என் மலர்tooltip icon

    உலகம்

    தொடர்ந்து வெடிகுண்டு சத்தம் கேட்கிறது... ஈரானில் சிக்கித்தவிக்கும் இந்திய மாணவி அதிர்ச்சி தகவல்
    X

    தொடர்ந்து வெடிகுண்டு சத்தம் கேட்கிறது... ஈரானில் சிக்கித்தவிக்கும் இந்திய மாணவி அதிர்ச்சி தகவல்

    • பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் 15 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.
    • ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் வெடிகுண்டு சத்தங்களைக் கேட்கிறோம்.

    அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து நேற்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. ஈரானும், துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது பதில் தாக்குல் நடத்தி வருகிறது. மூன்று நாடுகள் கடுைமயான மோதலில ஈடுபட்டுள்ளதால் மத்திய கிழக்கில் கடும் பதற்ற சூழல் நிலவி வருகிறது.

    இந்த நிலையில், ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்து ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவி ஆயிஷா கூறுகையில், "நாங்கள் அனைவரும் இணைய சேவையில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளோம். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் வெடிகுண்டு சத்தங்களைக் கேட்கிறோம், இது இங்கே மிகவும் தொந்தரவாக இருக்கிறது. தூதரகம் ஈரானை விட்டு வெளியேறுமாறு எங்களுக்கு அறிவுரை வழங்கியபோது, எங்கள் பல்கலைக்கழகம் ஒத்துழைக்கவில்லை. நீங்கள் வெளியேறினால், நீங்கள் பரீட்சையில் தோல்வியடைவீர்கள் என்று அவர்கள் சொன்னார்கள்.

    பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் மற்றும் அனைத்தும் இப்போது 15 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. தூதரகத்திற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்; நாங்கள் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். ஒவ்வொரு நாட்டில் இருந்தும் இங்கு வான்வெளி தடைசெய்யப்பட்டுள்ளது இதனால் அவர்கள் இப்போது உதவியற்றவர்களாக உள்ளனர். எங்களால் வெளியேற முடியவில்லை," என்றார்.

    Next Story
    ×