என் மலர்
நீங்கள் தேடியது "டொனால்டு டிரம்ப்"
- போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.
- அமெரிக்காவுடன் செய்யப்படும் அனைத்து வர்த்தகத்திற்கும் 25 சதவீத வரியைச் செலுத்த வேண்டும்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.
அங்கு 2 வாரங்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதனால் ஈரானில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. போராட்டங்கள் பரவுவதை தடுக்க செல்போன், இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையே போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி னால் ஈரான் விவகாரத்தில் தலையிடுவோம் என்றும் ராணுவ நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா தெரிவித்தது. மேலும் ஈரானில் போராட்டக்காரர்களுக்கு உதவ தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும், அமெரிக்காவுடன் செய்யப்படும் அனைத்து வர்த்தகத்திற்கும் 25 சதவீத வரியைச் செலுத்த வேண்டும். இந்த உத்தரவு இறுதியானது மற்றும் முடிவானது என்று தெரிவித்து உள்ளார்.
ஈரானுடன் சீனா மிக அதிகளவில் வர்த்தகம் செய்து வருகிறது. இதனால் இந்த வரி அமலுக்கு வரும்போது சீனா அதிகம் பாதிக்கப்படும்.
அதேபோல் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி போன்ற நாடுகளும் ஈரானுடன் கணிசமான அளவுக்கு வர்த்தகம் செய்கின்றன. இதனால் டிரம்ப்பின் இந்த உத்தரவால் இந்தியா உள்பட இந்த நாடுகளும் பாதிக்கப்படக் கூடும்.
ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி அப்பாஸ் அராக்சி கூறும்போது, அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு பயப்பட மாட்டோம். எங்கள் உரிமைகளை பாதுகாக்க அனைத்து வழிகளிலும் தயாராக இருக்கிறோம்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். அதேவேளையில் தேவை ஏற்பட்டால் போரிடவும் தயாராக இருக்கிறோம் என்றார்.
ஏற்க்கனவே ஈரான் மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் விதித்த பொருளாதார தடைகளே, ஈரானின் தற்போது நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
- ராணுவ ஆக்கிரமிப்பைப் பற்றிச் சிந்திப்பதை அமெரிக்க அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
- அது அவர்களுக்கு ஒரு வரலாற்றுப் பாடமாக அமையும்.
ஈரானில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இதில் வன்முறை ஏற்பட்டு இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே ஈரானில் போராடுபவர்களுக்கு அமெரிக்க ஆதரவு அளிப்பதாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில் ஈரானில் அமெரிக்கா ராணுவ ரீதியாகத் தலையிட முயன்றால், டிரம்பிற்கு மறக்க முடியாத பாடம் புகட்டப்படும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று அந்நாட்டு பாராளுமன்ற கூட்டத்தில் உரையாற்றிய காலிபப், "எங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிராகத் தவறான முடிவுகளை எடுப்பதையோ அல்லது ராணுவ ஆக்கிரமிப்பைப் பற்றிச் சிந்திப்பதையோ அமெரிக்க அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்த டிரம்ப் நிர்வாகம் துணிந்தால், அவர்கள் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய பதிலடியைச் சந்திக்க நேரிடும். அது அவர்களுக்கு ஒரு வரலாற்றுப் பாடமாக அமையும்.
ஈரானில் உள்நாட்டு அரசியல் குழப்பங்களை அமெரிக்கா தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வதாகக் குற்றம் சாட்டிய அவர், ஈரானிய மக்கள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும் வல்லமை படைத்தவர்கள் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ராணுவ நடமாட்டத்தை ஈரான் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், எந்தவொரு சிறிய அச்சுறுத்தலுக்கும் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்கா அத்துமீறினால் ஈரான் அருகில் உள்ள நாடுகளில் நிலைகொண்டுள்ள உள்ள அமெரிக்கா ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்தார்.
- அமெரிக்காவிற்கு இந்தியாவை விட முக்கியமான கூட்டாளி நாடு வேறு ஏதுமில்லை
- அடுத்த ஓரிரு ஆண்டுகளில் டிரம்ப் மீண்டும் இந்தியாவிற்கு வருவார்.
இந்தியாவிற்கான புதிய அமெரிக்கத் தூதராக செர்ஜியோ கோர் அண்மையில் நியமிக்கப்பட்டார். இன்று, டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அவர் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்புக்குப் பின் பேசிய கோர், "அதிபர் டிரம்ப் உடன் நான் உலகம் முழுவதும் பயணம் செய்திருக்கிறேன். பிரதமர் மோடி மீது அவர் வைத்திருக்கும் நட்பு மிகவும் உண்மையானது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.
இரு நாடுகளுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்த நட்பு மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளது" என்று தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கு இந்தியாவை விட முக்கியமான கூட்டாளி நாடு வேறு ஏதுமில்லை என்று குறிப்பிட்ட அவர், வர்த்தகம், பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், சமீபத்தில் டிரம்ப் உடன் உணவு அருந்தியபோது, அவர் தனது முந்தைய இந்தியப் பயணம் குறித்தும், பிரதமர் மோடியுடனான தனது சிறந்த உறவு குறித்தும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்ததாகக் கோர் கூறினார்.
அடுத்த ஓரிரு ஆண்டுகளில் டிரம்ப் மீண்டும் இந்தியாவிற்கு வருவார் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய மீது 500 சதவீதம் வரி விதிக்கும் புதிய மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
- வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்தது
- வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரை போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்து அமெரிக்காவுக்கு அழைத்து சென்றது.
இதையடுத்து வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார். இதற்கிடையே வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா கையாளும் என்றும் எண்ணெயை விற்று அதிலிருந்து வரும் பணம் வெனிசுலா நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவில் முதலீடுகளை செய்யும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், வெனிசுலாவின் பொறுப்பு அதிபர் தாம் தான் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில், வெனிசுலாவின் பொறுப்பு அதிபர் டிரம்ப் என்று குறிப்பிட்டுள்ள விக்கிபீடியா பக்கத்தை பகிர்ந்துள்ளார்.
- மரியா கொரினா மச்சாடோ வெனிசுலா அதிபர் மதுரோவின் தீவிர எதிர்ப்பு நிலை கொண்டனர்
- இந்தியா பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன். மேலும் 7 போர்களை நிறுத்தினேன்.
2025 ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசை வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வென்றார். இவர் வெனிசுலா அதிபர் மதுரோவின் தீவிர எதிர்ப்பு நிலை கொண்டனர், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடைய ஆதரவாளர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்கா வெனிசுலாவுக்குள் அதிரடியாக நுழைந்து, தலைநகர் காரகஸில் உள்ள அதிபர் மாளிகையில் இருந்து மதுரோவையும் அவரது மனைவியையும் கடத்தி அமெரிக்காவுக்கு கொண்டு சென்றது.
இந்நிலையில் தனக்கு வழங்கப்பட அமைதிக்கான நோபல் பரிசை டொனால்ட் டிரம்ப்புக்கு கைமாற்ற மரியா விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள நோபல் கமிட்டி, "நோபல் பரிசை ஒருமுறை அறிவித்த பிறகு, அதை மாற்றவ, யாருடனும் பகிர்ந்து கொள்ளவோ அல்லது ரத்து செய்யவோஇயலாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
நேற்று முன் தினம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், "இந்தியா பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன். மேலும் 7 போர்களை நிறுத்தினேன்.
ஒன்றும் செய்யாமல் ஒபாமாவுக்கு நோபல் வழங்கப்பட்டது. ஆனால் அமைதிக்கான நோபல் பரிசுக்கு என்னை விட தகுதியானவர் யாரும் இல்லை" என்று மீண்டும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வெனிசுலாவின் இடைக்கால அதிபராக துணை அதிபர் சிலியா ரோட்ரிக்ஸ் பதவி ஏற்றுள்ளார். மரியா கொரினா மச்சாடோ, "வெனிசுலா அதிபராக ஆதரவு தருவீர்களா என்ற கேள்வுக்கு பதிலளித்த டிரம்ப், அவருக்கு நோபல் விருதை கொடுத்திருக்கவே கூடாது. அவருக்கு உள்நாட்டில் மக்களிடம் பெரிய செல்வாக்கு இல்லை" என்று தெரிவித்திருந்தார்.
- அடுத்த இலக்கு ரஷிய அதிபர் புதின் என ஜெலன்ஸ்கி மறைமுகமாக குறிப்பிட்டார்.
- ரஷிய அதிபர் புதின் மீது சர்வதேச நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கப் படைகள் கைது செய்துள்ள நிலையில், அடுத்த இலக்கு ரஷிய அதிபர் புதின் என ஜெலன்ஸ்கி மறைமுகமாக குறிப்பிட்டார்.
இந்நிலையில் புதினை கைது செய்ய அமெரிக்கா உத்தரவிடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "அதற்கான அவசியம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.
அவருடன் எப்போதும் ஒரு சிறந்த உறவை வைத்திருக்கவே விரும்பினேன். ஆனால் தற்போதைய நிலைமை ஏமாற்றமளிக்கிறது. உக்ரைன்-ரஷிய போரைத் தடுக்க முடியாததில் எனக்கு வருத்தம் உண்டு" என்று கூறினார்.
ரஷியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், பல ரஷிய வீரர்கள் போரில் கொல்லப்படுவதாகவும் குறிப்பிட்ட டிரம்ப் , இந்தப் போரை மிக விரைவில் முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக தெரிவித்தார்.
உக்ரைனில் செய்த போர் குற்றங்களுக்காக ரஷிய அதிபர் புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- எட்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்த நேரத்தில் நான் தலையிட்டுப் போரை நிறுத்தினேன்.
- சர்வதேச விதிகள் எனக்குப் பொருந்தாது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலைத் தான் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும், வரலாற்றில் தன்னை விட நோபல் அமைதிப் பரிசுக்குத் தகுதியானவர் யாரும் இல்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பெரிய போர் வெடிக்கும் சூழல் இருந்தது.
எட்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்த நேரத்தில் நான் தலையிட்டுப் போரை நிறுத்தினேன்.
வரலாற்றில் நோபல் அமைதிப் பரிசுக்கு என்னைப் போல தகுதியானவர்கள் வேறு யாரும் இல்லை. ஆனால், ஒபாமா எந்த ஒரு பணியும் செய்யாமலே நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டார்.
இதுவரை சுமார் 8 பெரிய போர்களைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைத்துள்ளேன். அவற்றில் சில 25 முதல் 36 ஆண்டுகள் வரை நீடித்தவை" என்று தெரிவித்தார்.
அதேநேரம், சர்வதேச விதிகள் எனக்குப் பொருந்தாது என்று கூறியுள்ள டிரம்ப் , வெனிசுலா மற்றும் ஈரான் விவகாரங்களிலும் தான் தலையிடுவேன் என்று தெரிவித்தார்.
வெனிசுலா அதிபரைக் கடத்தியதற்கு மத்தியில் டிரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கேட்பது பேசுபொருளாகி வருகிறது.
- வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார்.
- வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா கையாளும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரை போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்து அமெரிக்காவுக்கு அழைத்து சென்றது.
இதையடுத்து வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார். இதற்கிடையே வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா கையாளும் என்றும் எண்ணெயை விற்று அதிலிருந்து வரும் பணம் வெனிசுலா நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவில் முதலீடுகளை செய்யும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் வெனிசுலா கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் வரிவிதிப்பு நடவடிக்கைகளால் முடங்கியுள்ள இருதரப்பு வர்த்தகத்தை மீட்டெடுக்க நல்ல வாய்ப்பாக அமையும் என டிரம்ப் அரசு தரப்பு கருத்து தெரிவித்துள்ளது.
- அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் வீழ்ச்சி அடைவார்.
- சில போராட்டக்காரர்கள் அமெரிக்காவின் தயவைப் பெறுவதற்காகவே செயல்படுகிறார்கள்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.
இதில் போராட்டக்காரர்கள் - பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இதில் 62 பேர் பலியாகி உள்ளனர். அங்கு போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
ஈரானில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினால் அமெரிக்கா தலையிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இந்த நிலையில் டிரம்ப்புக்கு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முழு உலகத்தைப் பற்றியும் ஆணவத்துடன் தீர்ப்பளிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். உலகின் சர்வாதிகாரிகளும் ஆணவ ஆட்சியாளர்களும் தங்கள் ஆணவத்தின் உச்சத்தில் இருந்தபோது தங்கள் வீழ்ச்சியைக் கண்டனர். அதேபோல் டிரம்ப்பும் வீழ்ச்சி அடைவார். ஆணவத்துடன் ஆட்சி செய்யும் தலைவர்கள் தவிர்க்க முடியாத வீழ்ச்சியைச் சந்திப்பார்கள்.
ஈரானில் போராட்டத்தை அமெரிக்கா தூண்டிவிட்டு அமைதியின்மையை ஏற்படுத்தி வருகிறது.
சில போராட்டக்காரர்கள் அமெரிக்காவின் தயவைப் பெறுவதற்காகவே செயல்படுகிறார்கள். ஒரு சில நாசகாரர்கள் சொந்த நாட்டின் அரசு கட்டிடத்தை அழித்தனர். இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்க அதிபரை மகிழ்விப்பதற்காகவே செய்யப்பட்டன.
நீங்கள் யாராக இருந்தாலும் சரி ஒருமுறை நீங்கள் ஒரு வெளிநாட்டினருக்குக் கூலிக்கு வேலை செய்யத் தொடங்கிவிட்டால் அந்த தேசம் உங்களை நிராகரிக்கப்பட்டவராகக் கருதும். டிரம்பின் கைகள் ஈரானியர்களின் இரத்தத்தால் கறைபடிந்துள்ளது. இவ்விவகாரத்தில் ஈரான் ஒருபோதும் பின்வாங்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவின் எண்ணெய் தொழில்துறையை மீண்டும் கட்டியெழுப்பும்
- அமெரிக்கா உடனடியாக 5 கோடி பேரல்கள் வரை கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து விற்கத் தொடங்கும்
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரை போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்து அமெரிக்காவுக்கு அழைத்து சென்றது.
இதையடுத்து வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார். இதற்கிடையே வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா கையாளும் என்றும் எண்ணெயை விற்று அதிலிருந்து வரும் பணம் வெனிசுலா நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவில் முதலீடுகளை செய்யும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்காக அமெரிக்க எண்ணெய் நிறுவன தலைவர்களுடன் டிரம்ப் வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
வெனிசுலாவுடன் தற்போது நாங்கள் மிகவும் இணக்கமாக இருக்கிறோம். அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவின் சிதைந்த எண்ணெய் தொழில்துறையை விரைவாக மீண்டும் கட்டியெழுப்பவும், மில்லியன்கணக்கான பேரல் எண்ணெய் உற்பத்தியை அமெரிக்கா, வெனிசுலா மக்கள் மற்றும் முழு உலகிற்கும் பயனளிக்கும் வகையில் கொண்டு வரவும் உதவ முடியும்.
எந்த நிறுவனங்கள் வெனிசுலாவுக்கு செல்லும் என்பது குறித்த முடிவை நாங்கள் எடுப்போம். வெனிசுலா மிகவும் வெற்றிகரமானதாக இருக்கப் போகிறது.மேலும் அமெரிக்க மக்கள் பெரும் பயனாளிகளாக இருப்பார்கள்.
அமெரிக்கா உடனடியாக 5 கோடி பேரல்கள் வரை கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து விற்கத் தொடங்கும் என்றும், இது காலவரையின்றித் தொடரும் என்றும் வெனிசுலாவும் ஒப்புக் கொண்டுள்ளது என்றார்.
மேலும் அவர் கூறும் போது, நான் 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்தேன். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை அணு ஆயுதங்கள் மோதல் இல்லாமல் விரைவாக முடிவுக்கு கொண்டு வந்தேன்.
1 கோடி பேரின் உயிர்களை காப்பாற்றியதற்காக பாகிஸ்தான் பிரதமர் என்னை பாராட்டினார். வரலாற்றில் என்னை விட வேறு யாருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று என்னால் நினைக்க முடியவில்லை என்றார்.
- ICE அதிகாரிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் ஒரு Legal Observer ஆக இருந்து வந்தார்.
- டிரம்ப், ICE அதிகாரிக்கு ஆதரவாக பேசியது மேலும் கோபத்தை தூண்டியுள்ளது.
டொனால்டு டிரம்ப் ஆளுகையின் கீழ் அமெரிக்காவில் வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் மீது கடுமையான அடக்குமுறை இருந்து வருகிறது.
ICE - குடிவரவு அதிகாரிகள் ஏகபோக அதிகாரம் பெற்று சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை, 37 வயதான ரெனி நிக்கோல் குட் என்ற பெண், ICE அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மின்னிசோட்டாவை சேர்ந்த, மூன்று குழந்தைகளுக்குத் தாயான ரெனி அமெரிக்க குடிமகள் ஆவார். அவர் ICE அதிகாரிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் ஒரு Legal Observer ஆக இருந்து வந்தார்.
இந்நிலையில் சம்பவம் நடந்த அந்த தினம், ரெனி ICE அதிகாரி அழுத்தத்தை புறக்கணித்து தனது காரில் இருந்து இறங்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அதிகாரி ரெனியின் முகத்திலேயே 3 முறை சுட்டுள்ளார். இதில் ரெனி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
ரெனி தனது காரை அதிகாரிகள் மீது மோத முயன்றதாகவும் அதிகாரி விளக்கம் அளித்தார்.
ஆனால் இந்தச் சம்பவம் மினியாபோலிஸ் நகரில் பெரும் போராட்டங்களை வெடிக்கச் செய்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேசிய டிரம்ப், ICE அதிகாரிக்கு ஆதரவாக பேசியது மேலும் கோபத்தை தூண்டியுள்ளது. அப்பெண் தனது காரை ICE அதிகாரி மீது ஏற்ற முயன்றுள்ளார் என்றும் இது தீவிர இடதுசாரிகளின் அணுகுமுறை என்றும் சாடினார்.
மின்னிசோட்டா நகர மேயர் ஜேக்கப் ஃப்ரே, இது பச்சைப் பொய் என்றும் ICE அதிகாரிகள் மினியாபோலிஸை விட்டு வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
வீடியோ ஆதரங்களின்படி அப்பெண் காரை திருப்ப முயன்றபோது அதிகாரி ஓடி வந்து சுடுவது பதிவாகி உள்ளது.
ஆனால் அவர் இடிக்க முயன்றதற்கான ஆதாரம் இல்லை. இது அரசு பயங்கரவாதம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மக்களிடையே இந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஒப்பந்தத்திற்கான அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிக்கப்பட்டு, கோப்புகள் தயாராக இருந்தன.
- இந்தியாவுக்கான வரியை 500% வரை உயர்த்தும் மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
பிரதமர் மோடி டிரம்ப்புக்கு போன் செய்து பேசாததே அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் தடைபட காரணம் என அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் தெரிவித்துள்ளார்.
ஹோவர்ட் லட்னிக் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "ஒப்பந்தத்திற்கான அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிக்கப்பட்டு, கோப்புகள் தயாராக இருந்தன.
அதிபர் டிரம்ப் தான் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்பவர். மோடி அவரை அழைக்க வேண்டும் என்று கூறினோம். ஆனால் இந்தியா அதற்குத் தயக்கம் காட்டியது. இறுதி கட்டத்தில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்பை தொலைபேசியில் அழைத்து பேசத் தயங்கியதே ஒப்பந்தம் தள்ளிப்போகக் காரணம்." என்று தெரிவித்தார்.
தற்போது இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரை வரி விதிக்கிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகாததால், இந்திய ஏற்றுமதியாளர்கள் தொடர்ந்து இந்த அதிக வரியைச் சுமக்க வேண்டியுள்ளது.
இதற்கிடையே ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கான வரியை 500% வரை உயர்த்தும் மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.






