தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இரவு 10 வரை மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இரவு 10 வரை மழைக்கு வாய்ப்பு
Published on

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இது, அடுத்த 2 நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா, தெற்கு சட்டீஸ்கர் நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் எதிரொலியால், தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com