என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
    • அரையிறுதியில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா தோல்வி அடைந்தார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நமப்ர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை சந்தித்தார்.

    லஜப்பானின் நவோமி ஒசாகா, செக் குடியரசின் கரோலினா முச்சோவா உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 4-6 என இழந்த சபலென்கா, அடுத்து அதிரடியாக ஆடினார்.

    இதனால் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • மகாபலி சக்கரவர்த்தியின் ஆசிகள் ஒவ்வொரு இல்லத்தையும் அமைதி, வளம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தால் நிரப்பட்டும்.
    • வளர்ச்சியடைந்த பாரதம் 2047 -ஐ உருவாக்குவதற்கான நமது கூட்டுத் தீர்மானத்தை வலுப்படுத்த ஓணம் உணர்வு நம்மை ஊக்குவிக்கட்டும்.

    சென்னை:

    கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்திய சகோதர சகோதரிகளுக்கும் ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

    நன்னெறி, இரக்கம், பக்தி மற்றும் தன்னலமற்ற தன்மை ஆகிய காலத்தால் அழியாத நற்பண்புகளைக் கொண்ட, நமது நாகரிக நெறிமுறைகளின் அடித்தளங்களை நினைவூட்டும், கருணைமிக்க மகாபலி சக்கரவர்த்தியின் வரவை நாம் இந்நாளில் கொண்டாடுகிறோம். அவரது ஆசிகள் ஒவ்வொரு இல்லத்தையும் அமைதி, வளம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தால் நிரப்பட்டும்.

    வளமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் கலாசார ரீதியாக வேரூன்றிய வளர்ச்சியடைந்த பாரதம் 2047 -ஐ உருவாக்குவதற்கான நமது கூட்டுத் தீர்மானத்தை வலுப்படுத்த ஓணம் உணர்வு நம்மை ஊக்குவிக்கட்டும் என தெரிவித்துள்ளார். 

    • பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பிப் பிள்ளைகளை ஒப்படைக்கிறார்கள்!
    • பிள்ளைகள் பெற்றோரை விட ஆசிரியர்கள் சொல்வதையே அதிகம் நம்புகிறார்கள்...

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பிப் பிள்ளைகளை ஒப்படைக்கிறார்கள்! பிள்ளைகள் பெற்றோரை விட ஆசிரியர்கள் சொல்வதையே அதிகம் நம்புகிறார்கள்...

    அந்த மாணவர்களுக்குத் தமிழை, அறத்தை, அரசியலை, அறிவியலை என அனைத்தையும் கற்பித்து அவர்களின் உயர்வுக்காகப் பாடுபடும் நல்லாசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்! என தெரிவித்துள்ளார். 

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • மகாலட்சுமி தெரு, முருகன் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, அமராவதி அவென்யூ.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (06.09.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    போரூர்: லட்சுமி அவென்யூ, முகலிவாக்கம் மெயின் ரோடு, ராமச்சந்திரா நகர், பாலாஜி நகர், அன்னை வேளாங்கண்ணி நகர், குமரி நகர், சிவாஜி நகர், ஓம் சக்தி நகர், எம்.ஆர்.கே நகர், எல் அண்ட் டி நகர் .

    அண்ணா சாலை: தொலைக்காட்சி நிலையம், திருவல்லிக்கேணி, பொதுப்பணித்துறை வளாகம், பிரசிடென்சி கல்லூரி, பெரிய தெரு, சிடோஜி தெரு, டி.எச் சாலை, ஐயப்பிள்ளை தெரு, அக்பர் சாஹிப் தெரு, ரங்கநாதன் தெரு, லால் எம்டி தெரு, பெல்ஸ் சாலை, சிஎன்கே சாலை மற்றும் சந்து, எம்டி. அப்துல்லா தெரு மற்றும் சந்து, வெங்கடேசன் தெரு, ஆறுமுகம் தெரு, எழிலகம் வளாகம், சென்னை பல்கலைக்கழக வளாகம், வாலாஜா சாலை, மியான்சாஹிப் தெரு, முருகப்பா தெரு, சுப்ரமணி செட்டி தெரு & லேன், அருணாசல ஆச்சாரி தெரு, டைபூன் அலிகான் தெரு, யூசுப் லப்பை தெரு மற்றும் லேன், அப்துல் கரீம் தெரு, அபிபுல்லா தெரு, பக்கிரி சாஹிப் தெரு, செல்லப்பிள்ளையார் கோவில் தெரு, குப்புமுத்து தெரு, வல்லப அக்ரஹாரம், மேயர் சிட்டிபாபு தெரு, நாகப்பையர் தெரு, சாரதி தெரு, புலிப்போன் பஜார்.

    தில்லை கங்கா நகர்: மகாலட்சுமி தெரு, முருகன் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, அமராவதி அவென்யூ, ஜேக்கப் தெரு, ஜெகநாதன் தெரு, சீனிவாசன் தெரு, ஓயோ தெரு, நேதாஜி தெரு, மணிமேகலை தெரு, கண்ணகி தெரு, பள்ளி தெரு, நாகப்பா குடியிருப்பு, அருள் ஜோதி தெரு, அண்ணாமலை தெரு, குமரன் தெரு, பத்மாவதி தெரு, புழுதிவாக்கம், மடிப்பாக்கம்.

    திருவான்மியூர்: இந்திரா நகர் 1வது, 2வது அவென்யூ மற்றும் 4வது, 9வது முதல் 12வது குறுக்குத் தெரு, கெனால் பேங்க் சாலை, வெங்கடரத்தினம் நகர், ஐஸ்வர்யா காலனி, மற்றும் சிஎஸ் காலனி.

    கிண்டி: சரஸ்வதி நகர், கல்கி நகர், புவனேஸ்வரி நகர், விநாயகபுரம், சொக்கலிங்கம் நகர், ஏஜிஎஸ் காலனி 1 முதல் 10வது மெயின் ரோடு, ஆண்டாள் நகர் 2வது, 3வது மெயின் ரோடு, சங்கத் அடுக்குமாடி குடியிருப்புகள், மல்லேஷ் அடுக்குமாடி குடியிருப்புகள், எஸ்டெல் ஹோம்ஸ், டிஆர்ஏ சல்மா அபார்ட்மெண்ட், டிஆர்ஏ ரெடிங்டன்.

    பஞ்செட்டி: அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, இருளிப்பட்டு, ஜனபஞ்சத்திரம் கூட் ரோடு, பெரியபாளையம் ரோடு, ஜெகநாதபுரம் ரோடு, சாய்கிருபா நகர், விருந்தாவன் நகர், எம்.கே.கார்டன், ஸ்ரீ நகர், எஸ்.வி.பார்ம், மாலிவாக்கம், அமூர் ஜெகநாதபுரம் சத்திரம், குதிரைப்பள்ளம்.

    பொன்னேரி: வேலோடை, வைரவன் குப்பம், எலியம்பேடு, பெரியகாவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம் மற்றும் கனகம்பாக்கம்.

    அண்ணா நகர்: சாந்தி காலனி, AA முதல் AM வரையிலான ப்ளாக்ஸ், பழைய L, Y, Z ப்ளாக்ஸ், 7வது பிரதான சாலை, TNHB குடியிருப்புகள் A, B, W ப்ளாக்ஸ், 2வது முதல் 6வது அவென்யூ, ஷெனாய் நகர், பாரதிபுரம், பெரியகூடல் 1வது முதல் 3வது பிரதான சாலை, வெஸ்ட் கிளப் சாலை, அமைந்தகரை, PP கார்டன், MM காலனி, NSK நகர், மற்றும் NM சாலை.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம்

    முக்கிய பிரமுகர்களின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். வரவிற்கேற்ற செலவுகள் ஏற்படும். செய்யும் செயல்களில் வெற்றி உண்டு. சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள்.

    ரிஷபம்

    நினைத்தது நிறைவேறும் நாள். இல்லத்தினர்களுடன் விழாக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் அலைபேசி அழைப்புகள் ஆச்சரியமளிக்கும்.

    மிதுனம்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். நேற்று செய்யாமல் விட்ட காரியமொன்றால் இன்று அவதிகளுக்கு உள்ளாவீர்கள்.

    கடகம்

    நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பணவரவு திருப்தி தரும். புதிய வேலை திருப்தியளிக்காமல் பழைய வேலைக்கு மாறலாமா என்று சிந்திப்பீர்கள்.

    சிம்மம்

    நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்கள் வீடு தேடி வரலாம். பிள்ளைகளின் மூலம் உதிரி வருமானங்கள் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    கன்னி

    குழப்பங்கள் அகன்று குதூகலம் கூடும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். நீண்ட நாளையப் பிரச்சனையொன்று பஞ்சாயத்துகள் மூலம் முடிவு பெறும். திருமணத்தடை அகலும்.

    துலாம்

    ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். திருமணப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். குடும்பத்தினர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    விருச்சிகம்

    போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணத்தேவை எளிதில் பூர்த்தியாகும்.

    தனுசு

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மகரம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது, வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகும். எளிதில் முடிக்க நினைத்த காரியம் தாமதப்படும்.

    கும்பம்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். எதிரிகள் விலகுவர். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் சம்பந்தமாக அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள்.

    மீனம்

    வருமானம் உயரும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் வாய்ப்பு கிட்டும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். விவாக பேச்சுகள் முடிவாகலாம்.

    • வருகிற 10-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற 10-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், சென்னையிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 6மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • பல நூற்றாண்டு காலமாக உலகின் தலைசிறந்த அறிவாளிகளை உருவாக்கியுள்ளது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்.
    • ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டியவர் பெரியார்.

    லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை ஒட்டி பெரியாரின் படத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    * பெரியார் உலகமயமாகிவிட்டார் என்பதற்கு உதாரணம் தான் ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் படம் திறக்கப்பட்டுள்ளது.

    * பல நூற்றாண்டு காலமாக உலகின் தலைசிறந்த அறிவாளிகளை உருவாக்கியுள்ளது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்.

    * உலகம் முழுக்க பெரியார் தேவைப்படுகிறார் என்பதன் அடையாளம்தான் ஆக்ஸ்போர்டு பல்கலையில் அவரது உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது.



    * பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்துடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அவரது உருவப்படத்தை திறந்து வைத்தேன்.

    * பகுத்தறிவு பகலவன் பெரியாரின் திருவுருவப் படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலையில் திறந்து வைத்தது என் வாழ்நாள் பெருமை.

    * சமூகத்துக்கான வாழ்வியல் தத்துவத்தை உலகத்துக்கு எடுத்துரைத்தவர் பெரியார்.

    * ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டியவர் பெரியார்.

    * பகுத்தறிவு, சமத்துவம், பெண்கள் முன்னேற்றத்துக்கு அயராது பாடுபட்டவர் பெரியார்.

    * தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்தமான சொல் சுயமரியாதை என்றார். 



    • திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.
    • திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-20 (வெள்ளிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : திரயோதசி பின்னிரவு 2.38 மணி வரை. பிறகு சதுர்த்தசி.

    நட்சத்திரம் : திருவோணம் இரவு 11.48 மணி வரை. பிறகு அவிட்டம்.

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை

    இன்று ஓணம் பண்டிகை. திருவோண விரதம். பிரதோஷம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை ஸ்ரீசுவாமி ஸ்ரீஅம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சனம், மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆராய்ச்சி

    ரிஷபம்-ஆசை

    மிதுனம்-புகழ்

    கடகம்-உயர்வு

    சிம்மம்-மகிழ்ச்சி

    கன்னி-செலவு

    துலாம்- ஜெயம்

    விருச்சிகம்-போட்டி

    தனுசு- மாற்றம்

    மகரம்-இன்பம்

    கும்பம்-பொறுப்பு

    மீனம்-துணிவு

    • ஏழைகளுக்கு, அரசு மருத்துவமனைகள் இனி உயிர் காக்கும் இடங்களாக இல்லை, ஆனால் மரணக் குகைகளாக மாறிவிட்டன.
    • உங்கள் அரசாங்கம் நாட்டின் மில்லியன் கணக்கான ஏழைகளின் சுகாதார உரிமையைப் பறித்துவிட்டது.

    மத்தியப் பிரதேச தலைநகர் இந்தூரில் மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் வார்டுக்குள் எலி கடிதத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

    இந்நிலையில் இதுகுறித்து தனதுஎக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,

    "மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் எலி கடித்து இரண்டு பிறந்த குழந்தைகள் இறந்தனர். இது தற்செயல் நிகழ்வு அல்ல, இது முழுமையான கொலை. இந்த சம்பவம் மிகவும் கொடூரமானது, மனிதாபிமானமற்றது மற்றும் அர்த்தமற்றது. இதைப் பற்றிக் கேள்விப்பட்டாலே முதுகுத்தண்டில் நடுக்கம் ஏற்படுகிறது.

    சுகாதாரத் துறை வேண்டுமென்றே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போது சிகிச்சை பணக்காரர்களுக்கு மட்டுமே. ஏழைகளுக்கு, அரசு மருத்துவமனைகள் இனி உயிர் காக்கும் இடங்களாக இல்லை, ஆனால் மரணக் குகைகளாக மாறிவிட்டன.

    பிரதமர் மோடியும் மத்தியப் பிரதேச முதல்வரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். உங்கள் அரசாங்கம் நாட்டின் மில்லியன் கணக்கான ஏழைகளின் சுகாதார உரிமையைப் பறித்துவிட்டது.

    இப்போது குழந்தைகள் அவர்களின் தாய்மார்களின் மடியில் இருந்து பறிக்கப்படுகிறார்கள்" என்று ராகுல் கடுமையாக சாடினார்.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க இந்தூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  

    • 8 மற்றும் 6 வயதுடைய இரண்டு மகள்கள் மற்றும் 4 வயது மகன் ஆகியோரின் உடல்கள் பாதி எரிந்த மற்றும் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
    • பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

    தெலங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் 36 வயது தந்தை தனது மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு டதற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    வேல்டண்டா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் கிடப்பதாக கடந்த புதன்கிழமை  உள்ளூர்வாசிகள் சிலர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

    அதைத் தொடர்ந்து, காவல்துறை மேற்கொண்ட விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) நாகர்கர்னூல் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில், அவரது 8 மற்றும் 6 வயதுடைய இரண்டு மகள்கள் மற்றும் 4 வயது மகன் ஆகியோரின் உடல்கள் பாதி எரிந்த மற்றும் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

    ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த அந்த நபர் குடும்பப் பிரச்சனைகள் காரணமாக தனது மனைவியுடன் சண்டையிட்டு, ஆகஸ்ட் 30 அன்று தனது மூன்று குழந்தைகளுடன் நாகர்கர்னூலுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

    முதற்கட்ட விசாரணையின்படி, அவர் தனது மூன்று குழந்தைகளையும் கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, பின்னர் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.   

    • சுமார் 45 நிமிடங்கள் தனிப்பட்ட முறையில் பேசினார்.
    • பிரதமர் மோடியிடம் விளக்கினேன்.

    அண்மையில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது அங்கு வருகை தந்திருந்த ரஷிய அதிபர் புதினுடன் தனியாக காரில் சென்றபடி மோடி பேசிக்கொண்ட புகைப்படங்கள் வைரலானது.

    இரு தலைவர்களும் சுமார் 45 நிமிடங்கள் தனிப்பட்ட முறையில் பேசியதாக அப்போது ரஷிய அதிபர் மாளிகை (கிரெம்ளின்) வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்நிலையில் சீன பயணத்தை முடித்த பின்னர் புதின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து விளக்கம் கொடுத்தார்.

    காரில் மோடியுடனான உரையாடல் குறித்து ஒரு நிருபர் கேட்டபோது, "அதில் மறைக்க எதுவும் இல்லை. அலாஸ்காவில் டொனால்டு டிரம்புடன் நான் நடத்திய விவாதங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கினேன்" என்று புதின் கூறினார்.

    ×