என் மலர்
உலகம்

டிரம்பிடம் போனில் பேச மோடி தயங்கியதால் இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் முடக்கம் - வர்த்தக செயலாளர்
- ஒப்பந்தத்திற்கான அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிக்கப்பட்டு, கோப்புகள் தயாராக இருந்தன.
- இந்தியாவுக்கான வரியை 500% வரை உயர்த்தும் மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
பிரதமர் மோடி டிரம்ப்புக்கு போன் செய்து பேசாததே அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் தடைபட காரணம் என அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் தெரிவித்துள்ளார்.
ஹோவர்ட் லட்னிக் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "ஒப்பந்தத்திற்கான அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிக்கப்பட்டு, கோப்புகள் தயாராக இருந்தன.
அதிபர் டிரம்ப் தான் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்பவர். மோடி அவரை அழைக்க வேண்டும் என்று கூறினோம். ஆனால் இந்தியா அதற்குத் தயக்கம் காட்டியது. இறுதி கட்டத்தில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்பை தொலைபேசியில் அழைத்து பேசத் தயங்கியதே ஒப்பந்தம் தள்ளிப்போகக் காரணம்." என்று தெரிவித்தார்.
தற்போது இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரை வரி விதிக்கிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகாததால், இந்திய ஏற்றுமதியாளர்கள் தொடர்ந்து இந்த அதிக வரியைச் சுமக்க வேண்டியுள்ளது.
இதற்கிடையே ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கான வரியை 500% வரை உயர்த்தும் மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.






