என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • AX7, மற்றும் AX7 L என்ற 2 வேரியண்ட் கார்களின் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
    • AX7 வேரியண்ட் கார்களின் விலை ரூ.45 ஆயிரம் குறைந்துள்ளது.

    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.

    மஹிந்திரா நிறுவனத்தின் XUV700 மாடலில் AX7, மற்றும் AX7 L என்ற 2 வேரியண்ட் கார்களின் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. AX7 வேரியண்ட் கார்களின் விலை ரூ.45 ஆயிரமும் AX7 L வேரியண்ட் கார்களின் விலை ரூ.75 ஆயிரமும் குறைந்துள்ளது.

    ரூ.21.64 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் 6 இருக்கைகள் கொண்ட AX7 காரின் விலை ரூ.45,000 குறைக்கப்பட்டு ரூ.21.19 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

    ரூ.21.44 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் 7 இருக்கைகள் கொண்ட AX7 காரின் விலை ரூ.45,000 குறைக்கப்பட்டு ரூ.20.99 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

    ரூ.24.14 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் 6 இருக்கைகள் கொண்ட AX7 L காரின் விலை ரூ.75,000 குறைக்கப்பட்டு ரூ.23.39 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

    ரூ.23.94 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் 7 இருக்கைகள் கொண்ட AX7 L காரின் விலை ரூ.75,000 குறைக்கப்பட்டு ரூ.23.19 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

    • பணியின்போதும் குளிர்பானங்கள், பழங்கள், இருமல் மருந்து, இளநீர் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்து சுற்றறிக்கை விடப்பட்டுள்ளதா என்று கேட்டனர்.
    • வெயில் நேரத்தில் என்ஜின் பெட்டி சூடாக இருக்கும் நிலையில், குளிர்பானங்கள் குடிக்க தடை விதிப்பது மனிதத்தன்மையற்ற செயல் என்று அவர்கள் கூறினர்.

    புதுடெல்லி:

    மாநிலங்களவை கேள்வி நேரத்தின்போது, ம.தி.மு.க. எம்.பி. வைகோ, தி.மு.க. எம்.பி. சண்முகம் ஆகியோர், ரெயில் என்ஜின் டிரைவர்கள் பணிக்கு வரும்போதும், பணியின்போதும் குளிர்பானங்கள், பழங்கள், இருமல் மருந்து, இளநீர் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்து சுற்றறிக்கை விடப்பட்டுள்ளதா என்று கேட்டனர்.

    வெயில் நேரத்தில் என்ஜின் பெட்டி சூடாக இருக்கும் நிலையில், குளிர்பானங்கள் குடிக்க தடை விதிப்பது மனிதத்தன்மையற்ற செயல் என்று அவர்கள் கூறினர்.

    அதற்கு பதில் அளித்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ''ரெயில் டிரைவர்கள், ஆல்கஹால் அல்லாத பானங்களை அருந்த எந்த கட்டுப்பாடும் இல்லை. சில பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஏற்கனவே திருத்தப்பட்டு விட்டன'' என்றார்.

    • கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், பெங்களூரு மாநகர போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு வழங்கியுள்ளன.
    • பள்ளி-கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்.

    பெங்களூரு:

    பெலகாவியில் கடந்த மாதம்(பிப்ரவரி) 21-ந் தேதி மராத்தியில் பேச மறுத்த கர்நாடக அரசு பஸ் கண்டக்டர் மீது மராட்டிய அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்த விவகாரம் கர்நாடகம்-மராட்டியம் இடையே மொழி பிரச்சனையாக மாறியது. கர்நாடகத்தில் மராட்டிய மாநில பஸ்களும், மராட்டியத்தில் கர்நாடக அரசு பஸ்களும் தாக்கப்பட்டன. இந்த விவகாரம் இரு மாநிலங்களிடையே பதற்றமான சூழலை ஏற்படுத்தியது.

    பேச்சுவாா்த்தைக்கு பிறகு இரு மாநிலங்களிடையே இயல்பு நிலை திரும்பியது. இந்த நிலையில் இவ்விவகாரத்தில் மராட்டிய அமைப்பினரை கண்டித்து கர்நாடகத்தில் 22-ந் தேதி(இன்று) முழு அடைப்பு நடத்துவதாக கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. அந்த கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

    அதன்படி கர்நாடகத்தில் இன்று(சனிக்கிழமை) முழுஅடைப்பு நடைபெற உள்ளது. இந்த முழு அடைப்புக்கு அனைத்து தரப்பு மக்களும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு வழங்க வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த முழு அடைப்புக்கு கர்நாடக ரக்ஷண வேதிகே(சிவராமே கவுடா அணி) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு வழங்கியுள்ளன.

    கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், பெங்களூரு மாநகர போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு வழங்கியுள்ளன. ஆனால் பஸ்கள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் அதிகாரப்பூர்வமாக தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அதனால் ஆட்டோக்கள், வாடகை கார்கள் வழக்கம் போல் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பள்ளி-கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும். பல்வேறு வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்று தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் திறந்திருக்கும். தியேட்டர்களில் ஒரு காட்சியை மட்டும் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முழு அடைப்பு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. கன்னட அமைப்பினர் பெங்களூருவில் இன்று ஊர்வலம் நடத்த உள்ளனர்.முழு அடைப்பையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வலுக்கட்டாயமாக கடைகளை மூடும்படி கூறினால் அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • ஹாசன் மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • பண்ணை வீட்டில் உள்ள கோழிப்பண்ணையில் 12 அடி நீள ராஜநாகம் நுழைந்துள்ளது.

    கர்நாடகாவில் கோழிப்பண்ணைக்குள் நுழைந்த ராஜ நாகத்துடன் பிட் புல் வகை வளர்ப்பு நாய் 'பீமா' போராடி சண்டையிட்டு, தனது உயிரை கொடுத்து உரிமையாளரின் குடும்பத்தினரை காப்பாற்றியுள்ளது.

    ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஷமந்த் கவுடா என்பவரின் பண்ணை வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பண்ணை வீட்டில் உள்ள கோழிப்பண்ணையில் 12 அடி நீள ராஜநாகம் நுழைந்துள்ளது. அந்த இடத்தில் ஷமந்த் கவுடாவின் குழந்தை விளையாடி வந்துள்ளது. ராஜ நகத்தை கவனித்த வளர்ப்பு நாய் 'பீமா' ராஜநாகத்துடன் சுமார் 40 நிமிடங்கள் சண்டையிட்டு 10 துண்டுகளாக குதறி கொன்றது. இந்த சண்டையில் விஷம் ஏறி 'பீமா' உயிரிழந்தது.

    வளர்ப்பு நாய் 'பீமா' குறித்து பேசிய அதன் உரிமையாளர், "பாம்புகளுடன் சண்டையிடுவது பீமாவுக்குப் புதிதல்ல. இந்த தோட்டத்தில் புகுந்த சுமார் 15 விஷ பாம்புகளை பீமா கொன்றுள்ளது" என்று தெரிவித்தார்.

    • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் அலங்காரம்.
    • திருவாரூர் ஸ்ரீ தியாகேசர் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு பங்குனி-8 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: அஷ்டமி நள்ளிரவு 1.43 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம்: மூலம் இரவு 11.58 மணி வரை பிறகு பூராடம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் அலங்காரம். திருவெள்ளாறை ஸ்ரீ சுவதாத்திரிநாதர் காலை அன்ன வாகனம், இரவு யானை வாகனத்திலும் வீதி உலா. திருவாரூர் ஸ்ரீ தியாகேசர் பவனி. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி பஞ்சமுக அனுமன் மரவுரி ராமர் திருக்கோலமாய் காட்சி. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர், ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெரு மாள் கோவில்களில் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன அலங்கார சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆதரவு

    ரிஷபம்-முயற்சி

    மிதுனம்-லாபம்

    கடகம்-மாற்றம்

    சிம்மம்-பரிசு

    கன்னி-பாசம்

    துலாம்- அன்பு

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- ஆக்கம்

    மகரம்-விருப்பம்

    கும்பம்-நன்மை

    மீனம்-பயணம்

    • பார்த்திபன் கனவு, கனா கண்டேன் போன்ற பல வெற்றி படங்களில் ஸ்ரீகாந்த் நடித்திருந்தார்.
    • கோவிலில் இருந்த ரசிகர்கள் ஸ்ரீகாந்த் உடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.

    ரோஜாக்கூட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இதை தொடர்ந்து பார்த்திபன் கனவு, கனா கண்டேன் போன்ற பல வெற்றி படங்களில் அவர் நடித்திருந்தார்.

    அண்மையில் இவர் நடிப்பில் வெளியான 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்' என்ற திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

    இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்திருக்கிறார். பின்னர் கோவிலில் இருந்த ரசிகர்கள் அவருடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.

    • குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் கிடக்கின்றன.
    • பொதுமக்கள் அமரும் இடத்தில் உள்ள மேற்கூரையின் இரும்பு கம்பிகள் சிதிலமடைந்து கிடக்கிறது.

    கே.பி.அக்ரஹாரா:

    பெங்களூரு கே.பி.அக்ரஹாரா மாகடி ரோட்டில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தை பள்ளி மாணவ-மாணவிகள் மட்டுமின்றி கே.பி.அக்ரஹாரா, மாகடி ரோட்டை சேர்ந்த இளைஞர்களும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மைதானத்தில் தினமும் ஏராளமானோர் விளையாடி வருகிறார்கள். இங்கு பொதுமக்கள் அமருவதற்காக இருக்கைகளும் அமைக்கப்பட்டிருக்கிறது.

    இந்த நிலையில் தற்போது அந்த மைதானம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. அங்குள்ள இருக்கைகள் சேதமடைந்து கிடப்பதுடன், செம்மண் நிறத்தில் காட்சி அளிக்கிறது. மேலும் ஆங்காங்கே குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.

    மேலும் பொதுமக்கள் அமரும் இடத்தில் உள்ள மேற்கூரையின் இரும்பு கம்பிகள் சிதிலமடைந்து கிடக்கிறது. சில கம்பிகள் சரியான பிடிப்பு இல்லாமல் உள்ளன. இதற்கிடையில் இரவு நேரத்தில் சிலர் விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து மதுபானம் குடிப்பதுடன், கஞ்சா புகைக்கின்றனர். இதனால் கல்வி நிலையம், விஷமிகளின் கூடாரமாக மாறிவிட்டது. அங்கு கிடக்கும் மதுபான பாக்கெட்டுகள், சிகரெட்டுகளை பார்த்து மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லக்கூடும்.

    எனவே மாநகராட்சி அதிகாரிகள் விளையாட்டு மைதானத்துக்குள் கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றுவதுடன், இருக்கையையும் சீரமைத்து கொடுக்க வேண்டும். அதேபோல மைதானத்தில் அமர்ந்து மது குடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் குறிப்பிட்ட குடிசை வீட்டுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.

    மும்பை:

    மும்பை பாந்திரா கே.சி. சாலையில் உள்ள குடிசை பகுதியில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் குறிப்பிட்ட குடிசை வீட்டுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 286 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.71 லட்சத்து 68 ஆயிரம் ஆகும்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த இம்ரான் கமாலூதீன் அன்சாரி(வயது36) என்பவரை பிடித்து கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாநகராட்சி அங்கு மரத்தால் ஆன நடைபாலத்தை அமைத்துள்ளது.
    • மலபார்ஹில் கமலா நேரு பார்க் பகுதியில் தொடங்கி டூங்கர்வாடி வரை வன மரப்பாலம் உள்ளது.

    மும்பை:

    மும்பை மலபார்ஹில் பகுதியில் அரபிக்கடலையொட்டி மரங்கள் நிறைந்த வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியை பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில் மாநகராட்சி அங்கு மரத்தால் ஆன நடைபாலத்தை அமைத்துள்ளது.

    அடர்ந்த மரங்களுக்கு இடையே கடல் மற்றும் இயற்கை அழகை கண்டு ரசிக்கும் வகையில் இந்த மரப்பாலம் ரூ.25 கோடி செலவில் 470 மீட்டர் நீளத்தில் 2.4 மீட்டர் அகலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மலபார்ஹில் கமலா நேரு பார்க் பகுதியில் தொடங்கி டூங்கர்வாடி வரை வன மரப்பாலம் உள்ளது.

    இந்த பாலம் அமைக்கும் பணி ஏறக்குறைய முடிந்துவிட்டது. விரைவில் இது பொதுமக்களுக்காக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தநிலையில் மரப்பாலத்தில் நடந்தபடி இயற்றை அழகை ரசிக்க 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டினருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.

    மரப்பால திட்டம் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த திட்டம் மும்பை சுற்றுலாவுக்கு ஊக்கமாக இருக்கும். பராமரிப்பு, பாதுகாப்பு பணிகளுக்காக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது" என்றார்.

    • தாய் ஜூலியானா மற்றும் தங்கை கிசேல் உள்பட 3 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தனர்.
    • தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் நிக்கோலசை கைது செய்தனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் லூட்டன் நகரைச் சேர்ந்தவர் நிக்கோலஸ் பிரோஸ்பர் (வயது 19). கடந்த ஆண்டு இவருக்கும், தாய் ஜூலியானா பால்கனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த நிக்கோலஸ் திடீரென வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தார். இதில் தாய் ஜூலியானா மற்றும் தங்கை கிசேல் உள்பட 3 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் நிக்கோலசை கைது செய்தனர்.

    இதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார். எனவே நிக்கோலசுக்கு 49 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

    • ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் 13 இடங்களிலும் நிகழ்ச்சியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
    • மற்ற இடங்களில் கலந்துகொள்ளும் பிரபலங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நாளை 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடவுள்ளன. கிரிக்கெட் திருவிழாவுக்கு முன் பிரமாண்டமான தொடக்க விழா நடக்கவுள்ளது. இதில் பாலிவுட் நடிகர், நடிகைகள் எனப் பலர் கலந்து கொள்வார்கள்.

    17-வது சீசனின் தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது, இதில் டைகர் ஷெராஃப், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் ஸ்டேடியத்தில் கலக்கினர்.

    அந்த வகையில் இந்த சீசனில் பாலிவுட் பிரபலங்கள் கலக்க இருக்கின்றனர். நடிகை ஸ்ரத்தா கபூர், நடிகர் வருண் தவான், பாடகர் அரிஜித் சிங், திஷா பதானி மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

    மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் போட்டிகள் நடைபெறும் 13 இடங்களிலும் நிகழ்ச்சியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி நாளை 22-ம் தேதி கொல்கத்தாவில் நடக்கும் தொடக்க விழா கொண்டாட்டத்தில் இந்தி நடிகை திஷா பதானி மற்றும் பாடகி ஸ்ரேயா கோஷல் பங்கேற்க உள்ளனர். மற்ற இடங்களில் கலந்துகொள்ளும் பிரபலங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

    இவர்களை தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள சென்னை, மும்பை போட்டிக்கு முன்பாக நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.

    சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று வேல் டெக் பல்கழைகளத்தில் நடைப்பெற்றது. இதில் படக்குழு அனைவரும் கலந்துக் கொண்டனர். மேடையில் விக்ரம், துஷாரா, எஸ்.ஜே சூர்யா , சுராஜ் மற்றும் இளம் பெண் தயாரிப்பாளரான ரியா ஷிபு பேசினர்.

    இதில் ரியா ஷிபு பேசியது இணையத்தில் பலரதும் கவனத்தை பெறுள்ளது. இவர் பேச்சு பார்வையாளர்களை கட்டிப்போட்டது. பேச்சில் மிகத் தெளிவு, மிகவும் எனெர்ஜியாக பேசி அங்கு இருந்தவர்களை பிரமிப்பில் ஆழ்த்தினார். யார் இந்த ரியா ஷிபு என்பதை பார்க்கலாம் வாங்க.

    20 வயதே ஆன ரியா ஷியு தயாரிப்பு நிறுவனமான HR பிக்சர்ஸின் உரிமையாளர் ஆவார். இவரது தந்தை ஷிபு மலையாள திரையுலகில் மிகப்பெரிய வினியோகிஸ்தர்  என்பது குறிப்பிடத்தக்கது.

    இவரது தந்தை தமீன் பில்ம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பல தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களை தயாரித்தும் வினியோகிஸ்தும் உள்ளார். பல வெற்றி திரைப்படங்களான புலி, இருமுகன், RRR, போன்ற திரைப்படங்களை தமிழில் தயாரித்துள்ளனர்.

     எச்.ஆர் பிக்சர்ஸ்  தக்ஸ், முரா மற்றும் தற்பொழுது வீர தீர சூரன் திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படமே இவர்கள் தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படமாகும்.


    ரியா ஷிபு இன்ஸ்டாகிராமில் மிகவும் ஃபேமஸ் மற்றும் வைரலானவர். இவர் செய்யும் ரீல்ஸ்-க்கும் மற்றும் பிரத்யேக எடிட்டுக்கு பல ரசிகர்கள் உள்ளன. ஆனால் தற்பொழுது இவர்தான் படத்தின் தயாரிப்பாளர் என தெரிந்ததுல் பலருக்கும் ஷாக் அடித்தது போல் இருக்கிறது. இவர் பேசிய வீடியோ இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

    இந்த சிறு வயதிலேயே சிறந்த படங்களை தயாரித்து வரும் ரியா ஷிபுவிற்கு பாராட்டுகள்.






    ×