search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Car get fire"

    • திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது
    • ஒட்டன்சத்திரம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த காரால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததை அடுத்து அவ்வழியே சென்ற உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, அவர்களை மற்றொரு காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

    திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 44). இவர் மதுரையில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்வதற்காக திருப்பூரில் இருந்து மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

    காரை ஜெகநாதன்(23) என்பவர் ஓட்டிச்செல்ல, வேல்முருகன் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் கள்ளிமந்தயம் அடுத்துள்ள செங்காட்டான் வலசு பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உடனே இருவரும் காரில் இருந்து இறங்கி தப்பினர். இதில் கார் முற்றிலும் தீப்பிடித்து சேதமடைந்தது.

    ஒட்டன்சத்திரம் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். அப்போது அவ்வழியே வந்த உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி காரில் வந்தவர்களின் விபரம் கேட்டறிந்து உடனடியாக மற்றொரு காரை வரவழைத்து அவர்களை மதுரைக்கு அனுப்பி வைத்தார்.


    ×