search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MK Stlain"

    • தமிழகத்தை புகலிடமாக கருதி பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்ள ஒன்பதாவது முறையாக வருகை புரிந்திருக்கிறார்.
    • ராகுல் காந்தி தமிழக மக்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டுள்ளார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வடமாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு அலை வீசத் தொடங்கிய நிலையில் தமிழகத்தை புகலிடமாக கருதி பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்ள ஒன்பதாவது முறையாக வருகை புரிந்திருக்கிறார்.

    ஆனால், 100 முறை தமிழகத்திற்கு வந்தாலும் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கோவை பொதுக்கூட்ட மேடையில் நிலவிய உணர்ச்சிபூர்வமான பரஸ்பர நட்பு, தமிழக மக்களிடம் காட்டிய உண்மையான அன்பிற்கு இணையாக நரேந்திர மோடியின் பகல் வேஷம் எடுபடாது என்பதை அனைவரும் அறிவார்கள்.

    இதன்மூலம் தலைவர் ராகுல் காந்தி தமிழக மக்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோது சிஆர்பிஎப் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத முடியவில்லை.
    • மத்திய தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் நடவடிக்கை எடுத்துள்ளது.

    கோவை:

    மத்திய மந்திரி எல்.முருகன் இன்று தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் எல்.முருகன் கூறியிருப்பதாதவது:-

    பிரதமர் நரேந்திரமோடி இந்தியை பரப்புவதாக ஒரு பொய் செய்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பரப்பி வருகிறார். பிரதமர் மோடி, தமிழில் பேச ஆரம்பித்தால், உங்களைப் போன்ற போலி திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கு, மீண்டும் மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பே கிடைக்காது என்பது தான் உண்மை.

    இந்த உண்மையை, இன்று தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சாமானிய மக்களும் உணர்ந்துள்ளார்கள். அதன் விளைவே உங்களின் இந்த அறிக்கை என்பதையும் உணர்கிறேன்.

    இதுவரை எந்தவொரு மத்திய அரசும் செய்யாத அளவிற்கு, தமிழுக்கு அரும்பெரும் தொண்டாற்றி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழுக்கு செய்த தொண்டுகளை பட்டியலிடுகிறேன்.

    கடந்த காலங்களில், பல்வேறு நாடுகளுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று வரும் பிரதமர், திருக்குறள் உள்ளிட்ட தமிழின் தொன்மைக்கால இலக்கியங்கள் ஒவ்வொன்றையும் உலக அரங்கில் முன்மொழிந்து வருகிறார் என்பதை முதலமைச்சர் பார்ப்பதில்லையா?

    கடந்தாண்டு பொதுத்தேர்வு எழுதுகிற மாணவர்களிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நமது தேசத்தின் மிகவும் தொன்மையான மொழி தமிழ் தான் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டும் வண்ணம், 'காசித் தமிழ்ச் சங்கமம்' விமரிசையாக நடத்தப்பட்டது என்பதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நினைவில்லையா?

    பாராளுமன்றம் புதிய கட்டிடத்தில் தமிழகத்தின் பெருமையான செங்கோல், சென்னையில் செம்மொழி ஆராய்ச்சி மையத்திற்கான புதிய கட்டிடம் என்று, தமிழ் மொழி முன்னிலைப்படுத்தப்பட்டு வருவதை கவனிப்பதில்லையா?

    மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோது சிஆர்பிஎப் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத முடியவில்லை. மத்திய தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் நடவடிக்கை எடுத்துள்ளது.

    தமிழ் தான் எல்லாம் என்று இத்தனை ஆண்டு காலமாக பொய் சொல்லியே தமிழ் மக்களை ஏமாற்றி வந்த உங்களால், உங்களின் கட்சிக்காரர்கள் நடத்துகிற தனியார் பள்ளிகளில் தமிழை கட்டாய மொழியாக்க முடிந்ததா? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்றால், உங்கள் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து தமிழின் பெயரைச் சொல்லியே புளுகி வரும் உங்களைப் பற்றி சுயபரிசோதனை செய்து பாருங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • எனது ஆட்சியில் 42 ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்து திறந்து வைத்திருக்கிறேன்.
    • திமுக தேர்தல் அறிக்கையில் 10 சதவீத வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.

    சென்னை

    சென்னை தலைமை செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * எனது ஆட்சியில் 42 ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்து திறந்து வைத்திருக்கிறேன்.

    * சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானது.

    * திமுக அரசு அமைத்த 52 குழுக்கள் என்ன செய்கின்றன? - வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தினோம்.

    * முதலீட்டாளர் மாநாடு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் தரவில்லை.

    * மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - செலவினம் குறித்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை.

    * நான் எழுப்பிய கேள்விகள் எதற்கும் முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை.

    * திமுக தேர்தல் அறிக்கையில் 10 சதவீத வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

    • கலைஞர் 100 நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்து கொண்டனர்.
    • திரைத்துறை மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.

    கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் கலைஞர் 100 விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் திரைத்துறையை சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் தனுஷ், " ஒரு படத்தின் பூஜைக்காக பத்திரிகை வைக்க கலைஞர் வீட்டிற்கு சென்றேன். அப்போது கலைஞர் கருணாநிதி என்னை 'வாங்க மன்மத ராசா' என அழைத்தார். நம்ம பாட்டை இவர் கேடடிருக்காரான்னு ஆச்சரியமா இருந்தது."

     


    "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அசுரன் படம் பார்த்துவிட்டு என்னை தொடர்புகொண்டு வாழ்த்தினார். அப்போது அவர், பிரதர் நான் ஸ்டாலின் பேசறேன் என கூறினார். இன்றைக்கு நமது முதலமைச்சர் எளிதில் அணுகும்படியாக இருக்கிறார். மக்களின் முதலமைச்சராக உள்ளார். கலைஞர் அவர்கள் மறைந்து விட்டார் என யாராவது பேசினால்தான் அவர் மறைந்து விட்டார் என மனதிற்குள் தோன்றுகின்றது," என தெரிவித்தார்.

    எல்லைப் போராட்டத் தியாகிகளில், 14 பேருக்கு இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நவம்பர் 1-ம் நாளை எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாக அனுசரிக்கும் வகையில், எல்லைப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு சிறைசென்று தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லைப் போராட்ட தியாகிகளை சிறப்பிக்கும் வகையில், சிறப்பு நேர்வாக ஒவ்வொருவருக்கும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசு வழங்கினார்.

    இந்திய நாடு விடுதலை பெற்ற பின்பு, 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. அவ்வாறு பிரிக்கப்பட்டபோது, அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. அவ்வாறு பிரித்த போது, தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க நடைபெற்ற போராட்டங்களில் பலர் ஈடுபட்டு உயிர்நீத்தும், சிறை சென்றும் தியாகம் செய்துள்ளனர்.

    அவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டு, தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ம் நாளை எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாக தமிழ்நாடு அரசு அனுசரிக்கும் வகையில், எல்லைப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு சிறைசென்று தியாகம் செய்து தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லைக்காவலர்கள் 110 பேருக்கு சிறப்பு நேர்வாக ஒவ்வொருவருக்கும் 1லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, 110 எல்லைப் போராட்டத் தியாகிகளில், 14 பேருக்கு இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார். மற்ற எல்லை போராட்டத் தியாகிகளுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வாயிலாக வழங்கப்படும்.

    நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன்,செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப. ஜெயசீலன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் செ. சரவணன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


    ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்யக்கூடிய தன்பாலின உறவு காட்டு மிராண்டித்தனமானது என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார். #DMK #DuraiMurugan #MKStalin
    தென்காசி:

    தென்காசியில் நேற்றிரவு தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் பேசுகையில், ‘‘தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் 48 அணைகள் கட்டப்பட்டுள்ளன. 8 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசிக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் இப்போது வரை நிறைவேற்றப்படவில்லை. இந்திய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்டாலின் உள்ளார். ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவர் தான் அடுத்த பிரதமர்” என்றார்.


    தொடர்ந்து துரைமுருகன் தென்காசியில் இன்று காலை நடந்த திருமண விழாவில் அவர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.

    ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்யக்கூடிய தன்பாலின உறவு காட்டு மிராண்டித்தனமானது. இதற்கு சட்டமும் சிலரும் துணைபோகிறார்கள். மதத்துக்கு மதம் திருமண முறை மாறுபட்டாலும், ஆணுக்கும் பெண்ணுக்கும் தான் திருமணம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார். #DMK #DuraiMurugan #MKStalin
    கர்நாடக தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதையொட்டி எடியூரப்பாவுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018 #MKStalin #Yeddyurappa
    சென்னை:

    கர்நாடக தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதையொட்டி எடியூரப்பாவுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளதாவது:-

    கர்நாடக தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். எடியூரப்பாவுக்கு வாழ்த்துக்கள். புதிதாக பொறுப்பேற்கும் பா.ஜ.க அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக காவிரி உரிமையை மீறாமல் விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #KarnatakaElection2018 #MKStalin #Yeddyurappa
    ×