என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இந்த போட்டியில் மழையால் ஒரு பந்து கூட வீச முடியாமல் ரத்து செய்யப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும்.
    • தென் ஆப்பிரிக்கா அணியை பொறுத்தவரை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பி பிரிவில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணி இன்று மோதவுள்ளது. ஏ பிரிவில் இருந்து இந்தியாவும், நியூசிலாந்தும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

    பி பிரிவில் யார் செல்லப் போகிறார் என்பதற்கு இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஏற்கனவே இரு அணிகளும் தாங்கள் விளையாடிய முதல் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டது. இதனால் இன்றைய ஆட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் அரையிறுதிக்கு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

    இந்த நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் ராவல்பிண்டியில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் போடுவதில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. ராவல்பிண்டியில் இந்த நாளில் மழையை யாருமே எதிர்பார்க்கவில்லை. அது மட்டும் இல்லாமல் ராவல்பிண்டியில் பெரிய அளவு மைதானத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்ற வசதி இல்லை. இதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. குறைந்தபட்சம் 20 அல்லது 25 ஓவர்கள் போட்டியாவது நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் ஒரு பந்து கூட வீச முடியாத நிலையில் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

    இதனால் பி பிரிவில் தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா என இரு அணிகளும் மூன்று புள்ளிகள் பெற்றுள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் எஞ்சி இருக்கும் தங்களுடைய போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்று ஆக வேண்டும். இல்லையெனில் இங்கிலாந்து அணி தங்களது இரண்டு ஆட்டங்களை வெற்றி பெற்றால், அவர்கள் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டு விடும்.

    உதாரணத்திற்கு தென் ஆப்பிரிக்கா அணியை பொறுத்தவரை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இதேபோன்று ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால் இந்த இரண்டு அணிகளில் ஏதேனும் ஒரு அணி மூன்று புள்ளிகள் உடன் தொடரை முடிவு செய்யும்.

    அப்படி இருக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணி தங்களுடைய கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் நான்கு புள்ளிகளுடன் அரையிறுதிக்கு சென்று விடுவார்கள். இதனால் இன்றைய ஆட்டம் கண்டிப்பாக நடந்தால் மட்டுமே இந்த குழப்பம் தவிர்க்கப்படும்.

    • அசாம் மாநிலம் கவுகாத்தியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு தொடங்கியது.
    • இந்த மாநாட்டை தொடங்கி வைக்க பிரதமர் மோடி அசாம் சென்றுள்ளார்.

    புதுடெல்லி:

    அசாம் மாநிலம் கவுகாத்தியில் முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டை தொடங்கி வைக்க பிரதமர் மோடி அசாம் சென்றுள்ளார்.

    இந்நிலையில், அசாம் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.

    இதுதொடர்பாக், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    மணிப்பூர் மக்களுக்கு பிரதமர் மீண்டும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளார். கவுகாத்தி சென்று அங்கேயும் ஒரு இரவைக் கழித்தார். ஆனால் அருகில் உள்ள மணிப்பூருக்கு அவர் செல்லவில்லை.

    தற்போது ஜனாதிபதி ஆட்சியில் உள்ள நிலையில் இது மேலும் குழப்பமாக உள்ளது.

    கடந்த இருபத்தி ஒரு மாத காலமாக மணிப்பூர் மக்கள் இவ்வளவு துயரங்களையும், வேதனைகளையும் அனுபவித்து வருகின்றனர்.

    இப்படி வேதனைகள், துன்பங்களை அனுபவித்து வரும் மணிப்பூர் மக்களை மோடி அவர்கள் நேரடியாகச் சென்று பார்ப்பது எப்போது? அவர்கள் காத்திருந்து, காத்திருக்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்.

    • 2020 நவம்பருக்குப் பிறகு தற்காலிக பணியில் நியமிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களையும் பணியில் இருந்து விடுவிக்க உத்தரவு.
    • தற்காலிக பணி நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு.

    அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் கணிப்பொறி உதவியாளராக தினக்கூலி அடிப்படையில் கடந்த 1997-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்த சத்யா என்பவர், பணி வரன்முறை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை பரிசீலித்து 12 வாரங்களில் முடிவு எடுக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணையின்போது, தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படமாட்டாது என தலைமை செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்ததது.

    இந்த நிலையில் இந்த வழக்கு ஆர். சுப்பிரமணியன், பி. அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை செயலாளர் சார்பில், "2020-ம் ஆண்டு நவம்பர் 28-ந்தேதி தற்காலிக பணி நியமனம் செய்வது கைவிடுவது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது" என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதிகள், 2020 நவம்பர் 28-ந்தேதிக்குப் பிறகு தற்காலிக பணியில் நியமிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களையும் பணியில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டனர். அத்துடன் தற்காலிக பணி நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

    இந்த உத்தரவுகள் தொடர்பாக மார்ச் 17-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள் அன்றைய தினத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

    • விஜய் ஆண்டனியின் 25வது படத்தை அருண் பிரபு இயக்கவுள்ளார்.
    • இப்படத்திற்கு சக்தித் திருமகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

    `நான்,' படத்தின் மூலம் விஜய் ஆண்டனி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பில் உருவான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் மக்களிடையே எதிர்பார்ப்பு வரவேற்பை பெறவில்லை.

    இதனிடையே விஜய் ஆண்டனியின் 22ஆவது படமான 'ககன மார்கன்' விரைவில் வெளியாக உள்ளது.

     

    இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 25வது படத்தை அருண் பிரபு இயக்குகிறார் . இப்படத்திற்கு சக்தித் திருமகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. அருண் பிரபு இயக்கத்தில் இதற்கு முன் அருவி மற்றும் வாழ் போன்ற வெற்றித் திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

     

    இப்படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடிக்கவுள்ளார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இவர் ஒரு விளம்பர பட நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதற்கு முன் அமேசான் மினி வெப் தொடரில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவர் நடிக்கும் முதல் படமாக இப்படம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ செய்தி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மார்ச் 2025 முதல் வாரத்தில் இருந்து பைக்கின் டெலிவரி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கு 3 வருட வாரண்டி வழங்கப்பட்டுள்ளது.

    ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் RV BlazeX எலெட்ரிக் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

    இதன் விலை ரூ.1.15 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக்கை ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

    மார்ச் 2025 முதல் வாரத்தில் இருந்து பைக்கின் டெலிவரி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கு 3 வருட வாரண்டி வழங்கப்பட்டுள்ளது.

    RV BlazeX ஆனது 3.24 kWh லித்தியம்-அயன் பேட்டரியால் இயக்கப்படுகிறது. இதில் ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை ஓட்டலாம். இந்த பைக் அதிகபட்சமாக 85 கிமீ வேகத்தில் செல்லும்.

    ஸ்டெர்லிங் சில்வர் பிளாக் மற்றும் எக்லிப்ஸ் ரெட் பிளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் இந்த பைக் கிடைக்கிறது.

    வேகமான சார்ஜிங் மூலம், இந்த பைக்கின் பேட்டரியை 80 நிமிடங்களில் 80% வரை சார்ஜ் செய்ய முடியும். அதே நேரத்தில் சாதாரணமாக வீட்டில் சார்ஜ் செய்யும்போது 80%-த்தை அடைய தோராயமாக 3 மணிநேரம் 30 நிமிடங்கள் ஆகும்.

    • இந்திய அணி ஏற்கனவே வலுவான அணியாக உள்ளது.
    • அனைத்து போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவது கூடுதல் பலனளிக்கும் என்றார்.

    சிட்னி:

    சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

    இந்நிலையில், இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு பெரும் நன்மை அளிக்கிறது.

    அவர்கள் ஏற்கனவே வலுவான அணியாக உள்ளனர். அனைத்துப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு கூடுதலாக பலனளிக்கும்.

    எல்லா போட்டிகளையும் அங்கு விளையாடுவதன் மூலம் அவர்கள் வெளிப்படையான பலனைப் பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

    • சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக செய்தி வெளியானது.
    • TDS தொடர்பாக வழக்கமான சரிபார்ப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை என விளக்கம்.

    சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் எந்வித வருமான வரி சோதனையும் நடைபெறவில்லை என தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள விளக்க கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இன்று தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை இணை ஆணையர் தலைமையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விதமான செலவினங்களில் உரிய வருமான வரி பிடித்தம் (TDS) தொடர்பாக வழக்கமான சரிபார்ப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை ஆகும்.

    ஆகவே தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் எவ்வித வருமான வரி சோதனையும் நடைபெறவில்லை. வருமான வரி சோதனை என்ற செய்தி தவறானது.

    இவ்வாறு தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

    • நிறைவடைய உள்ள நிலையில் திரிவேணி சங்கமத்தில் நீராட மக்களிடையே ஒரு போட்டி நிலவுகிறது.
    • போனை தண்ணீரில் நனைத்து நனைத்து எடுத்த பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.

    உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். நாளையுடன் இந்நிகழ்வு நிறைவடைய உள்ள நிலையில் திரிவேணி சங்கமத்தில் நீராட மக்களிடையே  போட்டி நிலவுகிறது.

    இதுபோன்ற சூழ்நிலையில், ஏதோ ஒரு காரணத்தால் சங்கமத்திற்குச் சென்று குளிக்க முடியாதவர்கள், அங்கிருந்து கொண்டு வரும் தண்ணீரைத் தெளித்து அல்லது வீட்டில் உள்ள தண்ணீரில் கலந்து குளிப்பதன் மூலம் தங்களைத் திருப்திப்படுத்திக் கொள்கிறார்கள்.

    இந்நிலையில் கும்பமேளாவில் புனித நீராட பிரயாக்ராஜ் சென்ற இடத்தில் தன் கணவருக்கு வீடியோ-கால் செய்து, போனை தண்ணீரில் நனைத்து நனைத்து எடுத்த பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.

    கணவனால் கும்பமேளாவிற்கு வரமுடியாத காரணத்தால், அப்பெண் இவ்வாறு செய்ததாக தெரிகிறது.

    இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ சிறிது நேரத்திலேயே வைரலானது. இந்த வீடியோவை இதுவரை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். கமன்ட் செக்ஷனில் பலர் பலவிதமாக பதிவிட்டு வருகின்றனர். 

    • சிவகங்கையில் திருடிய பைக்கை, ரூ.1500 பணத்துடன் உரிமையாளர் வீட்டின் முன்பு திருடன் நிறுத்தியுள்ளார்.
    • தவறை உணர்ந்து 450 கி.மீ தூரம் பயணித்து பைக்கை கொண்டுவந்துள்ளேன்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே திருடிய பைக்கை, ரூ.1500 பணம் மற்றும் மன்னிப்புக் கடிதத்துடன் உரிமையாளர் வீட்டின் முன்பு திருடன் நிறுத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ப்ளாக் பாண்டா என்ற பெயரிலான அந்த மன்னிப்பு கடிதத்தில், "அவசரத்துக்கு பைக்கை எடுத்துட்டேன். தவறை உணர்ந்து 450 கி.மீ தூரம் பயணித்து பைக்கை கொண்டுவந்துள்ளேன்.

    ரூ.1500 பணம் பெட்ரோல் டேங்க்கில் இருக்கு. எப்படியும் கெட்ட வார்த்தை பேசியிருப்பீர்கள். அதற்கு நீங்கள் வருந்த வேண்டும். இல்லையென்றால் நாங்கள் வருந்த வைப்போம்" என எழுதப்பட்டுள்ளது"

    • ஞானசேகரனிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
    • பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் மகிளா நீதிமன்றத்திற்கு மாற்ற கோரிக்கை.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    ஞானசேகரனுக்கு எதிராக ஏற்கனவே போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரன் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது குற்றப்பத்திரிகை நகல் அவரிடம் வழங்கப்பட்டது.

    ஞானசேகரனுக்கு எதிராக பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தனர். இதனால் சைதாப்பேட்டை நீதிமன்றம் வழக்கை மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது.

    • 2023 ஆம் ஆண்டு கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் MAD என்ற தெலுங்கு திரைப்படம் வெளியானது.
    • இப்பாகத்தையும் கல்யாண் ஷங்கர் இயக்கியுள்ளார்.

    2023 ஆம் ஆண்டு கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் MAD என்ற தெலுங்கு திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நித்தின், சங்கீத் ஷோபன், ராம் நித்தின், மற்றும் பலர் நடித்து இருந்தனர். கல்லூரி நண்பர்களுக்கு இடையே நடக்கும் கதையாக அமைந்து இருந்தது. கல்லூரி, நகைச்சுவை கதைக்களத்தில் அமைந்ததால் திரைப்படம் இளம் தலைமுறைகள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் படத்தின் வெற்றியை தொடர்ந்து MAD இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளனர். இப்பாகத்தையும் கல்யாண் ஷங்கர் இயக்கியுள்ளார். திரைப்படத்தின் முதல் பாடலான லாடு கானி பெல்லி மற்றும் சுவாதி ரெட்டி பாடல்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. நண்பனி கல்யாணத்தை ஒட்டி 4 நண்பர்களும் சேர்ந்து கோவா டிரிப் செல்கின்றனர் அங்கு நடக்கும் பிரச்சனை என டீசர் காட்சிகள் அமைந்துள்ளது. டீசர் கடைசியில் வரும் பாய் என்ற வசனம் மிகவும் சிரிப்பாக ஹைலைட்டாக அமைந்துள்ளது. படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தங்கள் வீட்டு நாய் இறந்துவிட்டதாகவும் அதை அப்புறப்படுத்த கொண்டுவந்ததாகவும் கூறினர்.
    • சுயநினைவு திரும்பியதும், மீண்டும் சண்டை ஏற்பட்டது.

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் குமார்துலி காட் அருகே இரண்டு பெண்கள் வெட்டப்பட்ட உடல் பாகங்களை டிராலி சூட்கேசில் வைத்துக் கொண்டுபோய் கங்கை நீரில் போட முயன்றுள்ளனர்.

    இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடந்துள்ளது. பையுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் குமார்துலி காட் கங்கை கரையில் நீல நிற டிராலி சூட்கேஸுடன் நின்றிருந்த பெண்களை அப்பகுதி மக்கள் பிடித்து விசாரித்துள்ளனர்.

    தங்கள் வீட்டு நாய் இறந்துவிட்டதாகவும் அதை அப்புறப்படுத்த இங்கு கொண்டுவந்ததாகவும் அப்பெண்கள் தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் இருந்த டிராலி பையைத் திறந்து பார்த்த மக்கள், உள்ளே இருந்த தலை உள்ளிட்ட உடல் பாகங்கள் வெட்டப்ப்பட்ட பெண்ணின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தொடர்ந்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு அப்பெண்களைக் கைது செய்தனர். அதன்பின் அவர்களிடம் நடந்த விசாரணையில் இரு பெண்கள், ஃபால்குனி கோஷ் மற்றும் அவரது தாயார் ஆர்த்தி கோஷ் என்று தெரியவந்தது. சூட்கேசில் இருந்த பெண்ணின் உடல், ஃபால்குனி கோஷின் மாமனாரின் சகோதரி சுமிதா கோஷ் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

     

    அசாமின் ஜோர்ஹாட்டைச் சேர்ந்த சுமிதா, தனது கணவரிடமிருந்து பிரிந்து, பிப்ரவரி 11 முதல் கொல்கத்தாவில் உள்ள ஃபால்குனி மற்றும் ஆர்த்தி கோஷ் இருவருடனும் வசித்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஃபால்குனி தனது கணவரைப் பிரிந்து தாயுடன் வாழ்கிறார்.

    நேற்று மாலை ஃபால்குனி, சுமிதா இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஃபால்குனி சுமிதாவை சுவரில் தள்ளியதில் மயக்கமடைந்தார்.

    அவர் சுயநினைவு திரும்பியதும், மீண்டும் சண்டை ஏற்பட்டது. இதன் போது, ஃபால்குனி சுமிதாவின் முகம் மற்றும் கழுத்தில் செங்கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்.

    பின்னர் உடலை வெட்டி சூட்கேசில் வைத்து தாயும் மக்களும் பராசத் காஜிபாராவிலிருந்து சீல்டாவுக்கு  சூட்கேஸுடன் ரெயிலில் பயணம் செய்து அங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்து உடலை குமார்துலி காட் கங்கை நீரில் அப்புறப்படுத்த முயன்றுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ×