என் மலர்
உலகம்
- எகிப்து நாட்டின் எல்லையோரம் உள்ள ரஃபா ஹமாஸ் அமைப்பினரின் கோட்டையாக திகழ்வதாக இஸ்ரேல் கூறி வருகிறது.
- ரஃபா நகரில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் வசித்து வருகிறார்கள்.
காசாவின் தெற்கு பகுதியான ரஃபா நகர் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஆறு பெண்கள், ஐந்து குழந்தைகள் அடங்குவார்கள். ஒரு குழந்தை பிறந்து ஐந்தே நாட்கள் ஆன நிலையில் உயிரிழந்துள்ளது.
எகிப்து நாட்டின் எல்லையோரம் உள்ள ரஃபா ஹமாஸ் அமைப்பினரின் கோட்டையாக திகழ்வதாக இஸ்ரேல் கூறி வருகிறது. இதனால் ரஃபா மீது தரை தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருகிறது. ரஃபா நகரில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் வசித்து வருகிறார்கள்.
காசா முனையில் உள்ள பெரும்பாலான மக்கள் ரஃபா நகருக்கு குடிபெயர்ந்து முகாம்களில் வசித்து வருகின்றனர். மனிதாபிமான பேரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் ரஃபா மீது தரைவழி தாக்குதல் நடத்தக்கூடாது என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் சவுதி அரேபியா சென்றுள்ளனர். இவர் இஸ்ரேல் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. காசாவிற்கு மேலும் உதவிப் பொருட்கள் சென்றடைய இஸ்ரேல் வழிவகை செய்ய வேண்டும். இருந்தபோதுிலும், மனிதாபிமான நெருக்கடியை தணிக்க இரு தரப்பிலும் போர் நிறுத்தம் செய்து கொள்வது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
- கென்யாவில் 2 லட்சம் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பள்ளிக்கூடங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிரேட் ரிஃப்l; பள்ளத்தாக்கு மாகாணத்தில் அமைந்தள்ள பகுதி மாய் மஹியு. இங்கு ஒல்டு கிஜாப் என்ற அணை உள்ளது. இந்த அணி திடீரென்று உடைந்தது வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதில் வீடுகள் அடித்து செல்லப்பட்டன. மரங்களை வேறோடு சாய்த்து இழுத்துச் சென்றது. கார்கள் அடித்து செல்லப்பட்டன.
அணையில் இருந்து வெளியேறிய வெள்ளத்தால் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் மத்தியில் இருந்து கென்யாவில் கனமழை பெய்து வருகிறது. அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்திருந்தது, கனமழை காரணமாக அணை நிரம்பியிருந்தது.
கடந்த சனிக்கிழமை கென்யாவின் முக்கியமான விமான நிலையம் மழை வெள்ளத்தால் மூழ்கியது. ரன்வே மூழ்கியதால் பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கென்யாவில் 2 லட்சம் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பள்ளிக்கூடங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிய முகாம் அமைக்க கென்ய அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
கிழக்க ஆப்பிரிக்க நாடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. தான்சானியாவில் கனமழை பெய்தது. இந்த மழைக்கு 155 பேர் உயிரிழந்தனர். புருண்டியில் 2 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கோல்பி ட்ரிக்கிள் தெரிவித்தார். போலீசாரும் இது தற்கொலை தான் என வழக்கை முடித்துவிட்டனர்.
- போலீஸ் அதிகாரி ஒருவருக்கு கிறிஸ்டின் டரிக்கிள் சாவில் சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் கோல்பி டிரிக்கிளிடம் விசாரித்த போது உண்மை வெளிவந்தது.
கன்சாஸ்:
அமெரிக்கா கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் கோல்பி ட்ரிக்கிள் (வயது 30). இவரது மனைவி கிறிஸ்டன் டிரிக்கிள் (26) கடந்த 2019-ம் ஆண்டு இவர் ஹோஸ்ட் கன்சாவில் உள்ள வீட்டில் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கோல்பி ட்ரிக்கிள் தெரிவித்தார். போலீசாரும் இது தற்கொலை தான் என வழக்கை முடித்துவிட்டனர்.
மனைவி பெயரில் 2 ஆயுள் காப்பீடுகள் இருந்தது. அதன் மூலம் கோல்பிக்கு 1.20 லட்சம் டாலர் ( சுமார் ரூ.1 கோடி ) இன்சூரன்சு தொகை கிடைத்தது. அதனை அவர் ஜாலியாக செலவழித்தார்.
வீடியோ கேம்களுக்காக ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவழித்தார். கடன்களை அடைத்தார். தான் பெரிய இசை கலைஞராக வேண்டும் என்ற ஆசையில் இசைக்கருவி–கள் வாங்கி குவித்தார். இதோடு மட்டும் நின்று விடாமல் ரூ1.66 லட்சம் மதிப்பிலான செக்ஸ் பொம்மை வாங்கினார்.
இது தனக்கு ஆறுதலாகவும், அரவணைப்பாகவும் உள்ளதாக அவர் கருதினார். இது தொடர்பாக அவரது தாயார் கூறும் போது தனது மகன், மனைவி இறந்த பிறகு சரியாக தூங்குவது இல்லை. இதனால் செக்ஸ் பொம்மையினை வாங்கினார். ஆனால் அதனுடன் செக்ஸ் உறவு எதுவும் வைக்கவில்லை என்று கூறினார்.
இந்த சூழ்நிலையில் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு கிறிஸ்டின் டரிக்கிள் சாவில் சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் கோல்பி டிரிக்கிளிடம் விசாரித்த போது உண்மை வெளிவந்தது.
மனைவியை கொன்று தற்கொலை செய்ததாக நாடகமாடி இன்சூரன்சு மூலம் கிடைத்த பணத்தில் செக்ஸ் பொம்மை உள்ளிட்ட பொருட்கள் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கில் போலீசார் கோல்பி டிரிக்கிளை கைது செய்தனர்.
- அதிர்ஷ்டவசமாக தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
- மொத்தம் ரூ.11.5 லட்சம் அளவுக்கு பொருட்கள் எரிந்து சேதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 4-ந்தேதி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது வீட்டில் இருந்த மின்சார குக்கரை வீட்டு உரிமையாளர் அணைத்து வைத்திருந்த நிலையில், வீட்டில் அவர் செல்லமாக வளர்த்த பூனை அந்த மின்சார குக்கரை 'ஆன்' செய்ததும், அதனால் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வீட்டில் தீப்பிடித்ததும் தெரிய வந்தது.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதில் மொத்தம் ரூ.11.5 லட்சம் அளவுக்கு பொருட்கள் எரிந்து சேதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பயனர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.
- வீடியோ 20 லட்சத்திற்கும் அதிகமாக பார்வைகளை பெற்று பயனர்கனை கவர்ந்துள்ளது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சிறுமியின் அசாத்திய திறமையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தனித்திறமைகள் கொண்ட சிறுவர், சிறுமிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் எளிதில் பிரபலமாகி விடுகிறார்கள். அந்த வகையில் சிங்கத்தின் கர்ஜனையை கச்சிதமாக பின்பற்றும் ஒரு சிறுமியின் வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ரிலே கே ஸ்காட் என்ற அந்த சிறுமி, சக்தி வாய்ந்த சிங்கம் கர்ஜிப்பது போன்று தனது வாயால் கர்ஜித்து காட்டி அவரது அசாத்திய திறனை வெளிப்படுத்துகிறார். மேலும் ரிலேயின் தாயார், தனது மகளிடம் உனது சிங்க சத்தம் அனைவருக்கும் பிடித்திருந்ததாகவும், அது உண்மை என்று அவர்கள் நினைத்ததாகவும் கூறுவதையும் காண முடிகிறது. பேட்டன் என்ற பயனரால் பகிரப்பட்ட அந்த வீடியோ 20 லட்சத்திற்கும் அதிகமாக பார்வைகளை பெற்று பயனர்கனை கவர்ந்துள்ளது.
வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சிறுமியின் அசாத்திய திறமையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், இதை நீங்கள் சிறுவயதில் கற்கவில்லை என்றால், பெரியவர்களாகிய நீங்கள் அதை பெற மாட்டீர்கள் என்று நினைக்கிறேன் எனவும், மற்றொரு பயனர், சிறுமியின் தாயார் அவளைப் பற்றி பெருமைப்பட வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.
- ஒமாஹா பகுதியில் கடும் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.
- பார்ப்பதற்கு சினிமாவில் இடம்பெறும் காட்சிகளை போல உள்ள வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த காதல் ஜோடியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
காதலை காதலியிடம் முன்மொழிய இளைஞர்கள் பல்வேறு வித்தியாசமான செயல்களை செய்கிறார்கள். நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் காதலை வெளிப்படுத்தியது முதல் பறக்கும் விமானத்தில் சக பயணிகள் மத்தியில் வெளிப்படுத்துவது வரை ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சூறாவளிக்கு முன்பு ஒரு இளம்ஜோடி மோதிரத்தை மாற்றி நிச்சயதார்த்தம் செய்த காட்சிகள் உள்ளது. அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு கடந்த வாரம் சக்தி வாய்ந்த சூறாவளி காற்றுடன் புயல் வீசியது.
அப்போது அங்கு உள்ள ஒமாஹா பகுதியில் கடும் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதிக்கு சென்ற ஒரு இளம்ஜோடி சூறாவளிக்கு மத்தியில் மோதிரத்தை மாற்றி நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி 2 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது. பார்ப்பதற்கு சினிமாவில் இடம்பெறும் காட்சிகளை போல உள்ள வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த காதல் ஜோடியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
also i proposed to my partner today!! we pulled over so we could see the tornado that was ~40 min from us. we both love storms and storm chasing so i wanted to propose in front of a storm. i never thought i would actually have the opportunity to do it in front of a tornado pic.twitter.com/kLbEZOD8A6
— ?♡ june bug ♡? SAW FNOWAE (@g00dluckbabe) April 26, 2024
- கடைசி நிமிடத்தில் பயணத்தை ரத்து செய்து சீனாவுக்கு சென்றுள்ளார்.
- சீன அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்.
உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளர் டெஸ்லா. இந்நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக டெஸ்லா கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வது தொடர்பாக இந்தியாவுக்கு பயணம் செய்ய திட்டமிட்ட எலான் மஸ்க், கடைசி நிமிடத்தில் தனது பயணத்தை ரத்து செய்து சீனாவுக்கு சென்றுள்ளார்.
அந்த வகையில், தனது சீன பயணத்தின் போது தானியங்கி வாகனத்திற்கான மென்பொருளை அறிமுகம் செய்வது மற்றும் கடல்கடந்து தகவல்களை பரிமாற்றம் செய்வதற்கான அனுமதி பெறுவது தொடர்பாக சீன அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், சீன பயணத்தின் போது எலான் மஸ்க் அந்நாட்டு பிரதமர் லி கியாங்கை நேரில் சந்தித்தார். சந்திப்பின் போது சீனாவில் டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சி அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. சந்திப்பு தொடர்பாக எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "பிரதமர் லி கியாங்கை சந்தித்ததில் பெருமை கொள்கிறேன். ஷாங்காய் நாட்கள் தொடங்கி பல ஆண்டுகளாக நாங்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துள்ளோம்," என்று குறிப்பிட்டுள்ளார். இத்துடன் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் இணைத்துள்ளார்.
Honored to meet with Premier Li Qiang.
— Elon Musk (@elonmusk) April 28, 2024
We have known each other now for many years, since early Shanghai days. pic.twitter.com/JCnv6MbZ6W
- புதிய சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது.
- சட்டம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் இற்றப்பட்டு விட்டதாக தகவல்.
ஈராக் அரசாங்கம் சார்பில் இயற்றப்பட்டு இருக்கும் புதிய சட்டம், தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு தடை விதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அதன்படி ஈராக் அரசு இயற்றியிருக்கும் புதிய சட்டத்தின்படி தன்பாலின ஈர்ப்பு திருமணம் செய்து கொள்வோருக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். புதிய சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்று சில அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.
புதிய சட்டம் அந்நாட்டில் வசிக்கும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீது தாக்குதலாக அமைந்துள்ளது. தன்பாலின ஈர்ப்பு திருமணங்களை சட்டவிரோதமாக அறிவிக்கும் சட்டம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் இற்றப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த சட்டம் ஈராக் சமூகத்தை ஒழுக்க சீர்கேடுகளில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இயற்றப்பட்டுள்ளது.
தன்பாலின ஈர்ப்பு திருமணங்கள் மற்றும் விபச்சாரத்தை ஒழிக்கும் புதிய சட்டத்தை மீறுவோருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள், அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். தன்பாலின ஈர்ப்பு அல்லது விபச்சாரத்தை ஊக்குவிப்போருக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
- பாகிஸ்தானின் துணை பிரதமராக இஷாக் தார் நியமனம் செய்யப்பட்டார்.
- இவர் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
லாகூர்:
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சவுதி அரேபியாவில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க சவுதி சென்றுள்ளார்.
உலக பொருளாதார மாநாட்டின் உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் எனர்ஜி தொடர்பான சிறப்பு ஆலோசனை கூட்டம் இன்று மற்றும் நாளை நடைபெற இருக்கிறது. ஷாபாஸ் ஷெரீப் உடன் வெளியுறவுத்துறை மந்திரி இஷாக் தார் சென்றுள்ளார்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அழைப்பின் பேரில் ஷெபாஸ் ஷெரீப் கலந்துகொள்கிறார். அங்கு ஷாபாஸ் ஷெரீப் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறார்.
இந்நிலையில், பாகிஸ்தானின் துணை பிரதமராக இஷாக் தாரை நியமனம் செய்து பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.
- ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை மந்திரி ரிச்சர்டு மார்லெஸ் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
- உக்ரைனுடன் ஆஸ்திரேலியா உறுதியாக துணைநிற்கும் என தெரிவித்தார்.
கீவ்:
ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 2 ஆண்டுகளை கடந்த பிறகும் தொடர்ந்து நடந்து வருகிறது. நேட்டோ உறுப்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்குத் தேவையான ராணுவ மற்றும் நிதியுதவிகளை வாரி வழங்கி வருகின்றன.
இந்நிலையில் ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை மந்திரி ரிச்சர்டு மார்லெஸ் உக்ரைன் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைனின் லிவிவ் நகருக்குச் சென்ற அவர், உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷமிஹாலை சந்தித்துப் பேசினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ரிச்சர்டு மார்லெஸ், ஆஸ்திரேலிய அரசு சார்பில் உக்ரைனுக்கு குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு, டிரோன், வெடிமருந்து உள்பட மொத்தம் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவித் தொகுப்பு வழங்கப்படும். உக்ரைனுடன் ஆஸ்திரேலியா உறுதியாக துணைநிற்கும் என தெரிவித்தார்.
- கிழக்கு பாக்தாத்தின் ஜோயோனா மாவட்டத்தில் உள்ள தனது வீட்டு முன்பு காரில் ஓம் பகத் அமர்ந்திருந்தார்.
- ஓம் பகத் மர்ம நபரால் சுடப்படும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
பாக்தாத்:
ஈராக்கை சேர்ந்த டிக்-டாக் பெண் பிரபலம் ஓம் பகத். பாப் இசைக்கு நடனமாடும் வீடியோக்களை டிக்-டாக்கில் பகிர்ந்து வந்தார்.
மேலும் பல்வேறு வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். இவரை சமூக வலைதளங்களில் 5 லட்சம் பேர் பின்தொடருகிறார்கள்.
இந்த நிலையில் ஓம் பகத், மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கிழக்கு பாக்தாத்தின் ஜோயோனா மாவட்டத்தில் உள்ள தனது வீட்டு முன்பு காரில் ஓம் பகத் அமர்ந்திருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென்று துப்பாக்கியால் ஓம் பகத்தை நோக்கி சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் அந்த மர்ம நபர் தப்பி சென்றார்.
ஓம் பகத் மர்ம நபரால் சுடப்படும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் பரவியது. இக்கொலை தொடர்பாக விசாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளதாக ஈராக்கின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஓம் பகத்தின் இயற்பெயர் குப்ரான் சவாதி. கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது வீடியோக்களில் பொது ஒழுக்கத்தை குறைக்கும் அநாகரீகமான பேச்சு இருப்பதாக கூறி ஓம் பகத்துக்கு 6 மாத சிறைத் தண்டனையை கோர்ட்டு விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- தனது குடும்பப் பண்ணையில் கிரிக்கெட் என்று பெயரிடப்பட்ட 14 மாத நாய், மூர்க்கத்தனமாக நடந்து கொண்டது.
- தனது நாயைக் கொன்றதைப் போலவே ஆட்டையும் கொல்ல முடிவு செய்ததாக கூறியுள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அக்கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு தெற்கு டகோட்டா மாகாண பெண் கவர்னர் கிறிஸ்டி நோம் போட்டியிட முயற்சித்து வருகிறார்.
இந்த நிலையில் கிறிஸ்டி நோம், தனது வளர்ப்பு நாய் மற்றும் ஆட்டை கொன்றதாக அவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது குடும்பப் பண்ணையில் கிரிக்கெட் என்று பெயரிடப்பட்ட 14 மாத நாய், மூர்க்கத்தனமாக நடந்து கொண்டது. அதை தொடர்பு கொண்ட எவருக்கும் ஆபத்தானதாக இருந்தது. இதனால் அந்த நாயை சுட்டுக்கொன்றேன் என்று கூறியுள்ளார்.
தனது நாயைக் கொன்றதைப் போலவே ஆட்டையும் கொல்ல முடிவு செய்ததாக கூறியுள்ளார். அந்த ஆடு வெறித்தனமாக குழந்தைகளை துரத்தி அவர்களை இடித்து தள்ளி ஆடைகளை கிழித்தது என்று தெரிவித்து உள்ளார். இதற்கு கிறிஸ்டி நோமுக்கு விலங்குகள் நல அமைப்பான பீட்டா கண்டனம் தெரிவித்துள்ளது.






