என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பட்டியல் சமூகத்தினரை வணிகர்களாக வளர்த்தெடுக்கும் வகையில் வணிக வளாகங்களை அமைத்துத் தர வேண்டும்.
- கோரிக்கையை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வலியுறுத்தினேன்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., சந்திரகுமாரின் பதவியேற்பு விழாவில் வி.சி.க., எம்.பி., திருமாவளவன் கலந்து கொண்டார்.
அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், "பட்டியல் சமூகத்தினரை வணிகர்களாக வளர்த்தெடுக்கும் வகையில் வணிக வளாகங்களை அமைத்துத் தர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து திருமாவளவன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பட்டியல் சமூகத்தினருக்கென வணிக வளாகங்களை அமைத்துத் தர வேண்டும்.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம், நன்னிலம் திட்டம் எனத் தமிழ்நாடு அரசு நடைமுறைப் படுத்தும் திட்டங்கள் சிறப்பான பலன்களைத் தந்துள்ளன. அந்தத் திட்டங்களுக்கான பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஏதுவாகக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுகிறோம்.
அத்துடன் பட்டியல் சமூகத்தினரை வணிகர்களாக வளர்த்தெடுக்கும் வகையில், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் வணிக வளாகங்களை அமைத்துத் தருவதற்குத் திட்டம் ஒன்றை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்னும் கோரிக்கையை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவர்களை சந்தித்து வலியுறுத்தினேன்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தலைநகர் பியூனஸ் அயர்ஸில் இருந்து சுமார் 6 மைல் தெற்கே உள்ளது.
- இரத்தத்தில் மூழ்கியது போல் இருந்தது. இதுபோன்ற ஒன்றை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை.
அர்ஜென்டினா தலைநகரான பியூனஸ் அயர்ஸின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஓடை நீர் ரத்த சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தலைநகர் பியூனஸ் அயர்ஸில் இருந்து சுமார் 6 மைல் தெற்கே மக்கள் அதிகம் வசிக்கும் புறநகர் பகுதியில் சரண்டி என்ற நதி ஓடுகிறது.
அர்ஜென்டினாவிற்கும் உருகுவேவிற்கும் இடையிலான ஒரு முக்கிய நீர்நிலையான ரியோ டி லா பிளாட்டா நதியின் துணை நதியான இது பல கிலோமீட்டர் தூரம் பயணித்து கடைசியில் ஆற்றில் கலக்கும். பயணிக்கும் வழியில் ஏராளமான தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன.
அங்கிருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் இந்த ஓடையில் கலக்கிறது. இதற்கு முன்னரும் எண்ணெய் போலவும் சில நேரம் சாம்பல் அல்லது ஊதா நிறத்திலும் இந்த நீர்நிலை மாறியுள்ளது. இதுதொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
ஓடை நிறம் மாறியது குறித்து பேசிய உள்ளுரர்வாசிகள், திடீரென சில நாட்களுக்கு முன்பு காலை இதுபோல நீரோடை நிறம் மாறியிருந்தது. அது இரத்தத்தில் மூழ்கியது போல் இருந்தது. இதுபோன்ற ஒன்றை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை என்கின்றனர்.
இந்த நீரோடையை தவிர்த்து இந்தப் பகுதியில் உள்ள ஆறுகள் பலவும் மாசுபாடுகள் நிறைந்தவை. உதாரணமாக மடான்சா-ரியாசுலோ நதிப் படுகை, லத்தீன் அமெரிக்காவில் மிகவும் மாசுபட்ட நீர்நிலைகளில் ஒன்றாக அழைக்கப்படுகிறது.
- கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 133 ரன்கள் விளாசினார்.
- கான்வே 97 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
மூன்று அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். கடந்த 8-ந்தேதி நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தானை 78 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியிருந்தது.
லாகூர் கடாபி மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் சான்ட்னெர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தென்ஆப்பிரிக்கா அணியில் போஸ்ச், மிலானி மோங்க்வானா, மேத்யூ பிரீட்ஸ்கீ, முத்துசாமி ஆகியோர் அறிமுகம் ஆகினர். இதில் தொடக்க வீரரான பிரீட்ஸ்கி சிறப்பாக விளையாடி 148 பந்தில் 11 பவுண்டரி, 5 சிக்சருடன் 150 ரன்கள் விளாசினார்.
அறிமுக போட்டியில் 150 ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். வியான் முல்டர் 64 ரன்களும், ஜேசன் ஸ்மித் 41 ரன்கள் அடிக்க தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், வில் ஓ'ரூர்கே 72 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. வில் யங், டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வில் யங் 19 ரன்கள் எடுது்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து டேவன் கான்வே உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 18.2 ஓவரில் 100 ரன்களை கடந்த நியூசிலாந்து 30.1 ஓவரில் 200 ரன்களை கடந்தது.
கான்வே 64 பந்தில் அரைசதமும், கேன் வில்லியம்சன் 44 பந்தில் அரைசதமும் அடித்தனர். தொடர்ந்து இருவரும் சதத்தை நோக்கி சென்றனர்.

கேன் வில்லியம்சன் 72 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் விளாசினார். மறுமுனையில் கான்வே சதத்தை எட்டுவார் என எதிர்பார்த்த நிலையில் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, 1 சிக்சர் இடங்கும். கான்வே- கேன் வில்லியம்சன் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது.
அடுத்து வந்த டேரில் மிட்செல் 10 ரன்னிலும், டாம் லாதம் ரன்ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.
என்றாலும் கேன் வில்லியம்சன் கடைசி வரை விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். நியூசிலாந்து 48.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேன் வில்லியம்சன் 133 ரன்னுடனும், பிலிப்ஸ் 28 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
- ரெயில் நிலையத்தில் டேவிட் தனது சகோதரியுடன் போனில் ஸ்பீக்கர் ஆன் செய்து பேசிக்கொண்டிருந்தார்.
- ரெயில்வே அதிகாரி கிண்டலடிக்கிறார் என்று டேவிட் நினைத்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் நான்டெஸில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் தனது செல்போனில் ஸ்பீக்கர் ஆன் செய்து பேசியதற்காக டேவிட் என்ற நபருக்கு 207 அமெரிக்க டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.16,640 க்கு மேல்) அபராதம் விதிக்கப்பட்டது.
ரெயில் நிலையத்தில் டேவிட் தனது சகோதரியுடன் போனில் ஸ்பீக்கர் ஆன் செய்து பேசிக் கொண்டிருந்தபோது ரெயில்வே அதிகாரி ஒருவர் அவரிடம் வந்து ஸ்பீக்கரை ஆப் செய்யாவிட்டால் 154 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ரெயில்வே அதிகாரி கிண்டலடிக்கிறார் என்று டேவிட் அப்போது நினைத்துள்ளார். ஆனால் டேவிட் அதன்பின்னும் ஸ்பீக்கரை ஆப் செய்யாததால் அவருக்கு 207 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
- நடன இயக்குனர் சதீஷ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்
- ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்இப்படத்தை தயாரித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ், இவர் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்திற்கு கிஸ் என்ற தலைப்பை வைத்துள்ளனர். இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு பணி சமீபத்தில் முடிவடைந்த நிலையில்.
இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். படத்தின் இசையை ஜென் மார்டின் மேற்கொள்கிறார். இத்திரைப்படம் ஒரு ரோம் - காம் கதையம்சத்தில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு
- தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் கூடியது.
- பட்டா வழங்கும் பணிகளை 6 மாத காலத்தில் முடித்துக் கொடுக்கச் சொல்லி உள்ளார்கள்.
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் கூடியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில், சென்னையை சுற்றியிருக்கிற பெல்ட் ஏரியா என்று சொல்லக் கூடிய சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் 32 கிலோ மீட்டரில் குடியிருப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட நெடுங்காலமாக குடியிருப்பவர்கள் பட்டா பெற முடியாமல் சிரமப்படுவதும், அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்ய முடியாமல் இருப்பதும் நமது முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன்விளைவாக சென்னையை சுற்றி இருக்கிற 4 மாவட்டங்களில் உள்ள பெல்ட் ஏரியா மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக
அதன் பேரில் பட்டா இல்லாமல் ஆட்சேபனையற்ற புறம்போக்குகளில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்கும் பணிகளை 6 மாத காலத்தில் முடித்துக் கொடுக்கச் சொல்லி உள்ளார்கள்.
இந்நிலையில், ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் "பெல்ட் ஏரியாக்களில்" ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர்,
மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் - நகராட்சிகள் - மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க இன்றைய #CabinetMeeting-இல் ஒப்புதல் வழங்கியுள்ளோம்!
6 மாதங்களில் இதனைச் செய்துமுடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம்!
உங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன!
இவ்வாறு அவர் கூறினார்.
- "பீர்பைசெப்ஸ்" என்று பரவலாக அறியப்படும் பாட்காஸ்டரும் யூடியூபருமான ரன்வீர் அல்லாபாடியா
- மும்பையில் நடந்த India's Got Latent நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில் தோன்றினார்
"பீர்பைசெப்ஸ்" என்று பரவலாக அறியப்படும் பாட்காஸ்டரும் யூடியூபருமான ரன்வீர் அல்லாபாடியா கருத்து ஒன்றால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மும்பையில் நடந்த India's Got Latent நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில் தோன்றிய ரன்வீர், போட்டியாளர் ஒருவரிடம் ஆத்திரமூட்டும் கேள்வி ஒன்றை கேட்டு சர்ச்சை கிளப்பினார்.
போட்டியாளரை பார்த்து, "உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள் பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா? அல்லது அதை பார்ப்பதை நிறுத்த ஒரு முறை அவர்களுடன் அதில் பங்கேற்பீர்களா?" இரண்டில் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டுள்ளார்.
ரன்வீர் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இதுதொடர்பாக ரன்வீர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிர அரசியல் தலைவர்களும் அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தனது பேச்சுக்கு ரன்வீர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை நாளைக்குள் அறிவிக்க வேண்டும்.
- பும்ரா இடம்பெறுவது குறித்து பிசிசிஐ நாளை முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாட மறுப்பு தெரிவித்ததால் இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெற இருக்கிறது.
இந்த தொடருக்கான முதற்கட்ட அணியை கடந்த மாதம் இந்தியா அறிவித்தது. இதில் பும்ரா இடம் பிடித்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பந்து வீசும்போது பும்ராவிற்கு முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டது. இதனால் பந்து வீசாமல் வெளியேறினார். உடனடியாக அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பந்து வீச வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனால் 2-வது இன்னிங்சில் பும்ரா பந்து வீசவில்லை.
இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட இந்திய அணியில் பும்ரா இடம் பிடித்திருந்தார். ஆனால் ஐந்து வாரங்களுக்கு பந்து வீசாமல் ஓய்வு எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அவரால் பந்து வீச முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.
அதேவேளையில் பிப்ரவரி 11-ந்தேதி (நாளை) வரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக அறிவிக்க அணியில் மாற்றம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் நாளை இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடக்கூடிய அணியை அறிவிக்க வேண்டும். அதன்பின் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் தொடருக்கான தொழில்நுட்ப குழுவிடம் அனுமதி பெறவேண்டும்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மத்தியில் பும்ரா பந்து வீச தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் பாதியை சமாளித்துக் கொள்ளலாம் என நினைத்தால் பும்ரா இடம்பெற வாய்ப்புள்ளது. இல்லை என்றால் ஹர்ஷித் ராணா அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்படலாம்.
பெங்களூருவில் உள்ள பிசிசிஐ அகாடமியில் பும்ராவின் காயம் குறித்து மருத்துவக்குழு ஆராய்ந்து வருகிறது.
வருகிற 12-ந்தேதி இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பும்ரா விளையாட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால், பும்ரா பெஙகளூரு சென்றுள்ளார். இதனால் சாம்பியன்ஸ் டிராபியில் தொடரில் பங்கேற்பாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
என்றபோதிலும், நாளை பிசிசிஐ இந்திய அணியில் இடம் பிடித்துள்ள 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிடும்போதுதான் பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவது குறித்து தெரியவரும்.
ஒருவேளை பும்ரா இடம்பெறவில்லை என்றால், இது இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.
- அப்துல் ரஷீத், உபா சட்டத்தில் கைதாகி 2019ம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கிறார்.
- அப்துல் ரஷீத் சுயேட்சையாக போட்டியிட்டு முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாராமுல்லா தொகுதியில் ஷேக் அப்துல் ரஷீத் சுயேட்சையாக போட்டியிட்டு முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த எஞ்சினியர் ரஷீத் என அழைக்கப்படும் அப்துல் ரஷீத், உபா சட்டத்தில் கைதாகி 2019ம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கிறார்.
எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் நீதிமன்ற உத்தரவை பெற்றால்தான் பாராளுமன்ற கூட்டங்களில் பங்கேற்க முடியும். இந்நிலையில், திகார் சிறையில் உள்ள எம்.பி. அப்துல் ரஷீத் பிப்ரவரி 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரில் பங்கேற்பதற்காக கஸ்டடி பரோல் கொடுத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அப்துல் ரஷீத் சிறையில் இருந்து வெளியே அழைத்து செல்லும்போது இன்ஸ்பெக்டர் அல்லது உதவி ஆணையர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் பாதுகாப்புக்கு செல்ல வேண்டும். மேலும் செல்போன் பேசுவதற்கும், எம்.பி.க்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள் தவிர இதர நபர்களை சந்தித்து பேச கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சிறையில் உள்ள அப்துல் ரஷீத் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்தால் தனது எம்.பி பதவியை அவர் இழப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக "டிராகன்" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- 'டிராகன்' திரைப்படம், வருகிற பிப்ரவரி 21ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.
ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக "டிராகன்" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் பிரபல இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா மற்றும் வி.ஜே. சித்து, ஹர்ஷத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் 'ரைஸ் ஆஃப் தி டிராகன்' மற்றும் 'வழித்துணையே' பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.
'டிராகன்' திரைப்படம், வருகிற பிப்ரவரி 21ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில்,டிராகன் படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. ஒரு அடாவடியான கல்லூரி மாணவனின் கதை மற்றும் அவன் வாழ்க்கையில் அவன் சந்திக்கும் காதல், நட்பு , சிக்கல் என டிரெய்லர் காட்சி அமைந்துள்ளது.
டிராகன் திரைப்படம் வெளியாகும் இதே நாளில் தனுஷ் இயக்கியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழக அரசின் ரிட் மனு மீதான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
- பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?
மசோதாக்கள், துணை வேந்தர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிட கோரும் தமிழக அரசின் ரிட் மனு மீதான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த மீனு மீதான விசாரணையின்போது, அரசமைப்பு சட்டத்தின்படி பேரவையில் 2வது முறையாக இயற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், முதன் முறையாக அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கும் ஆளுநர் அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க முடியும்.
ஆனால், மீண்டும் நிறைவேற்றப்பட்டு கிடைக்கப்பெறும் மசோதாககளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க முடியாது என்றும் தமிழக அரசு தெரிவித்தது.
இதையடுத்து நீதிபதிகள், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சரமாரி கேள்விகளை முன்வைத்தனா். அதாவது தமிழக அரசு அனுப்பிய மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்புகிறார் என்றால் அதற்கான காரணம் என்ன?. ஆளுநர் அப்படி ஏன் செய்ய வேண்டும். அது என்னவென்று ஆளுநர் தரப்பில் கூறப்படவில்லை என்றால் தமிழக அரசுக்கு எப்படி அதுபற்றி தெரியவரும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
மேலும் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது? ஆளுநருக்கா அல்லது மாநில அரசுக்கா என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
தொடர்ந்து, தமிழக அரசின் ரிட் மனு மீதான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
- சீயான் விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் இணைந்து நடித்து வெளியானது மகான் திரைப்படம்.
- இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் இணைந்து நடித்து வெளியானது மகான் திரைப்படம். இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது. இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன் மற்றும் பாபி சிம்ஹா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
இப்படம் அப்பாவும் மகனும் கொள்கை ரீதியாக இருவேறு கோட்பாட்டில் இருப்பார்கள். மகன் ஒரு காவல் அதிகாரியாகவும் அப்பா ஒரு சமூகத்திற்கு தீங்கு விளைவிற்கும் செயல்களில் ஈடுப்பட்டு வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் இப்படத்தின் மையக்கதையாகும்.
இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வெளியாகி 3 வருடங்கள் முடிவடைந்த நிலையில் படத்தின் டெலிடட் காட்சியை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில் சீயான் விக்ரம் அவருக்கு பிடிக்காத நபர்களையும், தன் முன்னால் காதலியின் கணவனையும் அழைத்து பிரம்பால் அடிக்கும் காட்சி நகைச்சுவையாக இடம் பெற்றுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






