என் மலர்
உலகம்
- ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியது.
- நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்கியது.
பெய்ரூட்:
ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை நடத்தி வந்தது.
நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்கியதை தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் நேற்று லெபனானில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது. அப்போது ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இஸ்ரேல் வீரர்களுக்கும் இடையே கடும் சண்டை மூண்டது.
லெபனானில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்ஸ்-இஸ்ரேல் எல்லையோரத்தில் ஐ.நா. கண்காணிப்பில் உள்ள நீலக்கோடு எல்லையை இஸ்ரேல் மீறி உள்ளே வந்திருப்பதாக லெபனான் ராணுவம் உறுதி செய்துள்ளது. இதனிடையே தெற்கு லெபனானில் உள்ள 50 கிராமங்களை சேர்ந்த மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது.
இந்நிலையில் தெற்கு லெபனானில் இருவேறு இடங்களில் நடந்த மோதலில் மூத்த ராணுவ அதிகாரி உள்பட 8 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.
தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையின்போது 22 வயதான இளம் ராணுவ அதிகாரி உள்பட 8 வீரர்களை இழந்ததாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
- இஸ்ரேலின் தெற்கு டெல் அவிவ் நகரில் திடீரென துப்பாக்கிச் சூடு நடந்தது.
- இதில் 7 பேர் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர்.
டெல் அவிவ்:
இஸ்ரேலின் தெற்கு டெல் அவிவ் நகரில் உள்ள யாபா பகுதியில் இரு மர்ம நபர்கள் திடீரென பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரு மர்ம நபர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர். அவர்கள் எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில். இஸ்ரேலில் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு ஹமாஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
- இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது
- அதிபர் ஜோ பைடன், அமெரிக்கா இஸ்ரேலுக்கு முழு ஆதரவாக உள்ளது என்றார்.
வாஷிங்டன்:
இஸ்ரேல் நாட்டின்மீது ஈரான் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதுப்பற்றி தெரியவந்ததும் உடனடியாக இஸ்ரேலுக்கு உதவும் வகையில் ஈரானின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும்படி அமெரிக்க ராணுவத்துக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டார்.
அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அதிபர் ஜோ பைடன், அமெரிக்கா இஸ்ரேலுக்கு முழு ஆதரவாக உள்ளது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இஸ்ரேலின் பாதுகாப்புக்கான அமெரிக்காவின் இரும்புக் கவச உறுதிப்பாட்டை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பாக அதிபர் பைடன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளசெய்தியில், இன்று காலை இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதலைப் பற்றி விவாதிக்கவும், புதிய தடைகள் உள்பட இந்தத் தாக்குதலுக்கான பதிலை ஒருங்கிணைக்கவும் ஜி7 தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தேன். இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் இரும்புக் கவச உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினேன் என பதிவிட்டுள்ளார்.
- இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை உலக நாடுகள் கண்டித்தன.
- இதைச் செய்யாமல் மவுனம் காப்பவருக்கு இஸ்ரேலில் கால் வைக்க தகுதி இல்லை.
ஜெருசலேம்:
இஸ்ரேல், காசா இடையிலான போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்களை அழிக்கும் வகையில் இஸ்ரேல் தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் மற்றும் முக்கியத் தளபதி கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுப்போம் என ஈரான் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, நேற்று இரவு இஸ்ரேல் மீது ஈரான் 200-க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசியது. ஹைபர்சோனிக் வகை ஏவுகணை மூலம் இந்த தாக்குதலை ஈரான் நடத்தியதால் அங்கு போர்ப்பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார். இதுதொடர்பாகஅவர் கூறியதாவது:
இஸ்ரேல் மண்ணில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் காலடி எடுத்து வைக்க தகுதியற்றவர். இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை உலக நாடுகள் கண்டித்தன. இதனை செய்யாமல் மவுனம் காக்கும் யாருக்கும் இஸ்ரேல் மண்ணில் கால் வைக்க தகுதி கிடையாது. ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி மற்றும் தற்போது ஈரானின் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நபர் இஸ்ரேல் வரலாற்றின் ஒரு கறையாக நினைவு கூரப்படுவார் என தெரிவித்தார்.
- கடுமையான போரின் மத்தியில் நாங்கள் இருக்கிறோம்.
- இஸ்ரேலின் நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிப்போம்.
பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு மத்தியில் ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றிரவு முதல் 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவியுள்ளது.
அவற்றை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்து வரும் சூழலில் மக்கள் பாதுகாப்பு பங்கர்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், "ஈரான் போர்க்குணமிக்க நாடு அல்ல, ஆனால் அது எந்த அச்சுறுத்தலுக்கும் எதிராக உறுதியாக நிற்கிறது என்பதை நேதன்யாகுவுக்கு தெரியப்படுத்துங்கள். இது எங்களது சக்தியின் ஒரு பகுதி மட்டும்தான். ஈரானுடன் மோதலில் ஈடுபட வேண்டாம்," என்று கூறி இஸ்ரேலுக்கு ஈரான் அதிபர் பகிரங்க எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது எக்ஸ் தள பதிவில், "இன்று லெபனானில் வீழ்ந்த எமது மாவீரர்களின் குடும்பங்களுக்கு எனது இதயத்தின் ஆழத்திலிருந்து என் இரங்கலைத் தெரிவிக்க விரும்புகிறேன். கடவுள் அவர்களின் இரத்தத்தை ஆசீர்வதிக்கட்டும். நம்மை அழிக்க முயற்சிக்கும், ஈரானின் தீய நிலைக்கோட்டிற்கு எதிராக கடுமையான போரின் மத்தியில் நாங்கள் இருக்கிறோம்."
"இது நடக்காது - ஏனென்றால் நாம் ஒன்றாக நிற்போம், கடவுளின் உதவியால் - நாங்கள் ஒன்றாக வெல்வோம். நாங்கள் தெற்கில் கடத்தப்பட்டவர்களையும், வடக்கில் உள்ள எங்கள் குடியிருப்பாளர்களையும் திருப்பித் தருவோம். இஸ்ரேலின் நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிப்போம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- குண்டுவெடிப்பு டாக்ஸிவேயில் 7 மீட்டர் அகலமும் 1 மீட்டர் ஆழமும் கொண்ட பள்ளத்தை உருவாக்கியது.
- குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
தெற்கு ஜப்பானில் இருக்கும் கியூஷூ தீவில் மியாஸாக்கி விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலைய முனையத்திற்குக் குறைந்தது 100 மீட்டர் தொலைவில் திடீரென குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின்போது வீசப்பட்ட அமெரிக்க வெடிகுண்டு வெடித்ததால் விமான நிலையம் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதுகுறித் ஜப்பானின் போக்குவரத்து அமைச்சகத்தின்படி, வெடிகுண்டு அகற்றும் குழு, போர்க்காலத்தின்போது வான்வழித் தாக்குதலில் நிலத்தின் அடியில் புதைந்த அமெரிக்க வெடிகுண்டால் வெடித்தது என்பதை உறுதிப்படுத்தியது.
இந்த குண்டுவெடிப்பு டாக்ஸிவேயில் 7 மீட்டர் அகலமும் 1 மீட்டர் ஆழமும் கொண்ட பள்ளத்தை உருவாக்கியது, இதனால் ஓடுபாதையை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும் வெடிப்புகள் ஏற்படும் அபாயம் இல்லை என்றாலும், 87 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
பள்ளத்தை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது, குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே, வெடிக்காத குண்டுகள் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கின்றன. போர் முடிவடைந்து 79 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட போதிலும், மியாசாகி விமான நிலையத்தில் வெடிக்காத பல குண்டுகள் இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் மட்டும், 37.5 டன் எடையுள்ள 2,348 குண்டுகளை தற்காப்புப் படைகள் அப்புறப்படுத்தியுள்ளன.
முதலில் இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய கடற்படைத் தளமாக இருந்த மியாசாகி விமான நிலையம் பின்னர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டது. மியாசாகி மாகாணத்தில் அமைந்துள்ள இது உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு சேவை செய்யும் பிராந்திய விமான நிலையமாகும்.
இது ஒரு 2,500 மீட்டர் ஓடுபாதை மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச செயல்பாடுகளைக் கையாளும் ஒற்றை முனையத்தைக் கொண்டுள்ளது.
- ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- இது எங்களது சக்தியின் ஒரு பகுதி மட்டும்தான்.
பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு மத்தியில் ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றிரவு முதல் 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவியுள்ளது.
அவற்றை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்து வரும் சூழலில் மக்கள் பாதுகாப்பு பங்கர்களில் தஞ்சம் அடைத்துள்ளனர். இந்த நிலையில், இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "நியாயமான உரிமைகளின் அடிப்படையிலும், ஈரான் மற்றும் பிராந்தியத்திற்கான அமைதி மற்றும் பாதுகாப்பின் நோக்கத்துடன், சியோனிச ஆட்சியின் ஆக்கிரமிப்புக்கு ஒரு தீர்க்கமான பதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஈரானின் நலன்களையும் குடிமக்களையும் பாதுகாக்கும் வகையில் தான் இருந்தது."
"ஈரான் போர்க்குணமிக்க நாடு அல்ல, ஆனால் அது எந்த அச்சுறுத்தலுக்கும் எதிராக உறுதியாக நிற்கிறது என்பதை நேதன்யாகுவுக்கு தெரியப்படுத்துங்கள். இது எங்களது சக்தியின் ஒரு பகுதி மட்டும்தான். ஈரானுடன் மோதலில் ஈடுபட வேண்டாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- அணு ஆயுத திட்டம் குறித்த விவரங்களை சேகரிக்கவே இந்த முயற்சி.
- மொசாட் உளவாளிகள் ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
ஈரான் புலனாய்வு அமைப்புகளில் வெளிநாட்டு உளவாளிகள் ஊடுருவியதாக ஈரான் முன்னாள் அதிபர் மகமுத் அகமதிநெஜத் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான நேர்காணலில் அவர், "ஈரான் ரகசிய அமைப்பின் தலைவர் உண்மையில் இஸ்ரேலின் தேசிய புலனாய்வு முகமையான மொசாட்-இன் ரகசிய உளவாளி," என்று தெரிவித்தார்.
இஸ்ரேல் நடவடிக்கைகளை உளவு பார்க்க நிமயகமிக்கப்பட்ட ஈரான் பாதுகாப்பு அமைப்பின் தலைவரை மொசாட் பயன்படுத்திக் கொண்டது என்று ஈரான் முன்னாள் அதிபர் மகமுத் தெரிவித்தார். இதன் மூலம் ஈரானை சேர்ந்த கிட்டத்தட்ட 20 உளவாளிகள் இஸ்ரேலுக்கு மிக முக்கிய தகவல்களை வழங்கியுள்ளனர். ஈரானின் அணு ஆயுத திட்டம் குறித்த விவரங்களை சேகரிக்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரானை இஸ்ரேல் உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது முதல் முறையில்லை. முன்னதாக 2018 ஆம் ஆண்டு இஸ்ரேல் பிதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஈரானின் மிக முக்கிய அணு ஆயுத திட்டம் குறித்த விவரங்களை இஸ்ரேல் உளவாளிகள் சேகரித்ததாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஆவணங்களில், மொசாட் உளவாளிகள் தெஹ்ரானி வேர்ஹவுசுக்குள் நுழைந்து கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் அதிகமான ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இந்த நடவடிக்கையில், கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட உளவாளிகள் சுமார் ஆறு மணி நேரம் ஈடுபட்டனர் என்று கூறப்பட்டது. இந்த ஆவணங்களால் ஈரானின் அணு ஆயுத திட்டம் உலக அரசியலில் புயலை கிளப்பியது.
- விலங்குகள் "H5N1" வகை A வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளன.
- எச்5என்1 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் பாலூட்டிகளிடையே பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறுகிறது.
தெற்கு வியட்நாமில் உள்ள உயிரியல் பூங்காவில் நாற்பத்தேழு புலிகள், மூன்று சிங்கங்கள் மற்றும் ஒரு சிறுத்தை ஆகியவை எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாங் அன் மாகாணத்தில் உள்ள தனியார் மை குயுஹ்ன் சஃபாரி பூங்கா மற்றும் ஹோ சி மின் நகருக்கு அருகில் உள்ள டோங் நாயில் உள்ள வியோன் சோய் மிருகக்காட்சிசாலையில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த மரணங்கள் நிகழ்ந்ததாக அதிகாரப்பூர்வ வியட்நாம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, விலங்கு சுகாதார நோயறிதலுக்கான தேசிய மையத்தின் சோதனை முடிவுகளின்படி, விலங்குகள் "H5N1" வகை A வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளன.
இருப்பினும், விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த எந்த மிருகக்காட்சிசாலை ஊழியர்களுக்கும் சுவாச அறிகுறிகள் எதுவும் இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு 2022 முதல், எச்5என்1 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் பாலூட்டிகளிடையே பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறுகிறது.
எச்5என்1 நோய்த்தொற்றுகள் மனிதர்களுக்கு லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம், மேலும் சில சமயங்களில் மரணம் கூட ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
- ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் அசெம்பில் செய்யப்பட இருந்தன.
- இந்த தேவையில் 15 சதவீதத்தை பூர்த்தி செய்யவே போராடுகிறது
தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள டாடா உற்பத்தி ஆலையில், சில தினங்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, அந்த ஆலையில் உற்பத்தி பணிகள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில் வைத்து தான் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் அசெம்பில் செய்யப்பட இருந்தன.
இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் சம்பந்தப்பட்ட பாகங்களை சீனா அல்லது வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் ஆலையில் இருந்து ஏற்பாடு செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்து ஏற்பட்ட ஆலையில் டாடா நிறுவனம் ஐபோனின் பேக் பேனல்கள் மற்றும் இதர பாகங்களை உற்பத்தி செய்து ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு வழங்க இருந்தது.
ஹாங்காங்கை சேர்ந்த கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் நிறுவனம் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறும் போது, "அக்டோபர் இறுதியில் இருந்து நவம்பர் மாத தொடக்கம் வரையிலான காலக்கட்டம் இந்திய பண்டிகைக் காலம் என்பதால் ஐபோன் 14 மற்றும் 15 மாடல்களின் உள்ளூர் விற்பனை 1.5 மில்லியன் யூனிட்கள் என்று கணிக்கப்படுகிறது. எனினும், ஆப்பிள் இந்த தேவையில் 15 சதவீதத்தை பூர்த்தி செய்யவே போராடுகிறது," என தெரிவித்துள்ளது.
உள்ளூர் விற்பனையைத் தவிர, இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் ஐபோன்களை ஏற்றுமதி செய்கிறது. மேலும் சில பகுதிகள் மொத்தமாக $250 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ளவை என கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து டாடா நிறுவனம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
- அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் ஆளும் ஜனநாயக கட்சிக்கு இந்த போர் சூழல் தலைவலியாக மாறி உள்ளது.
- சில நேரம், என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்கு நீங்கள் அவர்களை அப்படியே [சண்டைபோட] விட்டுவிட வேண்டும்.
பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு மத்தியில் ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு முதல் 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவியுள்ளது. அவற்றை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அளித்து வரும் சூழலில் மக்கள் பாதுகாப்பு பங்கர்களில் தஞ்சம் அடைத்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் மீதான தாக்குதலை முறியடிக்கும்படி அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் பைடன் தலைமையிலான ஆளும் ஜனநாயக கட்சிக்கு இந்த போர் சூழல் தலைவலியாக மாறி உள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல்- ஈரான் சண்டை குறித்து குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று பேசிய டிரம்ப், இது மிகவும் மோசமானதாக உள்ளது. ஆனால் இது நடந்து தான் ஆக வேண்டும்.

பள்ளி வளாகத்தில் இரண்டு குழந்தைகள் சண்டைபோட்டுக் கொள்வதுபோல இது உள்ளது. சில நேரம், என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்கு நீங்கள் அவர்களை அப்படியே [சண்டைபோட] விட்டுவிட வேண்டும். ஆனால் நிச்சயம் இது மோசமான போர். இது எங்கு சென்று முடியும்? அவர்கள் [ஈரான்] 200 ராக்கெட்டுகளை ஏவியுள்ளனர், இது நிச்சயம் நடக்கக்கூடாத ஒன்று, எனவே மத்திய கிழக்கில் நாம் [அமெரிக்கா] தலையிட்டாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- கணவர் தன்னுடன் அடிக்கடி சண்டைபோடுகிறார் என கூறி சென் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
- 'எனது தவறின் விளைவுகளை நான் புரிந்துகொண்டேன். இனி இந்த தவறை ஒருபோதும் செய்யமாட்டேன்'
திருமணங்களின் எண்ணிக்கையை விட விவகாரத்துக்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் சீனாவில் நடந்த சம்பவம் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சீனாவை சேர்ந்த லீ [Li] மற்றும் சென் [Chen], ஆகிய இருவர் 20 வருடங்களாக கணவன் மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது கணவர் தன்னுடன் அடிக்கடி சண்டைபோடுகிறார் என கூறி சென் சமீபத்தில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
ஆனால் கணவர் லீ மனைவியை பிரிய துளியும் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்டது சிறிய பிரச்சனைதான் என்றும் அவர்கள் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்றும் அறிவுரை கூறி நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்தது. ஆனால் தனக்கு கட்டாயம் விவாகரத்து வேண்டும் என்று மனைவி சென் மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இதுதொடர்பான விசாரணைக்கு கணவன் மனைவி ஆகிய இருவரும் நீதிமன்றத்துக்கு வந்த நிலையில், விசாரணையை நடக்கவிடாமல் செய்ய தனது மனைவி கணவர் துண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு நீதிமன்ற கட்டடத்தை விட்டு வெளியே ஓட முயற்சித்துள்ளார்.
மனைவியை கையில் ஏந்திக்கொண்டு சத்தமாக கூச்சலிட்டபடி சென் நீதிமன்றத்தை விட்டு ஓட முயற்சித்ததை பார்த்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். கணவனின் காதலை பார்த்து வியந்த நீதிபதி, இனிமேல் மனைவியிடம் சண்டை போட மாட்டேன் என்று மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுக்க உத்தரவிட்டுள்ளனர். அதனபடி, 'எனது தவறின் விளைவுகளை நான் புரிந்துகொண்டேன். இனி இந்த தவறை ஒருபோதும் செய்யமாட்டேன்' என்று கணவர் லீ எழுதிக்கொடுத்துள்ளார்.






