search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனைத்துக் கட்சி கூட்டம்"

    • இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.
    • பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்ற முதல் கூட்டம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கும். இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்துகிறார்.

    நாளை மறுநாள் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே இந்த தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    பீகாரில் ஆட்சி மாற்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறும் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை பெறுவதற்காக பாராளுமன்றத்தில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளுக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பாராடாளுமன்ற கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

    • 5 மாநில சட்டசபை தேர்தலால் இந்த ஆண்டு டிசம்பரில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.
    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை மறுதினம் தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டு 5 மாநில தேர்தல் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.

    இதற்கிடையே, நடப்பு ஆண்டிற்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெற உள்ளது என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்தக் கூட்டத்தொடரின் போது 5 மாநில தேர்தல் முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    • 5 மாநில தேர்தல் காரணமாக இந்த ஆண்டு டிசம்பரில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.
    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு 5 மாநில தேர்தல் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.

    இதற்கிடையே, நடப்பு ஆண்டிற்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெற உள்ளது என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி டிசம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தக் கூட்டத்தொடரின் போது பல்வேறு பிரச்சனைகளைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    ×