என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பொருட்கள் வரி குறைப்பு
நீங்கள் தேடியது "பொருட்கள் வரி குறைப்பு"
நட்பு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்கள் மீதான வரி விதிப்பின் அளவை குறைப்பதற்கு சீனா முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #China #ImportTax
பீஜிங்:
வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர் மூண்டுள்ளது. இதன் காரணமாக சீனப்பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
சீனாவின் 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) பொருட்கள் மீது சமீபத்தில் அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பை அறிவித்தது. உடனே சீனாவும் தன் பங்குக்கு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 60 பில்லியன் டாலர் (சுமார் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் கோடி) பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த நிலையில், நட்பு நாடுகளுக்கு சலுகை காட்டி அவர்களின் அரவணைப்பை பெற சீனா முடிவு செய்துள்ளது.
அந்த வகையில், நட்பு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்கள் மீதான வரி விதிப்பின் அளவை குறைப்பதற்கு சீனா முடிவு செய்துள்ளதாக ‘புளும்பெர்க் நியூஸ்’ கூறுகிறது.
அதே நேரத்தில் சீனாவின் வரி குறைப்பு நடவடிக்கையால் எந்தெந்த நாடுகள் பலன் பெறும் என்பதை ‘புளும்பெர்க் நியூஸ்’ வெளியிடவில்லை.
வரி குறைப்பு நடவடிக்கை பற்றி டியான்ஜின் நகரில் உலக பொருளாதார மன்றத்தில் பேசுகையில் சீன பிரதமர் லீ கெகியான் குறிப்பிட்டார். அப்போது அவர் கூறும்போது, “சில பொருட்கள் மீதான இறக்குமதி வரியை சீனா தொடர்ந்து குறைக்கும்” என்றார். ஆனால் எந்தெந்த பொருட்கள் என்று அவர் கூறவில்லை. #China #ImportTax

×

X