என் மலர்
தலைப்புச்செய்திகள்
- திமுக என்ற தீயசக்தி எந்தவிதத்தில் முயற்சி செய்தாலும் அவர்களின் தீய எண்ணம் ஈடேறாது.
- திமுகவின் சதித்திட்டத்தை முறியடித்திட கழகத்தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும்.
சென்னை:
சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம். இது ஏழை, எளிய, சாமானிய மக்களுக்காகவே உருவான இயக்கம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்ததுபோல் "இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்".
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எந்த சக்தியாலும் அழிக்கமுடியாத ஒரு பேரியக்கம் என்பதை கழக மூத்த முன்னோடியும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் செங்கோட்டையன் நிரூபித்து இருக்கிறார். பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களிலும் செங்கோட்டையன் உடனிருந்தவர். தனது உடம்பில் ஓடுவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரத்தம் தான் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளார். கழகம் ஒன்றுபட வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்துதான் இன்றைக்கு ஒவ்வொரு தொண்டர்களின் கருத்து. தமிழக மக்களின் கருத்தும் இதுதான். நானும் இதைத்தான் வலியுறுத்துகிறேன்.
அன்பு சகோதரர் செங்கோட்டையனைப் போன்று உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை திமுக என்ற தீயசக்தி எந்தவிதத்தில் முயற்சி செய்தாலும் அவர்களின் தீய எண்ணம் ஈடேறாது. திமுகவின் சதித்திட்டத்தை முறியடித்திட கழகத்தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும். இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் ஒரு காட்டாற்று வெள்ளம் போன்றது. இதனை எந்த அணை போட்டும் யாராலும் தடுக்க முடியாது. எனவே, திமுக என்ற தீயசக்தி, நம் கழகம் ஒன்றுபட எப்படியெல்லாம் தடைபோட்டு தடுத்தாலும் அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி கழகம் மீண்டும் அதே மிடுக்கோடும், செறுக்கோடும் மிளிரும்.
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசு வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. ஒன்றுபட்ட, வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்!
நாளை நமதே! வெற்றி நிச்சயம்!
பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க!
புரட்சித்தலைவர் நாமம் வாழ்க!
புரட்சித் தலைவி அம்மா நாமம் வாழ்க!
நன்றி
வணக்கம்.
ரமணா, துப்பாக்கி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயனை முதன் முதலாக வைத்து இயக்கி உள்ள ஏ.ஆர்.முருகதாசுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் மதராஸி வெற்றி பெற வேண்டி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று பழனியில் சிறப்பு வழிபாடு செய்தார்.
அடிவாரத்துக்கு அதிகாலையிலேயே வந்த அவர் மொட்டையடித்து பின்னர் மலைக்கோவிலுக்கு சென்று அங்கு தண்டாயுதபாணி சுவாமியை மனமுருக வழிபட்டார். பின்னர் மீண்டும் கீழே வந்த முருகதாஸ் 3-ம் படை வீடான திருஆவினன்குடி கோவிலில் வழிபட்டார்.
அவர் மொட்டை தலையுடன் இருந்ததால் பெரும்பாலான பக்தர்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தபோதும் ஒருசில பக்தர்கள் அவரை அடையாளம் கண்டு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
- 2வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- பிரீட்ஸ்கே தான் ஆடிய 5 ஆட்டங்களிலும் 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
லண்டன்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. லீட்சில் நடந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
இதற்கிடையே, இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 330 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மேத்யூ பிரீட்ஸ்கே 85 ரன்னும், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 58 ரன்னும் குவித்தனர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 325 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இந்நிலையில், இந்தப் போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் தென் ஆப்பிரிக்கா வீரர் மேத்யூ பிரீட்ஸ்கே உலக சாதனை படைத்துள்ளார்.
இவர் தான் ஆடிய 5 ஆட்டங்களிலும் 50 ரன்களுக்கு மேல் (150, 83, 57, 88 மற்றும் 85 ரன்) எடுத்துள்ளார். இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் 5 ஆட்டங்களில் அரைசதம் கடந்த முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்தார்.
இதற்கு முன் இந்தியாவின் நவ்ஜோத் சித்து தனது முதல் 4 ஆட்டங்களில் 50 ரன்களுக்கு மேல் எடுத்ததே சாதனையாக இருந்தது. அவரது 36 ஆண்டு கால சாதனையை 26 வயதான பிரீட்ஸ்கே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கதைக்களம்
சிறுவயதிலேயே தன் கண்முன்னே குடும்பத்தை இழந்த நாயகன் சிவகார்த்திகேயன், டெலியுசன் என்ற மன நோயால் பாதிக்கப்படுகிறார். அதாவது யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால், தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று நினைத்து காப்பாற்றி வருகிறார். இவரது குணத்தை அறிந்த நாயகி ருக்மணி வசந்த், சிவகார்த்திகேயனை காதலிக்க ஆரம்பிக்கிறார். இருவரும் காதலித்து வரும் நிலையில் சிவகார்த்திகேயனுக்கு மனநிலை சரியாகி விடுகிறது. ஆபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றாமல் விட்டுவிடுகிறார்.
சிவகார்த்திகேயன் மற்றவர்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து ருக்மிணி வசந்த் அவரை விட்டு பிரிகிறார். இதனால் வாழ்க்கையை வெறுக்கும் சிவகார்த்திகேயன் தற்கொலை செய்ய முயற்சி செய்கிறார். இதே சமயம் சட்டவிரோதமாக தமிழ்நாட்டில் துப்பாக்கிகளை வித்யூத் ஜமால், சபீர் கும்பல் கடத்தி வந்து, ஒரு பெரிய தொழிற்சாலையில் துப்பாக்கிகளை பதுக்கி வைக்கிறார்கள்.
தற்கொலை செய்ய நினைக்கும் சிவகார்த்திகேயனை, அந்த தொழிற்சாலை மற்றும் துப்பாக்கிகளை அழிக்க என்.ஐ.ஏ அதிகாரிகள் பணயம் வைக்கிறார்கள். இறுதியில் சிவகார்த்திகேயன், தொழிற்சாலையை அழித்தாரா? காதலி ருக்மிணி வசந்த்துடன் இணைந்தாரா? வித்யூத் ஜமால், சபீர் இருவரும் சிவகார்த்திகேயனை என்ன செய்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சிவகார்த்திகேயன், துறுதுறு இளைஞனாக நடித்து அசத்தி இருக்கிறார். நாயகியுடன் காதல், எதிரிகளுடன் சண்டை, டைமிங் காமெடி என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக மருத்துவமனையில் நோயாளிகளை காப்பாற்றும் காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ருக்மிணி வசந்த், அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். சிவகார்த்திகேயனை அடிப்பது, கண்டிப்பது, அரவணைப்பது, சிவாவை நினைத்து வருந்துவது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.
வில்லத்தனத்தில் வித்யூத் ஜமால், சபீர் இருவரும் மிரட்டி இருக்கிறார்கள். என்.ஐ.ஏ அதிகாரியாக வரும் பிஜு மேனன் மற்றும் விக்ராந்த் ஆகியோர் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இயக்கம்
துப்பாக்கி கலாச்சாரம் தமிழ்நாட்டில் வர வேண்டும் என்று நினைக்கும் தீவிரவாதத்திற்கும், அதை தடுக்க நினைக்கும் என்.ஐ.ஏ க்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த போராட்டத்திற்கு இடையே காதல், காமெடி, சென்டிமென்ட் என ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் படத்தை கொடுத்து இருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார்.
இசை
அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.
ஒளிப்பதிவு
சுதீப் எலமான் ஒளிப்பதிவு சிறப்பு.
தயாரிப்பு
ஸ்ரீ லட்சுமி மூவீஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ரேட்டிங் - 3.75/5
- டெஸ்லா நிறுவனம் மும்பையில் தனது ஷோரூமை கடந்த ஜூலை மாதம் திறந்தது.
- மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த ஷோரூமை திறந்து வைத்தார்.
மும்பை:
உலகின் முன்னணி மின்வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தனது ஷோரூமை கடந்த ஜூலை மாதம் திறந்தது.
மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த ஷோரூமை திறந்து வைத்தார். இது இந்தியாவில் திறக்கப்பட்ட முதல் டெஸ்லா ஷோ ரூம் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையை பொறுத்தவரை இந்தியாவின் நிதி மற்றும் வணிகத் தலைநகராக உள்ளது. மேலும், மும்பையில், உயர் வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுடன், மேம்பட்ட இவி சார்ஜிங் கட்டமைப்பும் உள்ளது.
மின்சார வாகனங்களுக்கான முக்கிய சந்தையாக உள்ளதால், டெஸ்லா நிறுவனம் தனது முதல் கிளையை அமைக்க மும்பையை தேர்வு செய்தளது.
மின்சாரத்தில் இயங்குவது, அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள், மேம்பட்ட பாதுகாப்பு போன்றவை டெஸ்லா கார்களின் சிறப்புகள் ஆகும்.
இந்நிலையில், மும்பை பாந்தரா பகுதியில் உள்ள ஷோரூமில் கார் விற்பனையை இன்று தொடங்கிய டெஸ்லா நிறுவனம், முதல் காரை வாடிக்கையாளருக்கு வழங்கியது. முதல் கார் விற்பனையை மாநில போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர் நாயக் தொடங்கி வைத்தார்.
- சிறு குழந்தைகளுக்கு மெல்லிய உள் அடுக்குகள் சேதமடைந்து நிரந்தர காது கேளாமை ஏற்படுகிறது.
- டி.ஜே. சத்தம் சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
திருமண நிகழ்ச்சிகள், விழாக்களில் தற்போது டி.ஜே. சத்தத்துடன் நடனமாடுவது புதிய கலாச்சாரமாக மாறிவிட்டது.
இதே போன்ற அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிபரப்பி நடனம் ஆடும் போது திடீரென சிலர் இறக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
இதேபோல நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுபவர்கள் திடீர் திடீரென இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் டி.ஜே. சத்தத்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள மெய்ன்ஸ் பல்கலைக்கழக மருத்துவ மையம், டி.ஜே. ஒலிகளின் விளைவுகள் குறித்து இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை 15,000 பேரிடம் ஒரு ஆய்வை நடத்தியது.
ஒலிபெருக்கிகள் மற்றும் டி.ஜே. ஒலிகள் போன்ற எந்தவொரு இசையும் ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறினால், இதயத் துடிப்பு மாறுவது கண்டறியப்பட்டது.
மக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதும் கண்டறியப்பட்டது. டி.ஜே.க்கள் போன்ற உரத்த ஒலிகளால், மன அழுத்தம், ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு வியத்தகு அளவில் அதிகரிக்கிறது.

ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. மாரடைப்பு மற்றும் மூளை பக்கவாதத்தால் இறக்கும் அபாயம் உள்ளது.
பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு மாரடைப்பு ஏற்படலாம். 100 டெசிபலுக்கு மேல் ஒலிகளை நீண்ட நேரம்கேட்டால் காது கேட்கும் பிரச்சனைகள் ஏற்படும். சிறு குழந்தைகளுக்கு மெல்லிய உள் அடுக்குகள் சேதமடைந்து நிரந்தர காது கேளாமை ஏற்படுகிறது.
டி.ஜே. சத்தங்கள் கர்ப்பிணி பெண்களைப் பாதிக்கின்றன என்பதை இந்த ஆய்வுகள் காட்டுகின்றன. ஒலி மாசுபாட்டால் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம்.
நமக்கு இதயத் துடிப்பு ஏற்படுவது போல, கருப்பையில் உள்ள குழந்தைகளும் அவற்றை அனுபவிக்கலாம். கர்ப்பத்தின் 4-வது மாதத்திலிருந்து கர்ப்பிணிப் பெண்கள் சத்தங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
டி.ஜே. சத்தம் சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நாய்கள், கால்நடைகள், ஆடுகள் மற்றும் கோழிகள் தங்கள் நடத்தையை மாற்றிக் கொள்கின்றன.
சமீபத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தெலுங்கானா மாநிலம் மொய்னாபாத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் டிஜே சத்தம் காரணமா அருகிலுள்ள கோழிப் பண்ணையில் 100-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்ததாக புகார் வந்தது.
பலவீனமான கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன.
அதிர்வு விளைவு காரணமாக கட்டிடங்களும் அதிர்வுறும். இதன் விளைவாக, பலவீனமான கட்டமைப்புகள் இடிந்து விழும் வாய்ப்பு உள்ளது.
டி.ஜே. பயன்படுத்தும் இடங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
ஹெட்போன் அல்லது நுரையால் ஆனவற்றை பயன்படுத்தலாம். அவை உரத்த ஒலிகளைத் தடுக்கின்றன. அவை 30 டெசிபல் சத்தத்தைக் குறைக்கின்றன.
காது செருகிகளை பயன்படுத்தி முழு காதையும் மறைக்காத ஹெட்போன் சந்தையில் வந்துள்ளன. அவை சத்தத்தை முழுமையாகத் தடுக்காமல் தெளிவான ஒலியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
டி.ஜே. ஒலிபரப்பும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
- முதல் நிகழ்ச்சியாக ஆண்டிபட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றி பேசினார்.
- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது அரசியல் நிலைப்பாடு குறித்த முக்கிய தகவலை வெளியிடுவதாக செய்தி வந்தது.
தேனி:
'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்துடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி தேனி மாவட்டத்தில் நேற்று முதல் 2 நாள் பிரசாரம் செய்ய திட்டமிட்டார்.
முதல் நிகழ்ச்சியாக ஆண்டிபட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றி பேசினார். இன்று காலை தேனியில் உள்ள தனியார் விடுதியில் விவசாயிகள், வணிகர் சங்க நிர்வாகிகள் ஆகியோருடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறுவதாக இருந்த நிலையில் ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது அரசியல் நிலைப்பாடு குறித்த முக்கிய தகவலை வெளியிடுவதாக செய்தி வந்தது. இதனையடுத்து தேனியில் நடைபெற இருந்த விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தான் பிரசாரம் செய்யும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கு நிலவும் பிரச்சனைகள் குறித்து வணிகர் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வந்த எடப்பாடி பழனிசாமி தேனியில் கூட்டத்தை ரத்து செய்தது கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
திரைப்படம் எப்படி இருக்கு என்பதை ரசிகர்கள் அவர்களது கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்த Body Transformation Workout Video இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதில் சிவகார்த்திகேயன் மிகவும் உத்வேகத்துடன் உடற்பயிற்சி செய்கிறார். அந்த வீடியோ இடையே அவரது மகன் குகன் சேர்ந்து அவருடன் உடற்பயிற்சி செய்கிறார். அது மிகவும் க்யூட்டாக அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
- அனைத்துக் குழந்தைகளுமே வெல்ல வேண்டும் என நினைப்பவர்கள்;
- காமராசர் அவர்களின் கனவுகளை மெய்ப்பித்து வருபவர்கள் என்றார்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
அறிவு தீபம் ஏற்றி, அறியாமை இருளை நீக்குபவர்கள்;
அனைத்துக் குழந்தைகளுமே வெல்ல வேண்டும் என நினைப்பவர்கள்;
அனைத்துச் சமுதாய மக்களையும் சமமாக பாவித்து, அர்ப்பணிப்பு உணர்வோடு சமத்துவ சமுதாயம் படைக்கப் பாடுபடுபவர்கள்;
இவர்கள்தாம் கல்விக் கண் திறந்த எம் கொள்கைத் தலைவர் காமராசர் அவர்களின் கனவுகளை மெய்ப்பித்து வருபவர்கள்;
ஆம், இவர்கள்தாம் நம் ஆசிரியப் பெருமக்கள். இவர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை இந்த ஆசிரியர் தினத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்றமிகு தலைமுறையை உருவாக்கி வரும் நம் ஆசிரியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை, கொடுத்த வாக்குறுதியின்படி நிறைவேற்றி, அவர்கள் வாழ்விலும் ஏற்றம் காண வழிவகை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை.
- அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக்கு தேவைப்பட்டால் நாங்கள் பேசவும் தயாராக உள்ளோம்.
நெல்லை:
தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* அ.தி.மு.க.வில் பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க செங்கோட்டையன் முயல்வது நல்லதுதான். செங்கோட்டையன் மேற்கொண்டுள்ள முயற்சி நல்ல விஷயம்.
* அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை.
* அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக்கு தேவைப்பட்டால் நாங்கள் பேசவும் தயாராக உள்ளோம்.
* அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தி.மு.க. ஆட்சியை வீழ்த்திட முடியும்.
* அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. கடைசி நேரத்தில் கூட மாற்றங்கள் வரும் என்றார்.
- செங்கோட்டையன் எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் தனக்கு சம்மதம்.
- அனைவரும் ஒன்றானால்தான் அ.தி.மு.க. ஆட்சியில் அமரும் என்று உறுதியாக நம்புகிறோம்.
பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி உள்ளார். செங்கோட்டையனின் கருத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரித்துள்ளார்.
இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில்,
* பிரிந்தவர்களை ஒன்றிணைக்க முயலும் செங்கோட்டையனுக்கு உறுதுணையாக இருப்பேன்.
* செங்கோட்டையன் எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் தனக்கு சம்மதம்.
* அனைவரும் ஒன்றானால்தான் அ.தி.மு.க. ஆட்சியில் அமரும் என்று உறுதியாக நம்புகிறோம் என்றார்.
நிவின் பாலி, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களை லைனப்பில் வைத்துள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ளார். மேலும் நயன் தாராவுடன் டியர் ஸ்டூடெண்ட்ஸ் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
அதை தொடர்ந்து நிவின் பாலி Baby Girl படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை அருண் வர்மா இயக்கியுள்ளார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படம் ஒரு கிரைம் திரில்லர் கதைக்களமாக உருவாகியுள்ளது. நிவின் பாலியுடன் லிஜோ மோல் , சங்கீத் பிரதாப் மற்றும் அபிமன்யு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப குழு விவரங்கள்:
ஒளிப்பதிவு - ஃபைஸ் சித்திக்
இசை-கிறிஸ்டி ஜோபி
சண்டை - விக்கி
கலை இயக்குநர் - அனீஸ்
படத்தொகுப்பு - ஷைஜித் குமரன்






