என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Government bus japthi"
- விபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு ரூ.8 லட்சம் நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.
- அரசு போக்குவரத்து கழகம் வழங்காததால் பஸ்சை ஜப்தி செய்தனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுைர அருகே உள்ள சீலப்பாடியான்களத்ைத சேர்ந்தவர் வீராச்சாமி.
இவர் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் அரசு பஸ்மோதி உயிரிழந்தார். இதனைதொடர்ந்து அவரது மனைவி ஜோதியம்மாள் நஷ்டஈடு கேட்டு வேடசந்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 2020-ம் ஆண்டு இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஜோதியம்மாளுக்கு ரூ.8 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டார். ஆனால் இதுவரை அந்த தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்கவில்லை. இதனைதொடர்ந்து மீண்டும் ஜோதியம்மாள் மேல்முறையீடு செய்தார். இதனைதொடர்ந்து அரசு பஸ்சை ஜப்தி செய்ய வேடசந்தூர் நீதிபதி சரவணக்குமார் உத்தரவிட்டார்.
இதனையடுத்து வேடசந்தூரில் இருந்து பழனிக்கு செல்ல தயார் நிலையில் இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர் வெள்ளைச்சாமி , வக்கீல் அபிமன்யு மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து வேடசந்தூர் கோர்ட்டுக்கு கொண்டு வந்தனர்.