என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

#TNAssemblyElection 172 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் களம் இறங்க தி.மு.க. முடிவு
- புதிதாக தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, மார்ச் 6-
தமிழக சட்டசபை தோ்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டணியில் காங் கிரஸ், தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்பட 21 கட்சிகள் உள்ளன.
தி.மு.க. கூட்டணியில் ஓரிரு நாள்களில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏணி சின்னத்திலும், மனிதநேய மக்கள் கட்சி உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்துள்ளன.
கடந்த முறை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட்ட 3 தொகுதி களிலும் தோல்வி அடைந் தது. இந்த முறை அக்கட்சிக்கு ஒரு தொகுதி குறைக்கப் பட்டுள்ளது. கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 2 தொகுதி களிலும் மனிதநேய மக்கள் கட்சி வெற்றி அடைந்ததால் இந்த முறை தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட வில்லை.
புதிதாக தி.மு.க. கூட்ட ணியில் இணைந்துள்ள தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதி கள் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வட தமிழகத்தில், விடு தலை சிறுத்தைகள் கட்சி மூலம் தலித் வாக்குகளையும், தே.மு.தி.க. மூலம் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட வாக்காளா்கள் மற்றும் பிற்பட்டோா் சமூக வாக்குகளை ஒருங்கி ணைத்து வெற்றி பெற வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் உத்தியாகும்.
கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இப்போது தனி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டதால் 4 தொகுதிகள் மட்டும் ஒதுக் கப்படும் என தெரிகிறது.
கடந்த முறை தலா 6 தொகுதிகளில் போட்டி யிட்ட இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கம்யூ னிஸ்டு ஆகியவை தலா 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன. எனவே இந்த இரு கட்சிகளுக்கும் தலா 4 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக இணைந்த மக்கள் நீதி மய்யத்துக்கு டாா்ச் லைட் சின்னத்தில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கடந்த முறை உதயசூரியன் சின்னத் தில் 3 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதி யில் மட்டுமே வெற்றி பெற்றதால், இந்த முறை 2 தொகுதிகள் மட்டுமே உதயசூரியன் சின்னத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன.
இவை தவிர, மனிதநேய ஜனநாயக பேரவை, கொங்கு இளைஞா் பேரவை, முக்குலத்தோா் புலிப்படை, புதிய திராவிடா் கழகம் உள்ளிட்ட சில சிறு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் 172 தொகுதிகளில் வேட்பா ளர்கள் களம் இறக்கப்பட உள்ளனர். 62 தொகுதிகளில் தனி சின்னத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டி யிட உள்ளதாக தி.மு.க. வட் டாரத்தில் கூறப்படுகிறது.






