என் மலர்
இந்தியா

என்ன ஒரு தெய்வீக காட்சி..! கோவிலை சிங்கம் காவல் காக்கும் வீடியோவை பகிர்ந்த ஐபிஎஸ் அதிகாரி
- காட்டில் உள்ள ஒரு இந்து கோவில் முன் சிங்கம் ஓய்வு எடுக்கிறது.
- சிவன் கோவில் முன் நந்தி இருப்பதுபோல், அமைதியாக இருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் ஒரு இந்து கோவில் முன் நடு ராத்திரியில் சிங்கம் ஒன்று கோவிலுக்கு காவல் இருப்பது போன்ற வீடியோ வனத்துறை அதிகாரி (ஐபிஎஸ்) பிரவீன் காஸ்வான் பகிர்ந்துள்ளார். 27 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ பகிர்ந்து என்ன ஒரு தெய்வீக காட்சி. லயன் கோவிலுக்கு காவல் இருப்பது போல் தோன்றுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சில இது ஏ.ஐ. வீடியோவாக இருக்கலாம் என கருத்து தெரிவித்து்ளளனர்.
இந்த வீடியோ வனவிலங்குகளுக்கும் இப்பகுதியின் கலாச்சார மரபுகளுக்கும் இடையிலான வலுவான பிணைப்பைக் காட்டுகிறது என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றன. எப்படியோ நவராத்தி விழா காலத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Next Story






