என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Viewers"

    • பெண்கள் உலக கோப்பை போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
    • இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து புதிய உச்சம்.

    சமீபத்தில் நடைபெற்ற ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பையை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது. ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்தது. இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

    செப்டம்பர் 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெற்ற பெண்கள் உலக கோப்பை போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    இந்தநிலையில் இந்தியாவில் மகளிர் உலககோப்பை போட்டியில் அதிக அளவிலான பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதிய இறுதிப்போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் 18.5 கோடி பேர் நேரலையில் பார்த்து ரசித்துள்ளனர். கடந்த ஆண்டு இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான ஆண்கள் 20 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியையும் 18.5 கோடி பேர் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையில் கண்டுகளித்து உள்ளனர்.

    இதன் மூலம் ஆண்கள் உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு இணையான பார்வைகளை மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியும் பெற்றுள்ளது.

    மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றொரு சிறப்பான சாதனையையும் படைத்துள்ளது. இந்த போட்டி தொடர் முழுவதையும் சேர்த்து ஜியோஹாட்ஸ்டாரில் 44.6 கோடி பார்வைகள் பதிவாகியுள்ளன.

    கடந்த 3 உலகக் கோப்பைத் தொடரின் பார்வைகளையும் ஒன்றாக சேர்த்து கிடைக்கும் பார்வைகளின் எண்ணிக்கையைவிட இது அதிகமாகும். இதன் மூலம் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது தரவுகள் மூலம் தெளிவாகிறது. மகளிர் கிரிக்கெட்டுக்கான வரவேற்பும் வெகுவாக அதிகரித்துள்ளது.

    இந்தியா-தென் ஆப்பி ரிக்கா மோதிய இறுதிப் போட்டி சராசரியாக ஒரு நாளில் ஐ.பி.எல். தொட ருக்கு கிடைக்கும் பார்வை களைக் காட்டிலும் அதிக பேரால் பார்க்கப்பட்டுள்ள தும் குறிப்பிடத்தக்கது.

    • இதில் ஆட்டிறைச்சி, மீன் குழம்பு, சிக்கன் குழம்பு பன்னீர் மசாலா, பிரைடு ரைஸ், போன்றவை சிறப்பு வாய்ந்தது ஆகும் .
    • இதன் மூலம் தற்போது இவருக்கு 1.5 மில்லியன் பாலோயர்ஸ் கிடைத்துள்ளனர்.

    வட மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ் ரவானி. 25 ஆண்டுகளுக்கும் மேலாக லாரி டிரைவராக உள்ளார். வடமாநில பகுதிகளுக்கு இவர் சரக்குகளை லாரியில் ஏற்றி நீண்ட நாள் பயணம் செய்வார்.

    அப்போது உணவுக்காக லாரியின் முன்பகுதி கேபினில் கியாஸ் அடுப்பை வைத்து சமையல் செய்தார்.அதில் பெரும்பாலும் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார்.




    தான் தயாரித்த ருசியான உணவுகளை அவ்வப்போது வீடியோக்கள் எடுத்து யூடியூப் தளத்தில் பதிவிட்டு உள்ளார். இவரது சமையல் வீடியோக்களை பார்த்து இவரை சமூக வலைதளத்தில் ஏராளமானோர் பின்தொடர் தொடங்கினர். இதன் மூலம் அவர் பிரபல சமையல் கலைஞராகவே மாறினார்.

    இதைத் தொடர்ந்து தினமும் ஆர்வத்துடன் பல வீடியோக்கள் பதிவிட்டார்.இதுவரை 675 வீடியோக்கள் யூடியூப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

    இதன் மூலம் தற்போது இவருக்கு 1.5 மில்லியன் பாலோயர்ஸ் கிடைத்துள்ளனர். இவரது உணவு தயாரிப்பு முறையை தினமும் வாசகர்கள் 'பாலோ' செய்து வருகின்றனர்.




    ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம், மற்றும் பேஸ்புக் பக்கங்களில் வீடியோக்களைப் பகிர்ந்து தனது சமையல் பாணி, உணவு தயாரிப்பு செயல்முறைகள் பற்றி பார்வையாளர்களுக்கு விளக்கம் அளித்து வருகிறார்.

    இதில் ஆட்டிறைச்சி, மீன் குழம்பு, சிக்கன் குழம்பு பன்னீர் மசாலா, பிரைடு ரைஸ், போன்றவை சிறப்பு வாய்ந்தது ஆகும் . அவர் உணவு தயாரிக்கும் போது கூறும் அறிவுரைகள், பேசும் விதம் பார்வையாளர்களை வெகுவாக கவந்து வருகிறது.

    இதன் மூலம் இணைய தளத்தில் தினமும் வாசகர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. அவருக்கு வருமானமும் பெருகியது. இந்த வருமானம் மூலமாக தற்போது ஒரு புதிய வீடு ஒன்று வாங்கி உள்ளார்.



    லாரி டிரைவராக இருந்தாலும் தனது திறமை மூலம் ஓய்வு நேரத்தை பயன் உள்ளதாக மாற்றி பெயர் புகழ், வருமானம் பெற்ற ராஜேஷ் ரவானி உண்மையில் பாராட்டுக்குரியவர்.

    இந்நிலையில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இதனை பார்த்து வியந்து பாராட்டி உள்ளார். இணைய தளத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார்.

    ×