நகைச்சுவையான MAD Square படத்தின் டீசர் வெளியானது

2023 ஆம் ஆண்டு கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் MAD என்ற தெலுங்கு திரைப்படம் வெளியானது.இப்பாகத்தையும் கல்யாண் ஷங்கர் இயக்கியுள்ளார்.
நகைச்சுவையான MAD Square படத்தின் டீசர் வெளியானது
Published on

2023 ஆம் ஆண்டு கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் MAD என்ற தெலுங்கு திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நித்தின், சங்கீத் ஷோபன், ராம் நித்தின், மற்றும் பலர் நடித்து இருந்தனர். கல்லூரி நண்பர்களுக்கு இடையே நடக்கும் கதையாக அமைந்து இருந்தது. கல்லூரி, நகைச்சுவை கதைக்களத்தில் அமைந்ததால் திரைப்படம் இளம் தலைமுறைகள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தின் வெற்றியை தொடர்ந்து MAD இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளனர். இப்பாகத்தையும் கல்யாண் ஷங்கர் இயக்கியுள்ளார். திரைப்படத்தின் முதல் பாடலான லாடு கானி பெல்லி மற்றும் சுவாதி ரெட்டி பாடல்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. நண்பனி கல்யாணத்தை ஒட்டி 4 நண்பர்களும் சேர்ந்து கோவா டிரிப் செல்கின்றனர் அங்கு நடக்கும் பிரச்சனை என டீசர் காட்சிகள் அமைந்துள்ளது. டீசர் கடைசியில் வரும் பாய் என்ற வசனம் மிகவும் சிரிப்பாக ஹைலைட்டாக அமைந்துள்ளது. படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com