என் மலர்
தலைப்புச்செய்திகள்
- 12-வது புரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூர்:
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே தமிழ் தலைவாஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் 45-36 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அர்ஜுன் தேஷ்வால் 17 புள்ளிகள் எடுத்தார்.
தமிழ் தலைவாஸ் அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.
- ஜனாதிபதி, ராணுவ தளபதி, போராட்டக்குழு பிரதிநிதிகள் இடையே ஒருமித்த கருத்து.
- அதிபர் மாளிகை முறையாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார். நேபாள நாட்டின் முதல் பெண் பிரதமர் இவராவார்.
அதிபர் ராம் சந்திரா பவுடல், நேபாள ராணுவத் தலைவர் அசோக் ராஜ் சிக்டெல் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட நிலையில், அதிபர் மாளிகை இந்த முடிவை முறையாக அறிவித்துள்ளது. சுஷிலா கார்கியை தேர்வு செய்ய ஜென் இசட் போராட்ட இயக்க பிரதிநிதிகள் சம்மத் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக இளைஞர்கள் கடும் போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக பிரதமர் பதவி விலகினார். போராட்டத்தில் 51 பேர் உயிரிழந்தனர். அரசு கட்டிடங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. சிறைச்சாலைகள் உடைக்கப்பட்டு கைதிகள் தப்பி ஓடினர்.
- பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- ஓமன் அணி தரப்பில் ஷா பைசல், ஆமிர் கலீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இதில் இன்று நடைபெறுகின்ற 4-வது லீக் ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் - ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரின் 2-வது பந்தில் சைம் அயூப் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனையடுத்து சாஹிப்சாதா ஃபர்ஹான்- முகமது ஹாரிஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார். குறிப்பாக ஹாரிஸ் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். நிதானமாக விளையாடிய சாஹிப்சாதா 29 பந்தில் 29 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதனை தொடர்ந்து ஹாரிஸ் 66 ரன்னில் வெளியேறினார்.
இதனை தொடர்ந்து வந்த கேப்டன் சல்மான் ஆகா டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த நவாஸ் 9 ரன்னில் வெளியேறினார்.
அந்த கட்டத்தில் பாகிஸ்தான் அணி 16.4 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இந்த இக்கட்டான சூழலில் பக்கர் ஜமான் மற்றும் முகமது நவாஸ் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய முகமது நவாஸ் 10 பந்தில் 19 ரன்கள் விளாசி அவுட் ஆனார். இறுதிவரை போராடிய பக்கர் ஜமான் 16 பந்தில் 23 ரன்களுடம் களத்தில் இருந்தார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஓமன் அணி தரப்பில் ஷா பைசல், ஆமிர் கலீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- இந்து துறவிகள் இருவரை அவமதித்ததாக கூறி துப்பாக்கிச்சூடு.
- எங்களுடைய தெய்வங்ளை இழிவுப்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது எனக் குற்றச்சாட்டு.
பாலிவுட் நடிகை திஷா பதானிக்கு உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ரெபேலி நகரில் வீடு உள்ளது. இவரது வீட்டின் முன் இன்று அதிகாலை இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், வானத்தை நோக்கியும் சுட்டுள்ளனர்.
துப்பாக்கியால் சுட்ட நிலையில், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்து துறவிகள் பிரேமானந்த் மகாராஜ், அனிருதாசார்யா மகாராஜ் ஆகியோரை இழிவுப்படுத்தியதற்காக திஷா படானி வீடு மீது துப்பாக்கி சூடு நடத்திபப்ட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "வீரேந்திர சரண், மகேந்திர சரண் ஆகியோர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். நாங்கள் அதை செய்தோம். எங்களுடைய மதிற்குரிய துறவிகளை அவர் இழிவுப்படுத்தியுள்ளார். சனாதன தர்மத்தை இழிவுப்படுத்த முயன்றார். எங்களுடைய தெய்வங்ளை இழிவுப்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது. இது வெறும் டிரைலர்தான். அடுத்த முறை, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் உயிரோடு இருக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டா குறித்த சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
மாதம்பட்டி ரங்கராஜன் ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்து, அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஆனாலும், முதல் மனைவியைப் பிரியாமலேயே, ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டதுதான் இந்தச் சர்ச்சைகளின் ஆரம்பம்.
ஜாய் கிரிசில்டா இது தொடர்பாக நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஜாய், ரங்கராஜ் தனக்குக் கடன் இருப்பதாகவும், கர்ப்பத்தைக் கலைக்கச் சொன்னதாகவும் முன்னர் பேட்டிகளில் ஜாய் கிரிசில்டா தெரிவித்திருந்தார்.
இதைதொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா தாங்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை அவ்வபோது தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜூடன் இருக்கும் புகைப்படங்களை, பதிவுடன் ஜாய் கிரிசில்டா இன்டாவில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில்," அவள் உயிர் கொடுத்தது ஒரு உறவுக்காக.. அவன் ஆட பார்த்தது ஒரு விளையாட்டுக்கா.." என்றார்.
- ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் ஒரு சதம் கூட அடித்ததில்லை.
- இந்த முறை ஜோ ரூட் சதம் அடிக்கவில்லை என்றால் மேத்யூ ஹைடன் நிர்வாணமாக நடப்பதாக கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 39 சதங்கள் அடித்த போதிலும் ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
இந்த முறை ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.
அவரது கருத்து வைரலானதை தொடர்ந்து, ஹைடனின் மகள் கிரேஸ் ஹைடன், "தயவு செய்து இந்த முறை சதம் அடித்து விடுங்கள் ஜோ ரூட்" என்று இன்ஸ்டாகிராம் கமெண்டில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- என் கதாபாத்திரம் என்னவென்று எனக்கே புரியவில்லை.
- இவ்வளவு பெரிய எதிர்வினை கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி கடந்த ஆகஸ்டு மாதம் 14ம் தேதி வெளியான திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்தார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்திருந்தனர். உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியானது.
இந்நிலையில், கூலி படத்தில் தான் நடித்த கதாப்பாத்திரம் குறித்து பாலிவுட்டின் பிரபல நடிகர் அமீர் கான் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ரஜினி சாருக்காக கூலி படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தை ஏற்றுக்கொண்டேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், என் கதாபாத்திரம் என்னவென்று எனக்கே புரியவில்லை.
நான் படத்தில் ஏதோ உள்ளே வந்து ஒரு சில வசனங்களை பேசிவிட்டு மறைந்ததைப்போன்று தான் உணர்ந்தேன். உண்மையான நோக்கம் படத்தில் எதுவும் இல்லை. அதன் பின்னால் எந்த யோசனையும் இல்லை. எனது கதாப்பாத்திரம் மோசமாக எழுதப்பட்டது.
நான் இப்படத்தில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடவில்லை, எனவே இறுதி தயாரிப்பு எப்படி இருக்கும் என்றும் எனக்குத் தெரியவில்லை.
எனது கதாப்பாத்திரம் ஒரு வேடிக்கையான தோற்றமாக இருக்கும் என்று நான் நினைத்தேன், ஆனால் அது வெற்றிபெறவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இவ்வளவு பெரிய எதிர்வினை கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் திரும்பிப் பார்க்கும்போது, மக்கள் ஏன் ஏமாற்றமடைந்தார்கள் என்பது எனக்குப் புரிகிறது. கூலி படத்தில் நான் நடித்தது ஒரு பெரிய தவறு. எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என ஆமிர் கான் கூறியதாக நேற்று தகவல்கள் பரவியது. மேலும் அவர் கூறி அது ஆங்கில பத்திரிக்கைகளில் வெளியானது போல ஒரு புகைப்படம் இணைய தளத்தில் வெளியானது. தற்போது அது ஏ.ஐ தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டது எனவும். ஆமிர் கான் அப்படி எந்தவித கருத்தும் முன் வைக்கவில்லை என கூறப்படுகிறது.
- உலகத் தலைவர்களில் யாராவது ஒருவர், தான் நோபல் பரிசுக்கு தகுதியானவர் எனக் கூறியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா?.
- இந்தியா- ரஷியா பொருளாதாரம் செத்துப்போனது எனக் கூறியதை கேட்டதுண்டா?.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்கள் மீது 50 சதவீதம் வரி விதித்துள்ளார். இதனால் இந்திய ஏற்றுமதி கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ரத்தின கற்கள் மற்றும் நகைத்துறை, கடல்உணவு, உற்பத்தி துறைகள் அதிக அளவில் பாதித்துள்ளது.
இந்த நிலையில் CREDAI மாநாட்டில் காங்கிரஸ் கட்சி எம்.பி. சசி தரூர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அமெரிக்க அதிபர் அடிக்கடி தனது மனநிலையை மாற்றக்கூடிய தனிநபர். அமெரிக்க சிஸ்டம் அந்நாட்டு அதிபருக்கு அதிக சுதந்திரத்தை கொடுத்துளளது. இவருக்கு முன்னதாக 44 அல்லது 45 அதிபர்கள் வெள்ளை மாளிகையில் இருந்துள்ளனர். ஒருவர் கூட இவரை போன்று பழக்க வழக்கம் கொண்டவராக இருந்ததை பார்த்ததில்லை.
எல்லா நிலைகளிலும் வழக்கத்திற்கு மாறான அதிபர். உலகத் தலைவர்களில் யாராவது ஒருவர், தான் நோபல் பரிசுக்கு தகுதியானவர் எனக் கூறியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா?. அல்லது அனைத்து நாட்டு தலைவர்களும் என்னுடைய A**யை முத்தமிட வேண்டும்? அல்லது இந்தியா- ரஷியா பொருளாதாரம் செத்துப்போனது எனக் கூறியதை கேட்டதுண்டா?. டிரம்ப் வழக்குத்திற்கு மாறானவர். அவருடைய நடத்தையை வைத்து எங்கள் செயல்திறனை மதிப்பிட வேண்டாம் என்று நான் உங்களிடம் கெஞ்சுகிறேன்.
இந்தியா ஏற்றுமதி சந்தைகளை பன்முகப்படுத்த வேண்டும். சூரத்தின் ரத்தினக் கற்கள் மற்றும் நகைத் துறையிலும், கடல் உணவு மற்றும் உற்பத்தித் துறையிலும் ஏற்கனவே 1.35 லட்சம் வேலைகள் இழக்கப்பட்டுள்ளன.
ஆரம்ப 25 சதவீத வரி பல பொருட்களை சாத்தியமற்றதாக்கியது. மேலும் கூடுதலாக 25 சதவீத அபராதம் அமெரிக்க சந்தையில் போட்டியிடுவதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்கியுள்ளது. கூடுதல் வரி என்பது ஒரு வரி அல்ல. இது ரஷிய எண்ணெயை வாங்குவதற்கான தடைகள். சீனா அதிகமாக இறக்குமதி செய்யும்போது, இந்தியாவுக்கான வரி விதிப்பு நியாயமற்றது.
இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.
- வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
- தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது, அடுத்த 2 நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா, தெற்கு சட்டீஸ்கர் நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
- இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இந்நிலையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஓமன் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
- திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது.
- அதிக அளவில் வரிகளை விதித்து மக்கள் மீது திமுக சுமைகளை ஏற்றி வைத்துள்ளது.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இன்று திருப்பூர் வடக்கு தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திருப்பூர் மண்ணிலே பிறந்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நாட்டின் உயரிய பதவி கிடைத்திருப்பது தமிழக மக்களுக்கு பெருமை.
திமுக ஆட்சி பொறுப்பேற்று 52 மாதத்தில் ஒரு புதிய திட்டம் கூட திருப்பூருக்கு கொண்டுவரப்படவில்லை.
தொழிலாளர்கள், ஏழைகள் நிறைந்த பகுதியான திருப்பூரில் அரசு மருத்துவமனையை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தோம்.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை திமுக அரசு முடக்கிவிட்டது.
திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அதிக அளவில் வரிகளை விதித்து மக்கள் மீது திமுக சுமைகளை ஏற்றி வைத்துள்ளது.
கஞ்சா விற்பனைக்கு திமுக ஆட்சியாளர்கள் துணை போகிறார்கள். போதைப்பொருள் தங்குதடையின்றி கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் போதைப் பொருளை கட்டுப்படுத்தாமல் ஓய்வு பெறும் வரை ஓ போட்டவர் முன்னாள் டிஜிபி.
கொங்கு மண்டலத்தில் முதிய தம்பதிகளை குறிவைத்து கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு.
- கழுத்தில் குண்டு பாய்ந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாகவே உயிர் பிரிந்தது.
அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் பல்கலைக்கழக நிகழ்ச்சியின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் போலீசார் சந்தேகத்திற்குரிய நபரை கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தைச் சேர்ந்த பழமைவாத தலைவர் சார்லி கிர்க் (வயது 31). ஜனாதிபதி டிரம்பின் தீவிர ஆதரவாளரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு டி.பி.யு.எஸ்.ஏ. என்ற மாணவர் அமைப்பை நிறுவினார். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு இந்த அமைப்பு முக்கிய பங்கு வகித்தது.
இதன்மூலம் தாராளவாத கொள்கை கொண்ட கல்லூரிகளில் பழமைவாத கொள்கைகளை பரப்பி வந்தார். இதற்காக பல கல்லூரிகளில் அவர் திறந்தவெளி விவாதம் நடத்துவது வழக்கம்.
அந்தவகையில் உட்டா மாகாண பல்கலைக்கழகத்தில் திறந்தவெளி விவாதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடையே கலந்துரையாடிய சார்லி மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் திடீரென குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சுருண்டு கீழே விழுந்தார்.
பாதுகாவலர்கள் அவரை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்கட்ட விசாரணையில், பல்கலைக்கழக வளாகத்தின் ஒரு மாடியில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான சந்தேகத்தின்பேரில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். ஆனால் அவர் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என தெரிந்த பிறகு விடுவிக்கப்பட்டார். எனவே உண்மையான குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் நெருக்கமானவரின் தகவலின்படி கைது செய்யப்பட்டுள்ளார். அவர்தான் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பதற்கான உயர்ந்த அளவிலான உறுதிப்பாடு இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியிருந்தார். குற்றவாளிக்கு 22 வயது இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே சார்லி கிர்க் கொலை செய்யப்பட்டதற்கு அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக வெள்ளை மாளிகையில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
அதேபோல் இங்கிலாந்து, இத்தாலி, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.






