என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஞ்சீவ்"

    • கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
    • விஜயை பலர் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் அவர் மீது குற்றம் இல்லை என ஒரு சாரார் விஜய்க்கு ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர்.

    கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உடைய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்தில் யார் மீது குற்றம் என்பது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

    விஜயை பலர் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் அவர் மீது குற்றம் இல்லை என ஒரு சாரார் விஜய்க்கு ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர்.

    முழுமையான உண்மை, அதிகாரப்பூர்வ விசாரணைக்குப் பின்னரே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக அவரது நண்பரும் நடிகருமான சஞ்சீவ் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் "உன் பேரை சாய்க்க பல யானைகள் சேர்ந்த போதே நீ சிங்கம்தான்" என விஜய்யின் புகைப்படத்தை பகிர்ந்து அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பிரபல நடிகர் ஒருவர் வைல்டு கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் சென்றிருக்கிறார்.
    தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக போட்டியாளர்கள் கலந்துகொள்வது வழக்கம். 40 அல்லது 50 நாட்கள் கடந்த பின்னரே வைல்டு கார்டு என்ட்ரியாக போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள்.

    தற்போது நடைபெற்று வரும் 5-வது சீசனில் முதல் வைல்டு கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் சில தினங்களுக்கு முன்பு கதிர் என்பவர் சென்றார். தற்போது மற்றொரு என்ட்ரியாக பிரபல சின்னத்திரை நடிகரும், நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ், பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்றிருக்கிறார். 

    சஞ்சீவ்

    இதற்கான வீடியோ மற்றும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பிரபல நடிகர் வைல்டு கார்டு என்ட்ரியாக செல்ல உள்ளாராம்.
    தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது 40 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக போட்டியாளர்கள் கலந்துகொள்வது வழக்கம். 40 அல்லது 50 நாட்கள் கடந்த பின்னரே வைல்டு கார்டு என்ட்ரியாக போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள்.

    தற்போது நடைபெற்று வரும் 5-வது சீசனில் முதல் வைல்டு கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப்போகும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

    சஞ்சீவ், விஜய்
    சஞ்சீவ், விஜய்

    அதன்படி, பிரபல சின்னத்திரை நடிகரும், நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ், பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு போட்டியாளராக செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ், குறும்பட இயக்குனர் சத்யசீலனுக்கு கைகொடுத்திருக்கிறார். #GVPrakash #Mannippaya
    “குளிர் 100 டிகிரி”, “ராஜா ராணி” சீரியல் நாயகன் சஞ்சீவ் மற்றும் “சுமங்கலி” சிரியல் நாயகி திவ்யா இருவரும் இணைந்து நடித்துள்ள குறும்படம் “மன்னிப்பாயா”. தந்தையின் கனவை நிறைவேற்ற துடிக்கும் இளைஞனின் வாழ்வில் காதல் வந்தால், அவன் வாழ்க்கை எவ்வாறு மாறும் என்பதை எதார்த்தமாகவும் அழகாககவும் இயக்குநர் கூறியுள்ளார். மேலும் ஒவ்வொரு காதல் பிரிவிற்கு பின் ஒரு அழகான வாழ்க்கை உள்ளது என்பதையும் உணர்வுப் பூர்வமாக படமாக்கியுள்ளார்.

    இக்குறும்படத்தை சத்யசீலன் தயாரித்து இயக்கியுள்ளார். இவர் “வீரையன்”, “சுட்டு பிடிக்க உத்தரவு”, “அதோ அந்த பறவை” ஆகிய திரைபடங்களில் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். இக்குறும்படத்திற்கு சூர்யாகாந்தி ஒளிப்பதிவு செய்துள்ளார், மலேசியாவை சேர்ந்த ஸ்டேன்லி ராய் பிரான்சிஸ் என்பவர் இசையமத்துள்ளார். எடிட்டிங் பொறுப்பினை ஸ்ரீநாத் ஏற்றுள்ளார். ப்ரோமோ எடிட் மற்றும் VFX பணிகளை சேவியர் கவனித்துள்ளார்.



    மேலும் இக்குறும்படத்திற்கு மலையாளத்தில் பிரியா வாரியர் நடித்த “ஒரு அடார் லவ்” படத்தின் பாடலை பாடிய ஜுபீர் மொஹாமத் ஒரு பாடலை பாடி உள்ளார். முன்னதாக இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதியும், பாடல்களை நடிகர் அசோக் செல்வனும் வெளியிட்டிருந்தனர். அவர்களின் வரிசையில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் இக்குறும்படத்தினை வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
    ×