Edappadi Palaniswami | அ.தி.மு.க. சார்பில் நாளை மறுநாள் இப்தார் நோன்பு திறப்பு

அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.எழும்பூர், ஓட்டல் இம்பீரியல் காம்ப்ளக்சில் இப்தார் விருந்து வழங்க உள்ளார்.
Edappadi Palaniswami | அ.தி.மு.க. சார்பில் நாளை மறுநாள் இப்தார் நோன்பு திறப்பு
Published on

சென்னை:

அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

புரட்சி தலைவி அம்மா வழியில் இந்த ஆண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணியளவில், சென்னை, எழும்பூர், ஓட்டல் இம்பீரியல் காம்ப்ளக்சில் இப்தார் விருந்து வழங்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியில், இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், கழகத்தில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பணியாற்றி வரும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com