என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • எம்ஜி ஸ்டூடியோஸ் அவர்கள் தயாரிக்கும் முதல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
    • இது ஒரு ஹாரர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.

    தயாரிப்பு நிறுவனமான எம்ஜி ஸ்டூடியோஸ் அவர்கள்  தயாரிக்கும் முதல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் மூலம் அஜய் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை கல்யாண் கே ஜெகன் இயக்கவுள்ளார். இப்படத்தின் கதையை டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு ஹாரர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் மற்றும் நடிகர் சூரி அவர்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர்.

    படத்தின் தொழில்நுட்ப குழு பின் வருமாறு

    ஒளிப்பதிவு - ரவி சக்தி

    படத்தொகுப்பு - கதிரேஷ் அழகேசன்

    இசை - மனு ரமேசன்

    கலை - ஷன்முகராஜா

    ஆடை வடிவமைப்பு - காயத்ரி

    ஸ்டண்ட் - நைஃப் நரேன்

    திரைப்படத்தின் மற்ற செய்திகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அந்த தம்பதியினர் மீது லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டி 24 மணிநேரம் காவலில் வைத்துள்ளனர்.
    • நீதிமன்றத்தின் தலையீட்டுக்கு பிறகு குற்றம்சாட்டப்பட்ட ஐவரும் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டனர்.

    உத்தரப் பிரதேசத்தில் 28 வயது விவசாயியை வீடு புகுந்து தாக்கி, அவரது 25 வயது மனைவியை 5 பேர் கொண்ட கும்பல் ஆடைகளை அவிழ்த்து அத்துமீறிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    பிலிபிட் பகுதியில் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி இரவு விவசாயியின் வீட்டிற்குள் அக்கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தத் துவங்கியது. அவரது மனைவி தனது கணவரைக் காப்பாற்ற முயன்றபோது, அந்த நபர்கள் அவரது ஆடைகளை கழற்றி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

    சம்பவத்தின் பின் அந்த தம்பதி அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றனர். ஆனால் புகாரை ஏற்க மறுத்த அதிகாரிகள், அந்த தம்பதியினர் மீது லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டி 24 மணிநேரம் காவலில் வைத்துள்ளனர்.

    அவர்களின் உடல்களில் மோசமான காயங்கள் இருந்தபோதிலும் எந்தவிதமான மருத்துவ உதவிகளும் வழங்கப்படாவில்லை. இந்நிலையில் கூடுதல் நீதிமன்றத்தின் தலையீட்டுக்கு பிறகு குற்றம்சாட்டப்பட்ட ஐவரும் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டனர்.

    தாக்குதல் நடத்தியவர்கள் மீது கொலை வழக்கு உள்ளிட்ட குற்றப்பின்னணி இருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது. முன் பகை காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிகிறது. புகாரை ஏற்காத அதிகாரிகள் குறித்தும் தம்பதியினரின் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

    • மவுனி அமாவாசை தினத்தன்று 8 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
    • மகர் சங்கிராந்தி நாளில் 3.35 கோடி பக்தர்களும், பசந்த் பஞ்சமி நாளில் 2.57 கோடி பக்தர்களும் புனித நீராடியுள்ளனர்.

    மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. மகா சிவராத்திரி விழா முன்னிட்டு 26-ந்தேதி புனித நீராடலுடன் மகா கும்பமேளா விழா நிறைவடைகிறது.

    மகா கும்பமேளாவை முன்னிட்டு திரிவேணி சங்கமமான பிரயாக்ராஜில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். மகா கும்பமேளா தொடங்கியபோது சுமார் 40 கோடி மக்கள் புனித நீராட பிரயாக்ராஜ் வருகை தருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் கும்பமேளா முடிவடைய இன்னும் 15 நாட்கள் இருக்கும் நிலையில், இதுவரை 45 கோடி பக்தர்களுக்கு மேல் புனித நீராடியுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

    மகர் சங்கிராந்தி, மவுனி அமாவாசை, பசந்த் பஞ்சமி நாட்களில் கட்டுக்கடங்காத வகையில் பக்தர் வருகை தந்துள்ளனர்.

    செவ்வாய்க்கிழமையான இன்று காலை 10 மணி வரை 74.96 லட்சம் மக்கள் புனித நீராடியுள்ளனர். மவுனி அமாவாசை தினத்தன்று 8 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகர் சங்கிராந்தி நாளில் 3.35 கோடி பக்தர்களும், பசந்த் பஞ்சமி நாளில் 2.57 கோடி பக்தர்களும் புனித நீராடியுள்ளனர்.

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்டோர் புனித நீராடியுள்ளனர். வெளிநாட்டு பக்தர்கள் ஏராளமானோர் பிரயாக்ராஜியில் புனித நீராடியுள்ளனர்.

    அதேபோல் பாலிவுட் பிரபலங்கள் பலரும் புனித நீராடியுள்ளனர்.

    மவுனி அமாவாசை முன்னிட்டு கடந்த மாதம் 29-ந்தேதி அதிகாலையில் ஏராளமான மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பக்தர்கள் உயிரிழந்தனர். 60 பேர் காயம் அடைந்தனர். ஆனால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம். இதை உத்தர பிரதேச அரசு மறைக்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

    • தனுஷ் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
    • படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது.

    திரையுலகில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, எழுத்து என பல பரிணாமங்களை கொண்டவர் தனுஷ். இவர் ராயன் படத்தைத் தொடர்ந்து 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் இம்மாதம் 21-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றன.

    படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .இந்தப் படத்தின் கதை இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    இந்தப் படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் அருண் விஜய், எஸ்.ஜே சூர்யா, ஜி.வி பிரகாஷ் மற்றும் இயக்குனர்களான ராஜ்குமார் பெரியசாமி, விக்னேஷ் ராஜா, தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    விழாவில் பேசிய ஜி.வி பிரகாஷ் " தனுஷ் சார் இயக்கும் திரைப்படத்தில் முதல்முறையாக வேலைப் பார்க்கிறேன். கண்டிப்பா ஒரு மேஜிக் ஏற்படும். நாங்கள் திரைப்படத்தை பார்த்துவிட்டோம். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும். படத்தின் தயாரிப்பாளரான ஸ்ரேயாஸ் சொன்னாரு இப்படத்தின் இசையமைப்புக்கு நான் சம்பளம் என எதுவும் வாங்கவில்லை என்று.

    ஜெயிலர் திரைப்படம் ஹிட்டானதும் படக்குழுவை அழைத்து பரிசு வழங்கியதுப் போல் இப்படம் வெளியானதும் என்னை ஸ்பெஷலாக கவனிக்க வேண்டும்." என மிக நகைச்சுவையாக கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே நமது பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் நமது சமூகத்தை மறுவடிவமைத்து வருகிறது.
    • சைபர் பாதுகாப்பு, தவறான தகவல்கள் மற்றும் டீப்பேக்ஸ் குறித்து நாம் கவனிக்க வேண்டும்.

    செயற்கை நுண்ணறிவு மாநாடு பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்வதற்காக நேற்று இந்தியாவில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

    இன்று மதியம் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே நமது பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் நமது சமூகத்தை மறுவடிவமைத்து வருகிறது. இந்த நூற்றாண்டில் மனித குலத்திற்கான Code-ஐ AI எழுதுகிறது.

    * ஒரு எளிய உதாரணத்துடன் ஆரம்பிக்கிறேன். உங்கள் மருத்துவ அறிக்கையை ஒரு AI செயலியில் பதிவேற்றினால், அது உங்கள் ஆரோக்கியம் தொடர்பான அனைத்து தகவலையும் எளிய மொழியில் விளக்க முடியும்.

    * AI முன்னெப்போதும் இல்லாத அளவு மற்றும் வேகத்தில் வளர்ந்து வருகிறது. மேலும் மாற்றியமைக்கப்பட்டு இன்னும் வேகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

    * நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் open source systems-ஐ நாம் உருவாக்க வேண்டும். ஒரு தரப்பு என்று இல்லாமல் தரமான தரவு மையங்களை உருவாக்க வேண்டும்.

    * சைபர் பாதுகாப்பு, தவறான தகவல்கள் மற்றும் டீப்பேக்ஸ் குறித்து நாம் கவனிக்க வேண்டும்.

    * வேலை இழப்பு ஏ.ஐ-யின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என பார்க்கப்படுகிறது. ஆனால் தொழில்நுட்பத்தால் வேலை மறைந்து போவதில்லை. அதன் தன்மை மாறுகிறது என்பதை நமது வரலாறு காட்டியுள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தறிக்கு ஏற்றவாறு நமது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    * சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் பலவற்றை மேம்படுத்துவதன் மூலம் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்ற AI உதவும்.

    * நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான பயணத்தை எளிதாகவும் வேகமாகவும் மாறும் ஒரு உலகத்தை உருவாக்க இது உதவும். இதைச் செய்ய, நாம் வளங்களையும் திறமைகளையும் ஒன்றிணைக்க வேண்டும். 

    • சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
    • ஓபன் ஏஐ நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர்.

    ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலக பணக்காரருமாக எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிதாக அமைந்த டிரம்ப் அரசின் கீழ் அரசு செயல்திறன் துறை [DODGE] தலைவராக உள்ளார்.

    அரசின் தேவையற்ற செலவுகளை கண்டுபிடித்து அதை நிறுத்தும் பணியை இத்துறை செய்து வருகிறது. பிந்தங்கிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் யுஸ் - எய்ட் அமைப்பின் நிதியை DODGE ஆலோசனையின் பேரில் டிரம்ப் நிறுத்தினார்.

    இதற்கிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல சமூக ஊடாகமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதை எக்ஸ் என பெயர் மாற்றி மஸ்க் நடத்திக்கொண்டிருக்கிறார்.

    இந்நிலையில் வளர்ந்து வரும் செயற்கை தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வரும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் மீது எலான் மஸ்கின் கண்கள் விழுந்துள்ளது.  சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

    இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக சாம் ஆல்ட்மேன் உள்ளார். 2015 இல் ஓபன் ஏஐ நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர்.

    ஆனால் 2018 கருத்து வேறுபாடு காரணமான அதிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின் எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழுவினர், ஓபன் ஏஐ நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

     

    ஓபன்ஏஐ நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலர் கொடுத்த வாங்க எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழு நேற்று அந்நிறுவனத்திடம் ப்ரொபோஸ் செய்துள்ளது.

    ஆனால் இதற்கு சாம் ஆல்ட்மேன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சாம் ஆல்ட்மேன், "வேண்டாம்.. நன்றி.. வேண்டுமானால் எக்ஸ் தளத்தை 9.74 பில்லியன் டாலருக்கு நாங்கள் வாங்க தயாராக இருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார். 

     

    • தனுஷ் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
    • இந்தப் படம் இம்மாதம் 21-ம் தேதி வெளியாக இருக்கிறது.

    திரையுலகில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, எழுத்து என பல பரிணாமங்களை கொண்டவர் தனுஷ். இவர் ராயன் படத்தைத் தொடர்ந்து 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் இம்மாதம் 21-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றன.

    படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .இந்தப் படத்தின் கதை இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    இந்தப் படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் அருண் விஜய், எஸ்.ஜே சூர்யா மற்றும் இயக்குனர்களான ராஜ்குமார் பெரியசாமி, விக்னேஷ் ராஜா, தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    விழாவில் பேசிய அருண் விஜய் " நடிகர் துனுஷ் சார் ஒரு மல்டி டாஸ்கர். இட்லி கடை படப்பிடிப்பின் போது இடைவேளை நேரத்தில் சென்று மற்றொரு கதையை எழுதிக் கொண்டு இருக்கிறார். மற்றொரு நாள் காரவேனில் பார்க்கும் போது ஜி.வி பிரகாஷுடன் பாட்டு ஒன்றை ரெக்கார்ட் செய்துக் கொண்டு இருக்கிறார். அவரை பார்க்கும் போது மிகவும் உத்வேகமாக உள்ளது. இதை நேரில் பார்க்க எனக்கு பாக்கியம் கிடைத்தது." என கூறினார்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம் எல் ஏக்கள் தங்களுடன் தொடர்பில் உள்ளனர் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
    • ஆம் ஆத்மி தலைவர்கள் பேராசை இல்லாத அர்ப்பணிப்புள்ளவர்கள் என்றார் முதல் மந்திரி.

    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலத்தின் ஆளும் கட்சியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தனது கட்சியுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் அணி மாறலாம் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

    தலைநகர் டெல்லியில் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான், தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் கட்சி தலைவர் கெஜ்ரிவாலுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், பகவந்த் மான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்கள், பிரதாப் சிங் பஜ்வா கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

    பஜ்வா எங்கள் எம்.எல்.ஏ.க்களை எண்ணாமல், டெல்லியில் காங்கிரசுக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என பார்க்க வேண்டும்.

    ஆம் ஆத்மி தலைவர்கள் பேராசை இல்லாத அர்ப்பணிப்புள்ளவர்கள்.

    20 எம்.எல்.ஏ.க்கள் அல்லது 40 எம்.எல்.ஏ.க்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக பாஜ்வா கூறி வருகிறார். அதை அவர்கள் சொல்லட்டும்.

    பெரும்பாலான மாநிலங்களைவிட பஞ்சாபின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. எல்லை மாநிலமாக இருப்பதால் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும், அதைச் செய்து வருகிறோம்.

    மாநிலத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள மக்களிடையே எங்களின் வியர்வை மற்றும் ரத்தத்தைச் செலுத்தி இந்தக் கட்சியை உருவாக்கியுள்ளோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    • புதிய விதிகள் அரசியல் சட்டத்துக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் விரோதமானவை.
    • ஒன்றிய அரசின் கைகளில் அதிகாரத்தைக் குவிக்க புதிய வரைவு விதிகளை வகுத்துள்ளது யுஜிசி.

    பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) சமீபத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதில் துணை வேந்தர்களை நியமனம் செய்ய கவர்னருக்கே அதிகாரம் உண்டு. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழு தலைவராக கவர்னர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக யுஜிசி பரிந்துரைப்பவரும் இருப்பார்கள். மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவர் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையால் மாநில அரசு பரிந்துரைக்கும் உறுப்பினர் இனி இடம்பெற முடியாது என்பது உறுதியாகி உள்ளது.

    இந்த மாற்றங்கள் துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசின் உரிமையை மறுக்கிறது. அதனால் யுசிஜி புதிய விதிகளின் வரைவு அறிக்கையை திரும்ப வேண்டும் என தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மக்களவையில் யுஜிசி புதிய விதிகளின் வரைவு அறிக்கையை விமர்சித்து பேசினார். இது தொடர்பாக மக்களவையில் மஹுவா மொய்த்ரா கூறியதாவது:-

    * புதிய விதிகள் அரசியல் சட்டத்துக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் விரோதமானவை.

    * ஒன்றிய அரசின் கைகளில் அதிகாரத்தைக் குவிக்க புதிய வரைவு விதிகளை வகுத்துள்ளது யுஜிசி.

    * புதிய வரைவு விதிகளில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான தேடுதல் குழு அமைக்கும் நடைமுறையை மாற்ற முயற்சிக்கின்றனர்.

    * துணைவேந்தர் தேடுதல் குழுவில் மாநில அரசின் பிரதிநிதிக்கு புதிய விதிகள் இடமளிக்கவில்லை.

    இவ்வாறு மஹுவா மொய்த்ரா மக்களவையில் எதிர்ப்பை பதிவு செய்தார்.

    • சிக்கந்தர் தர்காவை இன்னொரு அயோத்தியாக மாற்றுவோமென சங் பரிவார் கூட்டம் அவதூறுகளைப் பரப்பி வருகிறது.
    • இந்துத்துவா அரசியலுக்குப் பாதை அமைக்கிறதா திமுக?

    "திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் ஆலயமும், சிக்கந்தர் தர்காவும் பல ஆண்டுகளாக இருக்கையில், இரு சமயத்தவர்களும் எவ்விதப் பிணக்குமின்றி தங்களது நம்பிக்கைகளின்படி பன்னெடுங்காலமாக வழிபாடு செய்து வரும் நிலையில் இப்போது அதனைச் சிக்கலாக மாற்றி, பூதாகரப்படுத்தியது யார்?" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்குணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலட்சம் பேர் கூடும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பெருநிகழ்வும், சித்திரைத் திருவிழாவும் சிறு சலசலப்புக்கும் இடங்கொடாவண்ணம் சமூக நல்லிணக்கத்தோடு சிறப்புற நடைபெறும் மதுரை மண்ணை மதப்பதற்றம் மிகுந்த பகுதியாக மாற்றி நிறுத்தியது யார்? பெரும் மதச்சிக்கலாக உருவெடுக்காவண்ணம் தடுத்து, தொடக்க நிலையிலேயே இருதரப்பையும் அழைத்து, ஒருமித்த முடிவுக்குக் கொண்டு வந்து தீர்வைப் பெற்றுத் தராது ஊதிப் பெரிதாக்க ஆளும் திமுக அரசு துணைபோனதேன்?

    சிக்கந்தர் தர்காவுக்கு ஆடு, கோழிகளை நேர்ந்து விடுதலும், அங்கு இறைச்சிகளை சமைத்து உண்ணுதலும் மத நல்லிணக்கத்தோடும், மிக இயல்பாகவும் நடந்தேறி வரும் நிலையில், திடீரென காவல்துறையினர் ஆடு, கோழியினைக் கொண்டு செல்வதற்கு அனுமதி மறுத்ததன் பின்னணி என்ன? அக்காவல்துறை அதிகாரியின் செயல்பாட்டைக் கண்டித்து, அவர் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்காததேன்? திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தர்காவில் இறைச்சி உணவு சமைத்து உண்ணுவதற்கு எவ்விதத் தடையுமில்லை என அறிவிப்பாணை விடுவதற்குத் தயங்குவதேன்?

    கடந்த பிப்ரவரி 3 அன்று இச்சிக்கலை மையப்படுத்தி பாஜக நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு அன்றைய தினமே நீதிமன்றத்தில் அனுமதியைப் பெற்று, மாலையில் எப்படி ஆயிரக்கணக்கில் பாஜகவினரால் கூட முடிந்தது? 144 தடையுத்தரவு இடப்பட்டிருக்கும் நிலையில் எப்படி இது சாத்தியமானது? பாஜகவின் கொடிகளுடன் கோயிலுக்குள் பாஜகவினர் அத்துமீறி செல்வதற்கு எப்படி அனுமதித்தது காவல்துறை?

    கோவையைப் போல, மதுரையையும் மதப்பதற்றம் மிகுந்தப் பகுதியாக மாற்றுவதற்கு திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தைச் சிக்கலாக மாற்ற பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார் கூட்டம் முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், அறநிலையத்துறை அமைச்சகம் நியாயத்தின் பக்கம் நிற்காது பாஜகவின் தரப்பை வலிமைப்படுத்துவதுபோல நடந்துகொள்வதேன்? யார் சொல்லி இப்படி செய்கிறார் அமைச்சர் சேகர்பாபு? என்ன செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்? இந்துத்துவா அரசியலுக்குப் பாதை அமைக்கிறதா திமுக?

    இச்சிக்கல் தொடர்பான வழக்கில், தர்காவில் இறைச்சி உணவு உண்ணுகிற பழக்கம் காலங்காலமாக இருக்கும் நடைமுறையென திமுக அரசின் சார்பில் வாதிடாததேன்? மலையின் மீது ஆடு,கோழி பலியிட அறநிலையத்துறை எதற்காக எதிர்ப்புத் தெரிவிக்கிறது? அமைதிப்பேச்சுவார்த்தையில், "ஆடு,கோழிகளைப் பலியிட்டால் மலையின் புனிதத்தன்மை கெட்டுவிடும்" என்கிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள். 'சிவன் மலை' என்கிறார் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன். திமுக அரசு திட்டமிட்டு மதப்பூசலை உருவாக்க நினைக்கிறதா?

    திருப்பரங்குன்றம் மலை தர்கா சிக்கல் குறித்து விவாதிக்க மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தபோதும் அதற்குப் பொறுப்பேற்றுப் பதில்சொல்லாது முதல்வரும், அமைச்சர்களும் கடந்துபோனதேன்?

    1991ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சட்டமானது, வழிபாட்டுத்தலம் நாட்டு விடுதலையின்போது என்ன மதத்தன்மையைக் கொண்டிருந்ததோ அதே நிலை நீடிக்கவே வழிவகை செய்கிறது. அந்தடிப்படையில், 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடு, கோழியைப் பலியிட்டு சிக்கந்தர் தர்காவில் நடந்தேறி வரும் வழிபாட்டு முறை மீது இப்போது திடீரென திமுக அரசின் அறநிலையத்துறை தடைவிதிக்க முற்படுவது சட்டவிரோதம் இல்லையா?

    தனது ஆளுகைக்குக் கீழ் இருக்கும் அரசு அதிகாரிகளை சரியாக வழிநடத்த வேண்டியதும், நிர்வாக மேலாண்மை செய்ய வேண்டியதும் ஆளும் திமுக அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும். திமுக அரசின் மோசமான நிர்வாகத்தால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் முதல் திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு செய்கிற சிக்கல்வரை எல்லாவற்றிலும் அதிகார வர்க்கம் செயலிழந்தும், தவறான பாதையிலும் செல்கிறது. இதற்குத் முழுப்பொறுப்பு கொண்ட மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின். அவர்கள் வெறுமனே அதிகாரிகளைக் கைகாட்டித் தனது பொறுப்பையும், கடமையையும் தட்டிக்கழிப்பது நியாயமா?

    சிக்கந்தர் தர்காவை இன்னொரு அயோத்தியாக மாற்றுவோமென கொக்கரித்து சங் பரிவார் கூட்டம் அவதூறுகளைப் பரப்பி, பிரித்தாளும் சூழ்ச்சியைக் கட்டவிழ்த்து விடும் நிலையில், இசுலாமிய மக்களின் வழிபாட்டுரிமைக்கு உறுதுணையாக நிற்க வேண்டிய திமுக அரசு கள்ளமௌனம் சாதிப்பதும், அறநிலையத்துறை மூலமாக எதிர்நிலைப்பாடு எடுப்பதும் பச்சைத்துரோகம் இல்லையா?" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டம் வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது.
    • இக்கூட்டத்துக்கு முன் ஆம் ஆத்மி கட்சியினர் பா.ஜ.க.வில் இணைவர் எனும் வதந்தி பரவுகிறது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்து ஆட்சியை பறிகொடுத்தது.

    இதற்கிடையே, பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டம் வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்கு முன் கட்சித்தாவல் வதந்தி பரவி வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் மற்றும் கட்சி எம்.எல்.ஏ.க்களை தலைநகர் டெல்லிக்கு அழைத்துள்ளார்.

    கட்சியின் உயர்மட்டத் தலைமையின் கவனம் தற்போது அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே மாநிலமான பஞ்சாபின் மீது திரும்பியுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்தினார்.

    அப்போது, பஞ்சாப் முதல் மந்திரியாகும் வகையில் அங்கு காலியாக உள்ள லூதியானா சட்டசபை தொகுதியில் கெஜ்ரிவால் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    ஆபரேஷன் தாமரை திட்டத்தின் ஒரு பகுதியாக தனது எம்.எல்.ஏ.க்களை வேட்டையாட பா.ஜ.க. முயற்சித்து வருகிறது என ஆம் ஆத்மி ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தது. எனவே, டெல்லி போல் பஞ்சாப்பிலும் இதுபோன்ற வீழ்ச்சி ஏற்படாமல் இருக்கவே இந்த நடவடிக்கையை ஆம் ஆத்மி எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுழல் வெப் தொடர் பல்வேறு தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது.
    • ‘சுழல்’ இணையத்தொடரின் 2ம் பாகம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரியின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரான முதல் வெப் தொடர் ' சுழல்- தி வோர்டெக்ஸ்'.

    இயக்குனர்கள் பிரம்மா மற்றும் எம்.அனுசரண் இயக்கத்தில் உருவான இந்த வெப் தொடரில் ஆர்.பார்த்திபன், கதிர், சந்தானபாரதி, பிரேம், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    இந்த வெப் தொடருக்கு, சாம் சி எஸ் இசையமைத்திருந்தார். அமேசான் பிரைமில் 2022 ஆம் ஆண்டு ஜூன் 17-ந் தேதி வெளியான இந்த வெப் தொடர் பல்வேறு தரப்பில் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், இந்த வெப் தொடரின் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இது தொடர்பாக புஷ்கர் - காயத்ரி தங்களது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

    ×