என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
    • பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியலை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை பிரதிபலிக்கிறது.

    டெல்லி சட்டசபை தேர்தலில் 48 இடங்களில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கிறது. இதனால் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க உள்ளது. இதனால் பா.ஜ.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பா.ஜ.க. வெற்றி குறித்து மாநில தலைவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஊழல் நிறைந்த ஆம் ஆத்மி கட்சியை டெல்லி மக்கள் நிராகரித்து, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து மூன்றாவது முறையாக அழித்து, சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளனர். இன்றைய முடிவுகள், இந்திய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் பரப்பும் பிளவுபடுத்தும் அரசியலை விட, நமது பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியலை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை பிரதிபலிக்கிறது.

    இந்த அற்புதமான வெற்றிக்காக டெல்லி பா.ஜ.க.வின் அனைத்துத் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியுள்ளார். 



    • ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
    • பாஜக 48, ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

    ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.

    பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. பாஜக 48, ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்துள்ளார். எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி முகத்தை எட்டியுள்ளார்.

    இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலை வணங்கி ஏற்கிறேன் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், " டெல்லி சட்டசபையில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவது மட்டுமல்லாமல் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்.

    டெல்லி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் பாஜகவினர் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன்" என்றார்.

    • டெல்லியில் பொய்களின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
    • ஷீஷ் மஹால் பொய்கள், வஞ்சகம், ஊழல் ஆகியவற்றை அழித்து பேரழிவு இல்லாத (Aapda-free) டெல்லிக்காக மக்கள் பாடுபட்டுள்ளனர்.

    70 தொகுதிகளை கொண்ட டெல்லி மாநிலத்தில் கடந்த 5-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவானது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என வெளியிடப்பட்டது. ஆனால், கருத்து கணிப்பை தவறானது என்பது நிரூபணம் ஆகும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்தது.

    இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக முன்னிலை பெற்றது. தற்போதைய நிலையில் பாஜக 48 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி 22 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா போன்ற ஆம் ஆத்மியின் முன்னணி தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். 1998-ம் ஆண்டுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கிறது.

    இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து அமித் ஷா கூறியதாவது:-

    டெல்லியில் பொய்களின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. டெல்லி மக்கள் இதயத்தில் பிரதமர் மோடி உள்ளார். ஷீஷ் மஹால் பொய்கள், வஞ்சகம், ஊழல் ஆகியவற்றை அழித்து ஆப்டா இல்லாத (Aapda-free) டெல்லிக்காக மக்கள் பாடுபட்டுள்ளனர். நாட்டு மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருபவர்களுக்கு இதுதான் உதாணரம் என டெல்லி பாடம் கற்பித்துள்ளது.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • டெல்லியில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என பா.ஜ.க. தீவிரமாக களமாடியது.
    • இனி வருகிற தேர்தலிலாவது இதனை உணர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் ஒவ்வொரு தேர்தலையும் சந்திக்க வேண்டும்.

    திண்டுக்கல்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    டெல்லியில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என பா.ஜ.க. தீவிரமாக களமாடியது. சமூக ஊடகங்களில் கூட வாக்காளர்களுக்கு அந்த கட்சியினர் பணம் கொடுத்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இந்தியா கூட்டணியில் ஒற்றுமையாக இருக்க வேண்டிய காங்கிரஸ், ஆம் ஆத்மி ஈகோ பிரச்சனையால் பிரிந்து தேர்தலை சந்தித்தது. இது பா.ஜ.க. வெற்றிக்கு பெரிதும் உதவியாக அமைந்து விட்டது. பா.ஜ.க.வின் வெற்றி அதிர்ச்சி அளிக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலோ, சட்டமன்ற தேர்தலோ இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டால் தான் பா.ஜ.க. என்ற மதவாத சக்தியை வீழ்த்த முடியும். இனி வருகிற தேர்தலிலாவது இதனை உணர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் ஒவ்வொரு தேர்தலையும் சந்திக்க வேண்டும்.

    தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் தனி வாரியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தமிழக அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • தேர்தல் வெற்றிக்கு காரணம் தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தான்.
    • தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வெகுஜன மக்களிடையே வெகுவாக சென்றடைந்திருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டது.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது இருந்தே தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.

    தற்போதைய நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 61,739 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 13,443 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

    இந்நிலையில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தேர்தல் வெற்றிக்கு காரணம் தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தான்.

    * தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வெகுஜன மக்களிடையே வெகுவாக சென்றடைந்திருக்கிறது. அதனுடைய வெளிப்பாடு தான் இந்த தேர்தலின் முடிவு.

    * இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி போட்டியிடவில்லை. அவர்கள் அவர்களுடைய கட்சியினரிடம் ஓட்டு போட போக வேண்டாம். இல்லையென்றால் நோட்டாவுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொன்னார்கள். அதனால் நோட்டாவுக்கு அதிகமான ஓட்டு வந்து இருக்கலாம்.

    * தி.மு.க. எதிர்வரும் 2026 தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதற்கு சான்றாக ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அச்சாரமாக இந்த தேர்தல் முடிவை கொடுத்துள்ளனர். 2026 தேர்தலிலும் தற்போதைய நிலை தொடரும் என்று தெரிவித்தார்.

    • ரமேஷ் பிதுரி 48478 வாக்குகளை பெற்றார்
    • காங்கிரஸ் வேட்பாளர் அல்கா லம்பா வெறும் 4367 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

    ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.

    பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

    பாஜக 48, ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது. புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலாவருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஜங்புராவில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.

    இந்நிலையில் ஆம் ஆத்மிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முதல்வர் அதிஷி வெற்றி பெற்றுள்ளார்.

    எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை விட 3580 வாக்குகள் முன்னிலையில் 52058 வாக்குகளுடன் அதிஷி வெற்றி பெற்றுள்ளார். ரமேஷ் பிதுரி 48478 வாக்குகளை பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் அல்கா லம்பா வெறும் 4367 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

    • கடந்த மக்களவை தேர்தலில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி வைத்து போட்டியிட்டது.
    • டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து களம் காண்பதாக அறிவித்தது.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

    ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு இன்னைக்கி தொடங்கியதில் இருந்தே பாஜக பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

    தற்போதுவரை பாஜக 48 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 22 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் , மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சியை பிடிக்கவுள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்காதது தான் ஆம் ஆத்மியின் இந்த தோல்விக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து டெல்லியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி இம்முறை தனித்து களம் காண்பதாக அறிவித்தது.

    பல தொகுதிகளில் பாஜகவிடம் தோல்வி அடைந்த ஆம் ஆத்மி வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை விட அதே தொகுதியில் காங்கிரஸ் கட்சி வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. ஒருவேளை ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்தால் மீண்டும் டெல்லியில் ஆட்சியை பிடித்திருக்கலாம் என்று தேர்தல் முடிவுகளின் புள்ளி விவரங்கள் நமக்கு கூறுகின்றன.

    • பாஜக 47 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 23 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
    • கடந்த 2 தேர்தல்களிலும் (2015, 2020) காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வில்லை.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டது.

    கருத்துக்கணிப்புகளின்படி டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆம் ஆத்மியை ஆட்சியை இழந்துள்ளது. 

    டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலை மீண்டும் பரிதாபத்துக்குரியதாக மாறி இருக்கிறது. அந்த கட்சி தொடர்ந்து 3-வது முறையாக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் 7 தொகுதிகளிலும் தோல்வியை தழுவின. சட்டசபை தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன.

    ராகுல்காந்திக்கும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலுக்கும் இடையே கடும் பனிப்போர் இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரசாரத்தின் போது மாறி, மாறி விமர்சனங்களை முன் வைத்தனர்.

    அனைத்து தொகுதிகளிலும் (70) களம் இறங்கிய காங்கிரஸ் கட்சியால் இந்த முறையும் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா ஆகிய 3 பேர் முயன்றும் காங்கிரஸ் கட்சியால் தொடர்ந்து 3-வது முறையாக ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியவில்லை. அவர்களால் எந்த தாக்கத் தையும் ஏற்படுத்த முடிய வில்லை.

    இன்று காலை ஓட்டு எண்ணிகை தொடக்கத்தில் காங்கிரஸ் 2 இடங்களில் முன்னிலை வகித்தது. நேரம் செல்ல செல்ல அந்த 2 தொகுதியிலும் முன்னிலை வாய்ப்பை இழந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று தெரிவித்தது. அதன்படியே காங்கிரஸ் கட்சி ஹாட்ரிக் (தொடர்ந்து 3-வது முறை) பூஜ்ஜியத்தை தொட்டது. இந்த தடவையும் முட்டைதான் பரிசாக கிடைத்தது.

    1998 டிசம்பர் முதல் 2013 டிசம்பர் வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியில் ஆட்சி செய்த காங்கிரசுக்கு இது பெரும் பின்னடைவாகும். 15 ஆண்டுகள் ஷீலா தீடசித் முதல்-மந்திரியாக பொறுப்பு வகித்தார். 2013 தேர்தலில் அந்த கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    அதை தொடர்ந்து நடந்த 2 தேர்தல்களிலும் (2015, 2020) காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வில்லை. 2015-ல் 70 தொகுதியில் போட்டியிட்டு 9.7 சதவீத வாக்குகளையும், 2020 தேர்தலில் 66 இடங்களில் போட்டியிட்டு 5.44 சதவீத வாக்குகளையும் பெற்று ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இந்த தேர்தலில் அதே நிலை நீடித்தது. தொடர்ந்து 3-வது முறையாக காங்கிர சுக்கு டெல்லி தேர்தலில் மோச மான நிலை ஏற்பட்டுள்ளது.

    ஓட்டு சதவீதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த தேர்தலில் அந்த கட்சியின் ஓட்டு சதவீதம் விவரம் முழுமையான முடிவுக்கு பிறகு தெரியவரும். காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒருமுறை சுய பரிசோதனை செய்ய வேண்டிய நெருக்கடியான நிலையில் உள்ளது.

    • மோடி மற்றும் அவரது அரசாங்கத்தை சாவந்த் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
    • குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றை அவர் கடுமையாக விமர்சித்தார்.

    இந்திய-அமெரிக்க அரசியல்வாதி ஷாமா சாவந்த் விசா வழங்க மறுத்த மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளார்.

    பெங்களூருவில் உள்ள தனது நோய்வாய்ப்பட்ட 82 வயதான தாயாரைப் பார்க்க 3 ஆவது முறையாக இந்திய விசா மறுக்கப்படுவதாக சாவந்த் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது மோடி அரசாங்கத்தின் 'நிராகரிப்பு பட்டியலில்' [ரிஜெக்ட் லிஸ்ட்டில்] தான் இருப்பதாக தனக்குச் சொல்லப்பட்டதாக சாவந்த் கூறுகிறார்.

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிறந்த சாவந்த் அமெரிக்க அரசியலில், குறிப்பாக சியாட்டில் நகர அரசியலில் பல ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

    மும்பை பல்கலைக்கழகத்தில் பயின்று 1994 ஆம் ஆண்டு கணினி அறிவியலில் பட்டம் பெற்றார். பட்டப்படிப்புக்குப் பிறகு, சாவந்த் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். 2003 ஆம் ஆண்டு வட கரோலினா மாநில பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

    2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு வரை பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

     அமெரிக்காவில் சோசலிஸ்ட் ஆல்டர்நேட்டிவ் என்ற இடதுசாரி அரசியல் கட்சியில் சேர்ந்தார். அவர் 2014 முதல் 2024 வரை சியாட்டில் நகர சபையில் பணியாற்றினார்.

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்தை சாவந்த் கடுமையாக விமர்சித்து வருகிறார். குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றை அவர் கடுமையாக விமர்சித்தார்.

    இந்நிலையில் தனது பெயரை மோடி அரசின் ரிஜெக்ட் லிஸ்டில் உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர் என்றும் நோய்வாய்ப்பட்ட தனது தாயை பார்க்கவிடாமல் தடுக்கின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் இதை கண்டித்து சியாட்டிலில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சாவந்த் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோவும் வெளியாகி உள்ளது. 

    • டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.
    • தமிழர்கள் தமிழில் வழிபாடு செய்வதற்கும் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கும் இயலாத நிலை இருப்பது வேதனை அளிக்கிறது.

    மதுரை:

    மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. ஆம் ஆத்மி இந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஈகோ பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளி விட்டு நாட்டையும், மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும்.

    திருப்பரங்குன்றத்தில் உள்ள பொதுமக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். பா.ஜ.க. போன்ற சங்பரிவார கும்பல்கள் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தமிழகத்தில் மதப் பதட்டங்களை உண்டு பண்ண முயற்சிக்கிறார்கள். பல சந்தர்ப்பங்களின் அதிகாரிகள் எடுக்கிற சட்ட ஒழுங்கு சார்ந்த நிலைப்பாடுகள் தான் சமூக பதட்டங்களை ஏற்படுத்துகின்றன.

    எல்லா பிரச்சனைகளையும் சட்டம் ஒழுங்கு அடிப்படையில் மட்டுமே வருவாய் துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் அணுகுகிறார்கள். திருப்பரங்குன்றத்திலே மாவட்ட ஆட்சி நிர்வாகம் எடுத்த நிலைப்பாடு இந்த பதற்றத்திற்கு காரணம் என்பதை மாற்று கருத்து இல்லை. நாங்களும் அந்த விமர்சனத்தை முன்வைக்கிறோம்.

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாலியல் குற்றங்கள் பெருகி வருகிறது. பாலியல் குற்றங்களை பெருகுவதை காவல்துறை தடுப்பதற்கு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் பா.ஜ.க. விரும்புகிற ஒரே கல்வி முறையை கொண்டு வருவதற்கு தேசிய கல்விக் கொள்கை அமைந்திருக்கிறது. இதற்கு உடன்படாத தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ரூ. 2,152 கோடி இன்னும் மத்திய அரசால் விடுவிக்கப்படாமல் உள்ளது.

    பா.ஜ.க அரசு இந்த முறை பீகாருக்கும் ஆந்திராவுக்கும் தான் அதிகமான நிதியை ஒதுக்கி உள்ளார்கள். பா.ஜ.க. அல்லாத மாநிலங்களையும், தமிழகத்தையும் வஞ்சிக்கிறார்கள். கோவை அருகே பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு தமிழில் செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்று கூறினார்கள். நீதிமன்றம் முதலில் அந்த அனுமதியை வழங்கியது மேல்முறையீட்டு வழக்கில் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்ட தமிழர்கள் தமிழில் வழிபாடு செய்வதற்கும் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கும் இயலாத நிலை இருப்பது வேதனை அளிக்கிறது. நீதிமன்றமும் அதற்கு துணையாக இருப்பது கவலை அளிக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
    • சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

    நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

    10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
    • ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தோல்வியை தழுவினார்.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

    ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.

    பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. பாஜக 48, ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்துள்ளார். எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி முகத்தை எட்டியுள்ளார்.

    பர்வேஷ் வர்மா 28238 வாக்குகள் பெற்ற நிலையில் 3789 வாக்குகள் பின்தங்கி 24449 வாக்குகளுடன் அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவைச் சந்தித்தார்.

    அதேபோல ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தோல்வியை தழுவினார்.

    பாஜக வேட்பாளர் தர்விந்தர் சிங் 34,632 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்ற நிலையில் 572 வாக்குகள் வித்தியாசத்தில் மணீஷ் சிசோடியா பின்தங்கினார்.

    ஆம் ஆத்மியின் முக்கிய முகங்களான கெஜ்ரிவால் மற்றும் சிசோடியா தோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கைதாகி திகார் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×