என் மலர்
தலைப்புச்செய்திகள்
- வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நேதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தினார்.
- தோஹாவில் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்காக வந்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
காசாவில் புதிய போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நேதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன் போது கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அலுவலகத்தை தாக்கியது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு நேதன்யாகு மன்னிப்பு கேட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் இருந்தபடி கத்தார் பிரதமர் ஜாசிம் அல் தானியை தொலைபேசியில் அழைத்து நேதன்யாகு மன்னிப்பு கேட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மேலும் வருங்காலங்களில் கத்தார் மீது இதுபோன்ற தாக்குதல்களை நடத்த மாட்டோம் என அவர் உறுதியளித்ததாக கூறியுள்ளது. இந்த போன் காலில் டிரம்ப்பும் உடன் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த மாதம் 9 ஆம் தேதி, தோஹாவில் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்காக வந்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கத்தார் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.
- அவசரகதியில் வழக்கு பதிவது எதனை மூடி மறைக்க? யாரைக் காப்பாற்ற?
- திமுகவின் ஏவல்துறை வழக்கு பதிந்து 3 பேரைக் கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் வதந்தி பரப்புபவர்களை கண்காணித்து தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து தமிழ் மாநில பாஜக தலைவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில்,
"பழியைத் துடைக்க வழக்கு பதியும் பாசிச திமுக அரசு!. கரூர் கூட்ட நெரிசல் குறித்து வதந்தி பரப்பியதாகக் கூறி 25 சமூக வலைதளக் கணக்காளர்கள் மீது திமுகவின் ஏவல்துறை வழக்கு பதிந்து 3 பேரைக் கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளபோது சகோதரத்துவத்துடன் தோள் கொடுப்பதைவிட்டு சர்வாதிகாரத்தைக் கையில் எடுப்பது தான் திராவிட மாடலா? அசாதாரண நிலையின்போது அதற்குக் காரணமானவர்களை நேர்மையான விசாரணை மூலம் கண்டுபிடிப்பதைவிட்டு, மக்களைத் திசைதிருப்புவதற்கு, உயிர் பிழைத்தோரைக் கைது செய்வது நியாயமா? இப்படி அவசரகதியில் வழக்கு பதிவது எதனை மூடி மறைக்க? யாரைக் காப்பாற்ற?
தன்னால் நிகழ்ந்த தவறைத் திரையிட்டு மறைக்க தன்னைக் கேள்வி கேட்போரை எல்லாம் கைது செய்து எதிர்க்குரலை முடக்கப் பார்ப்பது பாசிசத்தின் உச்சம்.
சிபிஐ விசாரணை கோரி, உண்மையைக் கண்டறிந்து, இறப்புக்கான நீதியைப் பெற்றுத் தருவது மட்டுமே பலியான 41 அப்பாவி மக்களுக்கு ஒரு பொறுப்பான அரசு செலுத்தும் உண்மையான அஞ்சலி! இதனை (அறிவாலயம்) அரசு உணர வேண்டும்!" என்று தெரிவித்துள்ளார்.
- வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நேதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தினார்.
- டிரம்ப்பின் தலைமையில் ஒரு இடைக்கால நிர்வாக அமைப்பு உருவாக்கப்படும்.
காசாவில் புதிய போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நேதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு, காசா போர் நிறுத்தம் மற்றும் அமைதி தொடர்பான 20 அம்சத் திட்டம் குறித்து டிரம்ப் செய்தியாளர்களிடம் விவரித்தார்.
அவர் கூறியதாவது, காசாவுக்கான தனது 20 அம்சத் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஏற்றுக்கொண்டதற்காக அவருக்கு நன்றி.
ஹமாஸ் இந்த அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்தால், அந்த அமைப்பின் அச்சுறுத்தலை அழித்து வேலையை முடிக்க இஸ்ரேலுக்கு எனது முழு ஆதரவும் இருக்கும்.
காசா போரில் அமைதியைப் ஏற்படுத்துவதில் வாஷிங்டன் மிக மிக அருகில் வந்துவிட்டது. அனைவரும் ஒரு சிறப்பான ஒப்பந்தத்திற்காக இணைந்திருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
20 அம்சத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
ஒப்பந்தம் ஏற்பட்டால், போர் உடனடியாக முடிவுக்கு வரும், மேலும் ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பிணைக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டவுடன் இஸ்ரேலியப் படைகள் காசாவில் இருந்து பல கட்டங்களாக படிப்பிடியாக வெளியேரும்.
மேலும் அங்கு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தற்காலிக சர்வதேச படை நிலைநிறுத்தப்படும்.
டிரம்ப்பின் தலைமையில் ஒரு இடைக்கால நிர்வாக அமைப்பு உருவாக்கப்படும்.
ஹமாஸ் போராளிகள் முழுமையாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும். அமைதியை ஏற்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.
பாலஸ்தீனியர்கள் வெளியேற நிர்பந்திக்கப்பட மாட்டார்கள், அதற்குப் பதிலாக காசாவை மீட்ருவாக்கம் செய்ய அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
முன்னதாக, நேதன்யாகு ஐ.நா.வில் பேசியபோது, ஹமாஸுக்கு எதிராக தொடங்கிய வேலையை முடிப்போம் என்று அடித்துகூறினார். மேலும், பாலஸ்தீனம் என்ற ஒரு தேசம் கிடையாது என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே காசாவின் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
- கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
- விஜயை பலர் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் அவர் மீது குற்றம் இல்லை என ஒரு சாரார் விஜய்க்கு ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உடைய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் யார் மீது குற்றம் என்பது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
விஜயை பலர் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் அவர் மீது குற்றம் இல்லை என ஒரு சாரார் விஜய்க்கு ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர்.
முழுமையான உண்மை, அதிகாரப்பூர்வ விசாரணைக்குப் பின்னரே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக அவரது நண்பரும் நடிகருமான சஞ்சீவ் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "உன் பேரை சாய்க்க பல யானைகள் சேர்ந்த போதே நீ சிங்கம்தான்" என விஜய்யின் புகைப்படத்தை பகிர்ந்து அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
- கனடா பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி அறிக்கை வெளியிட்டார்.
- இந்தக் கும்பலைச் சேர்ந்த கோல்டி டில்லான் என்பவர் பொறுப்பெற்றார்.
இந்தியாவில் இருந்து செயல்படும் சர்வதேச குற்றக் குழுவான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை கனடா அரசு பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
அந்நாட்டின் குற்றவியல் சட்டத்தின்படி இன்று (செப்டம்பர் 29) இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கனடா பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கையில், துப்பாக்கிச்சூடு, கொலைகள் போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல், அச்சத்தை பரப்புதல், வெளிநாட்டு வாழ் இந்திய சமூகத்தினரை குறிவைத்து மிரட்டி பணம் பறித்தல் ஆகியவை லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் முக்கிய செயல்பாடுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினால் இனி அந்நாட்டில் பிஷ்னோய் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், நிதிகளை முடக்கவும் கனடா அரசுக்கு அதிகாரம் கிடைக்கிறது.
முன்னதாக, கனடாவின் சர்ரேயில் உள்ள பாலிவுட் பிரபலம் கபில் ஷர்மாவின் கஃபே மீது இரண்டு முறை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு இந்தக் கும்பலைச் சேர்ந்த கோல்டி டில்லான் என்பவர் பொறுப்பேற்றதாகக் கூறப்பட்டது. கும்பலின் தலைவன் லாரான்ஸ் பிஷ்னோய் குஜராத் சபர்மதி சிறையில் இருந்தபடி தனது கும்பலை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
- இளைஞர்களும், Genz தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும்.
- பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!
கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உடைய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதற்கிடையே சமூக வலைதளங்களில் போலி செய்தி பரப்புவோர் மீது காவல்துறை வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி.
இளைஞர்களும், Genz தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும்.
அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது.
பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!" என்று வன்முறையை தூண்டும் வகையில் தெரிவித்திருந்தார்.
இதை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ஆதவ் அர்ஜுனா அதை நீக்கியும் உள்ளார்.
- தமிழக காவல்துறைக்கு மிரட்டல் விடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோ வைரலானது.
- "போலீஸ் ஸ்டேஷனே இருக்காது. எல்லா ரசிகர்களும் அலற உற்றுவோம்"
கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உடைய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் யார் மீது குற்றம் என்பது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
விஜயை பலர் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் அவர் மீது குற்றம் இல்லை என ஒரு சாரார் விஜய்க்கு ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் யார் மீது குற்றம் என்பது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் இந்த சம்பவம் தொடர்பாக பொய் செய்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பும் தெரிவித்திருந்தது.
விஜயை பலர் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் அவர் மீது குற்றம் இல்லை என ஒரு சாரார் விஜய்க்கு ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக இளம் விஜய் ரசிகர்கள் அவரை ஆதரிப்பதில் தங்கள் தீவிரத்தை காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் தீவிர விஜய் ரசிகரான சிறுவன் ஒருவர் விஜய்யுக்கு ஆதரவு என்ற பெயரில் தமிழக காவல்துறைக்கு மிரட்டல் விடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோ வைரலானது.
அந்த வீடியோவில் பேசும் சிறுவன், "விஜய் அண்ணாவ தொட்டு பாருங்க, தமிழ்நாடே பாதிக்கும். போலீஸ் ஸ்டேஷனே பிளாஸ்ட் ஆகிடும். விஜய் அண்ணா வீட்டுக்குள்ள இறங்கி பாருங்க. தமிழ்நாடே பிளாஸ்ட், ஒண்ணுமே பண்ண முடியாது. தொட்டு மட்டும் பாருங்க. போலீஸ் ஸ்டேஷனே இருக்காது. எல்லா ரசிகர்களும் அலற உற்றுவோம், ஒண்ணுமே பண்ண முடியாது. பஸ்ஸு கிஸ்ஸுலாம் எரியும், ஒண்ணுமே பண்ண முடியாது ஓகேவா!" என்று மிரட்டல் விடுத்தான்.
இந்நிலையில் தான் பேசிய விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்த சிறுவன் அதற்கு மன்னிப்பு கேட்டு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளான். அந்த பதிவில், "Sorry இனிமேல் என் IDயில் வீடியோ வராது. இனிமேல் நான் வீடியோ பதிவிட மாட்டேன். தவறாக வீடியோ போட்டத்திற்கு மன்னித்துவிடுங்கள். இனிமேல் நான் வீடியோ போடமாட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளான்.
- பிணங்களை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு உண்மையான அக்கறை வெளிப்படாது.
- ஜெயலலிதாவின் மரணத்தை விசாரித்தது கூட Eyewash-தானா?
கடந்த சனிக்கிழமை, கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்து அரசு மருத்துவமனையில் கிடத்தப்பட்ட சடலங்களை பார்த்து சடலங்களை பார்த்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்ணீர் விட்டார்.
இந்நிலையில் இதை விமர்சனம் செய்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிக்கையில்,
"உயிரிழந்தவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் நம் தமிழ் உறவுகள்'' என கரூர் துயரத்திற்கு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட வீடியோவை பார்த்துவிட்டுக் கதறியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
நாம் முதலமைச்சராக இருந்த போது தொலைக்காட்சியைப் பார்த்துத்தானே ஆட்சி செய்தோம். இப்போது இருக்கிற முதலமைச்சர் நேரில் போகிறாரே? என்ற விரக்தியில், இயலாமையில் உளற ஆரம்பித்திருக்கிறார்.
கரூர் சம்பவத்திற்கு ஆணையத்தை அரசு அமைத்ததை Eyewash ஆணையம் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. இப்போது அமைக்கப்பட்டிருக்கும் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தைதான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த போது அமைத்தவர் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அப்போது பழனிசாமியின் Eye மூடியிருந்ததா? ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தவரும் எடப்பாடி பழனிசாமிதான். ஜெயலலிதாவின் மரணத்தை விசாரித்தது கூட Eyewash-தானா?
சமூக ஊடகங்களில் எந்தமாதிரியான சதிக் கோட்பாட்டுக் கதைகள் பரவி வருகின்றன என்பது தெரியாதா? உங்கள் கட்சியின் ஐடி விங்கிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதும் இறந்த போதும் என்னவெல்லாம் நாடகம் ஆடினீர்கள்? பிறகு ஆர்.கே. நகர் தேர்தலில் இறந்த உங்களுடைய தலைவர் உடல் போன்ற சித்தரிக்கப்பட்ட பொம்மையை வைத்து பரப்புரை செய்தீர்கள்.
பொம்மையை வைத்து அரசியல் செய்த வரலாற்றை எழுதியவர்கள்தானே நீங்கள் இதுபோன்ற நாடகங்களை நடத்திப் பழக்கப்பட்ட உங்களுக்கு எல்லாமே போட்டோஷூட்டாகத் தெரியும். பிணங்களை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு உண்மையான அக்கறை வெளிப்படாது.
அமைச்சர் ஒருவர் அழுவது போல நடிக்கத் தெரியாமல் மாட்டிக்கொண்டார் எனச் சொல்லியிருக்கிறார். இதே செப்டம்பர் 29-ம் தேதி 11 ஆண்டுகளுக்கு முன்பு அழுகாச்சியோடு ஓர் அமைச்சரவை பதவியேற்பு நாடகம் நடந்தது பழனிசாமிக்கு தெரியுமா? சொத்துக் குவிப்பு வழக்கில் 2014-ல் நீதிபதி குன்ஹா தீர்ப்பால் தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார்.
அதனால், பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை கண்ணீரோடு பதவியேற்றது. அப்போது அழுவது போல் நடித்த உத்தமரா இன்று அழுகையைப் பற்றிப் பேசுவது? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
- இந்த சம்பவத்தில் யார் மீது குற்றம் என்பது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.
- கரூர் சம்பவம் குறித்து மனவேதனையுடன் எழுதி வைத்த கடிதத்தை போலீசார் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டது.
செப்டம்பர் 27 அன்று (சனிக்கிழமை) கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உடைய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் யார் மீது குற்றம் என்பது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. முழுமையான உண்மை, அதிகாரப்பூர்வ விசாரணைக்குப் பின்னரே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டததின் விற்பட்டு கிராமத்தைச் சேர்ந்த, தமிழக வெற்றிக் கழகம் கிளைச் செயலாளர் அய்யப்பன் (வயது 52) என்பவர் இன்று, திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலைக்கு முன் அவர் கரூர் சம்பவம் குறித்து மனவேதனையுடன் எழுதி வைத்த கடிதத்தை போலீசார் சம்பவ இடத்தில் இருந்து போலீசார் மீட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், "கரூர் மாவட்டத்தில் விஜய் வருகையில் போதிய பாதுகாப்பு இல்லை. நூதன முறையில் நெருக்கடி கொடுத்த செந்தில் பாலாஜி மூலமாக இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்" என்று எழுதப்பட்டுள்ளது.
கரூர் நிகழ்வால் ஏற்பட்ட ஆதங்கமே அவரது இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி, கடிதத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
- இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சீனா இரங்கலைத் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 27 அன்று (சனிக்கிழமை) கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உடைய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) அன்று பெய்ஜிங்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து பேசினார்.
அவர் கூறியதாவது, "உயிரிழந்தவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் அவர்களது குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
மேலும் இந்தியாவில் உள்ள சீனத் தூதரகமும் ஏற்கனவே தமது இரங்கலைத் தெரிவித்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் சீன நாட்டவர் யாரும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, இந்தியாவுக்கான சீனத் தூதர் ஸூ ஃபெய்போங் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் பாதிக்கப்பட்டவர்களிடம் இந்த 2-வது நாளாக விசாரணை நடத்தினார்.
- மதியழகன் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நிலையில் கைது.
கரூரில் தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் பாதிக்கப்பட்டவர்களிடம் இந்த 2-வது நாளாக விசாரணை நடத்தினார்.
காவல்துறை சார்பில் கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமிக்கப்பட்டு தனியாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அவர் ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து விசாரணையை தீவிரபடுத்தினார்.
இந்த நிலையில் டிஎஸ்பி மாற்றம் செய்யப்பட்டு கரூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்த் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
அவர் இன்று சம்பவ இடமான வேலுச்சாமி புரத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கினார்.
இதற்கிடையே, கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான வழக்கில் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இரவுக்குள் கைது செய்ய போலீஸ் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில், தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதியழகன் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நிலையில், கரூரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
- காட்டில் உள்ள ஒரு இந்து கோவில் முன் சிங்கம் ஓய்வு எடுக்கிறது.
- சிவன் கோவில் முன் நந்தி இருப்பதுபோல், அமைதியாக இருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் ஒரு இந்து கோவில் முன் நடு ராத்திரியில் சிங்கம் ஒன்று கோவிலுக்கு காவல் இருப்பது போன்ற வீடியோ வனத்துறை அதிகாரி (ஐபிஎஸ்) பிரவீன் காஸ்வான் பகிர்ந்துள்ளார். 27 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ பகிர்ந்து என்ன ஒரு தெய்வீக காட்சி. லயன் கோவிலுக்கு காவல் இருப்பது போல் தோன்றுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சில இது ஏ.ஐ. வீடியோவாக இருக்கலாம் என கருத்து தெரிவித்து்ளளனர்.
இந்த வீடியோ வனவிலங்குகளுக்கும் இப்பகுதியின் கலாச்சார மரபுகளுக்கும் இடையிலான வலுவான பிணைப்பைக் காட்டுகிறது என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றன. எப்படியோ நவராத்தி விழா காலத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.






