என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அப்புகுட்டி நடித்த `பிறந்தநாள் வாழ்த்துக்கள்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

    • நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் அப்புக்குட்டி படத்தில் நடித்துள்ளார்.
    • "பிறந்தநாள் வாழ்த்துக்கள்" படத்தின் First Look போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

    சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானவர் சிவபாலன் என்கிற அப்புகுட்டி. அதைத்தொடர்ந்து அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தற்பொழுது படத்தில் நடித்துள்ளார்.

    ராஜூ சந்திரா இயக்கத்தில் நடித்துள்ள "பிறந்தநாள் வாழ்த்துகள்" படத்தின் First Look போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

    ராஜு சந்திரா எழுதி இயக்கி, பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், ரோஜி மேத்யூ, ராஜு சந்திரா இருவரும் தயாரித்துள்ளனர்.

    மாதன்ஸ் குழுமம் இணைந்து தயாரித்துள்ளது. மலையாள நடிகை ஐஸ்வர்யா அனில், இப்படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக அறிமுகம் ஆகிறார். ஸ்ரீஜா ரவி மற்றும் ரோஜி மேத்யூ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பிறந்தநாள் வாழ்த்துக்கள் படத்தின் டிரெய்லர் கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    கிராமத்து எதார்த்தத்தை, காதலுடன் காமெடி கலந்து, ஜனரஞ்சகமாக கதை எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கியுள்ளார் ராஜூ சந்ரா. இசையை நவநீத் அமைக்க, கலையை வினோத் குமார் கையாண்டுள்ளார். படம் விரைவில் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×