என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜம்மு காஷ்மீர்"

    • ஷியா முஸ்லிம் சமூகத்தினர் காமேனியைத் தங்கள் ஆன்மீகத் தலைவராக கருதுகின்றனர்.
    • கூட்டத்தை கலைக்கக் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.

    ஈரானில் அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கடந்த சனிக்கிழமை அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    ஜம்மு காஷ்மீரில் உள்ள ஷியா முஸ்லிம் சமூகத்தினர் காமேனியைத் தங்கள் ஆன்மீகத் தலைவராகக் கருதுவதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று, ஸ்ரீநகரின் மையப்பகுதியான லால் சவுக்கில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் அங்கு வந்தனர்.

    இதற்கிடையே இன்று ஸ்ரீநகரின் பட்டமாலு பகுதியில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

    அங்கு காமேனியின் உருவப்படங்கள் மற்றும் கருப்புக்கொடிகளை ஏந்தியபடி ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

    தடைகளை மீறி முன்னேற முயன்ற போராட்டக்காரர்கள், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் மீது கற்களை வீசித் தாக்கினர்.

    வன்முறையைக் கட்டுப்படுத்த தடியடி நடத்தப்பட்டது. மேலும் கூட்டத்தை கலைக்கக் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.

    நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து, பல பகுதிகளில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன மற்றும் கூடுதல் துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. 

    • ஜம்மு காஷ்மீர் அணி ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது மிகப்பெரிய தருணம்.
    • தற்போதைய அணியில் இருக்கும் வீரர்களில் ஒருவர் அல்லது இருவர் நிச்சயமாக இந்திய ஜெர்சியை அணியத் தகுதியானவர்கள்.

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜம்மு காஷ்மீர் மற்றும் கர்நாடகா அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியின் கடைசி நாளில் ஜம்மு காஷ்மீர் அணி விளையாடி வருகிறது.

    இதில் முதல் இன்னிங்சில் விளையாடிய ஜம்மு-காஷ்மீர் 584 ரன்கள் குவித்தது. இதனையடுத்து கர்நாடகா முதல் இன்னிங்ஸில் 293 ரன்னில் ஆல் அவுட் ஆனது. 291 ரன்கள் முன்னிலை பெற்ற ஜம்மு-காஷ்மீர் அணி 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 477 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் கடைசி நாளில் ஜம்மு-காஷ்மீர் அணிக்கே வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    67 ஆண்டுகால ரஞ்சி கோப்பை வரலாற்றில், ஜம்மு காஷ்மீர் அணி முதல்முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

    இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என ஜம்மு-காஷ்மீர் முதல் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஜம்மு காஷ்மீர் அணி ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது மிகப்பெரிய தருணம். இதற்கு முன்பு எங்களால் இந்த நிலையை எட்ட முடியாது என்று பலர் கூறினர். ஆனால், முதல் இன்னிங்ஸில் வீரர்கள் விளையாடிய விதம், நாம் கண்டிப்பாகக் கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

    எங்கள் வீரர்கள் இந்திய தேசிய அணிக்காக விளையாட அழைக்கப்பட வேண்டிய அல்லது கேட்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். தற்போதைய அணியில் இருக்கும் வீரர்களில் ஒருவர் அல்லது இருவர் நிச்சயமாக இந்திய ஜெர்சியை அணியத் தகுதியானவர்கள்.

    என்று அவர் கூறினார்.

    • ஜம்மு காஷ்மீர் தரப்பில் நபி தார் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • ஜம்மு அணி 291 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    ஹூப்ளி:

    ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டி கர்நாடகாவின் ஹூபளியில் நடந்து வருகிறது. இதில் கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 584 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷுபம் பண்டி சதமடித்து 121 ரன்னில் அவுட்டானார். யாவர் ஹசன் 88 ரன்னும், கேப்டன் பரஸ் டோக்ரா அரை சதம் கடந்து 70 ரன்னும், அப்துல் சமது 61 ரன்னும், கண்ணையா வாத்வான் 71 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷகில் லோத்ரா 72 ரன் எடுத்தார். கர்நாடக அணியின் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, கர்நாடக அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். மூன்றாம் நாள் முடிவில் கர்நாடக அணி 5 விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 130 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்நிலையில் 4-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய மயங்க் 160 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து கிருத்திக் கிருஷ்ணா 36 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் கர்நாடகா அணி 93.3 ஓவரில் 293 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஜம்மு அணி 291 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் தரப்பில் நபி தார் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

    • ஜம்மு காஷ்மீர் முதல் இன்னிங்சில் 584 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • கர்நாடக அணியின் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    ஹூப்ளி:

    ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    ரஞ்சி டிராபிக்கான இறுதிப்போட்டி கர்நாடகாவின் ஹூபளியில் நடந்து வருகிறது. இதில் கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 584 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷுபம் பண்டி சதமடித்து 121 ரன்னில் அவுட்டானார். யாவர் ஹசன் 88 ரன்னும், கேப்டன் பரஸ் டோக்ரா அரை சதம் கடந்து 70 ரன்னும், அப்துல் சமது 61 ரன்னும், கண்ணையா வாத்வான் 71 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷகில் லோத்ரா 72 ரன் எடுத்தார்.

    கர்நாடக அணியின் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, கர்நாடக அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி சதம் அடித்தார்.

    மூன்றாம் நாள் முடிவில் கர்நாடக அணி 5 விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 130 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • தனது ஆட்சிக்காலத்தை கூட முழுமையாக முடிக்க முடியாத ஒரு நாடு.
    • ஜம்மு காஷ்மீரின் பட்ஜெட், பாகிஸ்தான் கேட்ட உதவித்தொகையை விட அதிகம்.

    ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.

    கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) எழுப்பிய புகார்களுக்கு இந்தியாவின் பிரதிநிதி அனுபமா சிங் பதிலடி கொடுத்தார்.

    அவர் கூறியதாவது, "பாகிஸ்தானின் தவறான பிரச்சாரங்களை அப்படியே திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளையாக OIC மாறிவிட்டது. ஒரு நாட்டின் அரசியல் உள்நோக்கங்களுக்கு அந்த அமைப்பு ஒரு ஊதுகுழல் போல செயல்படுகிறது.

    ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி. அது எப்போதும் அப்படியே இருக்கும். பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியை உடனடியாக காலி செய்ய வேண்டும்.

    தனது ஆட்சிக்காலத்தை கூட முழுமையாக முடிக்க முடியாத ஒரு நாடு (பாகிஸ்தான்), ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவது வேடிக்கையானது.

    சமீபத்திய காஷ்மீர் தேர்தலில் பதிவான சாதனை அளவிலான வாக்குகள், மக்கள் பயங்கரவாதத்தை நிராகரித்து ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டதற்கான சான்று.

    ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பட்ஜெட், பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ள உதவித் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம்.

    உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம் கட்டப்பட்டிருப்பதை கூட பாகிஸ்தான் பொய் என்று கூறினால், அது 'லா-லா லேண்ட்' (கற்பனை உலகில்) வாழ்வதாக அர்த்தம்" என்று தெரிவித்தார்.  

    ஜம்மு காஷ்மீரின் செனாப் நதி மீது உலகின் உயரமான ரயில் பாலத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். ரூ.43,780 கோடி செலவில் இந்த பாலம் கட்டப்பட்டது. 

    • டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
    • சுபம் பண்டிர் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 121 ரங்களில் ஆட்டமிழந்தார்.

    ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் கர்நாடகா - ஜம்மு காஷ்மீர் அணிகள் விளையாடி வருகின்றன. நேற்று முன்தினம் தொண்டாகிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி ஜம்மு காஷ்மீர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கம்ரான் இக்பால் 6 ரன்னில் வெளியேற சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான யாவர் ஹாசன் 88 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    இதையடுத்து களமிறங்கிய சுபம் பண்டிர் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 121 ரங்களில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    கேப்டன் பராஸ் டோக்ரா 70 ரன்னும் அப்துல் சமத் 61 ரன்னும் கன்ஹையா வாதவன் 70 ரன்னும் சாஹில் லோத்ரா 72 ரன்னும் அடித்து அவுட்டாக்கினர்.

    173.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து ஜம்மு காஷ்மீர் அணி 584 ரன்கள் குவித்தது.

    • ஜம்மு காஷ்மீரின் ஷுபம் பண்டி சதமடித்து 121 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • அந்த அணியின் மேலும் 5 வீரர்கள் அரை சதம் கடந்து அசத்தினர்.

    ஹூப்ளி:

    ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    ரஞ்சி டிராபிக்கான இறுதிப்போட்டி கர்நாடகாவின் ஹூப்ளியில் நடந்து வருகிறது. இதில் கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஜம்மு காஷ்மீர் அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்திருந்தது. ஷுபம் பண்டிர் சதமடித்து 121 ரன்னில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் யாவர் ஹசன் 88 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அப்துல் சமது அரை சதம் கடந்து 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. கேப்டன் பரஸ் டோக்ரா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 70 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்துல் சமது 61 ரன்னில் வெளியேறினார். கண்ணையா வாத்வான் 71 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் ஜம்மு காஷ்மீர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 527 ரன்கள் குவித்துள்ளது. ஷகில் லோத்ரா 57 ரன்னும், அபித் முஷ்டாக் 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    கர்நாடக அணியின் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    • இறுதிப்போட்டியில் ஜம்மு காஷ்மீரும், கர்நாடக அணிகளும் மோதின.
    • டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் பேட்டிங் தேர்வு செய்தது.

    ஹூப்ளி:

    ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிக்கான இறுதிப்போட்டி கர்நாடகாவின் ஹூபளியில் நேற்று தொடங்கியது. இதில் கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜம்மு காஷ்மீர் அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் யாவர் ஹசன் 88 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய ஷுபம் பண்டி சதமடித்து 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அப்துல் சமது அரை சதம் கடந்து 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • பாகிஸ்தான் நோட்டுகள் இணைக்கப்பட்ட இரண்டு பலூன்கள் கண்டெடுக்கப்பட்டது.
    • பாகிஸ்தான் நோட்டுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே, அமெரிக்க டாலர் மற்றும் பாகிஸ்தான் நோட்டுகள் இணைக்கப்பட்ட இரண்டு பலூன்கள் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    இந்த அமெரிக்க டாலர் மற்றும் பாகிஸ்தான் நோட்டுகள் உண்மையானவையா இல்லையா என்பதைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருவதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

    நேற்று உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள விமானப்படை பகுதியில் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் (PIL) பெயரைக் கொண்ட பலூன் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    • பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை பாதுகாப்புப் படையினருக்குக் காட்டிக்கொடுத்தது.
    • கொல்லப்பட்டவர்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தப்பியோடிக் கொண்டிருந்த ஜெய்ஷ் இ முகமது கமாண்டர் சைபுல்லாவும் ஒருவர்.

    ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தின் சத்ரூ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    பயங்கரவாதிகள் மறைந்திருக்கும் துல்லியமான இடத்தை கண்டறிய, ராணுவத்தின் பாரா பிரிவைச் சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட் இன நாயான 'டைசன்' அழைத்துச் செல்லப்பட்டது.

    கரடுமுரடான அந்தப் பகுதிக்குள் டைசன் நுழைந்தபோது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் டைசனின் காலில் தோட்டா பாய்ந்து பலத்த காயமேற்பட்டது.

    காயமடைந்த போதிலும், டைசன் பின்வாங்காமல் தொடர்ந்து முன்னோக்கிச் சென்று பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை பாதுகாப்புப் படையினருக்குக் காட்டிக்கொடுத்தது.

    டைசன் காட்டிய இடத்தை வைத்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    கொல்லப்பட்டவர்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தப்பியோடிக் கொண்டிருந்த ஜெய்ஷ் கமாண்டர் சைபுல்லாவும் ஒருவர்.

    சம்பவ இடத்திலிருந்து இரண்டு ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    காயமடைந்த டைசன் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதற்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அதன் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம்பட்டபோதும் டைசனின் செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது. 

    • ரஞ்சி டிராபி தொடரின் 2-வது அரையிறுதியில் ஜம்மு- காஷ்மீர் மற்று பெங்கால் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ரஞ்சி டிராபி தொடரின் 2-வது அரையிறுதியில் ஜம்மு- காஷ்மீர் மற்று பெங்கால் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஜம்மு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 328 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக சுதிப் குமார் 146 ரன்கள் குவித்தார். ஜம்மு அணி தரப்பில் நபி தார் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய ஜம்மு அணி முதல் இன்னிங்சில் 302 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அப்துல் சமத் 82 ரன்கள் விளாசினார். பெங்கால் தரப்பில் முகமது சமி 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    26 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சில் விளையாடிய பெங்கால் அணி 99 ரன்னில் சுருண்டது. ஜம்மு அணியில் நபி தார், சுனில் குமார் ஆகியோர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஜம்மு அணி களமிறங்கியது.

    அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 126 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    இதன் மூலம் ரஞ்சி டிராபி வரலாற்றில் முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. வரும் 24-ம் தேதி ஜம்மு காஷ்மீர் அணி இறுதிப் போட்டியில் கர்நாடகா அல்லது உத்தரகாண்டை எதிர்கொள்கிறது. 

    • இதுவரை பாகிஸ்தானுக்கு வீணாகச் சென்ற நீரை, இனி நமது நாட்டு விவசாயிகளின் நலனுக்காகப் பயன்படுத்துவோம்
    • இந்தத் திட்டத்திற்கு 1982-லேயே இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார்.

    பஞ்சாப் - ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஷாபுர்கண்டி அணைத் திட்டம் இறுதி நிலையை எட்டியுள்ளது.

    இதன் மூலம், ரவி நதியிலிருந்து பல தசாப்தங்களாக பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டிருந்த உபரி நீர், இந்த அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு முழுமையாக நிறுத்தப்படும்.

    ஷாபுர்கண்டி அணைத் கட்டுமானம் வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று ஜம்மு காஷ்மீர் நீர்வளத்துறை அமைச்சர் ஜாவேத் அகமது ராணா அறிவித்துள்ளார்.

    "இதுவரை பாகிஸ்தானுக்கு வீணாகச் சென்ற நீரை, இனி நமது நாட்டு விவசாயிகளின் நலனுக்காகப் பயன்படுத்துவோம்" என்று அமைச்சர் ராணா தெரிவித்துள்ளார்.

    இந்த அணையில் தேக்கப்படும் நீரைக் கொண்டு ஜம்மு காஷ்மீரின் கதுவா மற்றும் சாம்பா மாவட்டங்களில் உள்ள 32,173 ஹெக்டேர் வறண்ட நிலங்களுக்குப் பாசன வசதி அளிக்கப்படும்.

    மேலும், பஞ்சாபில் உள்ள 5,000 ஹெக்டேர் நிலங்களும் பலன் பெறும். இந்தத் திட்டத்தின் மூலம் 206 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.  

    1960-ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி, ரவி நதியின் மீது இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு.

    இந்தத் திட்டத்திற்கு 1982-லேயே இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார். ஆனால், மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்களால் தடைபட்டிருந்த இந்தப் பணி, 2018ல் மத்திய அரசின் தலையீட்டிற்கு பிறகு வேகம் எடுத்தது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. மேலும் செனாப் நதியின் குறுகியும் நீர் மின் நிலையத்தை கட்ட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 

    ×