என் மலர்
நீங்கள் தேடியது "ADMK"
- பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- தற்போது அமமுக நிலையாக தொடர்கிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பலரும் இரும்புப் பெண்மணி எனக்கூறுவார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஒருவேளை ஒரு பெண்ணாக ஒரு அரசியல் கட்சியை எந்த உடைதலும் இல்லாமல் கொண்டுசென்றதாக இருக்கலாம். ஆனால் அவர் மறைந்த 2016க்கு பிறகு அந்த நிலை மாறியது. 2016 டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக கட்சி உட்கட்சிப் பூசல்களால் பலமுறை பிளவுபட்டது.
அதிமுகவில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் பிரிந்து சென்ற தலைவர்கள் பல புதிய கட்சிகளைத் தொடங்கியுள்ளனர். ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆளுக்கொரு கட்சி என்ற கணக்கில் தொடங்குகிறார்கள். ஆனால் இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், புதிதாக தொடங்கப்படும் கட்சிகள் அனைத்தும் அதிமுக பெயரில் கொண்டே தொடங்கப்படுகின்றன. அக்கட்சிகள் குறித்து பார்ப்போம்.
தற்போதுவரை 8 கட்சிகள்
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா என்பவர், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை எனும் அரசியல் அமைப்பை தொடங்கினார். இரட்டை இலை சின்னத்திற்கும் உரிமைக் கோரினார். ஆனால் இரண்டே வருடங்களில் இந்த அரசியல் வாழ்க்கை முடித்துக்கொண்டு அதிமுகவில் இணைவதாக அறிவித்தார்.
ஜெயலலிதா மறைந்த அடுத்த ஆண்டே டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வேகத்தில் 2018-ல் 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் டிடிவி.
இதனைத்தொடர்ந்து தீபாவின் கணவர் மாதவன் எம்.ஜி.ஆர். ஜெ.ஜெ. திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார். அதன்பின் டிடிவி தினகரன் கட்சித் தொடங்கிய அதே ஆண்டு, சசிகலாவின் அக்கா மகனும் டிடிவி தினகரனின் தம்பியுமான பாஸ்கரன், அண்ணா எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் 2018ஆம் ஆண்டு கட்சி தொடங்கினார்.
மீண்டும் மீண்டும் என 2018ஆம் ஆண்டிலேயே மூன்றாவது கட்சியும் உருவானது. சசிகலாவின் சகோதரரான வி. கே. திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்றும் கட்சியைத் தோற்றுவித்தார். அதற்குள் கட்சிக்குள் அடுத்த வெடிப்பு.
ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டாக இல்லாமல், ஒற்றை தலைமை என்ற கோரிக்கை எழுந்தது. இதன் விளைவாக, ஜூலை 2022 பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இச்சூழலில் கடந்த பிப்ரவரியில் இரண்டு கட்சிகள். திமுக, அதிமுக, தேமுதிக, பாமக என தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகள் அனைத்திலும் பணியாற்றிய இவர் பிப்ரவரியில் எம்.ஜி.ஆர் அதிமுக என்ற கட்சியைத் தொடங்கினார்.
இதனையடுத்து ஜெயலலிதாவின் ஆஸ்தான தோழியான சசிகலா கடந்த மாதம் ஒரு கட்சியைத் தொடங்கினார். கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் இன்று அறிவித்தார்.'அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' (அஇபுதமமுக) என்பது புதிய கட்சியின் பெயராகும்.
இதனைத்தொடர்ந்து பெங்களூரு புகழேந்தி புரட்சி அதிமுக என்ற கட்சியைத் தொடங்கினார். அதிமுக என்று கட்சித் தொடங்கிய அவர், இன்று திமுகவிற்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
- பா.ஜ.க.வும் இந்த தொகுதிகளை குறி வைத்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர்.
- அ.தி.மு.க. தரப்பில் இந்த தொகுதிகளை விட்டு கொடுக்க தயங்குவதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக நடைபெறவில்லை.
ஆனால் பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை அ.தி.மு.க. மேலிடத்திடம் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் இரு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பேசி வருவதாக கூறப்படுகிறது.
சென்னையில் வேளச்சேரி, மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தி.நகர், விருகம்பாக்கம் ஆகிய 5 தொகுதிகளையும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகுதிகளை பா.ஜ.க. கேட்பது அ.தி.மு.க. தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம், கடந்த தேர்தலில் வேளச்சேரியில் அ.தி.மு.க. 4 ஆயிரத்து 352 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது.
அதேபோல் மயிலாப்பூர் தொகுதியில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. 55 ஆயிரத்து 759 வாக்குகள் பெற்று இருந்தது. ஆயிரம் விளக்கில் பா.ஜ.க. போட்டியிட்டது.
தியாகராய நகர் தொகுதியை பொறுத்தவரை வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்தில் தான் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. விருகம்பாக்கம் தொகுதியிலும் அ.தி.மு.க. தோல் வியை தழுவியிருந்தாலும் 55 ஆயிரத்து 526 வாக்குகள் பெற்று இருந்தது.
எனவே மேற்கண்ட 5 தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தி கைப்பற்றுவதில் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.
இந்த தொகுதிகளில் குறிப்பிட்ட சிலரை அடையாளப்படுத்தி தேர்தல் வேலைகளையும் தொடங்கி விட்டனர்.
தங்களுக்கு சாதகமான தொகுதிகளை பா.ஜ.க. கேட்டு வலியுறுத்துவது அ.தி.மு.க. தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பா.ஜ.க.வும் இந்த தொகுதிகளை குறி வைத்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். ஆனால் அ.தி.மு.க. தரப்பில் இந்த தொகுதிகளை விட்டு கொடுக்க தயங்குவதாக கூறப்படுகிறது.
யாருக்கு எந்த தொகுதி என்பது முடிவாகும் வரை இந்த குழப்பம் இருக்கத்தான் செய்யும் என்கிறார்கள் இரு கட்சியினரும்.
- அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- எழும்பூர், ஓட்டல் இம்பீரியல் காம்ப்ளக்சில் இப்தார் விருந்து வழங்க உள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
புரட்சி தலைவி அம்மா வழியில் இந்த ஆண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணியளவில், சென்னை, எழும்பூர், ஓட்டல் இம்பீரியல் காம்ப்ளக்சில் இப்தார் விருந்து வழங்க உள்ளார்.
இந்நிகழ்ச்சியில், இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், கழகத்தில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பணியாற்றி வரும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசியல் கட்சியிலிருந்து விலகினாலும் மக்கள் அரசியலிலிருந்து விலகவில்லை.
- எனக்கு பொறுப்பு வழங்குவது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய பின் கிட்டத்தட்ட ஓராண்டிற்கு பிறகு தற்போது அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார் காளியம்மாள். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து அ.தி.மு.க. வில் இணைந்துக்கொண்டார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த காளியம்மாள் கூறுகையில்,
ஒரு தமிழனின் தலைமையில் இயங்கவே அ.தி.மு.க.வில் இணைந்திருக்கிறேன். சாதாரண குடும்பத்தில் இருந்த வந்த எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று அ.தி.மு.க.வில் இணைந்தேன். அ.தி.மு.கவில் இணைந்தது ஒருங்கிணைந்து எடுத்த முடிவு.
அரசியல் கட்சியிலிருந்து விலகினாலும் மக்கள் அரசியலிலிருந்து விலகவில்லை. நாம் தமிழர் கட்சியில் செயல்படுவதற்கு முன்பு அ.தி.மு.க.வில் ஏற்கனவே செயல்பட்டுள்ளேன். எனக்கு பொறுப்பு வழங்குவது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றார்.
- பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்தார் அ.தி.மு.க.வில் இணைந்து கொண்டார்.
- நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக காளியம்மாள் பதவி வகித்தவர்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் இன்று அ.தி.மு.க.வில் இணைந்தார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்தார் அ.தி.மு.க.வில் இணைந்து கொண்டார். நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக காளியம்மாள் பதவி வகித்தார். அதனை தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகி ஓராண்டிற்கும் மேல் எந்த கட்சியில் இணையாமல் இருந்தார் காளியம்மாள்.
முன்னதாக, காளியம்மாள் த.வெ.க.வில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- இதுதான் கருணாநிதி குடும்பத்தினர் சந்திக்கும் கடைசித் தேர்தல்
- அதிமுக ஆட்சிக்கு வந்தால் நடந்தாய்வாழி காவிரி திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்.
திருச்சி மாவட்டம் பஞ்சபூரில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,
"இதே திருச்சியில் நேற்று முன்தினம் திமுக மாநாடு நடைபெற்றது. அப்போது தே.ஜ.கூட்டணி குறித்து முதலமைச்சர் விமர்சனம் செய்தார். இது வெற்றிக் கூட்டணி, அருமையான கூட்டணி. பல்வேறு வார்த்தைப் போருக்கு இடையில்தான் காங்கிரஸும், திமுகவும் கூட்டணி வைத்துள்ளன. கெஞ்சி, அடிமையாகி காங்கிரஸுடம் திமுக கூட்டணி வைத்துள்ளது. ஆனால் பரஸ்பர உணர்வோடு தே.ஜ. கூட்டணி இணைந்துள்ளது. நாங்கள் இணைந்து மீண்டும் அற்புதமான ஆட்சியை அமைப்போம். நான்கில் ஒருபங்கு அறிவிப்புகள் கூட தற்போதுவரை திமுகவால் நிறைவேற்றப்படவில்லை.
தமிழ்நாட்டில் அதிமுக செய்தது பொற்கால ஆட்சி. ஒரே கொள்கையின்கீழ் கூட்டணியில் இணைந்துள்ளதாக ஸ்டாலின் கூறுகிறார். காங்கிரஸின் கொள்கையும், திமுகவின் கொள்கையும் ஒன்றா? திமுகவும், கம்யூனிஸ்ட் கொள்கையும் ஒன்றா? திமுக என்றால் குடும்பக் கட்சி என்று பொருள். தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது இயல்பு. திமுகவை விரட்டத்தான் இந்த தேசிய ஜனநாயக கூட்டணி.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. மூதாட்டிகள் முதல் சிறுமிகள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. மோசமான, கையாலாகத அரசு திமுக அரசு. அந்த அரசை அகற்றுவதுதான் எங்கள் கூட்டணியின் நோக்கம். திமுக ஒரு குடும்ப கட்சி. இதுதான் கருணாநிதி குடும்பத்தின் கடைசித் தேர்தல்.
விவசாய நிலங்களை அபகரிக்கும் விதமாக மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்தது மு.க. ஸ்டாலின் அரசு. அந்த விளைநிலங்களை பாதுகாக்கும் நோக்கத்தில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் கொண்டுவந்தது எங்கள் ஆட்சி. காவிரி குண்டாறு திட்டத்தை கொண்டு வந்தோம். அதனை முடக்கியது விடியா திமுக அரசு. அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்ததும், நடந்தாய்வாழி காவிரி திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்.
நடைபெற உள்ள தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் எவ்வித பிரச்சனையும் இல்லை.
- தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பது அ.தி.மு.க.வின் கொள்கையாக இருக்கிறது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செண்பகபேரியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதியதாக கலையரங்கம் கட்டுவதற்கான தொடக்க விழா நடைபெற்றது.
இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீப்பெட்டி தொழிலுக்கு பெரும் சவாலாக இருக்கும் பிளாஸ்டிக் லைட்டர் பிரச்சனை, மெழுகு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்திய மந்திரி பியூஸ் கோயலை சந்தித்து முறையிட்டுள்ளனர்.
பிரச்சனை தொடர்பாக விரைவில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உறுதி அளித்துள்ளார்.
கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். வழக்கமான நடைமுறைதான். இதற்கும், அரசியலுக்கும் சம்பந்தப்படுத்து வது சரியாக இருக்காது என்றார்.
அப்போது தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைதியாக இருக்கிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணி அதைவிட அமைதியாக இருக்கிறது. தி.மு.க. கூட்டணி ஏற்கனவே இருக்கிற கூட்டணி. நாங்கள் கூட பாராளுமன்ற தேர்தலில் பிரிந்து போட்டியிட்டு தற்போது இணைந்திருக்கும் புதிய கூட்டணி. தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், பாராளுமன்ற தேர்தல் என தொடர்ந்து ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் தி.மு.க. கூட்டணியிலேயே தொகுதி பங்கீடு இன்னும் பிரிக்க முடியவில்லை. காங்கிரஸ் தான் இறுதியாக அவர்கள் கூட்டணியில் ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதற்கு முன்பாகவே நிறைய கட்சிகளுடன் ஒப்பந்தம் உறுதி செய்தனர். அந்தக் கட்சிகள் எல்லாம் சிறிய கட்சிகள் தான். ஒற்றை இலக்கத்தில் சீட்டு கொடுக்கப்போவதாக சொல்கின்றனர். அதில் கூட ம.தி.மு.க. மாறுபட்ட கருத்தோடு இன்று உயர்மட்ட குழு கூட்டம் நடத்துகின்றனர். அவர்களுக்கு என்ன நிலைமையோ தெரியவில்லை. பாவம் எத்தனை சீட்டு கேட்டார்கள், எத்தனை கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சரியில்லை என்று கூறி உள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் எவ்வித பிரச்சனையும் இல்லை. கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமை. அ.தி.மு.க. தனி பெரும்பான்மையாக வெற்றி பெறும். அப்போது எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெளிவாக கூறி உள்ளார்.
தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பது அ.தி.மு.க.வின் கொள்கையாக இருக்கிறது. சகோதரர் விஜய் கட்சி தொடங்கியது முதல் அதைத்தான் கூறி வருகிறார். தன்னுடைய அரசியல் எதிரி தி.மு.க. என்று சொன்னது மட்டுமின்றி அனைத்து பிரசார கூட்டங்களிலும் அதை மையப்படுத்தி தான் பிரசாரம் செய்கிறார்.
எங்களை பொறுத்தவரை தி.மு.க.வை வீழ்த்த எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு உள்ளோம். அதன் பிறகு அவங்க அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
டாக்டர் ராமதாஸ்-சசிகலா சந்திப்பு குறித்து அவர்கள் தான் அதைக் கூற வேண்டும். உரிய சந்திப்பு குறித்து வெளியில் ஏதாவது தெரிவித்திருந்தால் அது பற்றி கருத்து கூறலாம். சந்திப்பின் சாராம்சம் வெளிவந்தால் பதில் கூறலாம். யூகமாக கூற முடியாது என்றார்.
- தனக்கே உரித்தான பாணியில் சிரித்துக்கொண்டே திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளித்தார்.
- வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அங்கு விரைந்துள்ளனர்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் இன்று காலை திருச்சி சென்றார். அவரிடம் நிருபர்கள் பிரதமர் மோடி வருகை பற்றி கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த அவர் நிருபர்களை பார்த்து கொஞ்சம் தள்ளுறீங்களா தம்பி, நான் இப்பதான் வரேன். அப்புறம் பேசிக்கலாம் என்றார்.
இருப்பினும் நிருபர்கள் விடாமல் அடுத்த கேள்வியாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருவதாக தகவல் வெளியாகியுள்ளதே? என்று கேட்டனர். இதற்கு தனக்கே உரித்தான பாணியில் சிரித்துக்கொண்டே திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளித்தார்.
என்னை மாட்டி விட்டு கட்சியில் இருந்து நீக்கப் பாக்குறீங்களா? என்று கலகலப்பாக பதில் அளித்து விட்டு அங்கிருந்து சென்றார். அவரது இந்த பேட்டி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- கடந்த 11 ஆண்டுகளில் மட்டுமே ரூ.13 லட்சம் கோடி உள்கட்டமைப்பு வசதிகளுக்காகத் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசாங்கம் கொடுத்திருக்கிறது.
- பிரதமருடைய இந்த வருகை, தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புகின்ற வருகையாக இருக்கும்.
திருச்சி:
மத்திய இணை மந்திரி எல்.முருகன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவது என்று தமிழக மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே அது உறுதி செய்யப்படுகின்ற நேரமாக இந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் இருக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி எப்பொழுதெல்லாம் தமிழகத்திற்கு வருகிறாரோ, அப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் நிதியை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி மட்டும்தான் அவர் கனவாக உள்ளது. கடந்த மார்ச் 1-ந்தேதி மதுரையில் கிட்டத்தட்ட 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நலத்திட்டங்களை வழங்கினார். இன்று மீண்டும் கிட்டத்தட்ட ரூ.6 ஆயிரம் கோடி அளவிலான வளர்ச்சித் திட்டங்களைத் தமிழ்நாட்டிற்கு அர்ப்பணிக்க இருக்கிறார். இதில் ரெயில்வே திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அடங்கும்.
கடந்த 11 ஆண்டுகளில் மட்டுமே ரூ.13 லட்சம் கோடி உள்கட்டமைப்பு வசதிகளுக்காகத் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசாங்கம் கொடுத்திருக்கிறது. அதனால்தான், பிரதமர் நரேந்திர மோடியை அன்போடு வரவேற்பதற்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சகோதரர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கிறோம். பிரதமருடைய இந்த வருகை, தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புகின்ற வருகையாக இருக்கும் என்றார்.
இதனை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், எங்கள் கூட்டணிக்கு எல்லோரும் வருவார்கள் என்றார்.
- தொகுதி பங்கீடு குறித்து இப்போது எதுவும் கூறமுடியாது.
- அமெரிக்கா-ஈரான் போரை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
திருச்சி:
மத்திய மந்திரி பியூஸ் கோயல் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தது. இந்திய அளவில் முதன்மை மாநிலமாக திகழ்ந்தது. ஆனால் இப் போது ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு ஊழல் அரசாக உள்ளது. இதனை அகற்றுவதற்கு மக்கள் முடிவு செய்து விட்டார்கள். எனவே நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை மேலும் வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமி உள்பட கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களும் தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள். தொகுதி பங்கீடு குறித்து இப்போது எதுவும் கூறமுடியாது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணையுமா? என்பது பற்றி தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை தாங்கும் எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது மகன் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்குவதற்கு முயற்சிக்கிறார். அதனால் தமிழக வாக்காளர்கள் தேர்தலில் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
அமெரிக்கா-ஈரான் போரை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. போர் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்கள் விலை உயரும். கியாஸ் தட்டுப்பாடு என வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் இந்தியா அளவில் கியாஸ் தட்டுப்பாடு இல்லை. இதுபற்றி அந்த துறை சார்பில் தெளிவான அறிக்கை வெளியிடப்படும் என்றார்.
- மிகத் துல்லியமான கணிப்புகளை வழங்கி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
- தமிழகம் முழுவதும் ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டு இந்த விரிவான கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.
சென்னை:
தி.மு.க. கூட்டணிக்கு வருகிற சட்டமன்ற தேர்தலில் 41.5 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்று ஐதராபாத் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த தொழில்நுட்பம் சார்ந்த அரசியல் நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் தேர்தல் கணிப்பு நிறுவனமாகிய 'கே.கே. சர்வேஸ் அண்ட் ஸ்ட்ரேட்டஜிஸ்' நிறுவனத்தின் ஒரு அங்கமான - பாராவீல், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி அளவிலான விரிவான அறிவியல் பூர்வ கருத்துக்கணிப்புகளை மேற்கொண்டுள்ளது.
இதுவரை 70 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முதற்கட்ட முடிவுகளின்படி, தி.மு.க. 41.5 சதவீதம், அ.தி.மு.க. 36.2 சதவீதம், த.வெ.க. 13.6 சதவீதம் மற்றும் நாம் தமிழர் கட்சி 7.9 சதவீதம் வாக்கு விகிதங்களைப் பெறும் என பாராவீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் த.வெ.க. 3-வது முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டு இந்த விரிவான கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.
இந்நிறுவனம், ஏற்கனவே 2019 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆந்திரா மாநில சட்டமன்றத் தேர்தல்கள், 2024-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் போன்றவற்றில் மிகத் துல்லியமான கணிப்புகளை வழங்கி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை நகரில், பல தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான பலத்தைக் கொண்டுள்ளன. தி.மு.க.விற்கு அடுத்தபடியாக 2-வது வலுவான அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறது. பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க. தொடர்ந்து முதலிடத்தில் நீடித்தாலும், இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் த.வெ.க. குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்று முன்னிலையில் இருப்பதை இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன.
இதுகுறித்து, பாராவீல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரண் கொண்டெட்டி கூறியதாவது:-
தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் முதன்முறை வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் மற்றும் வெற்றி வாய்ப்பை மாற்றியமைக்கும் தொகுதிகளின் பங்கு குறித்து எங்களது ஆய்வு ஆராய்கிறது. குறிப்பாக, த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் காரணி குறித்து ஒரு சிறப்புப் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதில் ரசிகர்கள் வாக்காளர்களாக மாறுவது, இளைஞர்களைத் திரட்டுவது மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., போன்று முக்கியக் கட்சிகளின் வாக்கு வங்கியில் இது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன என்றார்.
- 43 பிள்ளைகள் மருத்துவமனைப் படுக்கைகளில் சிகிச்சை பெறும் காட்சியை காண்பதற்கு நெஞ்சம் பதைக்கிறது.
- மாணவர்கள் உயிர் விஷயத்தில், சத்துணவு போன்ற ஒரு முக்கியமான திட்டத்தில், எப்படி ஒரு அரசு தொடர்ச்சியாக அலட்சியப் போக்கு காட்ட முடியும்?
சென்னை :
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிவிட்டுள்ளதாவது:-
கோவை மாவட்டத்தில் தரமற்ற மதிய உணவால் அரசுப்பள்ளி மாணவர்கள் 43 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.
43 பிள்ளைகள் மருத்துவமனைப் படுக்கைகளில் சிகிச்சை பெறும் காட்சியை காண்பதற்கு நெஞ்சம் பதைக்கிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பேட்டி அளித்தும், சில ஊடகங்கள் இச்செய்தியை வெளியிடாமல் இருந்தது வருத்தமளிக்கிறது.
மாணவர்கள் உயிர் விஷயத்தில், சத்துணவு போன்ற ஒரு முக்கியமான திட்டத்தில், எப்படி ஒரு அரசு தொடர்ச்சியாக அலட்சியப் போக்கு காட்ட முடியும்?
2021 முதல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தரமற்ற அரசுப்பள்ளி உணவால் பாதிக்கப்பட்டிருக்க, அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலையோ அக்கறையோ இல்லாமல், "சாம்பார் டேஸ்ட் எப்படி?" என மேடை போட்டு வெற்று விளம்பரம் செய்த வெட்கங்கெட்ட அரசு தானே இந்த ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசு?
பள்ளி மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை இந்த திமுக அரசு உறுதி செய்திட வேண்டும்.
பள்ளி மாணவர்கள் ஆரோக்கியம் விஷயத்தில் கூட அக்கறையற்ற இந்த திமுக-வை, ஆட்சிக்கு அப்பால், அக்கரையில் மக்கள் சேர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை! என்று கூறியுள்ளார்.






