லீக் ஆன அந்தரங்க வீடியோ.. பெண் புகார்.. அம்பலமான பகீர் பின்னணி

இந்த அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சில நாட்களுக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் பரவியது.மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
லீக் ஆன அந்தரங்க வீடியோ.. பெண் புகார்.. அம்பலமான பகீர் பின்னணி
Published on

மும்பையில் ஒரு பெண் தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி பெண்ணை மிரட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஜோசுவா பிரான்சிஸ் இடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது.

பெண்ணின் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்த தம்பதியினர் சிறு சிறு பிரச்சனைகளுக்கு அவ்வப்போது சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். அதனால் தனது மனைவியை அவமானப்படுத்த அவர்கள் அந்தரங்கமாக இருக்கும் தருணங்களை அவர் புகைப்படம், வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வீடியோ, புகைப்படங்களை அவர் தனது நண்பர் ஜோசுவா பிரான்சிஸ் இடம் கொடுத்துள்ளார்.

பின்னர் பிரான்சிஸ் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து அவரது அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஒரு ஆபாச இணையதளத்தில் பதிவேற்றியதாக தெரிவித்து, ஆபாச தளத்தின் இணைய URL ஐ பகிர்ந்துள்ளார்.

இந்த அந்தரங்க வீடியாக்களை நீக்க வேண்டும் என்றால் 50,000 ரூபாய் பணம் தரவேண்டும் என்று மிரட்டி அந்த பெண்ணிடம் இருந்து பிரான்சிஸ் பணம் வாங்கியுள்ளார்.

ஆனால் இந்த அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சில நாட்களுக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் பரவியது.

அதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com