என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேல் ஈரான் போர்"

    • துபாய், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து இயக்கப்படுகின்றன.
    • டெல்லி, கொச்சி, கோழிக்கோடு, மங்களூரு, மும்பை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.

    அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

    தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதனால் மத்திய கிழக்கில் பல நாடுகளின் வான்வழி மூடப்பட்டு விமான சேவைகள் முற்றிலும் முடங்கின. இதனால் பலர் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இந்த சூழலில் நேற்று மாலை முதல் துபாய், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    துபாயின் அபுதாபியில் இருந்து ஒரு விமானம் நேற்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

    அதேபோல மற்றொரு விமானம் அபுதாபியில் இருந்து மும்பையில் தரையிறங்கியது.

    விமானத்தில் தாயகம் திரும்பிய இந்தியர்கள் கூறுகையில், "வானத்தில் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்படுவதை எங்களால் பார்க்க முடிந்தது. வான்வெளி மிகவும் பரபரப்பாகவும் பதற்றமாகவும் உள்ளது," என்று தெரிவித்தனர்.

    இன்று (மார்ச் 3) முதல் மஸ்கட் நகரிலிருந்து டெல்லி, கொச்சி, கோழிக்கோடு, மங்களூரு, மும்பை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கு மீண்டும் விமானங்களை இயக்கத் தொடங்குகிறது.

    சவூதி அரேபியாவின் ஜெத்தாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று (மார்ச் 3) 10 சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

    ஐக்கிய அரபு அமீர்காமத்திலும் நேற்று மாலை முதல் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.    

    • ஷியா முஸ்லிம் சமூகத்தினர் காமேனியைத் தங்கள் ஆன்மீகத் தலைவராக கருதுகின்றனர்.
    • கூட்டத்தை கலைக்கக் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.

    ஈரானில் அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கடந்த சனிக்கிழமை அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    ஜம்மு காஷ்மீரில் உள்ள ஷியா முஸ்லிம் சமூகத்தினர் காமேனியைத் தங்கள் ஆன்மீகத் தலைவராகக் கருதுவதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று, ஸ்ரீநகரின் மையப்பகுதியான லால் சவுக்கில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் அங்கு வந்தனர்.

    இதற்கிடையே இன்று ஸ்ரீநகரின் பட்டமாலு பகுதியில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

    அங்கு காமேனியின் உருவப்படங்கள் மற்றும் கருப்புக்கொடிகளை ஏந்தியபடி ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

    தடைகளை மீறி முன்னேற முயன்ற போராட்டக்காரர்கள், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் மீது கற்களை வீசித் தாக்கினர்.

    வன்முறையைக் கட்டுப்படுத்த தடியடி நடத்தப்பட்டது. மேலும் கூட்டத்தை கலைக்கக் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.

    நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து, பல பகுதிகளில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன மற்றும் கூடுதல் துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. 

    • அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் கமேனி கொல்லப்பட்டார்.
    • அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

    இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்ட நிலையில் அவரது மனைவியும் கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவி மன்சரே கோஜஸ்தே, இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களில் காயமடைந்து உயிரிழந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    தெஹ்ரானிலும் அதைச் சுற்றியுள்ள பல இடங்களையும் குறிவைத்து அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

    கோஜஸ்தே அதே தாக்குதல்களில் காயமடைந்த நிலையில், 2 நாட்களுக்கு பிறகு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    78 வயதான கோஜஸ்தே, கமேனியின் மனைவி. அவர்கள் 1964 இல் திருமணம் செய்து கொண்டனர்.

    • நாடு முழுவதும் சிறப்பு விமானங்களை இயக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
    • 8 நகரங்களுக்கு அபுதாபியில் இருந்து சிறப்பு விமானம் இயக்கப்படுகிறது.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பயணிகள் வெளியேற, நாடு முழுவதும் சிறப்பு விமானங்களை இயக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி, அபுதாபியில் சிக்கித்தவிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்காக இரவு 2 மணி முதல் 8 நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, டெல்லி, மும்பை, கராச்சி, இஸ்லாமாபாத், மாஸ்கோ, பாரீஸ் உள்ளிட்ட 8 நகரங்களுக்கு அபுதாபியில் இருந்து சிறப்பு விமானம் இயக்கப்படுகிறது.

    • இஸ்ரேல் தொடர்ந்து லெபனானில் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததாகவும் 149 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

    தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, ஈரான் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட அந்நாடு முழுவதும் இஸ்ரேல் தாக்குதல்களை தொடுத்தது. இந்த தாக்குதல்களில் 31 பேர் உயிரிழந்ததாகவும் 149 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல் தொடர்ந்து லெபனானில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதனால, லெபனானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.

    • அமெரிக்கர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் கொல்லப்படுவார்கள்.
    • ஈரானின் முகமூடி கிழிந்து உண்மை முகம் தெரியவந்துள்ளது.

    நாங்கள் விரும்பினால் மட்டுமே போரை முடிவுக்கு கொண்டு வருவோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

    அமெரிக்கர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்தப் போரை நாங்கள் தொடங்கவில்லை, ஆனால் போரை அதிபர் டிரம்ப் முடித்து வைப்பார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    மேலும், விரக்தியில் அண்டை நாடுகளின் பொதுமக்கள் மீதே தாக்குதல் நடத்தியதன் மூலம் ஈரானின் முகமூடி கிழிந்து உண்மை முகம் தெரியவந்துள்ளது.

    ஏவுகணைகள், டிரோன், அணுசக்தி தொழிற்சாலைகளை தவிர வேறு எந்த வசதிகளையும் ஈரான் செய்யவில்லை.

    நாங்கள் பாதுகாவலர்கள் அல்ல, போர்வீரர்கள் என்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் பேட்டி அளித்துள்ளார்.

    • போர் என்பது தீர்வாகாது.
    • போர் மனித உயிரிழப்புகளையும் அழிவையும் மட்டுமே அதிகரிக்கும்.

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஈரான் இஸ்லாமிய குடியரசின் உயரிய தலைவர் அலி கமேனி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை யும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டதாக கூறப்படும் வான்வழித் பயங்கரவாத தாக்குதல், ஒரு சுயாட்சி நாட்டின் இறையாண்மையை வெளிப்படையாக மீறும் செயல் ஆகும்.

    ஒரு நாட்டின் அரசியல் மற்றும் மதத் தலைமை அமைப்பை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல், பிராந்திய அமைதியை சீர்குலைக்கும் செயல் மட்டுமல்ல. அது உலக அமைதிக்கும் பெரும் அச்சுறுத்தலாகும்.

    பல தசாப்தங்களாக பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முயற்சிக்கப்பட்ட விவகாரங்கள், ராணுவ தாக்குதலால் ஒருபோதும் தீர்க்கப்படமாட்டாது. போர் என்பது தீர்வாகாது. அது மனித உயிரிழப்புகளையும் அழிவையும் மட்டுமே அதிகரிக்கும்.

    எனவே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனடியாக அனைத்து தாக்குதல் நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும். சர்வதேச சமூகம் அவசரமாக தலையிட்டு, மோதலை கட்டுப படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரச்சினைகள் அனைத்தும் தூதரக வழி மற்றும் அமைதியான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் 15 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.
    • ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் வெடிகுண்டு சத்தங்களைக் கேட்கிறோம்.

    அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து நேற்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. ஈரானும், துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது பதில் தாக்குல் நடத்தி வருகிறது. மூன்று நாடுகள் கடுைமயான மோதலில ஈடுபட்டுள்ளதால் மத்திய கிழக்கில் கடும் பதற்ற சூழல் நிலவி வருகிறது.

    இந்த நிலையில், ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்து ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவி ஆயிஷா கூறுகையில், "நாங்கள் அனைவரும் இணைய சேவையில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளோம். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் வெடிகுண்டு சத்தங்களைக் கேட்கிறோம், இது இங்கே மிகவும் தொந்தரவாக இருக்கிறது. தூதரகம் ஈரானை விட்டு வெளியேறுமாறு எங்களுக்கு அறிவுரை வழங்கியபோது, எங்கள் பல்கலைக்கழகம் ஒத்துழைக்கவில்லை. நீங்கள் வெளியேறினால், நீங்கள் பரீட்சையில் தோல்வியடைவீர்கள் என்று அவர்கள் சொன்னார்கள்.

    பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் மற்றும் அனைத்தும் இப்போது 15 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. தூதரகத்திற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்; நாங்கள் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். ஒவ்வொரு நாட்டில் இருந்தும் இங்கு வான்வெளி தடைசெய்யப்பட்டுள்ளது இதனால் அவர்கள் இப்போது உதவியற்றவர்களாக உள்ளனர். எங்களால் வெளியேற முடியவில்லை," என்றார்.

    • ஈரானுக்கு, இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள்.
    • காஷ்மீரின் பல்வேறு இடங்களில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு ராணுவ தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். உலகம் முழுவதும் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்கள் மத்தியில் இந்த படுகொலை கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து ஜம்மு-காஷ்மீரில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கமேனியின் படத்துடன் அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

    ஸ்ரீநகர் லால் சவுக்கில் பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்டு கமேனி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். அவர்கள் ஈரானை ஆதரித்தும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினார்கள். ஈரானுக்கு, இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள்.

    இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிலைமை மோசமடையாமல் இருக்க போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

    வதந்திகள் பரவாமல் தடுக்கவும், போராட்டங்கள் மேலும் விரிவடையாமல் இருக்கவும், இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கமேனி உயிரிழந்த செய்தி அறிந்ததும் பல இடங்களில் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. சில பகுதிகளில் மக்கள் கருப்பு கொடிகளை ஏந்தி துக்கம் அனுசரித்தனர்.

    மேலும் லடாக், லே பகுதி உள்ளிட்ட காஷ்மீரின் பல்வேறு இடங்களில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உருவ பொம்மையையும் எரித்தனர். இஸ்ரேல், அமெரிக்க கொடியுடன் கூடிய உருவபொம்மையை எரித்து அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

    இதே போல உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோ உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.

    • ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலும், ஈரானின் பதிலடித் தாக்குதலும் கண்டிக்கத்தக்கது.
    • வியன்னாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வீணடிக்கப்பட்டுவிட்டது.

    இஸ்ரேல்-ஈரான் போர் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பாதுகாப்புக் கூட்டத்தில் அவையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடேரஸ் பேசியதாவது:-

    ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலும், ஈரானின் பதிலடித் தாக்குதலும் கண்டிக்கத்தக்கது. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் சர்வதேச மோதல்களுக்கு அமைதியான முறையில் தீர்ப்பதற்கு சாத்தியக் கூறுகளும் இல்லை.

    இந்தத் தாக்குதலால், வியன்னாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வீணடிக்கப்பட்டுவிட்டது. ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து உடனடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அனைத்து தரப்பினரையும் வலியுறுத்துகிறேன்.

    சர்வதேச சட்டத்தை கடைப்பிடிக்குமாறும், பொதுமக்களைப் பாதுகாக்குமாறும், அணுசக்தி பாதுகாப்பு தீவிரமாவதைத் தடுக்கவும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்காணிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • குர்திஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்திற்கு அருகே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    கத்தாரில் அமைக்கப்பட்டிருந்த அமெரிக்க "FP-132" ரேடார் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக ஈரானின் அரசு தொலைக்காட்சி அறிவித்தது. இது குறித்து வெளியான அறிக்கையின்படி, இந்த ரேடார் அமைப்பு, பிராந்தியத்தில் மிகவும் மேம்பட்ட அமெரிக்க இராணுவ சொத்துக்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. இது 5,000 கிலோமீட்டர் வரை வரம்பைக் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்காணிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஈரானிய ஊடகங்கள் இதை வளைகுடாவில் மிக முக்கியமான அமெரிக்க கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு மையங்களில் ஒன்றாக விவரித்தன. ஈரானில் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, 'ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4' என்று அழைக்கப்படும் புதிதாக தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் அமைந்ததாக IRGC தெரிவித்துள்ளது.

    ஈரான் முழுவதும் பல மாகாணங்களை குறிவைத்து ஒருங்கிணைந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு தற்காப்பு பதிலடியாக ஈரானிய அதிகாரிகள் இந்த பரந்த பிரச்சாரத்தை வடிவமைத்துள்ளனர். இதற்கிடையே ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்திற்கு அருகே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    • ராணுவ நடவடிக்கைக்கு திட்டமிட்ட இஸ்ரேல் அதற்கு 'ஆபரேஷன் ரைசிங் லயன்' (Operation Rising Lion) என்று பெயரிட்டது.
    • "ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3" என இந்த நடவடிக்கைக்கு பெயரிட்ட ஈரான் FATTAH உட்பட தங்கள் அதிநவீன ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது சரமாரியாக பாய்ச்சியது

    கடந்த 2023 அக்டோபர் முதல் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 70,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையே காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை மற்ற அரபு நாடுகள் வேடிக்கை பார்த்த நிலையில் ஈரான் அதற்கு எதிராக செயல்பட்டு வந்தது.

    இந்த சூழலில்தான் கடந்த ஜூன் 13 ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் நேரடி தாக்குதலை நடத்தியது. இது மத்திய கிழக்கில் போருக்கு வித்திட்டது.

    சுமார் 12 நாட்கள் நீடித்த இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர், மேலும் பல கட்டமைப்புகள் சேதமடைந்தன.

    போர்.. ஆமாம் போர்!

    ஈரானின் அணுசக்தித் திட்டத்தை இஸ்ரேல், தனது இருப்புக்கே நேரடி அச்சுறுத்தலாகக் கருதுகிறது. இதனை சீர்குலைக்க இஸ்ரேல் மீது சைபர் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் அது போதாது என்று முடிவெடுத்தது. எனவே ஈரான் மீது ராணுவ நடவடிக்கைக்கு திட்டமிட்ட இஸ்ரேல் அதற்கு 'ஆபரேஷன் ரைசிங் லயன்' (Operation Rising Lion) என்று பெயரிட்டது.

    சரியாக ஜூன் 13 அன்று ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி நிலையங்களையும் ராணுவ வசதிகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது. 200-க்கும் மேற்பட்ட விமானங்கள், டிரோன்களைக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதில் பல போதும்மக்களும், ஈரான் புரட்சி படை தளபதி உசைன் சலாமி மற்றும் அணு விஞ்ஞானி பெரேதூன் அப்பாஸி உள்ளிட்ட பல முக்கிய புள்ளிகள் உயிரிழந்தனர்.

    இதைத்தொடர்ந்து மத்திய கிழக்கில் வேறெந்த நாட்டையும் விட வலுவான ராணுவ கட்டமைப்பை கொண்ட ஈரான், இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை தொடங்கியது.

    "ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3" என இந்த நடவடிக்கைக்கு பெயரிட்ட ஈரான் FATTAH உட்பட தங்கள் அதிநவீன ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது சரமாரியாக பாய்ச்சியது. இதனால் போர் மூண்டது. இதில் இஸ்ரேலுக்கு உதவியாக அமெரிக்கா  களமிறங்கியது.

    இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் வீசியது. மேலும் ஈரான், காத்ர், இமாத், கெய்பர் ஷேகன், பட்டா-1 ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆயுத உதவி செய்து வந்தது. ஏவுகணைகளை இடைமறித்து அளிக்கும் THAAD (Terminal High Altitude Area Defense) சிஸ்டம் என்ற மேம்படுத்தப்பட்ட ஏவுகணை எதிர்ப்பு திட்டத்தை இஸ்ரேலில் குவித்தது.

    இதற்கிடையே இஸ்ரேலும் ஈரானும் இணைந்து தன்னை குறிவைப்பதை உணர்ந்த ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி தலைமறைவானார்.

    ரகசியான நிலத்தடி மறைவிடத்தில் அவர் தஞ்சமடைந்தார். தான் ஒரு வேலை மரணித்தால் தனது உச்ச தலைவர் பொறுப்புக்கு 3 பேரின் பெயர்களை அவர் முன்மொழித்ததாகவும் தகவல் உள்ளது.

    இஸ்ரேல் மீது மழையாக பொழிந்த ஈரான் ஏவுகணைகளை THAAD அமைப்பு இடைமறித்த அதே வேலையில், பாதுகாப்பு வழங்குவது மட்டுமின்றி டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா நேரடியாக போரில் குதித்தது.

    நிலத்தடியில் உள்ள ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் மீது அமெரிக்காவில் இருந்து ராணுவ விமானங்களை அனுப்பி 'பங்கர் பஸ்டர்' என்ற நிலத்தடி இலக்குகளை தாக்கும் சக்திவாய்ந்த குண்டுகளைவீச செய்தார் டிரம்ப்.

    இதில் ஈரானின் அணுசக்தி தளங்கள் மூன்றும் முற்றிலும் அழிக்கப்பட்டதாக டிரம்ப் அறிவித்தார். ஆனால் ஈரான் இதுநாள் வரை இதை மறுத்து வருகிறது.

    ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது, ஆனால் அவற்றை முழுமையாக அழிக்கவில்லை என்று சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) தலைவர் க்ரோஸி கூறியதே இதற்கு சான்று.

    உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக இஸ்ரேல் அறிவித்தது.

    ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்தன. இதனால் இந்தியா, சீனா உட்பட ஆசிய நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டது.

    ஈரான் மீதான தாக்குதலுக்கு சீனா, ரஷியா, வட கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதேநேரம் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ஆதரவளித்தன.

    அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தியதுடன், இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியபோது, கத்தார் போன்ற நாடுகளின் சமரச முயற்சியுடன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடந்தன.

    மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்ததால், கச்சா எண்ணெய் விலைகள் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தன.

    ஜூன் 23 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக அறிவித்தார்.

    இருப்பினும், ஆரம்பத்தில் போர் நிறுத்த மீறல்கள் இருந்தன. ஜூன் 25 அன்று இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவித்தன. எனவே 12 நாட்கள் மோதலுக்கு பிறகு இந்த போரானது முடிவுக்கு வந்தது.

    12 நாள் மோதலில் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் தோராயமாக 1,190 பேர் வரை ஈரானில் பலியாகினர். அவர்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் சரிசமமாக அடங்குவர்.

    ஈரான் தாக்குதலால் இஸ்ரேலில் உயிரிழப்புகள் மிக குறைவு என்றபோதும் இஸ்ரேலில் பல உள்கட்டமைப்புகள் கடும் சேதத்தை சந்தித்தன. குறிப்பாக இஸ்ரேலின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமான வெய்ஸ்மேன் அறிவியல் நிறுவனம் அழிக்கப்பட்டது.

    போர் நிறுத்தத்தை தொடர்ந்து வார்த்தை மோதல்கள் தொடர்ந்தன. அயத்துல்லா காமேனியை இஸ்ரேல் தாக்க தயாராக இருந்ததாவதும், அவரை அசிங்கமான மரணத்திலிருந்து தான் காப்பாற்றியதாகவும் அமெரிக்க அதிபர் அதிபர் டிரம்ப் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டார்.

    அதேநேரம், போர் நிறுத்தத்திற்கு பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அயத்துல்லா காமேனி, அமெரிக்காவின் செல்ல நாய் இஸ்ரேல், வேரிலிருந்து அழிக்கப்பட வேண்டிய புற்றுநோய் என்றும் அது ஈரானை தாக்கி பெரிய தவறுசெய்துவிட்டதாகவும் அதன் விளைவை அது அனுபவிக்கும் என்றும் எச்சரித்தார். மேலும் எங்களை தொட நினைத்த அமெரிக்காவுக்கு பாடம் புகட்டியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

    மொத்தத்தில் மத்திய கிழக்கு தொடங்கி மூன்றாம் உலகப் போராக உருவாக வாய்ப்புகள் அதிகம் கொண்ட இந்த மோதல் முடிவடைத்திருந்தாலும், இந்த அமைதி தாற்காலிகமே என புவிசார் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  

    ×