இது போன்ற உணவுகளின் விளம்பரங்களுக்கு ஊடகங்களில் தடை விதிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே aasthirleut






