என் மலர்tooltip icon

    உலகம்

    • கூண்டில் உள்ள பறவைகளுக்கு உணவளித்து, வீட்டை துடைத்து, சமையல் செய்து வைத்தார்
    • டாமியன் சிறுவயது முதலே தங்க வீடில்லாமல் பல கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளார்

    பிரிட்டனில் திருடப் போன வீட்டில் கூட்டிப் பெருக்கி, சாப்பாடு சமைத்து, துணிதுவைத்து காயப்போட்டுவிட்டு தப்பிய பலே திருடன் பற்றிய உண்மை வெளிவந்துள்ளது. பிரிட்டனில் கார்டிப் [Cardiff] நகரில் தனியாக வசித்து வரும் பெண் ஒருவரின் வீட்டில் திருடுவதற்காக டாமியன் வோஜ்னிலோவிச் [Damian Wojnilowicz] என்ற 36 வயது திருடன் உள்ளே நுழைந்துள்ளான்.

     

    பெண் வீட்டில் இல்லாத சமயமாகப் பார்த்து நுழைந்த டாமியன், வீட்டில் சேர்ந்த குப்பைகளை அப்புறப்படுத்தி, சமையலறை, கழிவறையில் உள்ள பொருட்களைச் சீராக அடுக்கி வைத்து, கடையில் வாங்கி வைத்திருந்த பலசரக்கு பொருட்களை பிரிட்ஜில் அடுக்கி வைத்து , கூண்டில் உள்ள பறவைகளுக்கு உணவளித்து, வீட்டை துடைத்து, சமையல் செய்து, துணிகளைத் துவைத்து அதைக் காயப்போட்டு விட்டுச் சென்றுள்ளார்.

     

    வீட்டை விட்டு வரும்போது, 'டோன்ட் வொரி, பி ஹாப்பி, நன்றாக சாப்பிடுங்கள்' என்று எழுதி வைத்துவிட்டும் வந்துள்ளார். வீட்டில் வசித்து வந்த அந்தப்பெண் திரும்பிவைத்தும் இதைப் பார்த்து அதிர்ந்துபோனார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தபின், திருடனின் வினோத செய்கையால் பயந்து தனது வீட்டில் வசிக்காமல் தோழி வீட்டில் தங்கியுள்ளார்.

    இந்த சம்பவம் ஜூலை 16 ஆம் தேதி நடந்த நிலையில் ஒருவாரம் கழித்து ஜூலை 26 ஆம் தேதி மற்றொரு வீட்டில் திருடும்போது டாமியன் பிடிபட்டுள்ளார். டாமியன் சிறுவயது முதலே தங்க வீடில்லாமல் பல கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளார் என்று அவரது வக்கீல் தெரிவித்தார். இதுதொடர்பாக தற்போது நீதிமன்றத்தில் அவர் மீது விசாரணை நடந்து வரும் வேலையில் இந்த விசித்திர திருடனின் கதை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

    • இம்ரான்கானை விடுவிக்கக் கோரி அவரது கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசினர்.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு, ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான்கானை விடுவிக்கக் கோரி அவரது கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே தலைநகர் இஸ்லாமாபாத்தில் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் திரண்டு பேரணி நடத்தினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசினர்.

    மோதல் காரணமாக இஸ்லாமாபாத்தில் இணைய தள சேவை முடக்கப்பட்டது. இதற்கிடையே இம்ரான்கான தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மக்கள் அனைவரையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • லேண்டிங் கியரில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

    அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் ஹாரி ரெயிட் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கிய விமானம் ஒன்றில் லேண்டிங் கியரில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ321-200 ரக விமானம் 1326 சான் டியாகோவில் இருந்து லாஸ் வேகாஸ் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. திடீரென விமானிகளில் ஒருவர் விமானத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை கவனித்து அவசர நிலையை அறிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து விமானத்தில் தீப் பிடித்தது. எனினும், விமானிகள் சாமர்த்தியமாக செயல்பட்டனர். விமானத்தில் தீ அணைக்கப்பட்ட நிலையில், அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.



    • லெபனானுக்குள் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.
    • இஸ்ரேல் படைகளுக்கும், ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்கும் சண்டை நடந்து வருகிறது.

    காசா மீதான போரை தொடர்ந்து லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

    லெபனான் தலைநகர் பெய்ரூட் புறநகர் பகுதிகள், எல்லையில் உள்ள தெற்கு லெபனானில் தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருகிறது. மேலும் லெபனானுக்குள் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. இதில் இஸ்ரேல் படைகளுக்கும், ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்கும் சண்டை நடந்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதலால் லெபனானில் சுமார் 12 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

    இந்த நிலையில் லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் விரிவுப்படுத்தியுள்ளது. அதன்படி பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளை குறிவைத்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. மேலும் லெபனானின் வடக்கு பகுதியில் முதல் முறையாக தாக்குதல் நடத்தியது. வடக்கு பெடாவியில் உள்ள அகதிகள் முகாம் மீது குண்டுகள் வீசப்பட்டன.

    இதேபோல் லெபனானின் கிழக்கு பெக்கா பள்ளத்தாக்கிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. லெபனானின் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது வடக்கு பகுதியிலும் இஸ்ரேலின் தாக்குதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    • நூற்றுக்கணக்கான வாக்கி டாக்கிகள் வெடித்தன.
    • ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    துபாய்:

    லெபனானில் கடந்த மாதம் 17-ந் தேதி ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த நூற்றுக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்தன. அதற்கு அடுத்த நாளே நூற்றுக்கணக்கான வாக்கி டாக்கிகள் வெடித்தன. இந்த 2 சம்பவங்களிலும் 37 பேர் பலியாகினர்.

    இந்த நிலையில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை எடுத்து செல்ல அந்த நிறுவனம் தடைவிதித்துள்ளது.

    இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "துபையிலிருந்து அல்லது துபை வழியாக செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளைத் தங்களுடன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • படைகளை இஸ்ரேல் உச்சக்கட்ட தயார் நிலையில் வைத்திருக்கிறது.
    • இந்த நாளை எதிர்பார்த்து நாங்கள் கூடுதல் படைகளுடன் தயாராக இருக்கிறோம்.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கர தாக்குதலின் முதலாம் ஆண்டு நிறைவை ஒட்டி, இஸ்ரேல் தனது படைகளை உஷார்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தயாராகி வருதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ஒருபக்கம் தாக்குதல் மறுப்பக்கம் தனது படைகளை இஸ்ரேல் உச்சக்கட்ட தயார் நிலையில் வைத்திருக்கிறது.

    நாளை (திங்கள் கிழமையின்) தாக்குதலின் முதலாம் ஆண்டு நிறைவை ஒட்டி, இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி பேசும் போது "இந்த நாளை எதிர்பார்த்து நாங்கள் கூடுதல் படைகளுடன் தயாராக இருக்கிறோம். எல்லையில் தாக்குதல்கள் இருக்கலாம்," என்று தெரிவித்தார்.

    கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீனிய குழு சார்பில் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 1,205 பேர் கொல்லப்பட்டன. இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள், சிறைபிடிக்கப்பட்ட பிணைக்கைதிகள் அடங்குவர்.

    கொடூர தாக்குதல் நடந்த ஒரு வருடம் கழித்து, காசாவில் போர் குறைந்த வேகத்தில் தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் தனது கவனத்தை வடக்கு லெபனான் பக்கம் திருப்பியுள்ளது. அங்கு இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர் நடைபெற்று வருகிறது.

    • படுகாயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
    • நிலச்சரிவில் மேலும் பலர் மண்ணில் புதையுண்டதாக கூறப்படுகிறது.

    ஜப்லானிகா:

    போஸ்னியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஜப்லானிகா, கொன்ஜிக் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.

    அப்போது அங்குள்ள ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே அந்த கிராமங்களில் சிக்கிக் கொண்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து ஜப்லானிகா நகரில் உள்ள ஒரு கல்குவாரியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் அங்கிருந்த பல வீடுகள் மண்ணில் புதையுண்டன.

    அப்போது நள்ளிரவு நேரம் என்பதால் தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் இந்த இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து பேரிடர் மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் அங்கு விரைந்த மீட்பு படையினர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் துரிதமாக இறங்கினர். எனினும் இந்த நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலச்சரிவில் மேலும் பலர் மண்ணில் புதையுண்டதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    • இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரான்ஸ் நிறுத்தி உள்ளது.
    • மற்ற நாடுகளும் ஆயுத விநியோகத்தை நிறுத்தவேண்டும் என்றார்.

    டெல் அவிவ்:

    பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி ஜீன் நோயல் பாரட் 4 நாள் அரசுமுறை பயணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ளார். நாளை அவர் இஸ்ரேல் சென்று தனது பயணத்தை முடிக்க உள்ளார்.

    இதற்கிடையே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறுகையில், இஸ்ரேல் காசாமீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அரசியல் ரீதியாக இதற்கு தீர்வு காண்பதற்காக இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தி உள்ளோம். போரை நிறுத்த மற்ற நாடுகளும் இதனை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு பதில் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், அதிபர் மேக்ரானும், மற்ற மேற்கத்திய தலைவர்களும் தற்போது இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதத் தடைக்கு அழைப்பு விடுக்கின்றனர். ஈரான் அதன் பினாமிகள் மீது ஆயுதத் தடையை விதிக்கிறதா? நிச்சயமாக இல்லை.

    பயங்கரவாதத்தின் இந்த அச்சு ஒன்றாக நிற்கிறது. ஆனால் இந்த பயங்கரவாத அச்சை எதிர்க்கும் நாடுகள் இஸ்ரேல்மீது ஆயுதத் தடை விதிக்கவேண்டும். என்ன அவமானம்? அவர்களின் ஆதரவு இருந்தாலும் சரி, அல்லது இல்லாவிட்டாலும் சரி, இஸ்ரேல் வெற்றி பெறும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.

    • 9 வயது சிறுமி முதல் 44 வயது பெண் வரை என பல பெண்களை பலாத்காரம் செய்துள்ளான்.
    • பள்ளி மாணவிகள் பள்ளிக்குச் செல்லும்போதும் அவர்களை பின்தொடர்ந்து, கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

    தென்னாப்பிரிக்காவில் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர குற்றவாளிக்கு 42 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    கோசிநதி பகாதி என்ற நபர் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு கிழக்கே உள்ள எகுர்ஹுலேனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 2012 முதல் 2021க்கு இடைப்பட்ட 9 ஆண்டுகளில் 9 வயது சிறுமி முதல் 44 வயது பெண் வரை என 90 பாலியல் பலாத்கார சம்பவங்களில் இவன் ஈடுபட்டுள்ளான்.

    பகாதியால் (Nkosinathi Phakathi) பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக்குழந்தைகள் என்று தென்னாப்பிரிக்காவின் தேசிய வழக்கு ஆணையம் (NPA) தெரிவித்துள்ளது.

    பெண்கள் வேலைக்கும் போகும் போதும் பள்ளி மாணவிகள் பள்ளிக்குச் செல்லும்போதும் அவர்களை பின்தொடர்ந்து, கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். சில பெண்களை அவர்களின் சொந்த வீடுகளுக்கே சென்று எலக்ட்ரீஷியன் (Electrician) போல் நடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

    கடந்த 2021-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டபோது, காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் பகாதி தனது காலை இழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹமாஸ் படைப்பிரிவு அதிகாரி மற்றும் அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
    • இஸ்ரேல்- ஹமாஸ் சண்டைக்குப் பிறகு லெபனானில் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

    காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் லெபனான் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகம் மீது நடத்திய தாக்குதலில் அதன் தலைவர் கொல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியது.

    இருந்தபோதிலும் லெபனான் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையல் இன்று காலை வடக்கு லெபனானில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஹமாஸ் அதிகாரி சயீத் அதல்லா அலி கொல்லப்பட்டார். அத்துடன் அவரது குடும்பமும் இந்த வான்தாக்குதலில் கொலை செய்யப்பட்டுள்ளது.

    சிரியாவுடன் லெபனானை இணைக்கும் மிகப்பெரிய சாலையை இஸ்ரேல் ராணுவம் துண்டித்துள்ள நிலையில் தற்போது இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

    கடந்த செவ்வாய்க்கிழமை லெபனான் மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதலை நடத்த தொடங்கியது தெற்கு லெபனானில் நடைபெற்ற சண்டையில் 9 வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல்- ஹமாஸ் சண்டை தொடங்கியதில் இருந்து லெபனானில் இதுவரை சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். செப்டம்பர் 23-ந்தேதி அதிகமானோர் உயிரிழந்ததாக லெபனான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    சயீத் அதல்லா அலி ஹமாஸ் ராணுவ பிரிவான குவாசம் படைப்பிரிவின் அதிகாரமாக இருந்தார். அவரது மனைவி ஷாய்மா அசாம், அவரது இரண்டு மகள்கள் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்தப்பட்ட பெத்தாவி முகாம் லெபனானின் வடக்கு நகரான திரிபோலி அருகில் உள்ளது.

    • தடையை நீக்க வேண்டுமானால், 5.2 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
    • அபாரதத் தொகை செலுத்தியுள்ள எலான் மஸ்க் மாபெரும் தவறு ஒன்றை செய்துள்ளார்.

    சமீபத்தில் பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க். அலுவலகம் மூடப்பட்டாலும் பிரேசிலில் எக்ஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

    பிரேசில் தேர்தலின்போது எக்ஸ் தளத்தில் முடக்கப்பட்டிருந்த பல்வேறு கணக்குகள் அனுமதியின்றி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாகவும் எக்ஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டு இருந்துவந்த நிலையில் கட்டுப்பாடுகள் இன்றி எக்ஸ் தளம் செயல்பட்டு வருவதாகவும் பிரேசிலில் எக்ஸ் தளத்திற்கான பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்றும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஆனால் இதற்கு மஸ்க் மறுப்பு தெரிவித்த நிலையில் பிரேசிலில் எக்ஸ் தளத்துக்குத் தடைவிதித்து நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ் உத்தரவிட்டார். மேலும், இந்த தடையை நீக்க வேண்டுமானால், 5.2 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

     

    இந்நிலையில் அந்த உத்தரவுப்படி தற்போது அபாரதத் தொகை செலுத்தியுள்ள எலான் மஸ்க் மாபெரும் தவறு ஒன்றை செய்துள்ளார். அதாவது, தவறான வங்கிக்கணக்குக்கு அந்த அபராத தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பிரேசிலில் எக்ஸ் தளத்தின் மீதான தடையை நீக்குவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    எக்ஸ் தளம் அபார பணத்தைத் தவறாக அனுப்பியதை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ், மீண்டும் அந்த பணத்தை எக்ஸ் தளத்தின் கணக்கிற்குத் திருப்பி செலுத்த உத்தரவிட்டுள்ளார்.

    • இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் எல்லை பகுதியில் தரைவழி தாக்குதலை தொடங்கியது.
    • 180 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.

    டெல் அவிவ்:

    ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா படையினர் வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

    இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் எல்லை பகுதியில் தரைவழி தாக்குதலை தொடங்கியது. இதனிடையே, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் நகரங்கள் மீது ஈரான் ராணுவம் இரவு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    மொத்தம் 180 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் சில ஏவுகணைகள் இஸ்ரேல் பகுதியில் விழுந்தன. இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

    இந்நிலையில் வடக்கு லெபனான் நகரமான திரிபோலியில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவான அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் தலைவரான சயீத் அட்டால்லா கொல்லப்பட்டார். அவருடன் குடும்பத்தினர் 3 பேரும் உயிரி ழந்தனர்.

    மேலும் பாலஸ்தீனத்தின் மேற்குகரையில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் தளபதி ஜாஹி யாசர் ஓபி உள்பட 8 பேர் பலியானார்கள்.

    ×