என் மலர்tooltip icon

    உலகம்

    • வாடிக்கையாளர்கள் தங்கள் உடல் அளவுக்கேற்ற கம்பிகள் வழியாக செல்ல முடிகிறது.
    • வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டனர்.

    பிரபல உணவகங்கள் சீசனுக்கு தகுந்தாற்போல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி அறிவிப்பதை கேள்விபட்டிருப்போம். ஆனால் தாய்லாந்தில் உள்ள ஒரு உணவகம் ஒல்லியாக இருப்பவர்களுக்கு தள்ளுபடி வழங்குவது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அங்கு சியாங் மாயி பகுதியில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில், வாடிக்கையாளர்களின் உடல் அளவை அடிப்படையாக கொண்டு தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. அதாவது ஓட்டலில் ஒரு பகுதியில் 5 வகையான உலோக கம்பிகள் உள்ளன. ஒவ்வொரு கம்பிகளுக்கு இடையேயும் குறிப்பிட்ட இடைவெளிகள் உள்ளன.

    வாடிக்கையாளர்கள் தங்கள் உடல் அளவுக்கேற்ற கம்பிகள் வழியாக செல்ல முடிகிறது. அதில், ஒவ்வொரு உடல் அளவுக்கு ஏற்ற வகையில் 5 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடிகள் உள்ளன. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டனர்.

    ஒரு பயனர், இது மிகவும் அபத்தமானது, அவமரியாதைக்குரியது என பதிவிட்டார். மற்றொரு பயனர், ஆசியாவின் உணவு முறை மற்றும் உடல் கலாச்சாரம் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது என பதிவிட்டார்.



    • நிலநடுக்கம் 69 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது
    • பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    தைவானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் வடகிழக்கு கடற்கரையில் உள்ள யிலனுக்கு தென்கிழக்கே சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் 69 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. தலைநகரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    • சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது.
    • அமெரிக்கா மீது பதிலுக்கு இறக்குமதி பொருட்களுக்கு 34% வரி விதிப்பதாக சீனா அறிவித்தது.

    இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது. இதற்கு எதிர்வினை ஆற்றாமல் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மவுனம் காத்து வரும் சூழலில் சீனா அமெரிக்கா மீது பதிலுக்கு இறக்குமதி பொருட்களுக்கு 34% வரி விதிப்பதாக அறிவித்தது.

    வரும் 10 தேதி முதல் இது அமலுக்கு வரும் எனவும் தெரிவித்தது. இதனால் சூடான டிரம்ப், சீனா உடனைடியாக தனது வரியை திரும்பப்பெறவில்லை என்றால் பதிலுக்கு கூடுதலாக 50 சதவீத வரி விதிப்பேன் என்று மிரட்டினார்.

    இந்நிலையில், அமெரிக்க வரிவிதிப்பை எதிர்கொள்ள இணைந்து செயல்படுவோம் என்று இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங், எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "சீனா - இந்தியா பொருளாதாரம், வர்த்தக உறவு, பரஸ்பர நன்மையை அடிப்படையாகக் கொண்டது. அமெரிக்காவின் வரிவிதிப்பை எதிர்கொள்ளும் உலகின் 2 வளர்ச்சியடைந்த நாடுகள் இணைந்து செயல்பட்டு இந்த கடினமான சூழ்நிலையை கடக்க வேண்டும். வர்த்தகம் மற்றும் கட்டணப் போர்களில் வெற்றியாளர்கள் இல்லை. அனைத்து நாடுகளும் விரிவான ஆலோசனையின்படி கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும். அனைத்து வகையான ஒருதலைப்பட்சம் மற்றும் பாதுகாப்புவாதத்தை கூட்டாக எதிர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார். 

    • தென்கொரிய அரசியலமைப்பின்படி அதிபர் பதவி நீக்கம் செய்யப்படும்போது அடுத்த 2 மாதங்களுக்குள் புதிய அதிபரை தேர்வு செய்ய வேண்டும்.
    • அதிபர் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

    சியோல்:

    தென்கொரியாவில் ராணுவ அவசர நிலை செயல்படுத்தியதற்காக அப்போதைய அதிபர் யூன் சுக்-இயோலைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேறியதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரது பதவி நீக்கத்தை அந்த நாட்டின் அரசியலமைப்பு கோர்ட்டும் கடந்த வாரம் உறுதி செய்தது.

    தென்கொரிய அரசியலமைப்பின்படி அதிபர் பதவி நீக்கம் செய்யப்படும்போது அடுத்த 2 மாதங்களுக்குள் புதிய அதிபரை தேர்வு செய்ய வேண்டும். எனவே அதிபர் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அந்த நாட்டின் இடைக்கால அதிபர் ஹான் டக்-சூ அறிவித்துள்ளார்.

    • இந்த விபத்தில் 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
    • இந்த விபத்தில் சில புகழ்பெற்ற நபர்களும் உயிரிழந்துள்ளதாகக் சொல்லப்படுகிறது.

    கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசின் தலைநகர் சாண்டோ டொமினிகோவில் உள்ள புகழ்பெற்ற இரவுநேர கேளிக்கை விடுதியில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

    இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது திடீரென்று கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர்.

    மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனால் பலர் பலியாகி இருப்பது தெரியவந்தது.

    இந்த விபத்தில் 79 பேர் உயிரிழந்தனர். 160-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இடிபாடு களுக்கு அடியில் பலர் உயிரோடு சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது. கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்குப் பிறகும், இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உயிருடன் சிலர் மீட்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

    அவசரகால செயல்பாட்டு மையத்தின் இயக்கு னர் ஜுவான் மானுவல் மெண்டஸ் கூறும்போது, கேளிக்கை விடுதியின் மூன்று பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து மீட்புப்பணி நடந்து வருகிறது. நாங்கள் தொடர்ந்து இடிபாடுகளை அகற்றி மக்களைத் தேடுகிறோம் என்றார்.

    இந்த நிலையில் இந்த விபத்தில் முன்னாள் பேஸ்பால் அணி வீரர் ஆக்டேவியோ டோட்டல் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்த மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

    • இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது.
    • சீனா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

    இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது. இதற்கு எதிர்வினை ஆற்றாமல் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மவுனம் காத்து வரும் சூழலில் சீனா அமெரிக்கா மீது பதிலுக்கு இறக்குமதி பொருட்களுக்கு 34% வரி விதிப்பதாக அறிவித்தது.

    வரும் 10 தேதி முதல் இது அமலுக்கு வரும் எனவும் தெரிவித்தது. இதனால் சூடான டிரம்ப், சீனா உடனைடியாக தனது வரியை திரும்பப்பெறவில்லை என்றால் பதிலுக்கு கூடுதலாக 50 சதவீத வரி விதிப்பேன் என்று மிரட்டினார்.

    இந்நிலையில், டிரம்பின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவில் ஹாலிவுட் படங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

    • கடல் மட்டத்திற்கு கீழே 30 கி.மீ ஆழத்தில் அமைந்துள்ளது.
    • இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை

    இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் (BMKG) தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் ஆரம்பத்தில் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்தது, ஆனால் பின்னர் அது குறைக்கப்பட்டது.

    இந்த நிலநடுக்கம் அதிகாலை 2:48 மணிக்கு (உள்ளூர் நேரம்) ஏற்பட்டது, இதன் மையப்பகுதி சிமியூலு ரீஜென்சியில் உள்ள சினாபாங் நகரிலிருந்து தென்கிழக்கே 62 கி.மீ தொலைவில், கடல் மட்டத்திற்கு கீழே 30 கி.மீ ஆழத்தில் அமைந்துள்ளது.

    நிலநடுக்கம் குறிப்பிடத்தக்க கடல் அலை செயல்பாட்டைத் தூண்டாததால், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இதுவரை கடுமையான சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து எந்த அறிக்கையும் இல்லை.

    • சீனா பொருட்களுக்கு 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.
    • இது தொடர்பாக சீனாவின் வர்த்தக அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது,

    இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது. இதற்கு எதிர்வினை ஆற்றாமல் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மவுனம் காத்து வரும் சூழலில் சீனா அமெரிக்கா மீது பதிலுக்கு இறக்குமதி பொருட்களுக்கு 34 சதேவீத வரி விதிப்பதாக அறிவித்தது.

    வரும் 10 தேதி முதல் இது அமலுக்கு வரும் எனவும் தெரிவித்தது. இதனால் சூடான டிரம்ப், சீனா உடனைடியாக தனது வரியை திரும்பப்பெறவில்லை என்றால் பதிலுக்கு 50 சதவீத வரி விதிப்பேன் என்று மிரட்டினார்.

    இந்நிலையில்  சீனா பொருட்களுக்கு 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார். இதற்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது.

    இது தொடர்பாக சீனாவின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தனது சொந்த உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க உறுதியான எதிர்நடவடிக்கைகளை சீனா எடுக்கும்.

    சீனாவுக்கு எதிரான வரிகளை அதிகரிப்பதாக அச்சுறுத்துவதன் மூலம் அமெரிக்கா தவறு மேல் தவறு செய்து வருகிறது. அமெரிக்கா தனது விருப்பப்படி நடக்க வலியுறுத்தினால் சீனா இறுதி வரை போராடும் என்று கூறப்பட்டுள்ளது.

    • அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
    • இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வரி விதிப்பு அறிவிப்பை வெளியிட்டார்.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். கடந்த 2-ந்தேதி அவர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வரி விதிப்பு அறிவிப்பை வெளியிட்டார்.

    அதன்படி இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 26 சதவீத வரியும், சீனா பொருட்களுக்கு 34 சதவீதம் வரியும் வியட்நாமுக்கு 46 சதவீதமும், வங்க தேசத்துக்கு 37 சதவீதமும், ஜப்பானுக்கு 24 சதவீதமும் விதிக்கப்படும் என கூறினார். டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

    அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா அமெரிக்க பொருட்களுக்கு கூடுதலாக 34 சதவீதம் வரி விதிக்கும் என அதிரடியாக அறிவித்தது. இந்த கூடுதல் வரி 10-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என சீனா தெரிவித்துள்ளது.

    50 சதவீதம் கூடுதல் வரி

    இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சீனா பொருட்களுக்கு கூடுதலாக 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    சினா ஏற்கனவே நிர்ணயித்துள்ள சட்டவிரோத வரிகளுடன் கூடுதலாக 34 சதவீத பழிவாங்கும் வரிகளை விதித்து உள்ளது. இன்று சீனா தனது 34 சதவீத வரி அறிவிப்பை திரும்ப பெறவில்லை என்றால் 9-ந் தேதி முதல் சீனா மீது 50 சதவீதம் கூடுதல் வரிகளை அமெரிக்கா விதிக்கும். சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தையும் நிறுத்தப்படும். வரி விதிப்பு தொடர்பாக மற்ற நாடுகளுடன் உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று கூறினார்

    சீனாவும், அமெரிக்காவும் இப்படி போட்டி போட்டுக் கொண்டு வரி விதிப்பை அறிவித்து வருவது வர்த்தக போரை மேலும் தீவிரமாக்கி உள்ளது.

    • பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
    • உலக பங்குச்சந்தைகளில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார்.

    அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பையே டிரம்ப் அறிவித்தார்.

    டிரம்ப் வரிவிதிப்புக்கு எதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சீனா டிரம்ப் வரிவிதிப்புக்கு எதிர் வரிவிதிப்பு நடவடிக்கையாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத கூடுதல் வரி விதித்தது. டிரம்ப் தொடங்கியுள்ள வர்த்தக போரால் உலக பங்குச்சந்தைகளில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது பரஸ்பர வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், டிரம்ப் தனது பரஸ்பர வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக வெளியான தகவல் போலியானது என்று என்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

    • சட்ட விரோதமாக குடியேறிய அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
    • தெற்கு சூடான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கிய விசாவை அமெரிக்கா உடனே ரத்து செய்வதாக அறிவித்தது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். அதன்படி சட்ட விரோதமாக குடியேறிய அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

    அந்தவகையில் ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானுக்கு அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். ஏற்கனவே உள்நாட்டு போரில் சிக்கியுள்ள சூடானில் இதனால் மேலும் கலவரம் ஏற்படும் அச்சம் நிலவுகிறது. எனவே தனது நாட்டின் குடிமக்களை ஏற்றுக்கொள்ள தெற்கு சூடான் அரசாங்கம் மறுத்தது.

    இதனையடுத்து தெற்கு சூடான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கிய விசாவை அமெரிக்கா உடனே ரத்து செய்வதாக அறிவித்தது. எனவே அந்த நாட்டில் இருந்து வரும் குடிமக்கள் அமெரிக்காவின் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

    • காசா உடனான எல்லையில் பாதுகாப்பு பகுதிகளை அதிகரிக்க இஸ்ரேல் திட்டம்.
    • கடந்த சில நாட்களாக தனது தாக்குதலை இஸ்ரேல் விரிவுப்படுத்தியுள்ளது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதும், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட முயற்சி மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார். அதன்படி பேச்சுவார்த்தை நடைபெற்று கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி, அதாவது அவர் பதவி ஏற்பதற்கு முந்தைய தினம் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே 7 வார போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    அப்போது மனிதாபிமான பொருட்கள் காசா முனைக்கு கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி அளித்தது. அத்துடன் ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவித்தது. அதற்குப் பதிலாக சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்தது.

    7 வாரம் முடிவடைந்த பின்னர் போர் நிறுத்தம் நீட்டிப்பிற்கான பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. இதனால் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது மீண்டும் தாக்குதலை நடத்த தொடங்கியது, நடத்தியது. ஹமாஸ் அமைப்பினருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் காசாவில் உள்ள பகுதிகளை அதிக அளவில பிடிக்க முடிவு செய்தது.

    இஸ்ரேல் எல்லையில் உள்ள காசாவின் வடக்கு முனையில் அதிகமான இடங்களை பிடித்து, பாதுகாப்பு பகுதியாக ஏற்படுத்துவதுதான் இலக்கு என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    அந்தவகையில் தற்போது 50 சதவீத பகுதிகளை பிடித்துள்ளதாக உரிமைக் குழுக்களும், இஸ்ரேல் ராணுவமும் தெரிவித்துள்ளன. இதில் பெரும்பாலான பகுதிகள் இஸ்ரேல் ராணுவ தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் வாழ்வதற்கும், விவசாயத்திற்கும், கட்டமைப்பிற்கும் பயன்படுத்த முடியாதவை எனக் கூறப்படுகிறது.

    காசாவின் தெற்கு பகுதியில் இருந்தை வடக்குப் பகுதியை துண்டித்தால் அது இஸ்ரேல் நாட்டின் நீண்ட கால பாதுகாப்பிற்கு உதவும் என இஸ்ரேல் நினைபதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ×