என் மலர்tooltip icon

    உலகம்

    • உலகின் முன்னணி பணக்காரர்கள் ஒரே நாளில் 108 பில்லியன் டாலர்கள் [ரூ.9.34 லட்சம் கோடி] இழந்தனர்.
    • பணிகளைச் செய்யும் 'ஏஐ ஏஜென்ட்' வசதியையும் டீப்சீக் அறிமுகப்படுத்தியது.

    செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

    இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி, கூகுள் - ஜெமினி ஆகியவையே அமெரிக்க நிறுவனகளே கோலோச்சி வந்தன. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகமான ஒரு ஏஐ தொழில்நுட்ப உலகையே ஆட்டம் காண வைத்தது.

    2023ஆம் ஆண்டில் சீன குவாண்ட் ஹெட்ஜ் ஃபண்ட் தலைவரான லியாங் வென்ஃபெங் என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம் டீப்சீக் (Deepseek).

    இந்த நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரியில், டீப்சீக், ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்ற இரு ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியது. அமெரிக்க நிறுவனங்களை விட பன்மடங்கு குறைவாக 6 மில்லியன் டாலர்கள் செலவில் டீப்சீக் ஏஐ உருவாக்கப்பட்டது.

    டீப்சீக் ஏஐ மாடல் வருகையால் அமெரிக்க நிறுவனங்கள் ஆட்டம் கண்டன. ஏனெனில் டீப்சீக் ஏஐ முற்றிலும் இலவசமாகும்.

    சந்தையில் உள்ள சாட்ஜிபிடி, ஜெமினி ஆகியவை பயனர்களுக்குப் பழைய வெர்ஷன்களை மட்டுமே இலவசமாக வழங்குகிறது. புதிய அம்சங்களுக்குக் கட்டணம் பெறுகிறது. ஆனால் டீப்சீக் ஏஐ, அனைத்து நவீன வசதிகளையும் இலவசமாக வழங்குகிறது.

    மேலும் டீப்சீக் ஏஐ மாடலை இயக்கும் செலவும் குறைவாகும். ஓபன் ஏஐ மாடலை இயக்க 10 இன்புட் டோக்கன்கள் தேவை, அதற்கு 15 டாலர் செலவாகும்.

    ஆனால் டீப்சீக் மாடலில் அதே 10 இன்புட் டோக்கன்கள் செலவு 0.55 டாலர்கள் மட்டுமே. அதாவது ஓபன் ஏஐ மாடலை விட டீப் சீக் மாடலை இயக்க 27 மடங்கு குறைவாகவே செலவாகிறது.

    மேலும் சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி ஆகியவை க்ளோஸ்ட்டு சோர்ஸ் ஏஐ மாடல்கள். ஆனால் டீப்சீக் ஏஐ ஓபன் சோர்ஸ் ஏஐ மாடல், அதவாது, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இதை அணுக முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.

    எனவே அமெரிக்க நிறுவனங்கள் இந்த புதிய போட்டியாளரை கண்டு நடுங்கின. பங்குச்சந்தையிலும் டீப்சீக் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    மிக குறுகிய காலக்கட்டத்தில் மிகவும் பிரபலம் அடைந்த டீப்சீக் மற்ற ஏஐ செயலிகளை விட உலகளவில் அளவுக்கு அதிகமான டவுன்லோட்களை கடந்து அசத்தியது.

    அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், டீப்சீக் ஏஐ, அமெரிக்காவுக்கான எச்சரிக்கை மணி என்று பேசும் அளவுக்கு டீப்சீக் அசுர வளர்ச்சி கண்டது.

    ஜனவரி இறுதியில், அதாவது சரியாக ஜனவரி 27(திங்கள்கிழமை), அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் பூகம்பத்தை சந்தித்தன.

    டீப்சீக் வருகையால் செயற்கை நுண்ணறிவுடன் தொடர்புடைய நிறுவனங்களைக் கொண்ட பணக்காரர்களின் செல்வம் மிகவும் நஷ்டத்தை சந்தித்தது.

    என்விடியா கார்ப் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங் மற்றும் உலகின் முன்னணி பணக்காரர்கள் ஒரே நாளில் 108 பில்லியன் டாலர்கள் [ரூ.9.34 லட்சம் கோடி] இழந்தனர் என்று ப்ளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டது.

    ஜனவரி இறுதியில் பங்குச்சந்தையை அதிரவைத்த டீப்சீக், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சில சவால்களைச் சந்தித்தது.

    ஜனவரி 27-ல் புகழ் உச்சத்தில் இருந்தபோது, டீப்சீக் தளம் கடுமையான 'DDoS' சைபர் தாக்குதலுக்கு உள்ளானது.

    இதனால் புதிய பயனர்கள் பதிவு செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும், சில நாட்களிலேயே மீண்டும் வலுவாகச் செயல்பாட்டுக்கு வந்தது.

    அதிபர் டிரம்ப் நிர்வாகம் டீப்சீக் வளர்ச்சியை 'தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்' என்று கருதியது. இதனால், அமெரிக்க அரசு நிறுவனங்களில் டீப்சீக் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.

    மேலும், டீப்சீக் போன்ற சீன நிறுவனங்கள் அதிநவீன 'என்விடியா' சிப்களைப் பெறுவதைத் தடுக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.

    இதற்கிடையே கூகுள் தனது Gemini 3 மாடலையும், OpenAI தனது GPT-5.2 மாடலையும் வெளியிட்டன. இவை சிக்கலான கணக்குகளைத் தீர்ப்பது (Reasoning) மற்றும் கோடிங் செய்வதில் புதிய உச்சத்தை எட்டின.

    அதேநேரம் மே மற்றும் டிசம்பர் மாதங்களில் டீப்சீக் தனது அடுத்தடுத்த பதிப்புகளை (V3 சீரிஸ்) வெளியிட்டது. இவை முந்தைய மாடல்களை விட வேகமாகவும், துல்லியமாகவும் இருந்தன.

    குறிப்பாக, இது கணிதம் மற்றும் கோடிங் -இல் கூகுளின் ஜெமினி 3 மற்றும் ஓபன் ஏஐ-யின் புதிய மாடல்களுக்கு நிகராகப் போட்டியிட்டது.

    ஆண்டின் இறுதியில், பயனர்களுக்காக வெறும் பதில்களை மட்டும் தராமல், ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வது, காலண்டரில் வேலைகளைக் குறிப்பது போன்ற பணிகளைச் செய்யும் 'ஏஐ ஏஜென்ட்' வசதியையும் டீப்சீக் அறிமுகப்படுத்தியது.

    டீப்சீக் வெறும் ஒரு செயலியாக மட்டும் இல்லாமல், ஏஐ உலகில் நிலவி வந்த அமெரிக்க ஏகபோகத்தை உடைத்தெறிந்த ஒரு ஆயுதமாக மாறியுள்ளது. 100 மில்லியன் டாலர்கள் செலவழித்தால்தான் சிறந்த ஏஐ-யை உருவாக்க முடியும் என்ற பிம்பத்தை வெறும் 6 மில்லியன் டாலரில் டீப்சீக் உடைத்துக் காட்டியது.

    டீப்சீக் வருகையால் தங்கள் பிரீமியம் தன்மைகளை மற்ற ஏஐ நிறுவனங்கள் குறைத்து வெகு மக்கள் பயன்பாட்டுக்கு இலவசமாக வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    ஏஐ தொழில்நுட்பம் என்பது பணக்காரர்களுக்கானது மட்டுமல்ல, அது அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டிய ஒன்று என்பதை டீப்சீக் உலகிற்கு உணர்த்தியுள்ளது.

    2025-ம் ஆண்டு என்பது ஏஐ-யின் வளர்ச்சி என்று வரலாற்றில் குறிப்பிடப்படும்போது அதில் 'டீப்சீக்' என்ற பெயர் புரட்சியின் வடிவமாக நிச்சயம் பதிவாகும். 

    • மாணவர் சிவாங்க் அவஸ்தியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்று உள்ளனர்.
    • தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    டொராண்டோ:

    இந்தியாவை சேர்ந்த மாணவர் சிவாங்க் அவஸ்தி (வயது 20). கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் வளாகம் அருகே மாணவர் சிவாங்க் அவஸ்தி உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவர் பிணமாக கிடந்த ஹைலேண்ட் கிரீக் டிரெயில் மற்றும் ஓல்ட் கிங்ஸ்டன் சாலைப் பகுதியில் சிலரிடையே தகராறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. இதில் மாணவர் சிவாங்க் அவஸ்தியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்று உள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இச்சம்பவம் தொடர்பாக டொராண்டோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    டொராண்டோ பல்கலைக்கழக ஸ்கார்பரோ வளாகம் அருகே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இந்தியாவை சேர்ந்த முனைவர் பட்ட மாணவர் சிவாங்க் அவஸ்தி உயிரிழந்தது குறித்து நாங்கள் ஆழ்ந்த வேதனை அடைந்து உள்ளோம்.

    இந்தக் கடினமான நேரத்தில் துணைத் தூதரகம் அவரது துயரமடைந்த குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளது. மேலும் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது என்று தெரிவித்து உள்ளது.

    கனடாவில் சில தினங்களுக்கு முன்பு, டொராண்டோவில் 30 வயதான இந்திய வம்சாவளி பெண் ஹிமான்ஷி குரானா அவரது ஆண் நண்பரால் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

    • பலமுறை கண்டித்தும் அவர்கள் திருந்தாததால் அமெரிக்கா தற்போது தாக்குதல் தொடுத்து உள்ளது.
    • கிறிஸ்துவர்களை படுகொலை செய்யப்படுவது தொடர்ந்தால் மேலும் தாக்குதல் நடத்தப்படும்.

    கிறிஸ்துமஸ் அன்று நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதக் குழு மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதாக அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், கடந்த நூறு ஆண்டுகளாக நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் மீது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை பலமுறை கண்டித்தும் அவர்கள் திருந்தாததால் அமெரிக்கா தற்போது தாக்குதல் தொடுத்து உள்ளது.

    கிறிஸ்துவர்களை குறித்து தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. கிறிஸ்துவர்களை படுகொலை செய்யப்படுவது தொடர்ந்தால் மேலும் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

    • வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
    • பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை கீழ் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட அந்நாடு தடை விதித்தது.

    டாக்கா:

    வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, வங்கதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அவாமி லீக் கட்சி தலைவர்களுக்கு எதிரான வழக்குகள் முடிவுக்கு வரும்வரை பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை கீழ் அவாமி லீக் கட்சிக்கு அந்த நாடு தடை விதித்துள்ளது.

    இதனால் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள தேர்தலில் அவாமி லீக் கட்சியினர் பங்குகொள்ள வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ள சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஷேக் ஹசீனா கட்சிக்கு விதிக்கப்பட்ட தடைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக, அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவு விவகாரக்குழு உறுப்பினர்கள் வங்கதேச பிரதமர் முகமது யூனுசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    அதில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் மூலம் தங்களுக்கு தேவையான அரசை அமைக்க வங்கதேச மக்களுக்கு உரிமை உள்ளது. அனைத்துக் கட்சியினரும் தேர்தலில் கலந்துகொள்வதை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
    • சமீபத்தில் இந்து இளைஞர் திபு சந்திர தாசை ஒரு கும்பல் கொடூரமாக கொலை செய்தது.

    டாக்கா:

    முகமது யூனுஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல், இந்துக்களின் தொழில்களைக் குறிவைப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்தே அங்கு தொடர்ந்து வன்முறைகள் அரங்கேறி வருகின்றன.

    இன்குலாப் மஞ்ச் என்ற மாணவர் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். இதையடுத்து, அங்கு பெரும் வன்முறை வெடித்தது.மேலும், இந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் என்பவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

    இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு இந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியது.

    வங்கதேசத்தின் சிட்டகாங்கில் உள்ள வெளிநாடுவாழ் இந்துக்களான ஜெயந்தி சங்கா, பாபு ஷுகுஷில் ஆகியோரது வீடுகளை மர்ம நபர்கள் தீவைத்துக் கொளுத்தினர். இது இந்துக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், நேற்று நள்ளிரவில் வங்கதேசத்தின் ராஜ்பரி மாவட்டத்தில் இந்து மதத்தைச் சேர்ந்தவரை கும்பல் ஒன்று அடித்துக் கொன்றுள்ளது என அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ராஜ்பரி மாவட்டத்தின் பாங்ஷா உபசிலாவில் உள்ள ஹொசைந்தங்கா சந்தையில் இந்தத் தாக்குதல் நடந்தது. தாக்குதலில் கொல்லப்பட்டவர் அம்ரித் மண்டல் என தெரிய வந்தது. அம்ரித் மண்டல் ஒரு உள்ளூர் குழுவின் தலைவராக இருந்தவர். அவர் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டால் ஆத்திரமடைந்த கும்பல் அவரைத் தாக்கியதாக முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளது என கூறினர்

    • 2008-ம் ஆண்டு வங்கதேசத்தில் இருந்து லண்டன் சென்றார்.
    • தாய் உடல்நிலை மோசமாக உள்ளதால் சொந்த நாடு திரும்பியுள்ளார்.

    வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. அவர் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

    இதற்கிடையே ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வங்காளதேச தேசியவாத கட்சி தலைவரான முன்னாள் பிரதமர் கலிதா ஜியா (வயது 80) விடுதலை செய்யப்பட்டார்.

    சமீபத்தில் அவரது உடல் நிலை மோசமடைந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து லண்டனில் இருக்கும் அவரது மகன் தாரிக் ரகுமான் (60) வங்காளதேசத்துக்கு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டதால் தாரிக் ரகுமான் நாட்டை விட்டு வெளியேறி, இங்கிலாந்தின் லண்டனில் வசித்து வந்தார். 2008-ம் ஆண்டு தாரிக் ரகுமான் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை அரசாங்கம் விடுவித்த பிறகு 2008-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் வசித்து வந்தார்.

    தற்போது தாரிக் ரகுமான் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 17 ஆண்டுக்கு பிறகு அவர் இன்று வங்காள தேசத்துக்கு திரும்பினார். அவர் தனது மனைவி ஜுபைதா ரகுமான், மகள் ஜைமா ரகுமான் ஆகியோருடன் லண்டனில் இருந்து விமானத்தில் புறப்பட்டார்.

    தாரிக் ரகுமான் பயணித்த விமானம் இன்று காலை 10 மணிக்கு சில்ஹெட் உஸ்மானி விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னர் அந்த விமானம் அங்கிருந்து புறப்பட்டு டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

    அங்கு தாரிக் ரகுமானுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வங்காளதேச தேசியவாத கட்சி ஏற்பாடு செய்திருந்தது. ஏராளமான கட்சி தொண்டர்கள் திரண்டு வரவேற்றனர். சாலையின் இருபுறமும் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது கட்சி கொடியை அசைத்தபடி தாரிக் ரகுமானை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

    அதன்பின் அவர் டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாய் கலிதா ஜியாவைச் சந்தித்தார். இதற்கிடையே தனது கட்சியினர் மத்தியில் தாரிக் ரகுமான் உரையாற்றினார்.

    அப்போது அவர் "எல்லோரும் இணைந்து நாட்டை கட்டமைக்கும் நேரம் இது. பாதுகாப்பான வங்கதேசத்தை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். வங்கதேசத்தில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என யாராக இருந்தாலும், அவர்கள் வீட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி, பாதுகாப்பாக வந்து சேர வேண்டும். நாட்டு மக்களுக்காகவும், நாடுகளுக்காகவும் நான் திட்டம் வைத்துள்ளேன்" என்றார்.

    வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பிரதமர் பதவிக்கு போட்டியிடவும் வங்காளதேச தேசியவாத கட்சி செயல் தலைவரான தாரிக் ரகுமான் முடிவு செய்து உள்ளார். இதற்காக அவர் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

    வங்கதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் சுட்டு கொல்லப்பட்டதால் சமீபத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் தாரிக் ரகுமான் நாடு திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்று, நாம் அனைவரும் ஒரே கனவைப் பகிர்ந்து கொள்கிறோம்.
    • புதின் அழிந்து போகட்டும் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள்.

    கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த நிலையில் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் உரையாற்றினார். அப்போது மறைமுகமாக ரஷிய அதிபர் புதின் அழியட்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார்.

    இது தொடர்பாக ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோ உரையில் கூறியிருப்பதாவது:-

    ரஷியா ஏற்படுத்திய அனைத்து துன்பங்களுக்கும் மத்தியிலும், மிகவும் முக்கியமானவற்றை ஆக்கிரமிக்கவோ அல்லது குண்டுவீசி அழிக்கவோ அதனால் முடியாது. அதுதான் எங்கள் உக்ரேனிய மக்களின் இதயம், ஒருவருக்கொருவர் மீது நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கை, மற்றும் எங்கள் ஒற்றுமை.

    இன்று, நாம் அனைவரும் ஒரே கனவைப் பகிர்ந்து கொள்கிறோம். மேலும் எங்கள் அனைவரிடமும் ஒரே ஒரு ஆசைதான் உள்ளது. அவன் (புதின் பெயரை குறிப்பிடாமல்) அழிந்து போகட்டும் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள்.

    ஆனால் நாம் கடவுளை நோக்கித் திரும்பும்போது, நிச்சயமாக, நாம் இன்னும் பெரிய ஒன்றைக் கேட்கிறோம். நாங்கள் உக்ரைனுக்காக அமைதியைக் கேட்கிறோம். அதற்காக நாங்கள் போராடுகிறோம், அதற்காகப் பிரார்த்திக்கிறோம், அது எங்களுக்கு உரித்தானது.

    இவ்வாறு ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

    • வரவிருக்கும் பேரழிவு குறித்து எச்சரிப்பதாக இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

    நம்மில் பலருக்கு உலகம் அழியப்போகிறது என்ற வார்த்தை 2004-ம் ஆண்டு முதல் கேட்டுக்கொண்டு வருகிறோம். அதாவது 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி ஏற்பட்ட சுனாமி பேரழிவுக்கு பிறகு இந்த வார்த்தையை ஒவ்வொரு வருடமும் கேட்டுக்கொண்டு, கடந்து கொண்டு வருகிறோம்.

    அதேபோல் மழை, வெள்ளம், நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களை ஒவ்வொரு ஆண்டும் கடந்து வந்து கொண்டு இருக்கிறோம். இதுதொடர்பாக பலர் கணித்தும் வருகின்றனர். அவை பெரும்பாலும் நடைபெறுவது இல்லை.

    இந்த நிலையில், தன்னைத்தானே தீர்க்கத்தரிசி என்று கூறிக்கொண்டு உலகம் அழியப்போவதாக சொன்னவர், தற்போது உலகம் அழிவதை கடவுள் தள்ளிப்போட்டுள்ளார் என்று கூறியுள்ளது இணையதத்தில் பேசு பொருளாகி உள்ளது.

    கானா நாட்டைச் சேர்ந்த 30 வயதான எபோ நோவா என்ற நபர் தன்னைத்தானே தீர்க்கத்தரிசி என்று கூறிக்கொள்கிறார். அவர் சாக்கு உடை அணிந்து கொண்டு மக்களுக்காக உண்ணாவிரதம், பிரார்த்தனை மேற்கொள்வதாக கூறிக்கொண்டு வரவிருக்கும் பேரழிவு குறித்து எச்சரிப்பதாக இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட வீடியோவில், 2025 டிசம்பர் 25-ந்தேதி முதல் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் உலகம் அழியப்போகிறது.

    உலகம் அழியும்போது மக்களைக் காப்பாற்ற கடவுளின் உத்தரவின் பேரில், பைபிளில் வருவது போல 8 பெரிய கப்பல்களை (பேழைகளை) கட்டி வருவதாக கூறினார். இவரது பேச்சைக் கேட்ட மக்கள் அதை நம்பி, பேழைகளைக் கட்டுவதற்கு பலர் தங்கள் உடைமைகளை விற்று பணத்தை அவருக்குக் கொடுத்துள்ளனர். மேலும் அந்த பேழையில் இடம் பிடிக்க அவரை தேடிச் செல்லவும் தொடங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் தான், தன்னை தீர்க்கத்தரிசி என்று கூறிய எபோ நபோ திடீரென தனது பேச்சை மாற்றிக்கொண்டுள்ளார். அதாவது, அவர் கடவுளிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ததால், அதனை ஏற்றுக்கொண்ட கடவுள் உலக அழிவை தற்காலிகமாக தள்ளிவைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். 

    • சீனாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி 114 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில், ஏற்றுமதி வெறும் 14.25 பில்லியன் டாலராக மட்டுமே உள்ளது.
    • மூலோபாய கூட்டாண்மை, பிராந்திய ஸ்திரத்தன்மை, உலகளாவிய தெற்கு போன்ற அலங்கார சொற்களுக்கு அப்பால் பார்த்தால்...

    ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் பிறகு இந்தியா - சீனா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.

    இந்த ஆண்டு அமைக்கப்பட்ட கல்வான் தாக்குதல் நினைவுச் சின்னம்

    2024 அக்டோபரில் ரஷியாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினர்.

     லடாக் எல்லையில் நிலவிய நான்கு ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வாக, ரோந்து பணிகளை மீண்டும் தொடங்குவது மற்றும் தத்தமது படைகளை தங்கள் எல்லைக்குள் மீண்டும் பின்வாங்க செய்வது உள்ளிட்டவை குறித்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் 2025-ல் செயல்படுத்தப்பட்டன.

    அதேநேரம் இந்த ஆண்டில் ஆகஸ்ட்டில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடி சென்றிருந்தார்.

    சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் அங்கு நடந்த சந்திப்பில் ஓரளவு உறுதியான சில முடிவுகள் எட்டப்பட்டன என்றே சொல்லலாம். 2018-க்குப் பிறகு பிரதமர் இந்த ஆண்டுதான் மீண்டும் சீனா சென்றிருந்தார்.

    இந்த பேச்சுவார்த்தையின் நேரடி விளைவாக மோதல் மற்றும் கொரோனாவால் 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தியா- சீனா நேரடி விமான சேவை கடந்த அக்டோபரில் மீண்டும் தொடங்கப்பட்டது. அக்டோபர் 26 அன்று இண்டிகோ நிறுவனம் கொல்கத்தா மற்றும் குவாங்சூ இடையே தனது சேவையைத் தொடங்கியது.

    மேலும் லிபுலேக் மற்றும் நாது லா போன்ற முக்கியமான கணவாய்கள் வழியாக எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.

    இந்தியா சீனா நெருங்குவதற்கு முக்கிய காரணம், அமெரிக்க அதிபர் இந்திய பொருட்கள் மீது விதித்த 50 சதவீத வரியே ஆகும்.

    டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கொள்கைகள் மற்றும் வரிக் கட்டுப்பாடுகள், ஆசியாவின் இரு பெரும் சக்திகளான இந்தியாவையும் சீனாவையும் தங்களுக்குள் வர்த்தகத்தை புதுப்பித்துக்கொள்ள செய்தது.

    இந்த சந்திப்புகள் மூலம் இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளும் முழுமையான நண்பர்களாக மாறவில்லை என்றாலும், பொருளாதாரத் தேவைகளுக்காகவும், அமெரிக்காவுக்கு எதிரான பிராந்திய ஒற்றுமைக்காகவும் முயற்சியாக அமைந்தது.

    ஆனால் இதுதவிர பெரிய அளவிலான முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. மாறாக 2024 இல் முடிவெடுக்கப்பட்டபடி தத்தமது படைகளை விலக்கிக் கொண்டாலும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) இன்னும் சில இடங்களில் பதற்றம் முழுமையாகத் தணியவில்லை.

    எல்லைப் பிரச்சனையானது தொடர்ந்து நீடித்து வருகிறது. லடாக்கில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாங்காங் ஏரியில் தங்கள் உள்ள பகுதியில் புதிய கட்டமைப்புகளை சீனா உருவாக்கி வருவதும் சாட்டிலைட் ஆதாரம் மூலம் தெரியவந்துள்ளது.

    எல்லையில் வான் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கும் சீனா:

    திபெத்தின் பாங்காங் ஏரியின் கிழக்குக் கரையில் வான் பாதுகாப்பு வளாகம் ஒன்றை சீனா கட்டி வருவது கடந்த அக்டோபரில் வெளியான செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்தது.

    2020இல் திபெத்தின் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி சீன வீரர்கள் தாக்குதல் நடத்தி 20 இந்திய வீரர்களை கொன்ற இடத்தில் இருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் இந்த சீன வான் பாதுகாப்பு வளாக கட்டுமானம் முழுவீச்சில் நடைபெறுவதை புகைப்படங்கள் காட்டுகின்றன.

    அருணாச்சல பிரதேச பெண்ணின் கசப்பான அனுபவம்:

    அதேநேரம் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை தங்களுடையது என்றும் சீனா வெளிப்படையாக தெரிவித்தும், வரைபடம் வெளியிட்டும், இந்திய பகுதிகளுக்கு சீன பெயர்களை சூட்டியும் வருகிறது. 2025 மே மாதம், சுமார் 27 இடங்களுக்குச் சீனா புதிய பெயர்களை அறிவித்ததை இந்தியா வன்மையாகக் கண்டித்தது. "பெயர்களை மாற்றுவதால் உண்மை மாறிவிடாது, அருணாச்சல் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி" என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்தது.

    ஆனால் இதன் உச்சமாக கடந்த மாதம் லண்டனில் இருந்து ஜப்பான் செல்ல இணைப்பு விமானம் ஏற சீனாவின் ஷாங்காய் விமான நிலயத்தில் காத்திருந்த இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த பெண்ணை சீன அதிகாரிகள் 18 மணிநேரம் தடுத்து வைத்தனர். அருணாசல பிரதேசம் சீனாவின் பகுதி என்பதால் அப்பெண்ணின் பாஸ்போர்ட் செல்லாதாம்.. இதில் சீன பாஸ்போர்ட்க்கு அப்ளை பண்ணுங்க என கூறி அப்பெண்ணை கிண்டல் வேறு செய்துள்ளனர் சீன அதிகாரிகள்.

    அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட அப்பெண், சீனாவில் உள்ள இந்திய தூதரக தலையீட்டின் பின் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதோடு நிற்கவில்லை சீனா.

    அருணாச்சலப் பிரதேசம் சீனாவிற்கு சொந்தமானது என சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பேட்டி வேறு கொடுத்து இந்த செயலுக்கு விளக்கம் அளித்த கொடுமை நிகழ்ந்தது.

    இந்தியா சார்பில் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இனியேனும் அருணாச்சல பிரதேச மக்களுக்கு இதுபோல ஏதும் சங்கடம் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என பாதிக்கப்பட்ட பெண் பிரதமர் மோடிக்கு வேறு கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார்.

    எல்லையில் நிலவும் இந்த இழுபறி நிலை, இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் ஆழமான நம்பிக்கை ஏற்படவில்லை என்பதையே காட்டுகிறது.

    சரி, பொருளாதார உறவு எப்படி?

    இந்த ஆண்டில் இந்தியா - சீனா இடையிலான வர்த்தகம் சுமார் 127.71 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கொஞ்சம் பொறுங்கள்.. இதில் இந்தியாவுக்கு ஒரு பெரிய சவால் உள்ளது.

    சீனாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி 114 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில், ஏற்றுமதி வெறும் 14.25 பில்லியன் டாலராக மட்டுமே உள்ளது. அதாவது, வர்த்தகப் பற்றாக்குறை சுமார் 99.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

    சீனாவிடமிருந்து மின்னணுப் பொருட்கள் மற்றும் உதிரிப்பாகங்களை இந்தியா அதிகம் நம்பியிருப்பது இந்தத் தரவுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    ஒரு பக்கம் பிரதமர் மோடியிடம் ஜி ஜிங் பின் நட்பு முகம் காட்டும் வேலையில் மறுபுறம் சீனா தங்கள் நலன்களை முன்னிறுத்தி அதன் வேலையை தொடர்ந்து வருகிறது.

    எனவே மூலோபாய கூட்டாண்மை, பிராந்திய ஸ்திரத்தன்மை, உலகளாவிய தெற்கு போன்ற அலங்கார சொற்களுக்கு அப்பால் பார்த்தால், 2025-ல் இந்தியா-சீனா உறவு சந்திப்புகளில் இணக்கமாக தோன்றினாலும் செயல்கள் அதற்கு நேர்மாறாகவே இருந்து வருகிறது. 

    • தைவானின் தென்கிழக்கே தைதுங் கடலோர கவுன்டி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், கடைகள் குலுங்கின.

    தைபே:

    தைவான் நாட்டின் தென்கிழக்கே தைதுங் கடலோர கவுன்டி பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள், கடைகள் குலுங்கின. கடைகள் மற்றும் வணிக வளாகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் குலுங்கி, தரையில் விழுந்து சிதறிக் கிடந்தன.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

    • சுவீடனைச் சேர்ந்த கிரெட்டா தன்பெர்க் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்காக அறியப்படுபவர்.
    • பாலஸ்தீன நடவடிக்கையை ஆதரிக்கும் பதாகையை கைகளில் வைத்திருந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாலஸ்தீன ஆக்சன் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக கூறி அந்நாட்டு அரசு தடை செய்தது.

    இதற்கிடையே, நாடு முழுவதும் நடந்த முந்தைய போராட்டங்கள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் விசாரணைக்காக காத்திருக்கும் நிலையில், ஜாமீன் இன்றி தடுத்து வைக்கப்பட்டதைக் கண்டித்து பாலஸ்தீன ஆக்சன் அமைப்பைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் 52 நாட்களாக பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பாலஸ்தீன நடவடிக்கையை ஆதரிக்கும் பதாகையை கைகளில் வைத்திருந்ததற்காக கிரெட்டா தன்பெர்க் லண்டனில் கைது செய்யப்பட்டார்.

    'பிரிசனர்ஸ் ஃபார் பாலஸ்தீன்' என்ற போராட்டக் குழுவானது கிரெட்டா பதாகை வைத்திருக்கும் புகைப்படத்தை ஊடகங்களில் பகிர்ந்தது.

    சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிரெட்டா தன்பெர்க் ஒரு இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர். காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்காக உலகம் முழுவதும் அறியப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் பிராந்தியங்களை விட்டுக்கொடுக்க ஜெலன்ஸ்கி தொடர்ந்து மறுத்து வருகிறார்.
    • மற்ற முக்கிய பிரச்சினைகளையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.

    ரஷியா- உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கியது. இந்த போர் தொடங்கி 4 வருடங்கள் முடிய உள்ளன. இருந்தபோதிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க அதிகாரிகள் ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    உக்ரைனின் சில பகுதிகளை தங்களுக்கு தர வேண்டும் என ரஷிய அதிபர் உறுதியாக உள்ளார். அதேவேளையில் தங்களது நிலப்பரப்பை விட்டுக்கொடுக்க மாட்டோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி வருகிறார்.

    இதனைத் தவிர்த்து பல்வேறு விசயங்கள் குறித்து உக்ரைனுடன் அமெரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் இரு நாடுகளுக்கும் இடையில் பல பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    20 அம்சங்கள் கொண்டு திட்டத்தை அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் உருவாக்கியுள்ளார். இதுகுறித்து மாரத்தான் பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. புளோரிடாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு உக்ரைன் அதிபர், ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். ரஷியா இது குறித்து இன்னும் பதில் ஏதும் அளிக்கவில்லை.

    டான்பாசில் உள்ள மீதமுள்ள கைப்பற்றப்படாத பகுதிகளை உக்ரைன் விட்டுத்தர வேண்டும் என்பது ரஷியாவின் அதிகப்பட்ச கோரிக்கையாகும். இதை உக்ரைன் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. லுகான்ஸ்க் பிராந்தியத்தின் பெரும் பகுதியையும், டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் 70 சதவீத பகுதியையும் ரஷியா ஆக்கிரமித்துள்ளது.

    ×