என் மலர்tooltip icon

    உலகம்

    • மியான்மரில் நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின.
    • தாய்லாந்திலும் அதிர்வுகள் உணரப்பட்டது.

    மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் தரையில் இருந்து 10 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் அண்டை நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உணரப்பட்டது. அங்கு சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


     

    இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்தப்படி வெளியே ஓடி வந்தனர். பின்னர் 12 நிமிடம் கழித்து மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

     


    இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. ஆனால் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அதிக சேதங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    இந்த நிலநடுக்கம் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்திலும் உணரப்பட்டது.

    • ஒருவர் பொம்மை வேடம் அணிந்து விரட்டினார்.
    • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரை விரட்டி சென்றனர்.

    இஸ்தான்புல்:

    துருக்கியில் அதிபராக இருந்து வருபவர் ரெசெப் தையிப் எர்டோகன். இவருக்கு எதிராக கடந்த சில நாட்களாக துருக்கியின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வலுத்துள்ளது.

    துருக்கியின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரும், அந்நாட்டின் மிகப்பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயருமான எக்ரீம் இமாமோத்து மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது தொடர்பாக அவர் கடந்த 19-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    துருக்கியில் 2028-ம் ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் ஆளும் கட்சியை எதிர்த்து எக்கீம் இமாமோத்து போட்டியிட போவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதும் அவர் கைது செய்யப்பட்டார்.


    அரசின் இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போலீசார் அவர்களை கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கலைத்தனர். இந்த போராட்டத்தின் போது ஒரு இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரை விரட்டி சென்றனர். அதில் ஒருவர் பொம்மை வேடம் அணிந்து விரட்டினார். இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    துருக்கியில் நடந்து வரும் போராட்டம் தொடர்பாக போலீசார் 2 ஆயிரம் பேரை கைது செய்துள்ளனர். ஏராளமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • மதிய நேர சந்திப்புகள் ஒத்திவைக்கப்படுகின்றன.
    • மருத்துவ ஆலோசனையின் பேரில் நிகழ்ச்சிகள் மாற்றியமைக்கப்படும்.

    பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) தனது சந்திப்புகளை அவர் ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்து இருக்கிறது.

    இது குறித்து வெளியாகி இருக்கும் அறிக்கையில், "இன்று காலை புற்றுநோய்க்கான திட்டமிடப்பட்ட, தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து, மன்னருக்கு மருத்துவமனையில் சிறிது நேர கண்காணிப்பு தேவைப்படும் தற்காலிக பக்க விளைவுகள் ஏற்பட்டன. இன்றைய தினம் அவரது மதிய நேர சந்திப்புகள் ஒத்திவைக்கப்படுகின்றன," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பக்க விளைவுகள் ஏற்பட்டதை தொடர்ந்து 78 வயதான இங்கிலாந்து அரச தலைவர் கிளாரன்ஸ் ஹவுசில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார். மன்னர் வீட்டில் நல்ல நிலையில் இருப்பதாகவும், அங்கு அவர் மாநில ஆவணங்களில் பணிபுரிந்து வருவதாகவும், அழைப்புகளைச் செய்து கொண்டிருந்ததாகவும் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

    மருத்துவ ஆலோசனையின் பேரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று (வெள்ளிக்கிழமை) நிகழ்ச்சிகள் மாற்றியமைக்கப்படும்.

    • ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க அதிபர், பிரதமர் உத்தரவிட்டுள்ளனர்.
    • பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் 1,518 கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டார்.

    புனித ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கருணை அடிப்படையில் விடுவிக்கப்படுகின்றனர்.

    ரம்ஜானை ஒட்டி கருணை அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க அதிபர் ஷேக் முகமது பின் சயீத், பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் உத்தரவிட்டுள்ளனர்.

    அதிபர் ஷேக் முகமது பின் சயீத் 1,295 கைதிகளை விடுவிக்கவும், பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் 1,518 கைதிகளை விடுவிக்கவும் உத்தரவிட்டார்.

    கருணை அடிப்படையில் விடுவிக்கப்படுபவர்களில் இந்திய நாட்டினர் 500-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவுகள் பிப்ரவரி மாத இறுதியில் செயல்படுத்தப்பட்டன.

    ஐக்கிய அரபு அமீரகத்தின் நீண்டகால பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, வருடாந்திர ரமலான் மன்னிப்புகள் நாட்டின் கருணை மற்றும் இரண்டாவது வாய்ப்புகளுக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.

    புனித மாதத்தின் மதிப்புகளுடன் இணைந்து, இந்த நடவடிக்கை மன்னிப்பு, இரக்கம் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை வலியுறுத்துகிறது. கூடுதலாக, பெருமளவிலான விடுதலை சிறைவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவுகிறது.

    • பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
    • கனேடிய வாகன தொழிலுக்கு பேரழிவை ஏற்படுத்தும்.

    அதிபர் டிரம்ப் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பு உலக சந்தையில் வர்த்தகப் போர் ஏற்படும் சூழலை உருவாக்கி இருக்கிறது. கார்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பதை கண்டித்து பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில், அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையிலான ஆழமான பொருளாதார, பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகளின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

    "நமது பொருளாதாரங்களின் ஆழமான ஒருங்கிணைப்பு மற்றும் இறுக்கமான பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பின் அடிப்படையில் அமெரிக்காவுடன் நாங்கள் கொண்டிருந்த பழைய உறவு முடிந்துவிட்டது. சமீபத்திய வரி நடவடிக்கைகளுக்கு எங்கள் பதில் போராடுவது, பாதுகாப்பது, கட்டியெழுப்புவது," என்று மார்க் கார்னி கூறினார்.

    "அமெரிக்காவில் அதிகபட்ச தாக்கத்தையும் கனடாவில் குறைந்தபட்ச தாக்கங்களையும் ஏற்படுத்தும் வர்த்தக நடவடிக்கைகளுடன் நாங்கள் அமெரிக்க வரிகளை எதிர்த்துப் போராடுவோம்," என்று அவர் மேலும் கூறினார்.

    அமெரிக்காவில் வாகன இறக்குமதி வரி அடுத்த வாரம் அமலுக்கு வரவுள்ள நிலையில், ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கனேடிய வாகன தொழிலுக்கு பேரழிவை ஏற்படுத்தும்.

    • காட்டுத்தீ காரணமாக நூற்றுக்கணக்கான கட்டமைப்புகள் சேதமடைந்தன.
    • இதில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் கோவிலும் அடங்கும்.

    சியோல்:

    தென்கொரியாவின் தெற்கத்திய பகுதிகளில் காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிகிறது. வறண்ட வானிலை மற்றும் அதிவேகக் காற்று வீசுவதால் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்த காட்டுத்தீயில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 19 பேர் காயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    காட்டுத்தீ காரணமாக சுமார் 43,000 ஏக்கர் பரபரப்பளவு கொண்ட நிலம் பாதிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான கட்டமைப்புகள் சேதமடைந்தன. இதில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் கோவிலும் அடங்கும்.

    காட்டுத்தீ பெரும்பாலும் அணைக்கப்பட்டு விட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். வறண்ட வானிலை மற்றும் அதீத காற்றோட்டத்தால் மீண்டும் காட்டுத்தீ பரவியது. காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். 130 ஹெலிகாப்டர்கள், நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றார் டிரம்ப்.
    • அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள புதிய வரி விதிப்பு முறை ஏப்ரல் 3-ம் தேதி அமலுக்கு வருகிறது.

    டொரண்டோ:

    அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த உத்தரவு காரணமாக உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும். ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வருவாய் ஈட்டிக் கொடுக்கும் என கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக பேசிய அதிபர் டிரம்ப், "இது வளர்ச்சியைத் தூண்டும். நாங்கள் 25 சதவீதம் வரி விதிக்கிறோம்" என தெரிவித்தார். அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள புதிய வரி விதிப்பு முறை ஏப்ரல் 3-ம் தேதி அமலுக்கு வருகிறது.

    அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பொருளாதார நிலையற்ற தன்மையை உருவாக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், கனடாவின் புதிய பிரதமரான மார்க் கார்னி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். நிச்சயமாக அடுத்த ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. அதிபர் டிரம்ப் கனடாவின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • நெதர்லாந்தில் மர்ம நபர் கண்ணில் பட்டவர்களை கத்தியால் குத்தினார்.
    • தகவலறிந்து வந்த போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்.

    தி ஹோக்:

    நெதர்லாந்தின் மத்திய ஆம்ஸ்டர்டாமில் உள்ள டாம்ஸ்கொயர் என்ற இடம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி.

    இந்நிலையில், இங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணில் பட்டவர்களை திடீரென சரமாரி குத்தினார். இதில் 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பலர் கத்திக்குத்தில் காயமடைந்தனர்.

    காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் டாம்ஸ்கொயர் உள்ளிட்ட சில பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் தாக்குதல் நடத்திய அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். மேலும், போலீசார் அவனை மடக்கிப் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

    • இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏற்றுக்கொண்டார்.
    • புதின் இந்தியாவுக்கு வருகை தருவதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகின்றன.

    ரஷிய அதிபர் புதின் விரைவில் இந்தியா வரவுள்ளதாக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய செர்ஜி லாவ்ரோவ், "பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 3 ஆவது முறையாக பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ரஷ்யாவிற்கு தான் தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார். அவ்வகையில் இந்த முறை அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவிற்கு வரவுள்ளார். இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏற்றுக்கொண்டார். புதின் இந்தியாவுக்கு வருகை தருவதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகின்றன.

    பிரதமர் மோடி கடந்தாண்டு ரஷியா சென்று அதிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவிற்கு வருமாறு புதினுக்கு மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

    உக்ரைன் - ரஷியா போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக புதின் இந்தியா வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் புதின் எப்போது இந்தியா வரவுள்ளார் என்ற தகவல் இன்னும் வரவில்லை. 

    • இரத்தத்தை உண்ணும் பூச்சிகளுக்கு நச்சுத்தன்மையாக்குவது.
    • நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு நிடிசினோனைப் பயன்படுத்தலாம்.

    சயின்ஸ் டிரான்ஸ்லேஷன் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கொசுக்களின் எண்ணிக்கையை அடக்கி மலேரியாவைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட நிடிசினோன் என்ற மற்றொரு மருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    "பூச்சிகளால் பரவும் நோய்கள் பரவுவதை தடுப்பதற்கான ஒரு வழி, விலங்குகள் மற்றும் மனிதர்களின் இரத்தத்தை- இந்த இரத்தத்தை உண்ணும் பூச்சிகளுக்கு நச்சுத்தன்மையாக்குவதாகும்" என்று லிவர்பூல் ஸ்கூல் ஆஃப் டிராபிகல் மெடிசின் கௌரவ உறுப்பினரும், ஆய்வின் இணை-தலைமை ஆசிரியருமான லீ ஹைன்ஸ் கூறினார்.

    "மலேரியா போன்ற பூச்சிகளால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு நிடிசினோனைப் பயன்படுத்துவது ஒரு நம்பிக்கைக்குரிய புதிய கருவியாக இருக்கலாம் என்று எங்கள் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன."

    இந்த மருந்து பொதுவாக அரிதான பரம்பரை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து 4-ஹைட்ராக்ஸி-ஃபெனைல்பைருவேட் டைஆக்ஸிஜனேஸ் (HPPD) எனப்படும் ஒரு வகை என்சைமை (Enzyme) தடுப்பதன் மூலம் செயல்படுகிறது. இதைத் தடுப்பது மனித உடலில் தீங்கு விளைவிக்கும் நோய் துணை தயாரிப்புகள் குவிவதைத் தடுக்கிறது.

    இருப்பினும், ஒரு கொசு மருந்தை கொண்ட இரத்தத்தை குடிக்கும்போது, அது இந்த HPPD என்சைமையும் அவர்களின் உடலில் தடுக்கிறது. இது பூச்சி இரத்தத்தை ஜீரணிப்பதைத் தடுக்கிறது, இதனால் அவை விரைவாக இறக்கின்றன.

    அல்காப்டோனூரியா நோயால் கண்டறியப்பட்ட நான்கு பேர் ஆய்வுக்காக தங்கள் இரத்தத்தை தானம் செய்தனர், இது பல ஆப்பிரிக்க நாடுகளில் மலேரியாவை பரப்புவதற்கு பொறுப்பான முதன்மை கொசு இனமான பெண் அனோபிலிஸ் காம்பியா கொசுக்களுக்கு வழங்கப்பட்டது.

    கொசுக்களைக் கொல்ல மருந்தின் எந்த செறிவுகள் தேவை என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து, அதன் செயல்திறனை ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தான ஐவர்மெக்டினுடன் ஒப்பிட்டனர்.

    மனித இரத்த ஓட்டத்தில் ஐவர்மெக்டினை விட நிடிசினோன் நீண்ட காலம் நீடிக்கும் என்றும், மலேரியாவை பரப்பும் வயதானவை உட்பட அனைத்து வயது கொசுக்களையும் மட்டுமல்ல, பாரம்பரிய பூச்சி கொல்லிகளை எதிர்க்கும் உறுதியான கொசுக்களையும் கொல்ல முடிந்தது என்றும் காட்டப்பட்டது.

    மருந்தை ஊட்டப்பட்ட கொசுக்கள் முதலில் பறக்கும் திறனை இழந்து, பின்னர் விரைவாக முழு முடக்கம் மற்றும் மரணம் அடைந்தன என்று ஆய்வு ஆசிரியர்கள் விளக்குகின்றனர். இருப்பினும், மருந்தின் எந்த அளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதைத் தீர்மானிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவை.

    • போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
    • நாட்டின் மீது குற்றம்சாட்டப்படுவது முதல் முறை.

    அமெரிக்க தேசிய உளவுப்பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை இந்தியா மீது குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்காவுக்கு ஆண்டு அச்சுறுத்தல்கள் என்ற பெயரில் வெளியாகி இருக்கும் அறிக்கையில் ஃபெண்டாலின் தயாரிக்க தேவைப்படும் ரசாயனங்கள் இந்தியா மற்றம் சீனாவில் இருந்து அதிகளவில் தயாரிக்கப்பட்டு, சட்டவிரோதமாக போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு வினியோகம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்தியா மீது இத்தகைய குற்றம்சாட்டப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக இந்தியாவை சேர்ந்த போதை பொருள் கடத்தல் கும்பல்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது. எனினும், ஒட்டுமொத்த நாட்டின் மீது குற்றம்சாட்டப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

    அமெரிக்காவில் போதைப் பொருள் பயன்பாடு சமீப காலங்களில் பெருமளவு அதிகரித்து வருகிறது. போதை பொருள் பயன்பாட்டை குறைக்கவும், சட்டவிரோத போதை பொருள் கடத்தலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    இந்த நிலையில், போதை பொருள் தயாரிப்புக்கான ஃபெண்டானில் என்ற ரசாயன கடத்தலில் சீனா மற்றும் இந்தியா தான் முன்னிலையில் இருப்பதாக அமெரிக்க உளவு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது. ஃபெண்டானில் என்ற ரசாயனக் கலவை வலி நிவாரணி வடிவில் வழங்க அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

    ஃபெண்டானில் ரசாயம் செயற்கை போதையை உருவாக்கும் தன்மை கொண்டது ஆகும். சில வகை அறுவை சிகிச்சைகளில் மயக்க மருந்தாகவும், வலி நிவாரணியாகவும் ஃபெண்டானில் பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்து இருக்கிறது. எனினும், இதன் அளவு சற்று அதிகரித்தாலும் போதைப் பொருளாக மாறும் என்று கூறப்படுகிறது.

    தொடர்ந்து பயன்படுத்தும் போது, மக்கள் இதற்கு அடிமையாகவும் வாய்ப்புகள் உண்டு. இதன் காரணமாக போதை பொருள் தயாரிக்கும் கும்பல்கள் இந்த ரசாயனத்தை போதைப் பொருளாகவே மாற்றியுள்ளன. இது பொடி மற்றும் மாத்திரை வடிவில் விற்பனைக்கு கிடைக்கிறது. அமெரிக்க போதை பொருள் கடத்தல் கும்பல்கள் ஃபெணடானில் தயாரிப்பதற்கான ரசாயனங்களை பெரும்பாலும் சீனாவில் இருந்து அதிகளவில் வாங்குவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

    அமெரிக்காவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் ஃபெண்டானில் போதை பொருளை அதிகம் எடுத்துக் கொண்டதால் 52 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பதை அடுத்து, இதனை ஒழிக்கும் முயற்சிகளில் அதிபர் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார்.

    இதற்காகவே ஃபெண்டானில் தயாரிப்பதற்கான ரசயானங்களை தயாரிக்கும் சீனா மீது அதிபர் டிரம்ப் அதிக வரி விதிப்பதாக தெரிவித்து இருந்தார். மேலும், போதை பொருள் கடத்தலை தடுத்த தவறியதாக கனடா மற்றும் மெக்சிகோ மீதும் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.

    • அதிக வருவாய் ஈட்டிக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
    • வரிவிதிப்பு முறை ஏப்ரல் 3ம் தேதி அமலுக்கு வருகிறது.

    அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த உத்தரவு காரணமாக உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வருவாய் ஈட்டிக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து பேசிய டிரம்ப், "இது வளர்ச்சியை தூண்டும். நாங்கள் 25 சதவீதம் வரிவிதிக்கிறோம்," என்று தெரிவித்தார். அதிபர் டிரம்ப் அறிவித்து இருக்கும் புதிய வரிவிதிப்பு முறை ஏப்ரல் 3ம் தேதி அமலுக்கு வருகிறது.

    அதிபர் டிரம்ப் நீண்ட காலமாகவே வாகனங்கள் இறக்குமதி விவகாரத்தில் வரி விதிப்பது பற்றி பேசி வந்தார். மேலும், தான் ஆட்சிக்கு வந்ததும், இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். அதன்படி தற்போது 25 சதவீதம் வரி விதித்து இருப்பதன் மூலம் அமெரிக்காவில் வாகன உற்பத்தி அதிகரிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது.

    கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவுக்கு சுமார் 8 மில்லியன் கார்கள் மற்றும் இலகு ரக டிரக்குகள் இறக்குமதி செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு மட்டும் 244 பில்லியன் டாலர்கள் ஆகும். மெக்சிகோ, ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் இருந்தே அமெரிக்காவுக்கு அதிக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. வாகனங்களை தொடர்ந்து அவற்றுக்கான உதிரிபாகங்கள் பெரும்பாலும் மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 197 பில்லியன் டாலர்கள் ஆகும்.

    வரிவிதிப்பால் ஏற்படக்கூடிய மாற்றங்கள்:

    வாகனங்கள் இறக்குமதிக்கு 25 சதவீதம் வரி விதிப்பதன் மூலம் அமெரிக்காவுக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்ப்பு.

    வரி விதிப்பு அமலுக்கு வரும் போது அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் விலை 12500 டாலர்கள் வரை அதிகரிக்கும். இதன் மூலம் மிடில் கிளாஸ் வாடிக்கையாளர்கள் புதிய கார்களை வாங்கக்கூடிய சூழல் குறையும்.

    வரிவிதிப்பு காரணமாக அமெரிக்காவில் வாகன உற்பத்தி அதிகரிக்கும். இதனால் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என டிரம்ப் நம்பிக்கை.

    இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி விதிப்பதன் மூலம் நீண்ட கால பயன்கள் அதிகரிக்கும் என்ற நிலையில், குறுகிய காலக்கட்டத்தில் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு அதிக செலவீனங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

    அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு கார் உற்பத்தியாளர்கள் பெரும்பாலான பாகங்களை பெறுவதற்கு மெக்சிகோ, கனடா மற்றும் ஆசிய சந்தைகளை சார்ந்து இருக்கும் சூழல் தான் நிலவுகிறது. இதனால் வாகன உற்பத்தியாளர்கள் அதிக வரி செலுத்த வேண்டும். இதனால், வாகனங்கள் விலையை அதிகரிக்க வேண்டிய சூழலும் உருவாகலாம்.

    அதிபர் டிரம்ப் உத்தரவு காரணமாக ஜெனரல் மோட்டார்ஸ், ஸ்டெலான்டிஸ் போன்ற வாகன உற்பத்தியாளர்கள் பங்குகள் சரிவை சந்தித்தன. முதலீட்டாளர்கள் லாபத்தில் நீண்ட கால விளைவுகள் குறித்து அச்சம் கொண்டுள்ளனர்.

    கனடா, ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பொருளாதார நிலையற்ற தன்மையை உருவாக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    வரிவிதிப்பு நடவடிக்கை வர்த்தகப் போர் ஏற்படும் சூழலை உருவாக்கிவிடும். ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே அமெரிக்க மதுபானங்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது. இந்த அறிவிப்புக்கு அதிபர் டிரம்ப் ஐரோப்பிய மதுபானங்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று பதிலடி கொடுத்தார்.

    அதிக கார் செலவுகளை ஈடுகட்ட டிரம்ப் ஒரு புதிய வரி ஊக்கத்தொகையை முன்மொழிந்துள்ளார். அதன்படி கார் வாங்குபவர்கள், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை தேர்வு செய்யும் போது அரசு வருமான வரிகளில் இருந்து வாகன கடன்களுக்கான வட்டியைக் கழிக்க அனுமதிக்கலாம் என்று அவர் பரிந்துரைத்தார்.

    இந்த வரிகள் பணவீக்கத்தைத் தூண்டி, நுகர்வோருக்கு தேர்வுகளை குறைக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். இவை டிரம்பின் பரந்த பொருளாதார கொள்கையின் ஒரு பகுதியாகும். இதில் எஃகு, அலுமினியம், கணினி சில்லுகள் மற்றும் எரிசக்தி பொருட்கள் மீதான வரிகளும் அடங்கும்.

    ×