என் மலர்
தலைப்புச்செய்திகள்
- குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.
- மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-9 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தி பிற்பகல் 2.12 வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : ரேவதி இரவு 8.15 வரை பிறகு அசுவினி
யோகம் : மரண/சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
வளர்பிறை சதுர்த்தி. குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம். பெருவயல் ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவம் ஆரம்பம். திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவம் ஆரம்பம். பெரிய தங்கப் பல்லக்கில் பவனி. நத்தம் ஸ்ரீ மாரியம்மன் திருவீதியுலா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்மன், திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் தலங்களில் காலை அபிஷேகம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் தலங்களில் ஸ்ரீ வரதராஜருக்கு திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகப் பெருமாள் தலங்களில் திருமஞ்சனம். மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதாயம்
ரிஷபம்-ஆதரவு
மிதுனம்-உவகை
கடகம்-போட்டி
சிம்மம்-லாபம்
கன்னி-பெருமை
துலாம்- நற்செயல்
விருச்சிகம்-நட்பு
தனுசு- உண்மை
மகரம்-தேர்ச்சி
கும்பம்-கீர்த்தி
மீனம்-சாதனை
- இடைக்கால தலைவராக முகைதீன் அகமது வானி நியமிக்கப்பட்டுள்ளார்.
- கேப்டன் அமாத் ஷகீல் பட்டுக்கு விதிக்கப்பட்ட தடை சட்டவிரோதமானது.
லாகூர்:
புரோ ஹாக்கி லீக்கில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஆடிய பாகிஸ்தான் அணி அங்கு நடந்த 4 ஆட்டங்களிலும் (ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா 2 ஆட்டம்) படுதோல்வி அடைந்தது. போட்டி முடிந்து தாயகம் திரும்பிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் அமாத் ஷகீல் பட் பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத்தை கடுமையாக சாடினார்.
'ஆஸ்திரேலியா சென்ற நாங்கள் தங்குவதற்கு ஓட்டலுக்கு முன்பணம் கட்டாததால் சாலையில் சில மணி நேரம் தவித்தோம். அதன் பிறகு ஏற்பாடு செய்து தரப்பட்ட இடத்தில் போதிய வசதிகள் கிடையாது. பாத்திரங்களை கழுவி சமையலறையை சுத்தம் செய்ய வேண்டியது இருந்தது. துணிகளையும் நாங்களே துவைக்கும் நிலை ஏற்பட்டது. பிறகு எப்படி போட்டியில் முழு கவனம் செலுத்த முடியும்' என்று தெரிவித்து இருந்தார். அத்துடன் பாகிஸ்கான் ஹாக்கி சம்மேளன நிர்வாகக்கை முழுமையாக கலைக்க வேண்டும் என்று வலிறுத்திய அவர் பெரும்பாலான வீரர்களுக்கு கடந்த ஒரு ஆண்டாக தினசரி படி வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத்தின் புகழுக்கு களம் ஏற்படுத்தியதாக கேப்டன் ஷகில் பட்டுக்கு 2 ஆண்டு தடை விதித்து பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளன தலைவர் தாரிக் புக்தி நடவடிக்கை எடுத்ததுடன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளன தலைமை புரவலரும், பிரதமருமான ஷபாஸ் ஷெரீப்புக்கு அனுப்பினார்.
இந்த நிலையில் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டு, இடைக்கால தலைவராக முகைதீன் அகமது வானி நியமிக்கப்பட்டுள்ளார். டைரக்டர் ஜெனரலாக முஸ்ரத்துல்லா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அத்துடன் கேப்டன் ஷகீல் பட் மீதான 2 ஆண்டு தடையை அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு விதிக்கப்பட்ட தடை சட்டவிரோதமானது. அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று இடைக்கால தலைவர் முகைதீன் அகமது வானி குறிப்பிட்டுள்ளார்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
சந்தோஷம் தரும் நாள். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். நண்பர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் மறையும். மதிப்பும், மரியாதையும் உயரும்.
ரிஷபம்
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். உத்தியோகத்தில் உடன் பணியாற்றுபவர்கள் ஒத்துழைப்பு செய்வர். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும்.
மிதுனம்
கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி மகிழும் நாள். முயற்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும்.
கடகம்
பிரபலங்களின் சந்திப்பால் பிரச்சனைகள் தீரும் நாள். வரவு திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும்.
சிம்மம்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். பணநெருக்கடி அதிகரிக்கும். கடமையை செய்வதில் இடையூறுகள் ஏற்படும். உறவினர் பகை உண்டு.
கன்னி
எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். பொது வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனை அகலும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
துலாம்
அலைபேசி வழித்தகவல்களால் ஆனந்தம் ஏற்படும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். புதியவர்களை நம்பி ஒப்படைத்த காரியம் முடிவடையும்.
விருச்சிகம்
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு.
தனுசு
மனக்கசப்புகள் மாறி மகிழ்ச்சி கூடும் நாள். வியாபார முன்னேற்றம் கருதி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய முயற்சி வெற்றி பெறும்.
மகரம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பங்குதாரர்களிடம் ஏற்பட்ட பகை மாறும்.
கும்பம்
குழப்பங்கள் அகலும் நாள். குடும்பப் பிரச்சனைகள் தீரும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர்.
மீனம்
விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றங்கள் பற்றி சிந்திப்பீர்கள். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை. குடியிருக்கும் வீட்டால் பிரச்சனைகள் வரலாம்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
- அரையிறுதிச் சுற்றில் செக் குடியரசு வீரர் மென்சிக் தோல்வி அடைந்தார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் செக் குடியரசின் ஜாகுப் மென்சிக், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஆர்தர் பில்ஸ் 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆர்தர் பில்ஸ், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசை சந்திக்கிறார்.
- இந்தியா, பாகிஸ்தான் லீக் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
- இதில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் லீக் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
இந்தப் போட்டி மைதானத்தில் மட்டுமல்லாமல் டிஜிட்டல் தளங்களிலும் புதிய சரித்திரம் படைத்துள்ளது.
இதுதொடர்பாக, ஜியோஸ்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் மட்டும் இந்தப் போட்டியை 16.3 கோடி பேர் நேரலையில் கண்டு ரசித்துள்ளனர். இது ஐசிசி டி20 வரலாற்றில் ஒரு போட்டிக்குக் கிடைத்த அதிகபட்ச பார்வையாளர்கள் ஆகும்.
கடந்த 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான இறுதிப்போட்டி பெற்ற பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட இந்தப் போட்டி அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில், இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்காவின் கோகோ காப் அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய உக்ரைன் வீராங்கனை 6-4 என முதல் செட்டைக் கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை கோகோ காப் 7-6 (15-13) என்ற செட் கணக்கில் வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை உக்ரைன் வீராங்கனை 6-4 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் அமெரிக்காவின் கோகோ காப் தொடரில் இருந்து வெளியேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜெசிகா பெகுலா, உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா உடன் மோதுகிறார்.
- சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க அதிபர் டிரம்ப் பீஜிங் செல்கிறார்.
- உலகின் சக்திவாய்ந்த இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல நட்புறவு உள்ளது என்றார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 4-ம் தேதி அன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடினார்.
அப்போது, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவியை சீனா வரவேண்டும் என அதிபர் ஜி ஜின்பிங் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மார்ச் 31-ம் தேதி சீனா புறப்பட்டுச் செல்ல திட்டமிட்டுள்ளார். ஏப்ரல் 2-ம் தேதி வரை சீனாவில் பயணம் மேற்கொள்கிறார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்காக அதிபர் டிரம்ப் ஏப்ரல் மாதம் பீஜிங் செல்வதாகத் தகவல் வெளியானது.
இதுதொடர்பாக அமெரிக்க ஊடகத்திற்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், உலகின் சக்திவாய்ந்த இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல நட்புறவு உள்ளது என தெரிவித்தார்.
- டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று தொடங்குகிறது.
- இதில் விளையாடும் 8 நாடுகளும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. 20 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரில் நேற்றுடன் லீக் ஆட்டம் முடிவடைந்தது
நடப்பு சாம்பியன் இந்தியா, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் (ஏ பிரிவு) ஜிம்பாப்வே, முன்னாள் சாம்பியன் இலங்கை (பி), முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து (சி), தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து (டி) ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.
முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து, இத்தாலி, நேபாளம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா ஆகிய அணிகள்வெளியேற்றப்பட்டன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று (21-ம் தேதி) தொடங்குகிறது. இதில் விளையாடும் 8 நாடுகளும் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டன.
குரூப் 1 பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகளும், குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து , பாகிஸ்தான், இலங்கை அணிகளும் இடம்பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.
சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொழும்பில் நடைபெறுகிறது. தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி சேப்பாக்கத்தில் நடந்த 3 போட்டியிலும் வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது.
சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி நெதர்லாந்து, அமெரிக்கா, நமீபியா அணிகளை வீழ்த்தியது. இந்தியாவிடம் 61 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இலங்கையில் தொடர்ந்து ஆடி வருவது அந்த அணிக்கு சாதகமாக சூழலாகும். அதே நேரத்தில் நியூசிலாந்து அணி எந்த ஆடுகளத்திலும் சிறப்பாக விளையாடக் கூடியது.
டி20 போட்டிகளில் இரு அணிகளும் 49 போட்டியில் மோதியுள்ளன. இதில் நியூசிலாந்து 23-ல், பாகிஸ்தான் 24-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி முடிவு இல்லை.
இரு அணிகளும் இந்தத் தொடரில் ஒரு போட்டியில் தோற்றன. சூப்பர் 8 சுற்றில் வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் கடுமையாக போராடும். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
- அரையிறுதி சுற்றில் ஸ்பெயினின் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
- ஏஐ உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடந்து வருகிறது.
- அங்கு நுழைந்த இளைஞர் காங்கிரசார் மேலாடையைக் கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இந்த மாநாடு டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த மாநாட்டு நிகழ்ச்சியில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ், கிரீஸ் பிரதமர் கிரிகோஸ், இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே, பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதற்கிடையே, டெல்லி பாரத் மண்டப பகுதிக்குள் திடீரென புகுந்த இளைஞர் காங்கிரசார் தங்கள் மேலாடையைக் கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதுடன், பிரதமர் மோடிக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.
இந்நிலையில், காங்கிரசின் இந்தப் போராட்டத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பா.ஜ.க. தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் அமித் மாளவியா கூறுகையில், அரசியல் எதிர்ப்பு என்பது ஜன்நாயக உரிமை. அதற்காக இப்படி செய்வது தேசிய அவமானம்.
காங்கிரஸ் இதற்கு வெட்கப்பட வேண்டும். மதிப்புமிக்க ஒரு மாநாட்டை இந்தியா நடத்தும் சமயத்தில், கண்ணியத்திற்கு எதிரான ஒரு
செயலில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது, நம் நாட்டின் உலகளாவிய பிம்பத்தை அவமானப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனை அமெண்டா அனிசிமோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அனிசிமோவா முதல் செட்டை 6-1 என எளிதில் வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பெகுலா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
- பல்வேறு நாடுகளின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தினார்.
- இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
வாஷிங்டன்:
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார்.
உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் அதிகப்படியான வர்த்தக வரிகளை விதித்து வந்தார். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
உலக நாடுகளின் மீது அமெரிக்காவின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் வரிகளை விதிப்பதற்கு அதிபர் டிரம்புக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது எனக்கூறிய அமெரிக்க உச்சநீதிமன்றம், அவர் விதித்துள்ள வரிகள் செல்லாது என உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்க கீழமை நீதிமன்றம் அதிபர் டிரம்ப் விதிக்கும் வரிகள் அனைத்தும் சட்டவிரோதமானவை எனக்கூறி கடந்த ஆண்டு மே மாதம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.






