என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • செங்கோட்டையன் எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் தனக்கு சம்மதம்.
    • அனைவரும் ஒன்றானால்தான் அ.தி.மு.க. ஆட்சியில் அமரும் என்று உறுதியாக நம்புகிறோம்.

    பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி உள்ளார். செங்கோட்டையனின் கருத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில்,

    * பிரிந்தவர்களை ஒன்றிணைக்க முயலும் செங்கோட்டையனுக்கு உறுதுணையாக இருப்பேன்.

    * செங்கோட்டையன் எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் தனக்கு சம்மதம்.

    * அனைவரும் ஒன்றானால்தான் அ.தி.மு.க. ஆட்சியில் அமரும் என்று உறுதியாக நம்புகிறோம் என்றார். 

    நிவின் பாலி Baby Girl படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    நிவின் பாலி, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களை லைனப்பில் வைத்துள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ளார். மேலும் நயன் தாராவுடன் டியர் ஸ்டூடெண்ட்ஸ் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

    அதை தொடர்ந்து நிவின் பாலி Baby Girl படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை அருண் வர்மா இயக்கியுள்ளார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இப்படம் ஒரு கிரைம் திரில்லர் கதைக்களமாக உருவாகியுள்ளது. நிவின் பாலியுடன் லிஜோ மோல் , சங்கீத் பிரதாப் மற்றும் அபிமன்யு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    தொழில்நுட்ப குழு விவரங்கள்:

    ஒளிப்பதிவு - ஃபைஸ் சித்திக்

    இசை-கிறிஸ்டி ஜோபி

    சண்டை - விக்கி

    கலை இயக்குநர் - அனீஸ்

    படத்தொகுப்பு - ஷைஜித் குமரன்


    • வெளியில் சென்றவர்களை இணைக்காமல் ஆட்சி அமைத்துவிடலாம் என கூற முடியாது.
    • ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் நினைக்கிறார்கள். அதனால் வெளியில் சென்றவர்களை இணைக்க வேண்டும்.

    கோபி:

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    * 2024-ல் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 இடங்களில் வென்றிருக்க முடியும்.

    * அ.தி.மு.க.வில் தொய்வு உள்ளது, பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் கூறினோம்.

    * நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, அன்பழகன் ஆகியோருடன் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தலை சந்திக்க முடியும் என கூறினோம்.

    * வெளியில் சென்றவர்களை இணைக்காமல் ஆட்சி அமைத்துவிடலாம் என கூற முடியாது.

    *அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள், நிபந்தனை இல்லாமல் மீண்டும் வர தயார் என கூறுகிறார்கள்.

    * எந்த பொறுப்பும் தேவையில்லை என கூறுபவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    * ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் நினைக்கிறார்கள். அதனால் வெளியில் சென்றவர்களை இணைக்க வேண்டும்.

    * பிரிந்த தலைவர்களை இணைக்கவில்லை என்றால் நாங்கள் அந்தப் பணிகளை மேற்கொள்வோம்.

    * யார், யாரை இணைக்க வேண்டும் என்பது குறித்து பொதுச்செயலாளர் முடிவு செய்து கொள்ளலாம்.

    * என்னுடைய கருத்தை கூறி இருக்கிறேன், இது நடக்கவில்லை என்றால் நாங்கள் முயற்சி செய்வோம்.

    * 10 நாட்களில் முயற்சி எடுக்கவில்லை என்றால், இதே மனநிலையில் உள்ளவர்களை திரட்டி முயற்சி மேற்கொள்வோம்.

    * அ.தி.மு.க.வுக்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

    * எங்களுடைய கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பது தான் எங்களது ஆசை.

    * ஜெயலலிதா கூறியது போல் நூறாண்டு காலம் அ.தி.மு.க. ஆள வேண்டும் என்பதற்கான பணியை தொடங்கியுள்ளோம்.

    * நிறைவேற்றவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்றார்.

    * உங்களை மீண்டும் அமைச்சர் ஆக்கியது எடப்பாடி பழனிசாமி தானே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், தன்னைப் போல் 2009-ல் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி என்று கூறினார்.

    * பிரிந்து சென்ற தலைவர்களை சந்தித்து பேசி விட்டீர்களா? என்ற கேள்விக்கு அது சஸ்பெண்ஸ் என கூறினார். 

    இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.

    பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

    திரைப்படம் எப்படி இருக்கு என்பதை ரசிகர்கள் அவர்களது கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் சிவகார்த்திகேயனின் நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர். ருக்மிணி - சிவகார்த்திகேயனின் காதல் காட்சிகள் ரசிக்கும்படி அமைந்துள்ளது.

    ஆக்ஷன் காட்சிகளை ஏ.ஆர் முருகதாஸ் பிரம்மாதமாக கையாண்டுள்ளார். படத்தின் முதல் பாதி நல்ல காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளால் நிறைந்து பார்வையாளர்களின் மனதில் இடம் பிடிக்கிறது, இடைவேளை பகுதியில் வரும் காட்சி அட்டகாசமாக இருக்கிறது. மேலும் இரண்டாம் பாதி முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் மற்றும் கதை மெதுவாக நகர்கிறது போன்ற கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மொத்தத்தில் மதராஸி சிவகார்த்திகேயனுக்கு ஒரு அபவ் ஆவரேஜ் திரைப்படமாகவும் ஏ.ஆர் முருகதாஸ்-க்கு ஒரு கம் பேக் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • யாராவது கட்சியை விட்டு சென்றால் அவர்களை நேரில் சென்று மீண்டும் அழைப்பார் எம்.ஜி.ஆர்.
    • ஆளுமை, மக்கள் செல்வாக்கு மிக்க தலைமை தேவை என்பதால் ஜெயலலிதாவை ஆதரித்தோம்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். இது முக்கியமான நேரம், அமைதி காக்குமாறு கூறி பேசத் தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கடந்த 1972-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் தான் அ.தி.மு.க.

    * கிளைக் கழக செயலாளராக எனது பணியை அ.தி.மு.க. வில் தொடங்கினேன்.

    * செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு வெளியே வந்து பொதுமக்கள், தொண்டர்களுடன் உரையாற்றுவேன்.

    * மக்கள் மனதில் குடிக்கொண்டிருக்கும் தலைவர் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

    * என்னை பொருளாளராக நியமித்து பொதுக்குழுவை நடத்த எம்.ஜி.ஆர்.சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    * சத்யா ஸ்டூடியோவுக்கு என்னை அழைத்து மனதார பாராட்டியவர் எம்.ஜி.ஆர்.

    * சத்தியமங்கலத்தில் என்னை போட்டியிடுமாறு கூறினார் எம்.ஜி.ஆர்.

    * என்னுடைய பெயரை சொன்னால் மட்டும் போதும் தேர்தலில் வெற்றி பெறலாம் என எம்.ஜி.ஆர். கூறினார்.

    * இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்ற பெயரை பெற்றவர் எம்.ஜி.ஆர்.

    * யாராவது கட்சியை விட்டு சென்றால் அவர்களை நேரில் சென்று மீண்டும் அழைப்பார் எம்.ஜி.ஆர்.

    * ஆளுமை, மக்கள் செல்வாக்கு மிக்க தலைமை தேவை என்பதால் ஜெயலலிதாவை ஆதரித்தோம்.

    * திராவிடர்கள், ஆன்மீகவாதிகள் ஏற்றுக்கொள்ளும் ததலைமை பண்பை பெற்றிருந்தார் ஜெயலலிதா.

    * ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுகவுக்கு சோதனை வந்த போது அனைவரும் சேர்ந்து சசிகலாவை அழைத்தோம்.

    * சசிகலாவுக்கு பின் எடப்பாடி பழனிசாமியை நியமித்தோம்.

    * எனக்கு 2 வாய்ப்புகள் இருந்தபோதும் இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்

    * அ.தி.மு.க.வுக்காக பல்வேறு தியாகங்களை செய்திருக்கிறேன்.

    * 2016-க்கு பின் தேர்தல் களம் போராட்டக்களம் ஆகி விட்டது என்பதை நாம் அறிவோம்.

    * 2019, 2021, 2024 உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்த போது களத்தில் பிரச்சனை ஏற்பட்டது என்றார்.

    முன்னதாக, கோபியில் செய்தியாளர் சந்திப்பை நடத்துவதற்கு முன்னர் செங்கோட்டையன் ரோடுஷோ நடத்தினார்.

    • அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
    • கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் தென்மே ற்கு பருவமழை காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்தாண்டில் மேட்டூர் அணை 6 முறை நிரம்பியது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட நீர்வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை முதல் நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை 10 மணி முதல் மீண்டும் 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    16 கண் மதகு வழியாக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • அரசு உறவு வேறு, ராஜாங்க உறவு வேறு. தனிப்பட்ட நட்பு என்பது வேறு.
    • அதனால் தான் அவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது என்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் இங்கிலாந்து செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், இந்திய பிரதமர் மோடிக்கும் இடையே ஒரு காலத்தில் தனிப்பட்ட முறையில் நல்ல உறவு இருந்தது. அது இப்போது முடிந்துவிட்டது என நான் நினைக்கிறேன்.

    இது அனைவருக்கும் ஒரு பாடம். உதாரணமாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு இது ஒரு பெரிய பாடம்.

    டிரம்பை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம். ஒரு நல்ல தனிப்பட்ட உறவு சில சமயங்களில் உதவக்கூடும். ஆனால் அது உங்களை மோசமானவற்றில் இருந்து பாதுகாக்காது.

    அரசு உறவு வேறு, ராஜாங்க உறவு வேறு. தனிப்பட்ட நட்பு என்பது வேறு. அதனால் தான் அவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

    டிரம்ப் சர்வதேச உறவுகளை தலைவர்களுடனான தனது தனிப்பட்ட உறவுகளின் கண்ணோட்டத்தில் பார்க்கிறார் என நினைக்கிறேன். எனவே அவருக்கு விளாடிமிர் புதினுடன் நல்ல உறவு இருந்தால் அமெரிக்காவுக்கு ரஷியாவுடன் நல்ல உறவு இருக்கிறது என அவர் கருதுகிறார்.

    ஹூஸ்டனில் நடந்த ஹவுடி மோடி பேரணி முதல் அரசு வருகைகள் வரை தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த மோடி-டிரம்ப் இடையிலான உறவுகள் இப்போது மோசமாகி உள்ளது. இரு நாட்டு உறவு மோசமான நிலையை அடைந்துள்ளது என தெரிவித்தார்.

    இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் நீடித்து வரும் சூழ்நிலையில், ஜான் பால்டன் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.78,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • ஒரு கிராம் வெள்ளி 137 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 37ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 680 ரூபாயும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு 160 ரூபாயும், நேற்று சவரனுக்கு 640 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,440-க்கு விற்பனையானது. வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சமாக நேற்றுமுன்தினம் தங்கம் விலை உயர்ந்து விற்பனையானது. இதனை தொடர்ந்து நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.78,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், நேற்று சற்று குறைந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,865-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,920-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 137 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 37ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    04-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,360

    03-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,440

    02-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,800

    01-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,640

    31-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    04-09-2025- ஒரு கிராம் ரூ.137

    03-09-2025- ஒரு கிராம் ரூ.137

    02-09-2025- ஒரு கிராம் ரூ.137

    01-09-2025- ஒரு கிராம் ரூ.136

    31-08-2025- ஒரு கிராம் ரூ.134

    • துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக பி.சி.சி.ஐ. தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
    • புதிய தலைவரை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக ரோஜர் பின்னி கடந்த இரு ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். அவருக்கு சமீபத்தில் 70 வயது நிறைவடைந்தது.

    பி.சி.சி.ஐ. விதிகளின்படி 70 வயது கடந்தவர்கள் நிர்வாகப் பதவிகளில் நீடிக்க முடியாது என்பதால் ரோஜர் பின்னி தனது பதவியில் இருந்து விலகினார்.

    இதையடுத்து, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக பி.சி.சி.ஐ. தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

    இதற்கிடையே, புதிய தலைவரை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.

    இந்நிலையில், பி.சி.சி.ஐ. புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரின்போது சச்சின் தெண்டுல்கருடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது அதன்படி சச்சினும் இதற்கு ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விரைவில் சச்சின் நியமனம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது .

    • மதுரை- பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரெயிலில் வருகிற 11-ந்தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
    • வருகிற 9-ந்தேதி முதல் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு 20 பெட்டிகளுடன் இயக்கப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு மதுரை- பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரெயிலில் வருகிற 11-ந்தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

    அதன்படி, மதுரையில் இருந்து பெங்களூருவிற்கும், பெங்களூருவில் இருந்து மதுரைக்கும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் (வண்டி எண்-20671, 20672) வருகிற 11-ந்தேதி முதல் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு 16 பெட்டிகளுடன் இயக்கப்படும்.

    அதே போல, மங்களூரு சென்டிரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கும், திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூரு சென்டிரலுக்கும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் (20631, 20632) வருகிற 9-ந்தேதி முதல் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு 20 பெட்டிகளுடன் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
    • அரையிறுதியில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா தோல்வி அடைந்தார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நமப்ர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை சந்தித்தார்.

    லஜப்பானின் நவோமி ஒசாகா, செக் குடியரசின் கரோலினா முச்சோவா உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 4-6 என இழந்த சபலென்கா, அடுத்து அதிரடியாக ஆடினார்.

    இதனால் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    ×