search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AMMK candidate"

    ஆண்டிப்பட்டியில் நடந்த சோதனையின்போது சிக்கிய ரூ.1.50 கோடி பணம் அதிமுகவுக்கு சொந்தமானது என அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #AMMKCandidate #AndipattiITRaids
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக ஒன்றிய அலுவலகத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ரூ.1.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.



    ஆனால், கைப்பற்றப்பட்ட பணம் அதிமுகவுக்கு சொந்தமானது என ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியின் அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

    “அதிமுக பிரமுகருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் பணம் இருப்பதாக நாங்கள் தான் தகவல் தந்தோம். ஆனால், அதிமுகவை காப்பாற்றுவதற்காக அந்த பணம் அமமுகவின் பணம் என பொய்யாக குற்றம்சாட்டுகிறார்கள். போலீசார் வானத்தை நோக்கி சுடாமல், எங்களை அச்சுறுத்துவதற்காக டம்மி புல்லட் மூலம் வணிக வளாகத்திலேயே சுட்டனர்” எனவும் வேட்பாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #AMMKCandidate #AndipattiITRaids

    வடசென்னை பாராளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் பி.சந்தானகிருஷ்ணன் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார். #LokSabhaElections2019

    சென்னை:

    வடசென்னை பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பி.சந்தானகிருஷ்ணன் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார்.

    டி.டி.வி. தினகரனின் ஆசி பெற்ற சின்னமான பரிசு பெட்டகத்திற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வேட்பாளர் பி.சந்தான கிருஷ்ணன் ஆதரவு திரட்டினார்.

    திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட 11, 12, 13, 14 ஆகிய வார்டுகளில் டோல்கேட், தாங்கல், மொண்டி குப்பம் ஆகிய வீதிகளில் சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம், தேர்தல் பொறுப்பாளர் வில்லியம்ஸ் அலெக்சாண்டர், பகுதி செயலாளர் எஸ்.முரளி, நிர்வாகிகள் தாங்கல் ரவி, டி.வி.நாசர், தங்கமணி, ஜீவிதா நாச்சியார், இ.ஜான்சன், புகழேந்தி, பார்த்த சாரதி, குமரேசன், வி.சி.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019

    பெரம்பூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பி.வெற்றிவேல் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். #LokSabhaElections2019

    சென்னை:

    பெரம்பூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பி.வெற்றிவேல் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அனைத்து சமூகத்தினர் பொதுநல அமைப்புகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். கொடுங்கையூர் குப்பைமேடு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சுகாதார சீர்கேடு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சுற்றுச்சூழல் மாசு படுவதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரம் குறைந்து வருவதால் நவீன தொழில் நுட்பத்தில் குப்பை மேட்டை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேட்பாளர் பி.வெற்றிவேல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தார்.

    பல மைல் துரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் குப்பைமேடு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தகுந்த நடவடிக்கை எடுத்து மேம்படுத்த அனைத்து முயற்சிகலும் மேற்கொள்ளப்படும் என்றார். வீதிவீதியாக சென்று ஆதரவு திரட்டிய வெற்றிவேலுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். #LokSabhaElections2019

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தென் சென்னை தொகுதி வேட்பாளர் டாக்டர் இசக்கி சுப்பையா பரிசு பெட்டகம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். #LokSabhaElections2019

    போரூர்:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தென் சென்னை தொகுதி வேட்பாளர் டாக்டர் இசக்கிசுப்பையா பரிசு பெட்டகம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று தேனாம்பேட்டை பகுதியில் பிரசாரம் செய்தார்.

    அப்போது பேசிய இசக்கி சுப்பையா, நேற்று மாலை கந்தன்சாவடி 184வது வட்டம் கல்லுக்குட்டை பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்றேன். கடந்த 20 ஆண்டுகளாக ஏறத்தாழ 4ஆயிரம் குடும்பங்கள் அங்கு வசித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை இருந்த எந்த அரசும் அவர்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், கழிவுநீர், தெரு விளக்கு உள்ளிட்ட எதுவும் செய்து தரவில்லை. மாறாக அவர்களைமுற்றிலும் புறக்கணித்து வருகின்றனர்.

    நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன். கல்லுக்குட்டை மக்களின் தேவைகளை நிறைவேற்றி தந்திட அனைவரும் மறவாமல் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார். அவருடன் மாவட்ட செயலாளர் வேளச்சேரி சரவணன், அமைப்பு செயலாளர் திருவான்மியூர் முருகன், பகுதி செயலாளர்கள் அர்ஜுனன், ராஜேந்திரன், வட்ட செயலாளர் கண்ணன் வர்த்தகர் அணி ராமர், தகவல் தொழில் நுட்ப பிரிவு மகாலிங்கம் உள்ளிட்ட மாவட்ட பகுதி, வட்ட, கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் சென்று வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019

    பெரம்பூர் தொகுதி அமமுக வேட்பாளர் பி.வெற்றிவேல் தான் வெற்றி பெற்ற தொகுதி மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். #LokSabhaElections2019 #AMMK

    சென்னை:

    பெரம்பூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பி.வெற்றிவேல் தான் வெற்றி பெற்ற தொகுதி மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். வியாசர்பாடி கக்கன்ஜி நகர் பகுதியில் வீதி வீதியாக வழியாக நடந்து சென்று பரிசு பெட்டி சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

    பெரம்பூர் தொகுதி மக்கள் பாதுகாப்பாக வசிக்க முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். சமூக விரோத செயல்களில் இருந்து பாதுகாக்கவும், திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்றவற்றில் இருந்து தப்பிக்கவும் மேரகாக்கள் பொருத்தப்படும். பட்டா இல்லாத வீடுகளுக்கு பட்டா பெற்று தரப்படும், பாதுகாப்பான குடிநீர், சாலை வசதி அமைத்து தருவதோடு, கழிவு நீரில் இருந்து கொசுக்கள் பெருகி நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேட்பாளர் பி.வெற்றிவேல் உறுதியளித்தார்.

    வேட்பாளருடன் நிர்வாகிகள் பழனி, லட்சுமி நாராயணன், மாரிமுத்து உள்ளிட்ட தொண்டர்கள், பெண்கள் அணிவகுத்து சென்றனர். #LokSabhaElections2019 #AMMK

    ×