என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது.
- முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கிறார்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள் எக்ஸ் தள பதிவில்,
சென்னை பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது. அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. ஒட்டுமொத்த அரசு இயந்திரமே செயலிழந்து கிடக்கிறது. சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கிறார்.
தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி வெளிவருகிறது. அரசுத் தரப்பில் இருந்தும், காவல்துறை தரப்பில் இருந்தும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்தப் பகுதியிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, ஒவ்வொரு குடும்பத்தையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தி.மு.க. அரசும், காவல்துறையும் செயல்படாமல் இருப்பதைத் தொடர்ந்தால், பொதுமக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இது சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்பதை உணர்ந்திருக்கிறாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்? என்று தெரிவித்துள்ளார்.
- நிர்வாக அலுவலக கட்டிடம், கலையரங்கம், பொது தரிசன வரிசை வளாகம் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
- முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சென்னை:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மெகா திட்ட வளாக பணிகள் நடை பெற்று வருகிறது.
இதில் தனியார் பங்களிப்பான எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி மதிப்பிலும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பிலான மெகா திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருகிறது.
முதல் கட்ட பணிகளான யாத்திரிகர் நிவாஸ் பயணிகள் தங்கும் விடுதி பணிகள் முடிவுற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தொடர்ந்து 2-ம் கட்ட பணி நிறைவு பெற்று ரூ.20½ கோடி மதிப்பீட்டில் பணிகள் நிறைவு பெற்ற நிர்வாக அலுவலக கட்டிடம், கலையரங்கம், பொது தரிசன வரிசை வளாகம் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
திருச்செந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் இளம் பகவத், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், மண்டல இணை ஆணையர் அன்புமணி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாரன், தாசில்தார் பாலசுந்தரம், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் நகராட்சி துணை சேர்மன் செங்குழி ரமேஷ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராம ஜெயம், பில்லா ஜெகன், தி.மு.க. நகர செயலாளர் வாள் சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் அப்புக்குட்டி படத்தில் நடித்துள்ளார்.
- "பிறந்தநாள் வாழ்த்துக்கள்" படத்தின் First Look போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது.
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானவர் சிவபாலன் என்கிற அப்புகுட்டி. அதைத்தொடர்ந்து அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தற்பொழுது படத்தில் நடித்துள்ளார்.
ராஜூ சந்திரா இயக்கத்தில் நடித்துள்ள "பிறந்தநாள் வாழ்த்துகள்" படத்தின் First Look போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது.
ராஜு சந்திரா எழுதி இயக்கி, பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், ரோஜி மேத்யூ, ராஜு சந்திரா இருவரும் தயாரித்துள்ளனர்.
மாதன்ஸ் குழுமம் இணைந்து தயாரித்துள்ளது. மலையாள நடிகை ஐஸ்வர்யா அனில், இப்படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக அறிமுகம் ஆகிறார். ஸ்ரீஜா ரவி மற்றும் ரோஜி மேத்யூ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பிறந்தநாள் வாழ்த்துக்கள் படத்தின் டிரெய்லர் கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கிராமத்து எதார்த்தத்தை, காதலுடன் காமெடி கலந்து, ஜனரஞ்சகமாக கதை எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கியுள்ளார் ராஜூ சந்ரா. இசையை நவநீத் அமைக்க, கலையை வினோத் குமார் கையாண்டுள்ளார். படம் விரைவில் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டவுன்லோட் செய்ய முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- ஏ.ஐ. சாட்பாட் இன்னும் பயன்பாட்டில் உள்ளது.
சீனாவை சேர்ந்த செற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலியான டீப்சீக்-ஐ டவுன்லோட் செய்ய தென் கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. டீப்சீக் செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் வரை இந்த செயலியை டவுன்லோட் செய்ய முடியாது என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டீப்சீக்-இன் ஆர்1 சாட்பாட் அதன் அசாத்திய செயல்திறன் காரணமாக உலகளவில் அதிக பயனர்களை மிகக் குறுகிய காலக்கட்டத்தில் ஈட்டியதோடு முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
எனினும், டீப்சீக் பயனர் தரவுகளை சேமிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த சேவைக்கு எதிர்ப்புக்குரல் வலுத்தது. மேலும், பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
டீப்சீக் அதன் பயனர் தரவுகளை எப்படி கையாள்கிறது என்பதை மதிப்பாய்வு செய்யும் வரை இதனை பதிவிறக்கம் செய்ய முடியாது என சியோல் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து பதில் அளித்த சீன ஏ.ஐ. நிறுவனமான டீப்சீக், "உள்நாட்டு தனியுரிமை சட்டங்கள் குறைந்தளவில் தான் பரிசீலனை செய்யப்பட்டன என்பதை ஒப்புக்கொண்டுள்ளது," என்று தரவு பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் தனியுரிமைச் சட்டங்களுடன் இணைந்து செயலியைக் கொண்டுவருவது "தவிர்க்க முடியாமல் கணிசமான அளவு நேரம் எடுக்கும்" என்று மதிப்பிட்டுள்ளது, சியோல் தரவு பாதுகாப்பு நிறுவனம் மேலும் கூறியது.
டவுன்லோட் செய்ய தடை செய்யப்பட்டதை தொடர்ந்து டீப்சீக் செயலி தென் கொரியாவின் உள்ளூர் ஆப் ஸ்டோர்களில் கிடைக்காமல் போனது. எனினும், செயலியை ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கு ஏ.ஐ. சாட்பாட் இன்னும் பயன்பாட்டில் உள்ளது.
- கத்தியால் குத்திவிட்டு இருவரும் சாவகாசமாக சாலையை கடந்து செல்வதை மக்கள் வேடிக்கை பார்த்து நின்றனர்.
- இதனால் ஆத்திரமடைந்த தம்பி ராகேஷ், உறவினர் லக்ஷ்மணன் உடன் சேர்ந்து அண்ணனை தாக்க முயன்றார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட பதறவைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
நேற்று பிப்ரவரி பிப்ரவரி 16 (ஞாயிற்றுக்கிழமை) ஐதராபாத்தின் மேட்சல் (medchal) பகுதியில் உள்ள பரபரப்பான NH 44 தேசிய நெடுஞ்சாலையில் வைத்து இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. அவ்வழியாக பல வானங்கள் அவ்வேளையில் சென்றும் யாரும் கொலையை தடுக்க முன்வரவில்லை. கத்தியால் குத்திவிட்டு இருவரும் கத்தியுடன் சாவகாசமாக சாலையை கடந்து செல்வதை மக்கள் வேடிக்கை பார்த்து நின்றனர்.
போலீசார் கூற்றுப்படி உயிரிழந்தவர் 25 வயதான உமேஷ். கத்தியால் குத்தியவர்கள் உமேஷின் சொந்த தம்பி ராகேஷ், மற்றும் உறவினர் லக்ஷ்மணன் என்று தெரியவந்துள்ளது. உமேஷ் குடித்துவிட்டு அடிக்கடி தனது குடும்பத்தினருடன் சண்டை பிடிப்பார் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தம்பி ராகேஷ் அண்ணனிடம் கேட்டுள்ளார். இதனால் சம்பவம் நடந்த நேற்று, உமேஷ் குடித்துவிட்டு தம்பியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். கட்டை ஒன்றை எடுத்து தம்பியை உமேஷ் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தம்பி ராகேஷ், உறவினர் லக்ஷ்மணன் உடன் சேர்ந்து அண்ணனை தாக்க முயன்றார்.
அச்சமடைந்த உமேஷ் அவர்களிடம் இருந்து தப்பி வீட்டை விட்டு ஓடியுள்ளார். உமேஷை துரத்திச் சென்ற இருவரும் வீட்டில் இருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள சாலையில் வைத்து அவரை கத்தியால் குத்தி கொன்றுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய தம்பியையும் உறவினரையும் தேடி வருகின்றனர்.
- அமைச்சர் துரைமுருகனுக்கு நேற்று இரவு வீட்டில் இருந்த போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
- அமைச்சர் துரைமுருகன் உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழக அமைச்சர்களில் வயதிலும், அரசியல் அனுபவத்திலும் மூத்தவரான அமைச்சர் துரைமுருகனுக்கு நேற்று இரவு வீட்டில் இருந்த போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல் மற்றும் சளித்தொல்லை காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் உடல்நிலை சீராக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சர் துரைமுருகனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
- தமிழ்நாட்டின் உரிமைகளை சிதைப்பதற்காக முயற்சிகளையும் ஒன்றிய அரசு எடுத்து வருகிறது.
- தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன் என உரக்க குரல் எழுப்புவோம்.
சென்னை:
`சமக்ரசிக்ஷா' திட்டத்தின் கீழ் தமிழக கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2,158 கோடியை மத்திய அரசு விடுவிக்காமல் தாமதம் செய்கிறது.
இதுதொடர்பாக வாரணாசியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், "தமிழ்நாட்டில் தேசிய கல்வி கொள்கையை இதுவரை ஏற்காமல் உள்ளனர். மும்மொழி கொள்கையை ஏற்காத வரை தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க இயலாது" என்று கூறினார்.
மத்திய மந்திரியின் இந்த பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். மொழி கொள்கை விசயத்தில் மத்திய மந்திரி திமிராக பேசினால் தமிழர்கள் தனி குணத்தை காட்டுவார்கள் என்றும் எச்சரித்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் மும்மொழி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏற்கனவே மத்திய அரசு பல்வேறு தமிழக திட்டங்களுக்கு நிதி தராமல் பாரபட்சம் காட்டுவதாக அதிருப்தி நிலவி வருகிறது. இந்த நிலையில் தமிழக பள்ளி கல்வி வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மத்திய கல்வி மந்திரி பேசி இருப்பது கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
'சமக்ரசிக்ஷா' திட்டத்தின் கீழ் தமிழக கல்வித் துறைக்கு நிதி பெற சட்ட நடவடிக் கைகளில் ஈடுபடலாமா? அல்லது அரசியல் ரீதியான போராட்டத்தை மேற்கொள்ளலாமா? என்று தி.மு.க. கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
அதன் அடிப்படையில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாசலம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டின் உரிமைகளை சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய மோடி அரசு எடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என ஒன்றிய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் மிரட்டுகிறார்.
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கான நிதியை தருவதில் பாரபட்சம் காட்டி, பட்ஜெட்டில் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணிக்கிறார்.
பதவிக்காலம் முடிந்து போன கவர்னரை வைத்துக் கொண்டு அத்துமீறல்கள், யு.ஜி.சி. மூலம் மாநிலத்தின் கல்விக் கட்டமைப்பைச் சிதைப்பதற்கான நடவடிக்கைகள், தொடர்ச்சியான திராவிட-தமிழ் வெறுப்பு நடவடிக்கைகள், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்புக்கான முன்னெடுப்புகள் என தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மோடி அரசை வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய சூழலை உருவாக்கி வருகிறார்கள்.
தமிழர்கள் தனித்துவமானவர்களாக இருப்பதும், கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, வாழ்க்கைத்தரம் என அனைத்து வகையிலும் உயர்ந்திருப்பதும் மோடி அரசின் கண்களை உறுத்துகிறது.
அது, அரசியல் ரீதியாகப் பா.ஜ.க.,வை அண்டவிடாத தமிழ்நாட்டு மக்களின் மீது வெறுப்பை உமிழ்கிறது. பிளவுவாத சக்திகளுக்கு எதிராக ஓரணியில் நிற்கும் தமிழ்நாட்டை வீழ்த்திவிட முயற்சிக்கிறது.
வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணையும்! எதிரி எந்த வடிவில் வந்தாலும் துணிந்து நிற்கும்!
அப்படியான ஒரு சூழலை வலிந்து உருவாக்கி வரும் மோடி அரசைக் கண்டித்து முதற்கட்டமாக அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நாளை 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பாக நடைபெறுகிறது.
தமிழ்நாட்டிடம் இருந்து நிதியைப் பெற்றுக்கொள்ளும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன் என உரக்க குரல் எழுப்புவோம். தமிழ்நாட்டின் உரிமைகள் மீது கை வைத்தால் சிலிர்த்து எழுவோம் என் பதை உணர்த்துவோம். ஒன்றிணைவோம்! உரக்கக் குரல் எழுப்புவோம்!! உரிமைகளை மீட்போம்!!
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
- வெளி சந்தைகளில் மின்சாரம் வாங்க மின்வாரியத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
- மின் தேவையை சமாளிக்க 8,525 மெகாவாட் மின்சாரத்தை வெளி சந்தையில் வாங்க மின்சார அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடைகால மின்தேவையை சமாளிக்க வெளி சந்தைகளில் மின்சாரம் வாங்க மின்வாரியத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
கோடை கால மின் தேவையை சமாளிக்க 8,525 மெகாவாட் மின்சாரத்தை வெளி சந்தையில் வாங்க மின்சார அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரையிலான மின்சார தேவையை பூர்த்தி செய்ய வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சாரத்துறைக்கு கோடைக்காலத்தில் ஏற்படும் அதிக மின் தேவையை சமாளிக்கும் வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- 1703 ஏக்கர் நிலப்பரப்பில் அறிவுசார் நகரம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 556 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் அறிவு நகரத்தை அமைக்கலாம்.
தமிழ்நாடு அறிவுநகரம் திட்டத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களின் அளவைக் குறைத்தால் மட்டும் போதாது திட்டத்தை மொத்தமாக வேறு நகருக்கு மாற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையை அடுத்த திருவள்ளூர், ஊத்துக்கோட்டை வட்டங்களில் 1703 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு நிலங்களை கையகப்படுத்த கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, இப்போது அறிவுநகரம் அமைக்கப்படும் நிலப்பரப்பு 870 ஏக்கராக குறைக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது திருவள்ளூர் மாவட்ட உழவர்களுக்கு சற்று நிம்மதியளிக்கும் விஷயம் தான் என்றாலும் முழுமையான வெற்றி அல்ல.
மொத்தம் 1703 ஏக்கர் நிலப்பரப்பில் அறிவுசார் நகரம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதற்காக ஊத்துகோட்டை வட்டத்திலுள்ள கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல் மாளிகைப்பட்டு, செங்கத்தாக்குளம், எர்ணாங்குப்பம், திருவள்ளூர் வட்டத்திலுள்ள வெங்கல் ஆகிய கிராமங்களில் நில எடுப்பு செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. அப்பகுதியில் 556 ஏக்கர் அரசு புறப்போக்கு நிலங்கள் இருக்கும் நிலையில், அதையும், உழவர்களுக்கு சொந்தமான 1146 ஏக்கர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களையும் கையகப்படுத்த அரசு தீர்மானித்தது.
தமிழக அரசின் முடிவுக்கு கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதமே நான் கடும் கண்டனம் தெரிவித்தேன். இந்தத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அந்தப் பகுதியில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து அறிவு நகரம் அமைப்பதற்கான நிலப்பரப்பை 1703 ஏக்கரில் இருந்து 1424 ஏக்கராக தமிழக அரசு குறைத்தது. இப்போது அப்பரப்பை 870 ஏக்கராகக் குறைத்திருக்கிறது. இது மண்ணைக் காப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.
அறிவுநகரம் 870 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தமிழக அரசுக்கு சொந்தமான 556 புறம்போக்கு நிலங்களுடன் உழவர்களுக்கு சொந்தமான 314 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படுமா? அல்லது மொத்தமாகவே உழவர்களின் நிலங்கள் மட்டும் தான் கையகப்படுத்தப்படுமா? என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. எப்படியாக இருந்தாலும் உழவர்களின் விளைநிலங்களில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணைக் கூட எடுக்க பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. நிலம் எடுக்கும் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டால் அதைக் கண்டித்து பா.ம.க. பெரும் போராட்டத்தை நடத்தும்.
தமிழ்நாடு அறிவு நகரம் அமைப்பதையும், அங்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் வளாகங்களை ஏற்படுத்துவதையும் பாட்டாளி மக்கள் கட்சி எப்போதும் ஆதரிக்கிறது. அதற்காக ஆரணி ஆற்றங்கரையில் மூன்று போகங்களும் சிறப்பாக விளையக்கூடிய, ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டித்தரக்கூடிய நிலங்களை ஏக்கருக்கு ரூ.15 லட்சம் என்ற அடிமாட்டு விலைக்கு அரசு பிடுங்க நினைப்பதை பா.ம.க அனுமதிக்காது. எந்த ஒரு திட்டத்திற்காகவும் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.
தமிழக அரசு விரும்பினால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 556 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் அறிவு நகரத்தை அமைக்கலாம். அது சாத்தியமில்லை என்றால், திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுநகரம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். அதற்கு மாற்றாக சேலம் நகரத்திற்குட்பட்ட பகுதிகளில் சேலம் இரும்பாலைக்கு சொந்தமான 4000 ஏக்கர் நிலத்திலோ, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட கொங்குபகுதிகளில் அரசுக்கு சொந்தமாக உள்ள நிலங்களிலோ இந்தத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
- இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார்.
- இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார்.
ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார்.
கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார்.
'கூரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில மாதங்களுக்கு முன் நடைப்பெற்றது. திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனது 1 வயது குழந்தையை சுமந்தவாறு ரயில்வே போலீஸ் ரீனா பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளார்.
- பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா செல்ல புறப்பட்ட மக்கள் நேற்று முன் தினம் (சனிக்கிழமை) இரவு டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்டநெரிசலில் சிக்கினர்.
இதில் 3 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து டெல்லி ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கூட்டநெரிசலுக்கு பின்னர், மகா கும்பமேளா செல்லும் வழித்தடத்தில் கூடுதலாக 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி ரெயில் நிலையத்தில் தனது 1 வயது குழந்தையை சுமந்தவாறு ரீனா என்ற ரெயில்வே போலீஸ் (RPF) கான்டபிள் தனது கடமையை செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

18 பேர் உயிரிழந்த ரெயில் நிலையத்தின் 16 ஆவது நடைமேடையில் ரீனா தனது குழந்தையை சுமந்தவாறு பயணிகளை ஒழுங்குபடுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அவரது அர்ப்பணிப்பைக் கண்டு, பல பயணிகள் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வணக்கம் செலுத்தி செல்கின்றனர்.

- பிறந்த பெண் குழந்தை முதல் மூதாட்டி வரை எல்லோரையுமே அம்மா என்று கூப்பிடுவோம்.
- செல்போனில் படம் பார்ப்பதும், செல்பி எடுப்பதும் தான் முதலமைச்சரின் வேலையா?
விழுப்புரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சி.வி.சண்முகம் பேசியதாவது:
* பிறந்த பெண் குழந்தை முதல் மூதாட்டி வரை எல்லோரையுமே அம்மா என்று கூப்பிடுவோம்.
* இன்னொருவரை அப்பா என்று அழைத்தால் அதன் அர்த்தமே வேறு.
* சூடு, சுரணை, மானம் உள்ள யாரும் பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள்.
* சொன்னால் என் மீது வழக்கு போடுவார்கள். போட்டுக்கொள்ளுங்கள்.
* செல்போனில் படம் பார்ப்பதும், செல்பி எடுப்பதும் தான் முதலமைச்சரின் வேலையா? என்று அவர் பேசினார்.






